வீடு இல்லாத பிள்ளைகள் பரிகாரம் உண்டா?
உடன் மனிதரிடம் உண்மையிலேயே அக்கறை கொள்ளும் மக்கள் வீடு இல்லாத பிள்ளைகளுக்கு மேலும் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று தங்கள் முயற்சியை விட்டுவிடமாட்டார்கள். தெருக்களில் வாழும் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு மேல் ஒரு கூரையைக் கொண்டிருப்பதைவிட அதிகம் தேவைப்படுகிறது என்பதை அவர்கள் உணருகிறார்கள். பிள்ளைகளுக்கு மன சமாதானம், மகிழ்ச்சி தரும் வேலை, நல்ல உடல் ஆரோக்கியம், மற்றும் தன்னம்பிக்கை இருக்கும்போது அவர்கள் செழிக்கிறார்கள். வீடு இழந்தவர்களுடைய அக்கறை கருதி பிறர்க்கென உழைக்கும் கோட்பாடுடைய ஆண்களும் பெண்களும் தங்களைத்தாங்களே மனமுவந்து அளிக்கிறார்கள், அது போற்றத்தகுந்தது. ஆனால் அவர்களுடைய முயற்சிகளின் மத்தியிலும், தெருக்களில் வாழும் பிள்ளைகள் பிரச்னை தொடருகிறது.
இதற்குக் காரணம், வீடு இல்லாத பிள்ளைகளை உண்டாக்கும் நிலைகளை நிலைபெறச்செய்யும் தற்போதிருக்கும் அந்தக் காரிய ஒழுங்குமுறை என்ன என்பது உறுதிசெய்யப்படுவதற்கில்லை. இது பழுதுபார்க்கப்பட முடியாத நிலையில் இருக்கும் ஒரு காரைப் போன்றிருக்கிறது. உண்மையிலேயே, மனிதனின் படைப்புத்திறன் மட்டுமே ஒரு நீதியுள்ள மனித சமுதாயத்தை ஏற்படுத்தமுடியாது என்பதை நாம் மதித்துணரக்கூடாதா?
என்றபோதிலும், சந்தோஷமாகவே, ஒரு மாற்றம் கூடிய காரியமே—ஆனால் மனித கரங்களால் அல்ல. இந்தப் பூமியில் கேடுண்டாக்கக்கூடியதை முற்றிலும் நீக்கிடுவதற்கான திறமையும் ஞானமும் உன்னதமான கடவுளுக்கு மட்டுமே இருக்கிறது. அவருடைய பரலோக ராஜ்ய நிர்வாகத்தைக் குறித்தும், இதே பூமியில் நீதியான நிலைமைகளை வாஞ்சிக்கும் மனிதனின் விருப்பத்தை அது எவ்விதம் நிறைவேற்றும் என்பதைக் குறித்தும் அவருடைய வார்த்தையாகிய பைபிள் நமக்கு எடுத்துரைக்கிறது.—தானியேல் 2:44.
கடவுள் அக்கறையுடையவர்
இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையை நீக்கிவிட்டு ஒரு புதிய வாழ்க்கை வழியைக் கடவுள் ஏற்படுத்தமுடியும் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால், மனிதனின் இரட்சிப்பு மட்டுமல்ல, ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவா தேவனின் பெயர் உட்பட்டிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். ஒழுங்குக்கும் காலந்தவறாமைக்கும் உச்ச உயர்தர முன்மாதிரியாயிருக்கும் அவர் நம்முடைய சிருஷ்டிகராயிருப்பதால், அவர் தம்முடைய உரிய காலத்தில், உரிய முறையில் செயல்படுவார், தம்முடைய ராஜ்யத்தின் மூலம் அவ்விதம் செய்வார் என்று நமக்கு உறுதியளிக்கிறார். உண்மையில், அந்த ராஜ்யம் விளக்கப்படமுடியாத ஒன்று அல்ல, ஆனால் அது மனிதனில் உண்மையான தேவைகளைக் கையாளுவதற்குத் தேவையான மேற்பார்வையையும் படிப்படியான போதனையையும் அளிக்கவல்ல ஒரு பரலோக அரசாங்கம்.—ஏசாயா 48:17, 18.
வீடு இல்லாத ஒரு பிள்ளை சங்கீதம் 27:10-லுள்ள தாவீதின் வார்த்தைகளைத் தன்னுடைய இருதயத்தில் கொள்ளலாம்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (தி.மொ.) இந்த உலகத்தின் குறைந்த அந்தஸ்து கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்வதிலிருந்து ஒருவரைத் தகுதியற்றவராக்குவதில்லை என்பதை அறிவதும் ஊக்கமளிப்பதாயிருக்கிறது. நீதிமொழிகள் 22:2 கூறுகிறது: “செல்வனும் ஏழையும் கூடவே குடியிருப்பார். அவர்கள் அனைவரையும் படைத்தவர் யெகோவாவே.” (தி.மொ.) ஆம், எதிர்பாராது வாய்ப்பிழந்தவர்கள், உண்மை மனமுள்ளவர்களாக இருக்கும்போது, அவர்களுக்கு உதவியளிக்க யெகோவா தேவன் மனமுள்ளவராயிருக்கிறார் என்பதைக்குறித்து நிச்சயமாயிருக்கலாம்.—சங்கீதம் 10:14, 17.
யெகோவா நம்முடைய நலனில் அக்கறையுடையவராயிருக்கிறார். நம்முடைய சரியான வாஞ்சைகளை எவ்விதம் திருப்திசெய்வது என்பதை அறிந்திருக்கிறார். ஒருமுறை அவர் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் இஸ்ரவேலரைப் பின்வருமாறு கேட்டார்: “பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங்கொடுக்கிறதும், . . . அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.” (ஏசாயா 58:7) கடவுள் தம்முடைய ராஜ்ய அரசாங்கத்தின் மூலம் கொண்டுவரப்போகும் சமத்துவமும் நீதியும் இதுவே. தான் இல்லாதவர் போல எவருமே அசட்டைப்பண்ணப்படவோ அல்லது நடத்தப்படவோ மாட்டார்கள். சங்கீதம் 145:19 நமக்கு இப்படியாகச் சொல்லுகிறது: “அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.” கடவுள் பேரிலும் உடன் மனிதர் பேரிலுமான அன்புதானே மானிட குடும்பத்தை ஐக்கியப்படுத்துவதற்கு அடிப்படை சக்தியாக இருக்கும். இதன் விளைவாக, வீடு இல்லாத பிள்ளைகளின் பிரச்னைகள் தீர்க்கப்படும். எவருமே தனிமையாக விடப்படமாட்டார்கள்!
மனிதனின் அபூரணம் கடவுளுடைய நோக்கத்திற்குத் தடையாக அமையுமா?
இல்லை, மனிதனின் கெட்ட சிந்தைகள் இந்தப் பூமியை ஓர் இன்பமான பரதீஸாக மாற்றியமைக்க வேண்டும் என்ற யெகோவாவின் நோக்கம் நிறைவேற்றப்படுவதற்குத் தடையாக இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது. பைபிளில் விவரிக்கப்பட்டிருப்பது போல் அர்மகெதோன் யுத்தத்தைத் தப்பிப்பிழைப்பதன் மூலம் அல்லது பூமியில் திரும்ப உயிர்வாழ்வதற்காக மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலம் கடவுளுடைய புதிய உலகில் வாழும் வாய்ப்பை உடையவர்கள் தங்களாலான சிறந்ததைச் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்.—யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 16:14, 16.
செவிகொடுக்கும் எவருமே தங்களுடைய வேலை பலனற்றிருப்பதைக் காணமாட்டார்கள். அவர்களுடைய வேலை தகுந்த விதத்தில் பலனளிக்கப்படும். கடவுளுடைய இந்த வாக்குத்தத்தத்தைத் தயவுசெய்து கவனியுங்கள்: “அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே (யெகோவாவாலே, தி.மொ.) ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.” (ஏசாயா 65:22, 23) இந்த வார்த்தைகளின் நிறைவேற்றத்தை நீங்களும் உங்கள் குடும்பமும் காண விரும்ப மாட்டீர்களா? அப்பொழுதும் எவ்விடத்திலும் பஞ்சமோ, வறுமையோ, வேலையில்லாப் பிரச்னையோ அல்லது வீடு இல்லாத பிள்ளைகளோ பார்க்க மாட்டீர்கள் என்பதை அறிவது எவ்வளவு மகிழ்ச்சியுள்ளதாக இருக்கிறது!
வீடு இல்லாத பிள்ளைகளைப் போன்று இன்று தரமான வாழ்க்கையை இழந்து அவதியுறுகிறவர்கள் மகிழ்ச்சியுள்ள ஒரு குடும்ப வாழ்க்கையையும் வசதியான ஒரு வீட்டையும் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை அதிக முழுமையாகப் போற்றி மதிப்பவர்களாயிருப்பார்கள். ஏசாயா 65:17-ல் நாம் வாசிக்கிறோம்: “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” அந்தச் சமயத்தில் வாழும் சிலாக்கியம் பெற்றவர்கள் மோசமான நிலைமைகள் என்றும் மறைந்துபோய்விட்டதைக் காண்பார்கள். சகல தேசத்தாரும் மொழியினரும் இனத்தவரும் ஓர் அன்பான சகோதரத்துவத்தில் ஒன்றுசேர்ந்து வேலை செய்வார்கள். அந்தச் சமயத்தில் தப்பிப்பிழைக்கும் குடும்பத் தொகுதிகள் கடவுளைத் தொடர்ந்து மகிமைப்படுத்திக்கொண்டிருப்பர் என்பதில் சந்தேகமில்லை. சங்கீதம் 37:11 அந்தப் பூமிக்குரிய பரதீஸைக் குறித்து பின்வருமாறு கூறுகிறது: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”
எதிர்காலத்துக்காக நீங்கள் எவ்விதம் ஆயத்தம் செய்யலாம்?
இப்பொழுதுங்கூட ஜீவனைத்தரும் அறிவைப் பெற்றுக்கொள்வதும், அன்பு மற்றும் தயை போன்ற விரும்பத்தக்கப் பண்புகளை வளர்ப்பதும் கூடிய காரியம். எப்படி? யெகோவா மனித குடும்பத்தை நேசிக்கிறார், அவர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தம்முடைய வார்த்தையோடும் மக்களோடும் தொடர்பு கொள்ளச் செய்வதன் வாயிலாக ‘மக்களைக் கிறிஸ்துவிடமாக இழுத்துக்கொள்கிறார்.’ (யோவான் 6:44) நீங்கள் மகிழ்ச்சியுள்ளதும் அர்த்தமுள்ளதுமான ஒரு வாழ்க்கையை என்றென்றுமாக எதிர்நோக்கியிருப்பதற்குக் கடவுளுடைய சித்தத்தை செய்வதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு போதனா திட்டத்தையுடைய ஓர் அமைப்பையும் அவர் பூமியில் கொண்டிருக்கிறார். இப்படியாக, தேவையில் இருப்பவர்களுக்குக் கடவுளுடைய ராஜ்ய செய்தி பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. (மத்தேயு 24:14) கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது: “பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.” (நீதிமொழிகள் 14:21) வாய்ப்புகளை இழந்தவர்களாயிருப்பவர்கள்கூட, சரியான உள்நோக்கமுடையவர்களாயிருந்தால் கடவுளை அணுகமுடியும் என்பதை அறிவது இருதயத்திற்கு அனலூட்டுவதாயிருக்கிறது. சங்கீதக்காரன் எழுதினான்: “நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்; நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே (யெகோவாவே, தி.மொ.) தாமதியாதேயும்.”—சங்கீதம் 70:5.
ஆம், கடவுளுடைய வார்த்தை உங்களுக்கு எதிர்காலத்திற்கான உண்மையான நம்பிக்கையைக் கொடுக்க முடியும். என்றபோதிலும், “நம்பிக்கை” என்று பொதுவாக பயன்படுத்தப்படும் வார்த்தை எல்லாச் சமயத்திலும் நிச்சயத்தை உட்படுத்துவதாயில்லை. பிரேஸிலில் ஒருவர் இந்தக் கூற்றை அடிக்கடி கேட்கிறார்: “எ எஸ்பரான்கா இ எ அல்டிமா க்யு மோர்” (“நம்பிக்கை நித்தியத்தின் ஊற்று” என்ற கருத்துடைய ஆங்கில கூற்று போன்றது). ஆதாரம் இல்லாதபோதிலும் நம்பிக்கையுடன் இருக்கும் கருத்தைக் கொண்டது. மாறாகக், கடவுளிலும் அவருடைய வாக்குறுதிகளிலும் பலமான விசுவாசத்தைத் தொடர்ந்து காத்துவருவதற்கு வேதவசனங்கள் உறுதியான காரணங்களை அளிக்கிறது. ரோமர் 10:11-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் வெட்கப்படுவதில்லை.” இப்படிப்பட்ட பைபிள் ஆதாரமுடைய விசுவாசம் ஏமாற்றத்திற்கு வழிநடத்தாது. யெகோவாவின் ஞானத்திற்கும் அன்புக்கும் சாட்சி பகரும் நம்முடைய பூமியின் அதிசய காரியங்கள் உண்மையானவை போல, பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்கள் நீங்கள் ஒரு நம்பிக்கையான எதிர்நோக்கை, எதிர்காலத்துக்கான ஓர் உண்மையான நம்பிக்கையைக் கொண்டிருக்க இடமளிக்கிறது.—ரோமர் 15:13.
வீடு இல்லாத பிள்ளைகளுக்கு, ஆம், சரியானதை விரும்பும் அனைவருக்கும் கடவுளுடைய ராஜ்யம்தானே உண்மையான பரிகாரம். இப்பொழுது திருத்தமான பைபிள் அறிவைப் பெற்றுக்கொள்வது, கடவுளுடைய புதிய உலகில் மகிழ்ச்சியையும் நித்திய ஜீவனையும் அனுபவிப்பதைக் கூடியகாரியமாக்கும். இந்த வாக்குறுதிகளின் எதிர்பார்ப்புகள் கற்பனையின் விளைவு அல்ல. நீதிமொழிகள் 11:19 இவ்விதமாக அறிக்கை செய்கிறது: “நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறது.” (g90 1/8)
[பக்கம் 11-ன் பெட்டி]
ஒரு தற்காலிகப் பரிகாரமா?
பரிதாபமானப் பார்வையுடன் கை நீட்டிய நிலையில் நிற்கும் கேட்பாரற்ற ஓர் ஆத்துமா இருதயத்தை இழுத்துப்பிடிக்கக்கூடும். ஆனால் வீடு இல்லாத ஒரு பிள்ளைக்கு எவ்விதம் உதவி செய்வது என்பதை அக்கறையுள்ள ஆட்கள் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். குற்ற உணர்வுடையவர்களாயிருப்பதைச் சற்றே தவிர்ப்பதற்குச் சிலர் அந்தக் குழந்தையின் உள்ளங்கையில் ஒரு சில காசுகளைப் போட்டுவிட்டு வேகமாக நடந்துவிடுகின்றனர். என்றபோதிலும், அந்தப் பணம் உணவுக்காக அல்லது உறைவிடத்துக்காகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு மிகக் குறைவே. மாறாகப் போதை மருந்துகள் அல்லது மது வாங்குவதற்காக அது செலவழிக்கப்படக்கூடும். எனவே, சமூக நலனில் அக்கறையுள்ள சிலர் வீடு இல்லாத பிள்ளைகளுக்கு உதவியாயிருக்கும் என்று தாங்கள் கருதும் சில அரசு ஆதரவு பெற்ற திட்டங்களுக்குத் தங்களுடைய கவனிப்பையும் பணத்தையும் கொடுக்கின்றனர். வீடு இல்லாத பிள்ளைகளை உதவியளிக்கும் சரியான நிறுவனத்தினிடமாக வழிநடத்திடுவதே நடைமுறையான சேவை என்பதாக மற்றவர்கள் நினைக்கிறார்கள். இவ்வழியில், அக்கறையுள்ள குடிமக்கள் தங்களுடைய சொந்த சமுதாயத்தை அதிக மனிதாபிமானமுள்ளதாக்க முற்படுவதாய் உணருகிறார்கள்.
[பக்கம் 9-ன் படம்]
“அவர்கள் நாட்டுகிறதும் வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை.”—ஏசாயா 65:22
[படத்திற்கான நன்றி]
FAO photo
[பக்கம் 10-ன் படம்]
“விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்.”—ஏசாயா 65:22