உலகத்தைக் கவனித்தல்
“அதிகாரமுள்ள” பெற்றோர் மேம்பட்டவர்கள்
“கடுமையாகத் தண்டிக்காத ஆனால் உறுதியுடன் எல்லையை வகுத்து அதில் கண்டிப்பாயிருப்பவர்கள் உயர்ந்த சாதனையுள்ள மற்றும் மற்றவர்களோடு நன்றாகப் பழகுகிற பிள்ளைகளை உருவாக்க அதிக குறிப்பிடத்தக்க சாத்தியம் இருக்கிறது,” என்று யு.எஸ். நியுஸ் அண்டு உவர்ல்ட் ரிப்போர்ட் சொல்லுகிறது. அப்படிப்பட்ட பெற்றோர் “அதிகாரமுள்ளவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள் (“இக்காரணத்திற்காக அதைச் செய்”). இவர்கள் “ஆட்சியாதிக்கமுள்ள” (“நான் பெற்றோராக இருப்பதால் அதைச் செய் என்கிறேன்”), மேலும் “தன் இஷ்டப்படி செய்ய அனுமதிக்கும்” (“உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்”) பெற்றோருக்கு எதிரிடையாயிருப்பவர்கள். இத்தகைய சிட்சை முறைகள் குறிப்பிடத்தக்க விதத்தில் வித்தியாசப்பட்ட நடத்தை சுபாவங்களை உடைய பிள்ளைகளை உண்டுபண்ணுகின்றன. இரண்டு பத்தாண்டு காலமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள், அதிகாரமுள்ள பெற்றோர் நிலையான, திருப்தியுள்ள, கட்டுப்பாடுள்ள, தன்னம்பிக்கையுள்ள, போத மருந்துகளை அருந்தி பார்க்கவேண்டுமென்ற விருப்பமில்லாத பிள்ளைகளை கொண்டிக்கும் சாத்தியம் அதிகம் என்று காட்டியது. “அதிகாரமுள்ள பெற்றோர் ஆட்சி ஆதிக்கம் செய்வதில்லை” என்று இந்த ஆராய்ச்சிகளை நடத்திய கலிஃபோர்னியா சர்வகலாசாலை உளநூல் வல்லுநர் டையானா பாம்ரின்ட் கூறுகிறார். “அவர்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு அறிந்திருக்க முற்படுகிறார்கள், பள்ளியில் எவ்வாறு படிக்கிறார்கள், அவர்களுடைய நண்பர்கள் யார் என்பதை அறிந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டுப்பாடு பிள்ளையினிடமாக தங்களுக்கிருக்கும் பொறுப்புணர்ச்சியை வெளிக்காட்டுகிறது, பிள்ளையை எதிர்ப்பட அவர்கள் பயப்படுகிறவர்களாக இல்லை.” (g90 1/22)
யானை—இப்பொழுது ஆபத்துக்குள்ளான ஓர் இனம்
கடந்த அக்டோபரில் சுவிட்சர்லாந்திலுள்ள லாசானில் நடந்த ஆபத்துக்குள்ளான இனங்களின் சர்வதேச வர்த்தகக் கூட்டம், ஆப்பிரிக்க யானையை அதன் ஆபத்துக்குள்ளான இனங்களின் பட்டியலில் சேர்த்தது. அந்த நடவடிக்கை தந்த வியாபாரத்தைத் தடைசெய்கிறது. அந்தக் கூட்டம், இந்தச் செயல் தந்த வேட்டைக்காரர்களின் திருட்டுத்தனமான வேட்டையை நிறுத்தும் என்று நம்புகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறதென்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 1979-ல் அந்தக் கண்டத்தில் 1 கோடியே 30 இலட்சம் யானைகள் இருந்தன. இப்பொழுது சுமார் 6,25,000 யானைகள் மட்டுமே இருக்கின்றன. (g90 1/22)
உலகளாவிய வனாந்தரத்தின் கணக்கு
உலகத்தில் எந்தளவு ஓரளவு மனிதனால் தீண்டப்படாமல் வனாந்தரமாகயிருக்கிறது? ஏறக்குறைய கிரகத்தின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி—அதாவது 18.56 மில்லியன் சதுர மைல்கள்—என்று 18 மாதம் இதை ஆராய்ச்சி செய்த சுற்றுப்புறச்சூழல் நடத்தைப் போக்கின் மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர் J. மைக்கல் மெக்ளோஸ்கீ மற்றும் நில இயலர் ஹெதர் ஸ்பல்டிங் கூறுகிறார்கள். வான்வழிச் செலவு விளக்க அட்டவணைகளைக் கருத்தூன்றி கவனிக்கையில் “அவர்கள் சாலைகள், குடியேற்றப் பகுதிகள், கட்டிடங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், குழாய் இணைப்பு வரிசைகள், ஆற்றல் இணைப்பு வரிசைகள், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் எண்ணைக் கிணறுகள் ஆகிய நிலப்பகுதிகளைப் புறக்கணித்துவிட்டனர்,” என்று அறிவியல் செய்தி கூறுகிறது. அவர்கள் “ஏறக்குறைய 1 மில்லியன் ஏக்கர்களை உட்படுத்தும் நிலத்தடத்தையும் புள்ளிக் கணக்கீட்டில் குறைத்துக் கொண்டார்கள்.” மொத்த வனாந்தரத்தில் பட்டியலில் முதல் வருவது அண்டார்டிக்கா (தென் துருவம்) ஆகும். அதன் பிறகு வட அமெரிக்கா (37.5 சதவிகிதம்); சோவியத் யூனியன் (33.6 சதவிகிதம்); ஆஸ்திரேலியா, தென்மேற்கு பசுபிக் தீவுகள் உட்பட (27.9 சதவிகிதம்); ஆப்பிரிக்கா (27.5 சதவிகிதம்); தென் அமெரிக்கா (20.8 சதவிகிதம்); ஆசியா (13.6 சதவிகிதம்); மற்றும் ஐரோப்பா (2.8 சதவிகிதம்). உலக வனாந்தரப் பகுதியில் 20 சதவிகிதத்திற்கும் குறைவான பகுதி தன்னலத் தேட்டத்திலிருந்து சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது. (g90 2/8)
கூடுதல் பயமுறுத்தல்
தற்போதைய போத மருந்து கொள்ளை நோயுடன் மற்றுமொரு பரிமாணம் சேர்க்கப்பட்டிருக்கிறது: அதுதான் மழைக்காடுகளின் அழிவு. “கொக்கேயின் போத மருந்துக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் தேவையினால் உந்தப்பட்ட பெரு நாட்டு கோகா பயிர்செய்பவர்கள், அமசோனின் பெருமளவு நிலப்பரப்பிலுள்ள மழைக்காடுகளை வெட்டி வீழ்த்திவிட்டு இலட்சக்கணக்கான காலன்கள் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனப் பொருட்களை அதின் மேட்டு நிலங்களிலும் நீர் உற்பத்தி ஸ்தனங்களிலும் குவிக்கிறார்கள்,” என்று தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. அந்த அறிக்கையின்படி, கோகா பயிர்செய்பவர்கள், “இரண்டு தேசீய பூங்காக்களிலும், இரண்டு தேசீய காடுகளிலும் நுழைந்து ‘வனத்தின் கண்புருவம்’ என்று அறியப்படும் எளிதில் நாசமாக்கப்படும் மழைக்காட்டின் பெரும் பகுதியை அழித்துவிட்டு, உஷ்ணமண்டலக் காடுகளின் 5,00,000-க்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்துவிட்டார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.” பெருவின் அமசோனில் இப்பொழுது பயிர் செய்யப்படும் செடிகளில் பெருமளவு கோகா இலைதான். கொக்கோயின் பயிர்செய்யும் அவசரத்தில், விவசாயிகள் உச்சநில அரிப்பை தடைசெய்யும் அவர்களுடைய மூதாதையர்களின் தோட்டப் பயிர் முறைகளை கைவிட்டுவிட்டார்கள். (g90 1/22)
குற்றச்செயல்களை நிறுத்தும் ஊரடங்குச் சட்டங்கள்
இரவில் 11 மணிக்குப் பிறகு இளைஞர்கள் வீட்டிற்குள் இருக்கும்படிச் செய்ய ஆஸ்திரேலியாவிலுள்ள குவீன்ஸ்லாந்தின் ஒரு கிராமப் பட்டணம் முறைப்படி அமையாத ஓர் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதன் விளைவுகள் சாதகமாக இருந்தது. காவலரும் உள்ளூர் ஆலோசனை சபை உறுப்பினர்களும் அந்தப் பிராந்தியத்தின் குற்றச் செயலின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவு இருப்பதை அறிக்கையிட்டார்கள். இதன் விளைவாக, குவீன்ஸ்லாந்து அரசாங்கம் பரிசோதனை ஊரடங்குச் சட்டத்தை 15 வயதுக்குக் கீழுள்ள எல்லா இளைஞர்கள் பேரிலும் விதிக்க மந்திரி சபையின் ஒப்புதலை இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறது. அதன் திட்டமென்னவென்றால், இரண்டு பரிசோதனை ஊரடங்குச் சட்டங்கள், ஒன்று நகர்புரத்திலும் மற்றொன்று தலைநகர பட்டணத்திலும் விதிக்கவேண்டும் என்பது. பரிசோதனை ஊரடங்குச் சட்டங்களின் விளைவுகள் சாதகமானதான, குற்றச்செயல் விகிதத்தைக் குறைப்பதாக நிரூபித்தால், பிறகு நாடு முழுவதிலுமுள்ள இளைஞர்மேல் ஊரடங்குச் சட்டத்தை அதிகாரப் பூர்வமாக விதிப்பதற்கு சட்டம் இயற்ற யோசனை செய்யும்படி அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படும். (g90 1/8)