உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 12/8 பக். 23
  • பாதுகாப்புகளும் இடர்களும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பாதுகாப்புகளும் இடர்களும்
  • விழித்தெழு!—1991
  • இதே தகவல்
  • பாப்பாவை படுக்க வைப்பது எவ்வாறு?
    விழித்தெழு!—1999
  • சிகரெட்டுகள்—நீங்கள் அவற்றை மறுக்கிறீர்களா?
    விழித்தெழு!—1996
  • குண்டாக இருப்பது நலம் தராதபோது
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 12/8 பக். 23

பாதுகாப்புகளும் இடர்களும்

மனித நோய்த் தடுப்பு முறை பல லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் செளகரியமாக இருக்கும் நமது இதமான மற்றும் ஈரமான உடல்களைத் தாக்கும் நோக்கத்தில் இடையறாது நம்மை முற்றுகையிட்டுள்ளன. அவை உள்ளே நுழைந்தால் அவைகளுக்கு ஓர் அதிர்ச்சி இருக்கிறது. அவை நம்பமுடியாத அளவு சிக்கல் வாய்ந்த நோய் எதிர்ப்பாற்றல் முறையால் எதிர்கொள்ளப்படுகின்றன. ஏராளமான வகை புரோட்டீன்களால் கட்டுப்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான மிகவும் விசேஷித்த செல்கள் அவை. டைம் (Time) பத்திரிகை, “நோய் எதிர்ப்பாற்றல் அமைப்பு எல்லாவற்றிலும் மிகச் சிக்கலான உறுப்பாகிய மூளையோடு பொருத்தமாகவே ஒப்பிடப்பட்டுள்ள” எனக் கூறுகிறது. அது பின்னர், நோய் எதிர்ப்பாற்றல் வல்லுநர் வில்லியம் பால் கூறியதைக் குறிப்பிடுகிறது. “நோய் எதிர்ப்பாற்றல் அமைப்புக்குத் தகவல்களை உருவாக்கவும் சேர்த்து வைக்கவும், பயன்படுத்தவும் தெரிந்து கொள்ளவும் நினைவிற் கொள்ளவும் செய்திகளைச் செயல் முறைத்தொடர்பு படுத்தவும் தனிச்சிறப்புக்குரிய திறமை இருக்கிறது.” டாக்டர் ஸ்டீபன் ஷெர்வின் புகழ்ந்து கூறுகிறார்: “அது ஒரு நம்புதற்கரிய அமைப்பு. உடம்பில் அதுவரையிலும் இல்லாத மாலிக்யூல்களை அது அடையாளம் கண்டு கொள்கிறது. உடம்பில் உள்ளது என்ன, இல்லாதது என்ன என்று வேறுபடுத்தி அறிந்துவிடும்.” அது ஏற்கெனவே இல்லாததாக இருந்தால், அது போர், முழுப் போர்தான்.

கார்போஹைட்ரேட்டைச் சிற்றுண்டியாகக் கொள்ளல் கார்போஹைட்ரேட் உணவுகளில் அதிக அளவு குளுக்கோஸ் இருந்தபோதிலும், மந்தத்தையும், சோர்வையும் தருகின்றன. ஆராய்ச்சிகள் காட்டுவதென்னவெனில், செறிவும் சோதனை குறியீட்டளவுகளும் ஒரு கார்போஹைட்ரேட் உணவுக்குப்பின் குறைவாக இருக்கின்றன. அதிகமான உணவு சாப்பிடுபவர்கள் ஏனைய சிற்றுண்டி வகைகளைவிட கார்போஹைட்ரேட் உணவை விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் இனிப்பை விரும்புவதோடல்லாமல் ரொட்டியையும், பாஸ்தாவையும் விரும்புகின்றனர். புகைபிடிப்போர், புகைபிடிப்பதைக் கைவிடும்போது கார்போஹைட்ரேட் உணவு வகையையே மிகவும் விரும்புகின்றனர். புகைப்பதைக் கைவிடும்போது அதிக எடைபோடுவதன் காரணம் அவர்கள் அதிக இனிப்பு வகைகளையும், கர்போஹைட்ரேட் அதிகம் கொண்ட உணவு வகைகளையும் சாப்பிடுவதாகும்.

அதிக எடையினால் எழும் அபாயம் நடுத்தர மற்றும் இளமைப் பருவத்தில் உள்ள பெண்கள் எந்த அளவிலும் அதிக எடையுள்ளவர்களாக இருந்தாலும் அது இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது ஒரு எட்டு ஆண்டு கால 30 வயது முதல் 56 வயது வரை உள்ள 1,16,000 செவிலியர்களில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு, 70 சதவீதம் இதய வியாதி பருமனான பெண்களிலும் 40 சதவீதம் எல்லாம் சேர்த்துப் பார்க்கும் போது அதிக எடை கொண்ட பெண்களுக்கும் வருகிறது. நியு யார்க் டைம்ஸ் (The New York Times) இதைப் பற்றிய செய்தி அறிக்கை பத்திரிகையில் வந்த தொடர்ந்து குறிப்பிடுவதாவது: “ஆண்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னைய ஆய்வுகள் ஓரளவுக்கு அதிக எடை உடையவர்களாய் இருப்பது இதய நோயின் அபாயத்தை அதிகரித்தது எனக் காட்டியது. ஆனால் இப்பொதுதான் முதல் முறையாக மிகக் குறைந்த அளவு அதி எடை இருக்கும் நடுத்தர வயதுடைய பெண்கள்கூட அபாய நிலையில் இருக்கிறார்கள் என ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது என இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரும், பாஸ்டன் பெண்கள் மருத்துவ மனையிலும், பிரிக்ஹாமில் ஒரு தொற்றுநோய் இயல் நிபுணருமான டாக்டர் சார்ல்ஸ் H. ஹெனக்கன்ஸ் கூறியுள்ளார். ஆய்வு முடிவுகள் காட்டுவதென்னவெனில், புகைபிடிப்போரிடமும் அதிகமாக மதுபானம் அருந்துவோரிடமும் பருமனாதல் இருந்து, அது நோயாளராக ஆக்கும் தன்மையும், இறப்புக்குரியதன்மையும் ஆக்கும் நிலை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிகமாக உள்ளது என அவர் மேலும் கூறினார்.

சிசு மரணம் புகைபிடிப்பதோடு இணைக்கப்படுகிறது ஸ்வீடனில் இரு மருத்துவர்கள் மூன்றாண்டு கால ஆய்வுக்குப்பின்னர், புகைபிடிப்பதற்கும் திடீரென சிசுக்கள் இறக்கும் நோய்க்குறி இயைபுக்கும் வலிமையான தொடர்பு இருப்பதை அறிந்தனர். இதை சிட்ஸ் (SIDS) என்பர். ஆறுமாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள் மரிப்பதற்கான அறியப்படாத காரணத்திற்கு உள்ள சொல் சிட்ஸ். டாக்டர் பெங் ஹாக்லண்டும் ஸ்வன் க்னாட்டிஙசும் சுவீடனில் உயிரோடு பிறந்த 2,80,000 சிசுக்களின் தகவல்களைத் தொகுத்தனர். இந்தப் பிரிவில் 190 சிசுக்கள் சிட்ஸ் நோயால் இறந்தன. இதில் மருத்துவர்கள் 50 மரணங்களுக்குத் தாயின் புகைபிடிக்கும் பழக்கமே காரணம் என குற்றஞ் சாட்டினர். கர்ப்ப காலத்தில் ஓரளவுக்குப் புகைபிடிக்கும் தாய்மார்கள், அதாவது ஒரு நாளுக்கு ஒன்று முதல் ஒன்பது சிகரெட்டுகள் வரை புகைப்போர் தம் குழந்தைகளை சிட்ஸ் நோய்க்கு இழக்கும் நிலை புகைபிடியாதோரைவிட இருமடங்காக உள்ளது. பத்து அல்லது அதற்கு மேற்பட்ட சிகரெட்டுகளை ஒரு நாளைக்குப் பிடிக்கும் அதிக புகை பிடிப்பாளர்கள், இந்த அபாயத்தை மும்மடங்காக்கினர். டாக்டர் ஹாக்லண்டு, “தடுக்கும் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது, சிசு மரணத்திற்கான சிட்ஸ் மிகப் பெரிய ஒரே காரணம் புகைப்பதே,” எனக் கூறினார். என்றாலும் ஏனைய சமூகப் பொருளாதாரக் காரணங்களும்கூட இருக்கலாம் என்றும் அவர் கூறினார். தாயின் வயது, சமூகப் பிரிவு மற்றும் தந்தை தாயோடும் குழந்தையோடும் வாழ்ந்தாரா என்பன போன்றவை அவை. நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான அறிக்கை முடிவாகக் குறிப்பிடுகிறது: “ஆய்வுகள் காட்டியதென்னவெனில் சிசு மரண சம்பவங்கள், சிட்ஸ், ஸ்கண்டிநேவிய நாடுகளில் தொழில் வளம் மிக்க அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்ற ஏனைய நாடுகளைவிட குறைவு.”. (g90 7/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்