இருபதாவது நூற்றாண்டு ஃபேக்ஸ் இயந்திரம்
நியு யார்க் நகரிலிருந்து டொரான்டோவுக்கு ஒரு நிமிடம்கூட எடுப்பதில்லை. அதுதான் ஃபேக்ஸ் [FAX] இயந்திரத்தின் வேகம். இது என்ன? விளக்க வேண்டுமானால், இது ஒரு வார்த்தையும்கூட பேசாமல் நெடுந்தொலைவிலிருந்து நிழற்பட நகல்களெடுத்துத் தொடர்பு கொள்வதேயாகும். ஐக்கிய மாகாணங்களில் மட்டும் இந்த உருநேர்படி இயந்திரங்கள் மாதந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகப்படியாக வாங்கப்படுகின்றன.
மருத்துவர்கள் மருத்துவ அறிக்கைகளை அனுப்புகிறார்கள், வழக்கறிஞர்கள் சட்டம் சம்பந்தமான எழுத்துப்படிகளை இடமாற்றம் செய்கிறார்கள், மளிகைக் கடைக்காரர்கள் சாமான்கள் பட்டியலை அனுப்புகிறார்கள், மற்றும் வானொலி நிலையங்கள் நேயர்களின் விருப்பப்பாடல்களைப் பெற்றுக்கொள்கிறார்கள்—எல்லாமே ஃபேக்ஸ் மூலம். தன்னுடைய குழந்தை பிறந்து ஒரு மணிநேரத்திற்குள், ஒரு கலிஃபோர்னிய தாய் தன் குழந்தையின் பாத அச்சைக்கூட ஃபேக்ஸ் மூலம் இன்னொரு மாநிலத்தில் வசிக்கும் தாத்தா பாட்டிக்கு அனுப்பிவைத்தார்.
அது எவ்விதம் இயங்குகிறது?
அது மிகவும் எளிய முறையில் இயங்குகிறது. உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு தொலைபேசி, சுவற்றில் ஒரு மின்சாரப் பிளக், ஒரு ஃபேக்ஸ் இயந்திரம். இந்த இயந்திரத்திற்குள் ஓர் ஆவணம் செலுத்தப்படுகிறது. அதனுள் அமைக்கப்பட்ட ஓர் அலகிடும் சாதனம் அந்தப் பக்கத்திலுள்ள கருப்புப் பகுதிகளையெல்லாம் வாசித்து, அவற்றை மின் தனியலைகளாக மொழியாக்கம் செய்து, தொலைபேசி மார்க்கம் வழியே அதை அனுப்புகிறது. தகவலைப் பெற்றுக்கொள்ளும் ஒரு ஃபேக்ஸ் இயந்திரம் அந்த மின் தனியலைகளை கருப்புப் பகுதிகளாக மறுமொழியாக்கம் செய்து, அவற்றைச் சரியான ஒரு நகலாக அச்சிட்டுத் தருகிறது.
இந்தத் தொழில்நுட்பம் எங்கே ஆரம்பித்தது?
ஒரு ஸ்காட்லந்து தேசத்துக் கடிகார உற்பத்தியாளரும் கண்டுபிடிப்பாளருமாகிய அலெக்சாண்டர் பேய்ன் 1843-ல், முதல் ஃபேக்ஸ் இயந்திரத்தை உருவாக்கி அமைத்தார். இன்றைய தரத்தில் பார்த்தால் அது ஒரு புராதன அலகிடும் சாதனமாக இருந்தது. மின்சாரக் கம்பி கொண்ட ஓர் எழுத்தாணி அசைந்துகொண்டிருந்த ஓர் ஊசற்குண்டின் முனைக்குப் பொறுத்தப்பெற்று, ஓர் உலோக அச்சுப்பெட்டியின் மீது முன்னும் பின்னுமாக அசைந்துகொண்டிருக்க, தந்தி கம்பிகள் மேல் மின் தனியலைகளை அனுப்பியது. மற்றொரு மின்சாரக் கம்பி கொண்ட ஊசல்குண்டு ஒவ்வொரு தனியலைகளையும் மின்நுகர் காகிதத்தில் ஒரு கருப்புப் புள்ளியாக மொழியாக்கம் செய்தது.
ஃபேக்ஸ் இயந்திரங்கள் முன்னேற்றுவிக்கப்பட்டு, 1907-க்குள் ஒரு சுழல் உருளையையும், நிழற்பட மின் செல்லையும் பயன்படுத்தின. இவை அந்த உருளையைச் சுற்றியிருந்த காகிதத்திலிருந்த சாதாரண அச்சை வாசிக்க முடிந்தது. என்றபோதிலும், வானொலி மூலம் அனுப்பப்பட்ட சுட்டுக்குறிகள் மிகவும் மெதுவாக சென்றது மட்டுமின்றி, அடிக்கடி இடையில் தடங்கல்களும் ஏற்பட்டன.
நார் ஒளியியல், டிஜிட்டல் (digital) அனுப்பீட்டுமுறை, சுட்டுக்குறி சுருக்கல் ஆகியவற்றை பயன்படுத்தி 1980-களின் தொழில்நுட்பம், விசேஷித்த சூழ்நிலைகளில் ஒரு பக்கத்திற்கு மூன்று வினாடிகள் வேகத்தில் குறிப்பறிந்து அனுப்பும் ஃபேக்ஸ்களை கூடியதாக்கியிருக்கிறது. தற்போது, மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், ஒரு பக்கத்திற்கு 45 வினாடிகள் என்ற வீதத்தில் அனுப்பும் வேகத்தைக் கொண்டிருக்கின்றன.
ஃபேக்ஸ் இயந்திரம் எவ்விதம் பயன்படுத்தப்படுகிறது?
அதிக அவசரமான தகவல்கள் பொதுவாக அடுத்தநாளே சென்று சேர்வதற்கு தனியார் கூரியர் சேவை அல்லது தபால் பணிகள் உபயோகிக்கப்பட்டன. இப்பொழுது இவை ஒருசில நிமிடங்களில் சேர்க்கப்படலாம். முக்கியமான ஆவணங்கள் விலாசம் எழுதப்பட்டு, தபால் தலை ஒட்டப்பட்டு, தபால் பெட்டியில் போடும் அந்த நேரத்திற்குள் ஃபேக்ஸ் செய்தியாக அனுப்பப்பட்டால், அவை சேரவேண்டிய நபரின் கையில் இருக்கிறது.
கானடாவில் ஒரு பிள்ளைக்கு மிகவும் கவலைக்கிடமான, உயிருக்கு ஆபத்தான மருத்துவ சிக்கல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு, இரத்தமேற்றப்படும் அவசியம் இருப்பதாக சொல்லப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளாக எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இரத்தம் பயன்படுத்தக்கூடாது என்று பெற்றோர்கள் உறுதியாக இருந்தார்கள். மருத்துவ ஆய்வாளர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டது, இரத்தமில்லாத பொருட்களைக் கொண்ட பதில் சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தும் சாத்தியத்தைக் கணித்திட அந்த மருத்துவ குழுவுக்கு உதவிசெய்யும் வகையில் பொறுப்பாயிருந்த மருத்துவருக்கு அப்பொருள் சார்ந்த கட்டுரைகள் ஒருசில நிமிடங்களுக்குள் ஃபேக்ஸ் முறையில் அனுப்பப்பட்டது. பெற்றோரின் விருப்பங்கள் மதிக்கப்பட்டது, அந்தக் குழந்தையும் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவமனை மருத்துவ குழுக்கள் இப்பொழுது மருத்துவ உடன்பாட்டு முதல் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கு ஃபேக்ஸ் பயன்படுத்துகிற காரியம் அந்தக் குடும்பத்தை வெகுவாகக் கவர்ந்தது.
செய்தித் தகவல் துறைகூட ஃபேக்ஸ் முறையைத் திறம்பட்ட வகையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். 1989-ல், சீன படை பீஜிங்கில் டியானன்மென் சதுக்கத்தில் ஒரு மாணவப் புரட்சியை ஒடுக்கிய போது, அரசு தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் அச்சுத் தொடர்பு ஏதுக்களை கட்டுப்படுத்தியது. தொலைபேசி மார்க்கங்கள் சர்வதேச வியாபாரத்தைக் காத்துக்கொள்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டது செய்தியாளர்கள் செய்திகளையும் படங்களையும் சீனாவுக்குள்ளிருந்த மக்களுக்கும் உலகின் மற்ற பகுதியிலுள்ளவர்களுக்கும் ஃபேக்ஸ் மூலம் அனுப்பினார்கள்.
விளம்பரத் தொழில்துறையும்கூட இந்தத் தொழில்நுட்பத்தைப் பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு விற்பனை மேலாளர் கூறினார், ஃபேக்ஸ் விளம்பரங்கள் அனுப்பப்படுகையில், “செய்திகள் உடனடியான மற்றும் அவசர உணர்வைக் கொண்டிருக்கிறது. அவர்கள் உடனடியாக வாசிக்க முடிகிறது.” ஆனால் அநேக ஃபேக்ஸ் உரிமையாளர்களைக் குறித்ததில், இந்த உதவாத ஃபேக்ஸ் தங்களுடைய சாதனத்தைக் கட்டிப்போடுகிறது, தங்களுடைய வியாபாரத்துக்கு முக்கியமாக அமையும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இடையூறாக இருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டபடி, ஃபேக்ஸ் இயந்திரத்தின் உபயோகம் உங்கள் கற்பனையால் மட்டுமே மட்டுப்படுத்தப்படுகிறது. என்றபோதிலும், பெரும்பாலான புதிய தொழில்நுட்பத்தில் இருப்பது போன்று, அதைத் துர்ப்பிரயோகம் செய்வதற்கு யாரோ ஒருவர் இருக்கிறார்.
ஃபேக்ஸுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
ஃபேக்ஸ் சாதனங்கள் வேகமாகவும், அதிக திறமையாகவும் பெருகிடும் என்பதை ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர் எதிர்பார்க்கிறார். வியாபாரத்தில் மேசையில் பயன்படுத்த வசதியாக அமையும் இயந்திரங்கள் சர்வசாதாரணமாக ஆவதுபோல், உள்ளூர் தபால் அனுப்பப்படுவதை உள்ளூர் தகவல்கள் ஃபேக்ஸ் மூலம் அனுப்பும் காரியம் மாற்றியமைத்துவிடும். முழு வண்ண உருநேர்படிகள் மற்றும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஃபேக்ஸ் இயந்திரங்கள் உற்பத்தியில் இருக்கிறது. ஒரு தனிப்பட்ட கம்ப்யூட்டரால் செயல்படுத்தப்படும் ஒரு நகல் எடுக்கும்/அச்சிடும்/ஃபேக்ஸ் இயந்திரம் சேர்ந்த ஒரு கூட்டு இயந்திரம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. 100 டாலரில் ஒரு சிறிய குறிப்பெழுதும் நோட்டு அளவான ஃபேக்ஸ் இயந்திரம் கிடைக்கப்பெறும் என்றும் ஒரு பெரிய உற்பத்தியாளர் முன்னறிவிக்கிறார்.
தொலைபேசி பேச்சு மூலம் உடனடியாகத் தொடர்பு கொள்வதைக் கூடிய காரியமாக்கி வருகிறபோதிலும், அப்படிப்பட்ட செய்திகள் சில சமயங்களில் தவறாக எடுத்துக்கூறப்படுகின்றன அல்லது தவறாக விளக்கப்படுகின்றன. ஃபேக்ஸ் சரியான செய்தியை அச்சில்—வேகமாகவும்—அளிக்க முடியும். இது நம்முடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக இருக்கிறது. ஃபேக்ஸ் முதிர்ச்சியடைந்துவிட்டிருக்கிறது, இங்கு இருக்கப்போகிறது. (g91 1/22)