லாட்டரிகள் ஏன் இந்தளவுக்குப் பிரபலமாயிருக்கின்றன?
மக்கள் ஏன் லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள்? “அது பொழுதுபோக்காகவும் கேளிக்கையாகவும் இருக்கிறது,” என்று ஒரு லாட்டரி வாரியத்தின் சார்பாளர் கூறினாள். அப்படியாக இருக்கலாம், ஆனால், முக்கிய கவர்ச்சி பரிசுத் தொகையில்தான் இருக்கிறது. எல்லாருமே சற்று கூடுதல் பணத்தை பயன்படுத்த முடியும். லாட்டரி பரிசுகள் ஏராளமான பணத்தை வாக்களிக்கிறது. விலைவாசி உயர்வும், பங்கு-சந்தை வீழ்ச்சிகள், முன்னேற்றம் காணாத வேலைகளும் இருந்துகொண்டிருக்கும் இன்றைய அநிச்சய உலகில் புகழைத் தேடித்தரும் பணக்காரராவதற்குக் கற்பனைசெய்யக்கூடிய ஒரே வழி என்று லட்சக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.
இந்தக் கவர்ச்சியுடன்கூட லாட்டரிகள் ஆடுவதற்கு சிக்கலற்றதாகவும் மிக எளிதாகவும் இருக்கிறது. லோட்டோ, எண்கள், மறைந்திருக்கும் எண்களைப் பார்ப்பதற்கு தாளைத் தேய்த்து பார்க்கும் விளையாட்டுகள் போன்ற அநேக வகை லாட்டரிகள் இருக்கின்றன, ஆனால் இவை அனைத்துக்கும் பொதுவாக இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. முதல் வகை என்னவென்றால், தாங்கள் பெற்றுள்ள சீட்டுகளின் எண்கள் அந்தக் குலுக்கலின் அமைப்பாளர்கள் குலுக்கல்முறையில் எடுக்கும் சீட்டுகளின் எண்களுடன் ஒத்திருக்கும்போது வெற்றிபெறுகின்றனர். இரண்டாவது, மற்ற வகை சூதாட்டங்களைப் போன்றில்லாமல் இதில் வெற்றிபெறுவதற்கு விசேஷ திறமை அல்லது அறிவு ஏதும் தேவையில்லை. வெற்றி அல்லது தோல்வி என்பது வெறுமென தற்செயலான காரியமாகவே இருக்கிறது.
லாட்டரி சீட்டுகளை வாங்குவது மிகவும் சுலபமாக இருக்கிறது என்பது மக்கள் அவற்றை விளையாடுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அமெரிக்கரில் பெரும்பான்மையினர் அவற்றை மளிகைக் கடையில் வாங்கமுடிகிறது. மற்ற இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்கூடங்கள் அருகில் இல்லாதிருந்தால், ஆட்கள் தபால், தொலைபேசி, தொலையச்சு அல்லது ஃபேக்ஸ் மூலம் பந்தயம் கட்டலாம்.
லாட்டரிகளில் என்ன புதுமை இருக்கிறது?
லாட்டரிகள் புதியவையா? இல்லவே இல்லை. பூர்வ ரோமில் நடைபெற்ற விழாக்களில், நீரோ மற்றும் அகஸ்து பேரரசர்கள் அடிமைகளையும் உடைமைகளையும் பரிசுகளாகக் கொடுத்தனர். பதிவில் காணப்படும் முதல் பரிசு தொகை அநேகமாக 1530-ல் இத்தாலியிலுள்ள ஃப்ளாரன்சில் லாட்டரி மூலம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த நூற்றாண்டுகளில், லாட்டரிகள் ஐரோப்பாவில் செழித்தன. லாட்டரிமுறைகள் ஆரம்பகாலத்து அமெரிக்காவிலுங்கூட செழித்தன, இது ஜேம்ஸ்டவுன், கிழக்கத்திய படை, பேரும் புகழும் பெற்ற ஹார்வர்டு, டார்ட்மெளத், யேல் மற்றும் கொலம்பிய பல்கலைக்கழகங்களின் கட்டிடங்களைக் கட்டுவதற்கும் நிதி உதவி அளித்தது.
என்றபோதிலும் 19-வது நூற்றாண்டில், இந்த வியாபாரத்திற்குச் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மொத்த அளவிலான லாட்டரிகளுக்கு எதிராக எழும்பி, லாட்டரிகளில் தாறுமாறு ஏற்படுவதாய்க் குற்றஞ்சாட்டினர். லாட்டரிகளில் லஞ்சம், ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் உட்பட்டிருப்பதாய்த் திகைக்கவைக்கும் செய்திகள் கொடுக்கப்பட்டன. தனியார் நடத்தும் லாட்டரி நிறுவத்தினர் ஏராளமான லாபம் குவித்தார்கள். இதன் விளைவாக, ஐக்கிய மாகாணங்கள், ஃபிரான்ஸ், மற்றும் பிரிட்டனில் லாட்டரிகள் சட்டப்படி தடைசெய்யப்பட்டது.
கதை முடிந்துவிட்டதா? தெளிவாகவே இல்லை. லாட்டரி முறைகள் மற்ற இடங்களில் செழிக்க ஆரம்பித்தன—உதாரணமாக, இத்தாலியிலும் ஆஸ்திரேலியாவிலும். ஸ்பெய்னைச் சேர்ந்த கார்லோஸ் III 1763-ல் ஒரு குலுக்கலை ஏற்படுத்தினார்; அதன் தற்கால பாணி 1812-ல் சட்ட ஏற்பாடாக இருந்தது. லாட்டரி வண்டியில் ஒவ்வொரு நாடாக ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது. 1933-ல், ஃபிரான்ஸ் அதன் தடையை நீக்கி, தேசிய குலுக்கலை நிறுவியது. மேலும் 1930-களில் ஐயர்லாந்து அதன் மிகப் பிரபல ஐயர்லாந்து மருத்துவமனைகளின் கொள்ளைக் குலுக்கலை ஏற்படுத்தியது. ஐப்பானின் டாக்காரகுஜி 1945-ல் ஆரம்பிக்கப்பட்டது. பெயரில் லாட்டரிகளாக இல்லாவிட்டாலும் பிரிட்டன் கால்பந்தாட்ட முடிவுகளை ஊகித்து அதன் பேரில் பந்தயம் கட்டும் மையங்களையும் சலுகை கொண்ட குலுக்கல்களையும் அங்கீகரித்தது. 1964-ல் ஐக்கிய மாகாணங்கள் மீண்டும் இந்த வியாபாரத்திற்குத் திரும்பியது.
இரண்டு காரியங்கள் 1970-களில் லாட்டரி நடவடிக்கைகளை மாற்றியது. முதல் காரியம், அதன் சில்லரை விற்பனை நிலையங்களில் கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டதன் அறிமுகமாகும். இப்பொழுது விளையாட நினைப்பவர்கள் தங்கள் சொந்த எண்களை ஆட்டக்காரர்கள் பெரிய அளவு, குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து நிகழும் விளையாட்டுகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் வெற்றியைக் காண்பதற்கு அவர்கள் இனிமேலும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை; ஆட்டக்காரர்கள் ஒருசில நாட்களில், மணிநேரங்களில் அல்லது நிமிடங்களிலேயே முடிவைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
இரண்டாவது முன்னேற்றம் லோட்டோ அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இதில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக்கப்பட்டது. லோட்டோவில் ஜாக்பாட் கிடைக்காவிடில், அது அடுத்த விளையாட்டுகளுக்குத் தொடருகிறது. இதனால், வெற்றித் தொகை லட்சக்கணக்கான டாலர்களைக் குவிக்கக்கூடும். லோட்டோவால் விற்பனை பெருகியது, உண்மையிலேயே பெரிய வியாபாரமாயிற்று.
லாட்டரிகளை ஊக்குவிப்பவர்களுக்கு வேண்டுகோள்
அரசாங்கங்கள் ஏன் சூதாட்டத்தை ஊக்குவிக்கின்றன? ஏனென்றால் வரி வசூலிக்காமலேயே நிதி நிலையைப் பெருக்குவதற்கு இது ஓர் எளிய வழி. இந்த விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் காசுவீழ்வியங்கு இயந்திரங்களும் சுழல்மைய மேசை கவறாட்டமும், பெற்றுக்கொள்ளும் தொகையில் 95 சதவீதத்தைப் பரிசு தொகையாகத் திருப்பித்தந்துவிடுகிறது. லாட்டரிகளோ 50 சதவீதத்துக்கும் குறைவாகவே பரிசுத்தொகை வழங்குகிறது. உதாரணமாக, 1988-ல் ஐக்கிய மாகாணங்களில் லாட்டரி பரிசு தொகையில் ஒவ்வொரு டாலருக்கும் பரிசுத்தொகையாக 48 சென்டுகள் கொடுக்கப்பட்டன, மற்றும் 15 சென்டுகள் அதை ஊக்குவிப்பதற்கும், விற்பனைக்கும், நிர்வாகத்துக்கும் செலவுசெய்யப்பட்டன. எஞ்சியிருந்த 37 சென்டுகள் பொது முன்னேற்றங்கள், கல்வி, உடல்நலம் மற்றும் முதியோரைக் கவனிப்பதற்கு நிதி உதவியளிக்க பயன்படுத்தப்பட்டது. தேசமுழுவதுமாக அந்தத் தொகை 70 லட்சம் 2 ஆயிரம் டாலராக இருந்தது.
ஆனால் பணம் பண்ணுவதற்காக மட்டுமே அரசுகள் லாட்டரிகளை ஒழுங்குசெய்வதில்லை. அவர்கள் இந்த வியாபாரத்தில் இறங்காவிட்டால், பணத்தை இழக்க நேரிடும். அவர்களுடைய குடிமக்கள் வேறு இடத்தில் இதை விளையாடுவார்கள். எனவே ஒரு தேசம் அல்லது மாநிலம் லாட்டரிகளை ஆரம்பித்ததென்றால் அதன் அயல் தேசங்களும் அப்படிச் செய்யும் அழுத்தத்தின் கீழ் வருகின்றது. இப்படியாக இது விரைவாய் அதிகரித்திடுவது ஐக்கிய மாகாணங்களில் தெளிவாக இருந்தது. 1964-ல் ஒரு மாநில லாட்டரிசீட்டு இருந்தது. 1989-ல் 30 ஆனது.
சொத்துக் கனவுகள்
உண்மைதான், இவ்விதம் செலவுசெய்யப்படும் டாலரின் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ள முயலும் மக்கள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே லாட்டரிகளை ஊக்குவிப்பவர்கள் அவற்றில் எவ்விதம் பணத்தைச் செலவழிக்கச் செய்கின்றனர்? விளம்பரங்கள்! செயல்தூண்டுதலளிக்கும் நிபுணர்களை அழைத்தல்!
கிடைக்கப்பெறும் தொகையில் ஒரு பங்கு (சிறியதாயிருந்தாலும்) கல்விக்கு அல்லது முதியோருக்குக் கவனிப்பு அளிப்பதற்கு நிதி உதவி அளிப்பதாயிருக்கும் என்று வலியுறுத்துகின்றனவா? இல்லை! அது சொல்லப்படுவதோ அரிது. மாறாக, கோடிக்கணக்கான ரூபாயை லாட்டரி பரிசுத்தொகையாகப் பெறுவதில் எவ்வளவு இன்பம் இருக்கிறது என்பதைத்தான் வலியுறுத்துகிறது. இதோ, ஒருசில உதாரணங்கள்:
◻ “பணக்காரரும் பிரபலமுமாயிருப்பவர்களின் பிரமாதமான வாழ்க்கைப்பாணி உடனே உங்களுடையதாயிருக்கக்கூடும் . . . புகழ்வாய்ந்த கானடாவின் பல-லட்ச டாலர் லோட்டோ 6/49 விளையாடும்போது.”
◻ “ஃப்ளாரிடா லாட்டரி . . . அமெரிக்காவின் மிகப் பெரிய குலுக்கலில் பணக்காரராகுங்கள்.”
◻ “ஜெர்மனி பணம்—திடீர் பணக்காரராகுங்கள், ஒரே இரவில் லட்சாதிபதியாகுங்கள்.”
கடினமான வியாபாரமா? நிச்சயமாகவே அப்படித்தான் இருக்கிறது! லாட்டரி சீட்டுகள் விற்பனையாகாதபோது, விளம்பரத்தைக் கூட்டுவதற்கான முயற்சிகள் உட்படுத்தப்படுகின்றன. உண்மையில், புதியவர்களைக் கவர்ச்சிக்கவும், பழையவர்களின் அக்கறையைக் காத்துக்கொள்வதற்கும் லாட்டரிகளை ஊக்குவிப்பவர்கள் இன்னும் ஆழ்ந்த விளையாட்டுகளிடமாகவும் வியாபார முறைகளிடமாகவும் திரும்புகின்றனர். லாட்டரிகளை ஊக்குவிப்பவர்கள் மற்றவர்களுக்குப் புதிதாகத் தென்படும் ஏதோ ஒன்றை அளித்திட வேண்டும். ஒரகானின் லாட்டரி இயக்குநர் ஜேம்ஸ் தாவே கூறினார்: “நாங்கள் சூதாட்ட வாசகங்களைக் கொண்டிருக்கிறோம். ஒலிம்பிக் உலகப்போட்டி நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்மஸ் போது பண்டிகைத் தொகையைக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்ட நட்சத்திரங்களையுடையவர்களாய் நாங்கள் மக்களுடைய ஜோதிட சின்னங்களைப் பயன்படுத்துகிறோம். ஒரேசமயத்தில் இரண்டு அல்லது மூன்று, நான்கு அல்லது ஐந்து லாட்டரிகளை கொண்டிருந்தால், அதிக சீட்டுகள் விற்பனையாகிறது என்று எங்களால் காண முடிகிறது.”
ஆனால் இதுவரை மிகப் பெரிய கவர்ச்சி மாபெரும் ஜாக்பாட்டாகவே இருந்திருக்கிறது. 1989-ல் பென்சில்வேனியாவில் 11.5 கோடி டாலர் எட்டியபோது இருந்ததுபோல, லோட்டோவில், பரிசுத் தொகை உயரும்போது அது பெரிய செய்தியாக ஆகிறது. ஒருவரையொருவர் முந்திக்கொண்டு லாட்டரி சீட்டுகள் வாங்குவதற்காக மக்கள் கும்பல் கூடுகிறது. இதைச் “சூதாட்டக்காரனின் பசி பித்து” என்பதாக ஓர் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். அந்தப் பித்துச்செயலின் மத்தியில், பொதுவாக லாட்டரிசீட்டுகள் வாங்காதவர்களுங்கூட அந்தப் பணத்தை நாடிச் செல்கின்றனர். (g91 5/8)
[பக்கம் 6-ன் பெட்டி]
சூதாட்ட ஜுரமும் மதமும்
“கத்தோலிக்க சர்ச் எனக்குச் சூதாட்டம் விளையாட கற்றுக்கொடுத்திருக்கிறது. பிங்கோ மற்றும் குலுக்கல் லாட்டரிகளிலிருந்து எந்தவிதத்திலும் வித்தியாசமாய் இல்லை. கத்தோலிக்க சர்ச் முன்னின்று எல்லாவிதமான சூதாட்டங்களையும் தடைசெய்தால், லாட்டரிசீட்டுகள் வாங்குவதிலிருந்து விலகியிருப்பது குறித்து நான் மறுயோசனை செய்வேன். நான் பேராசையுடையவனாய் இருப்பதற்குக் காரணம், அது சர்ச்சில் ஏறக்குறைய ஒரு புனிதச்சடங்காக இருக்கிறது.”—யு.எஸ். கத்தோலிக் பத்திரிகையின் விரிவுரையாளர்.
“நாட்டர் டேம் பல்கலைக்கழக ஆய்வின்படி, ஞாயிறு பூசைக்குப் பின்பு, கத்தோலிக்க சர்ச்சுகளில் மிகவும் அதிகமாக வருகைதருவோர் இருக்கும் கொண்டாட்டம் அந்த வாராந்தர பிங்கோ விளையாட்டுகள்.” என்றபோதிலும், பிங்கோ விளையாட்டுகளுக்குப் போகிறவர்களில் பெரும்பான்மையினர் சர்ச்சுக்குப் போவதில்லை என்று பல பாதிரிமார்கள் கூறுகின்றனர்.—தி சண்டே ஸ்டார்-லெட்ஜர், நியு ஜெர்சி, அ.ஐ.மா.
“மாட்ரிடுக்குப் புனித பான்கிராஸ் அதிர்ஷ்டம் கொண்டுவந்தது” என்று ஒரு ஸ்பானிய சர்வதேச வார இதழ் ABC தலையங்கத்தைக் கொண்டிருந்தது. அந்தக் கட்டுரை தொடர்ந்தது: “‘அது புனித பான்கிராஸ்தான்,’ என்று லாட்டரிசீட்டு விற்பனை நிலையத்தின் இரண்டு வேலையாட்கள் மீண்டும் மீண்டும் கூறினர் . . . இங்குதான் 21515 வரிசை எண்ணுடைய சீட்டை விற்பனை செய்தனர், அந்தக் கார்டோ [பெரியது] 25 கோடி [பெசடாஸ், அல்லது இன்று 25 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புடையது], அது மாட்ரிடில் விநியோகிக்கப்பட்டது. தாங்கள் புனிதரிடம் ஜெபித்ததாக [அந்தப் பணியாட்கள்] அறிக்கை செய்தனர். அந்தப் புனிதரின் சொரூபம்தானே அவர்களுடைய நிறுவனத்தில் முதன்மை இடத்தை எடுக்கிறது, கிறிஸ்மஸ் ‘கார்டோ’ விற்பனையில் அதிர்ஷ்டம் இருப்பதற்காக அதன் மீது நறுமணம்கொண்ட ஒரு பார்ஸ்லி கிளையும் வைக்கப்பட்டது.”
“தங்களுடைய நல்ல அதிர்ஷ்டத்தை விளக்குவதற்கு வழி தேடுபவர்களாக, ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள், தாங்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்குக் கடவுளும் விதியும் தங்களைத் தெரிந்திருக்கின்றனர் என்று நம்புவதற்கு முற்பட்டனர். . . . ‘நல்லதிர்ஷ்டத்துக்கும் அல்லது இழப்புக்கும் ஏதோ ஒரு காரணம் காட்டப்படுகிறது, எதிர்பாராத ஒன்று அல்ல,’ என்றார் மியாமி பல்கலைக்கழகத்தில் உளநூல் பேராசிரியர் டாக்டர் ஜாக் A. கேப்சன். ‘அதற்குக் காரணத்தை கடவுளைத் தவிர வேறு எதற்கு உரித்தாக்க இருக்கிறது?’”—தி நியு யார்க் டைம்ஸ்.
அதிர்ஷ்டத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது? இஸ்ரவேலில் உண்மையற்றவர்களாகிவிட்டவர்களிடம் யெகோவா சொன்னார்: “யெகோவாவை விட்டு என் பரிசுத்தப் பர்வதத்தை மறந்தவர்களே, நீங்கள் அதிர்ஷ்டம் என்னும் தேவதைக்குப் படைப்புப்போட்டு, விதி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை வார்க்கிறீர்கள்.”—ஏசாயா 65:11, NW.
பரிசு பெறுகின்ற ஒருசிலரில் எத்தனை பேர் சற்று நின்று, தங்களுக்கு வந்த அதிர்ஷ்டப் பரிசு இழந்த லட்சக்கணக்கானோரின் துர்அதிர்ஷ்டத்தைச் சார்ந்தது என்று எண்ணிப்பார்க்கின்றனர்? சூதாட்டம் எந்த விதத்திலாவது ‘அயவான் பேரில் அன்பை’ பிரதிபலிக்கிறதா? இந்தச் சர்வலோகத்தில் பேரரசரும் கடவுளுமாயிருப்பவர் சூதாட்டம் போன்ற இப்படிப்பட்டத் தன்னல காரியத்தில் தம்மை உட்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணுவது நியாயமானதாக அல்லது வேதப்பூர்வமானதாக இருக்குமா?—மத்தேயு 22:39.