உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 6/8 பக். 31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மொசாம்பிக்கில் நடந்த மாநாடு
  • பஞ்சம், ஆயினும் உணவுப் பற்றாக்குறையில்லை
  • பறவைக் கடத்தல்
  • ஆசியாவில் எய்ட்ஸ்
  • எலி-பிடிக்கும் இனம்
  • உஷ்ணத்தினால் பவளங்கள் மரிக்கின்றன
  • மாளும் பவழப் பாறைகள்—மனிதர் காரணரா??
    விழித்தெழு!—1996
  • டாகுவா—யானையின் உயிர்த்தோழனா?
    விழித்தெழு!—1999
  • பவழம்—அபாயத்திலும் மாண்டுகொண்டும்
    விழித்தெழு!—1996
  • பவழப் பாறைகளைக் காக்க என்ன செய்யப்படலாம்?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 6/8 பக். 31

உலகத்தைக் கவனித்தல்

மொசாம்பிக்கில் நடந்த மாநாடு

பல வருடங்களாக தடைசெய்யப்பட்டிருந்த பின், அதிகாரிகள் வணக்கம் சம்பந்தப்பட்ட சுயாதீனத்தை அதிகமாக கொடுத்ததை மொசம்பிக்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் போற்றுகின்றனர். சமீபத்தில், மொசம்பிக்கின் தலைநகரமாகிய மபுட்டோவில் உள்ள கோஸ்டா டோ ஸோல் விளையாட்டு அரங்கத்தில், ஒரு நான்கு-நாள் “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டைப் பற்றி அறிக்கை செய்கையில், மபுட்டோவில் வெளியிடப்படும் டெம்போ என்ற பத்திரிகை, மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிநிரலுக்கு சுமார் ஆறாயிரம் பேர் ஆஜராயிருந்தனர் என்று குறிப்பிடுகிறது. போர்ச்சுகீஸ் மொழியிலும் ஸோங்கா மொழியிலும் பேச்சுகள் கொடுக்கப்பட்டன. “மனிதர்களுக்கிடையே பிரிவுகளை உண்டாக்கும் மொழி வேற்றுமைகள் இருந்தபோதிலும் கிறிஸ்தவ ஐக்கியத்தை பலப்படுத்துவதே” அந்த மாநாட்டின் நோக்கமாயிருந்தது என்பதாக டெம்போ மேலும் கூறியது. யெகோவாவின் சாட்சிகள் சர்வதேச அளவில், “தேசிய, இன, கல்வி, மற்றும் சமுதாய நிலை” போன்ற காரியங்களைப் பொருட்படுத்தாது இந்த இலக்கை நோக்கி உழைக்கின்றனர் என்பதாக அந்தக் கட்டுரை விளக்குகிறது. (g91 5/8)

பஞ்சம், ஆயினும் உணவுப் பற்றாக்குறையில்லை

பிரேஸிலில் ஸவோ பாவ்லோவில் நடந்த ஓர் ஆராய்ச்சி மாநாட்டில், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணராகிய ஜாக்கஸ் கோஞ்சல் இவ்வாறு கூறினார், “சமீப ஆண்டுகளில் பஞ்சம், குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் அதிகரித்துவிட்டதாக உலக வங்கியின் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.” “பஞ்சம்—’90-களின் சவால்” என்பது அதனுடைய தலைப்பாக இருந்தபோதிலும், உலகமுழுவதும் உணவுப் போதக்குறைவிலிருந்து வருவதாகக் கருதப்படும் 1,11,60,00,000 ஆட்களுக்கு அதிக நம்பிக்கைத் தெரிவிக்கப்படவில்லை. “உணவுப்பற்றாக்குறைவினால் பிரச்னையில்லை என்று நிபுணர்கள் உறுதியளிக்கின்றனர்,” என்பதாக ஓ எஸ்டாடோ டி S. பாவ்லோ அறிக்கைசெய்கிறது. “இந்த உலகம் தன்னில் வசிக்கும் 530 கோடி ஆட்களுடைய தேவைகளை திருப்திப்படுத்த போதுமானதை உற்பத்தி செய்கிறது. ஆனால் உணவை வாங்குவதற்கு தேவையான வருவாய் மக்களிடம் இல்லை.” ஏன்? உறுதியாகவே, கடனைப்பற்றிய சர்வதேசிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளினால் குறைக்கப்பட்ட சமூகநலத் திட்டங்களின் காரணமாக பஞ்சம் அதிகரித்துவிட்டிருக்கிறது. “நகரவளர்ச்சியோடுகூட பஞ்சம் முன்னிலும் மோசமாயிற்று,” என்பது கோஞ்சலின் பிரகாரம், மற்றொரு காரணமாகும். (g91 5/8)

பறவைக் கடத்தல்

“ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 கோடி டாலர்கள் மதிப்புள்ள பறவைகள் குறைந்தபட்சம் 2,25,000 பறவைகள் பொய்யான சான்று பதிவுகளோடு கொஞ்சம் கொஞ்சமாக கடத்தப்படுகின்றன அல்லது இறக்குமதி செய்யப்படுகின்றன,” என்பதாக உலக வனவிலங்கு நிதி அறிக்கைசெய்கிறது. கிளிகள், உதாரணமாக, ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா, மெக்ஸிக்கோ, மற்றும் தென்னமெரிக்கா போன்ற தேசங்களின் காடுகளிலுள்ள உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டு ஒருசில டாலர்களுக்கு விற்கப்படுகின்றன. “அந்தப் பறவைகள் ஐ.மா. அல்லது ஐரோப்பிய நுகர்வோரை சென்றடைவதற்குள்ளாக கரீபியாவிலுள்ள டோமினிகாவின் பெரிய இம்பீரியல் அமேசான்கள் போன்ற சில பறவைகள் ஒன்று 1,00,000 டாலர்களுக்கு விலைபோகிறது,” என்று தி உவோர்ல்ட் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிடுகிறது. கிளிகளின் பல இனவகைகள் காடுகளிலிருந்து அழிக்கப்பட்டு போகிற உடனடியான ஆபத்திலிருப்பதாக சொல்லப்படுகின்றன. கடத்தப்படுகிற பறவைகளில் சுமார் 90 சதவீதம் “சரியாக போஷிக்கப்படாததாலும் கொடிதான நிலைமையில் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாலும் பயணம் செய்யும்போதே மரித்துப்போகின்றன.” (g91 5/8)

ஆசியாவில் எய்ட்ஸ்

பிப்ரவரி 1990-ல், ஆசியாவில் சுமார் 2,000 பேர் எய்ட்ஸ் நோயை உடையவர்களாயிருந்தனர் என்று அறிக்கை செய்யப்பட்டது. ஆனாலும், ஆசியாவில் தற்போது HIV வைரஸால் பாதிக்கப்பட்ட ஆட்கள் மொத்தமாக 5,00,000 பேர் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கணக்கிடுகிறதென, ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்று கூறுகிறது. ஏசியாவீக் பத்திரிகையின் பிரகாரம், “ஆசியாவிலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கும் என ஐ.மா. அறிக்கை செய்தது.” இந்தப் பிரச்னையைக் கையாள, சிறந்த கல்விமுறையையும் செய்தி விளம்பரங்களையும் WHO சிபாரிசு செய்கிறது. (g91 5/8)

எலி-பிடிக்கும் இனம்

இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள உழவர்கள் இரசாயனப் பொருட்கள், பூச்சிக் கொல்லிகள், மற்றும் தூண்டில்இரைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கொறிவிலங்கினத்தின் பிரச்னையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக, அந்த உழவர்கள் இருளா என்ற இனத்தினரை இந்த வேலையைச் செய்ய கூலிக்கு அமர்த்தினர் என இந்தியா டுடே அறிக்கை செய்கிறது. முதல் வருட காலப்பகுதியில், இருளாக்கள் 16,000 ஹெக்டர் பரப்பளவுள்ள நிலப்பகுதியிலிருந்து சுமார் 1,40,000 எலிகளைப் பிடித்தனர். இருளாக்கள் “பூச்சிக் கொல்லிகளை உபயோகிப்பதில்லை, ஆனால் அவர்களின் முறைகள் கொறிவிலங்கினங்களின் பழக்கவழக்கத்தைப் பற்றிய ஓர் அறிவை அடிப்படையாகக் கொண்டதாகும்.” அவர்கள் எலிகளை அவைகளின் வளைகளிலிருந்து வெளியே போகும் வழிகளை அடைப்பதன் மூலம் வளைகளினுள் சிக்கவைக்கின்றனர். அவர்கள் அவ்வளவதிகமான எலிகளைப் பிடிக்கமுடிவதால் அந்த இருளாக்கள் எலியின் மாம்சத்தை கோழி மற்றும் மீன் தீவனமாகவும் மற்றும் எலியின் தோல பயன்படுத்தக்கூடிய தோலக மாற்றி உபயோகிக்க முடியுமா என இப்பொழுது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். “இருளாக்களின் இந்த அணுகுமுறையே” எலிகளைக் கட்டுப்படுத்த ஒரு விலைப் பயனளிக்கக்கூடிய “சரியான வழிமுறையாகும் என ஆராய்ச்சி முடிவாக நிரூபித்தது” என்பதாக இந்தியா டுடே சொல்கிறது. (g91 5/8)

உஷ்ணத்தினால் பவளங்கள் மரிக்கின்றன

“பூகோளம் உஷ்ணமடைவதன் முதல் அத்தாட்சி பவளங்கள் வெளிறிப் போவதிலிருந்து வரலாம்” என்பதாக பியூர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எர்னஸ்ட் வில்லியம்ஸ் கூறினார். அதிக கடல் உஷ்ணநிலை பவளங்கள் உணவாக உட்கொள்ளக்கூடிய நுண்ணிய பாசிகளை வெளியே தள்ளும்படி அவை செய்கிறது. இது பவளப்பாறைகளின் மேல் வெள்ளைத் தழும்புகளை உண்டாக்குகிறது, எனவேதான் “வெளுறுதல்” என்ற பதம் உபயோகப்படுத்தப்படுகிறது. “இந்தப் பாசிக் கூட்டாளியில்லாமல், இந்தப் பவளம் மிக பலவீனமாகி, இனப்பெருக்கம் செய்வதை நிறுத்திவிடுகிறது.” வெளிறிய மற்றும் வியாதிப்பட்ட பவளப்பாறைகள், பஹாமாஸ், பெர்முடா, ஃப்ளோரிடா, ஹவாய், ஜமாய்கா, ஒகிநாவா மற்றும் பியூர்டோ ரிகோ போன்றவை உட்பட அநேக இடங்களில் காணப்பட்டன. 1980-களின் பத்தாண்டுகள் கடந்த நூற்றாண்டிலேயே அதிக உஷ்ணமானதாய் இருந்தது மற்றும் “அடுத்த நூற்றாண்டில் வெப்பம் தொடர்ந்து பல டிகிரிகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்,” பவளப்பாறைகளுக்கு தொடர்ந்து அபாயம் விளைவித்துக் கொண்டிருக்கும் என்று “அநேக சீதோஷ்ணநிலை நிபுணர்கள் முன்னறிவிக்கிறார்கள்” என்பதாக தி டொரன்டோ ஸ்டார் குறிப்பிடுகிறது. (g91 5/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்