எய்ட்ஸ் அதற்குத் துக்ககரமாக பலியாகும் குழந்தைகள்
அவைகளின் படங்களை பார்த்திருக்கிறீர்களா? அவைகளின் கதைகளைப்பற்றி கேட்டிருக்கிறீர்களா அல்லது வாசித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், உங்களுக்குள் அதிர்ச்சியின் அலைகளை அனுப்பினதா? கண்ணீரை உங்களால் நிறுத்திவிட முடிந்ததா அல்லது உங்களை வருத்தமடையச் செய்ததா? உங்கள் இருதயம் அவைகளுக்காக வேதனையடைந்ததா? கவனிப்பில்லாமல் மரிக்குந்தருவாயில் இருக்கும் அவைகளின் முனகல் சப்தங்களை நீங்கள் இன்னும் கேட்கிறீர்களா? இப்போதும், மரிக்கும் அந்தக் குழந்தைகளின்—ஒரே படுக்கையில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு—பரிதாபகரமான காட்சிகளை அழித்துப்போட உங்களால் முடிகிறதா? அவர்களில் பெரும்பாலோர் கைவிடப்பட்டனர். அவர்களின் துன்பமும் மரணமும் உலகத்தில் பரவி வரும் இந்தப் பயங்கரமான நோயினால் வருகிறது—எய்ட்ஸ்!
பிப்ரவரித் திங்கள் 1990-வது ஆண்டு ஓர் ஐரோப்பிய நாட்டிலிருந்து ஒளிபரப்பப்பட்ட அறிக்கைகளும் படங்களும் கோடிக்கணக்கான பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகெங்கிலும், இன்னும் லட்சக்கணக்கானோர் இந்தச் சோகக்கதையை செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் வாசிக்கின்றனர். டைம் பத்திரிகை அறிவித்தது: “அந்தக் காட்சி வேதனையூட்டுவதாயும் பயங்கரமானதாயும் இருக்கிறது. தொட்டில் பின் தொட்டிலாக குழந்தைகளும், குறுநடைப் பாலகரும் வயதானவர்களைப் போல, தோல் வாடிப்போய், அணுகிவரும் மரணத்தின் நிச்சயமான அடையாளக்குறியாக இருக்கும் ஒட்டிப்போன முகங்களுடன் படுத்திருக்கின்றன.” “இது நான் பார்த்தவற்றில் எல்லாம் மோசமானது” என்று வருத்தப்பட்டுக் கூறினார் ஒரு மருத்துவர். “வெளிப்படையாவே இது மருத்துவ செயல் நடவடிக்கைகளால் கடத்தப்பட்டிருக்கும் ஒரு தொற்றுநோயே.”
இது எப்படி? எய்ட்ஸ் தொற்றப்பட்ட தாய்மாரிடமிருந்து கிருமியுடன் பிறந்திருக்கும் குழந்தைகளைப் போலின்றி, இந்தக் குழந்தைகள் HIV பாசிட்டிவ் (positive) கிருமி இருக்கும் நிச்சயத்துடன் பிறக்கவில்லை. இந்தத் துயரக்கதை பிறப்புக்குப் பிறகு, பலவீனமான அல்லது அகாலப்பிறவியான புதிய குழந்தைகள் இரத்தமேற்றப்பட்டபோது விளைவடைந்தது. இரத்தமேற்றுதல் அந்தப் பலவீன குழந்தைகளைப் பலப்படுத்தும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டன. அந்தப் பழக்கம் மருத்துவத்துறையினால் வெகுகாலமாக தகாதது என்று புறக்கணிக்கப்பட்ட ஒரு பழக்கம். “ஒரு HIV பாசிட்டிவ் (positive) கிருமியுள்ள இரத்ததானம் செய்பவர், 10, 12 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை தொற்று நோயால் தாக்கியிருப்பார்” என்று ஒரு மருத்துவர் சொன்னார்.
உலகத்தின் மருத்துவர்கள் என்ற பாரீஸில் உள்ள மனிதாபிமான அமைப்பின் தலைவரான டாக்டர் ஜேக்கஸ் லீபாஸ் சொன்னதாவது: “எய்ட்ஸின் சரித்திரத்திலேயே முதன் முறையாக, நாம் பிள்ளைப்பருவ எய்ட்ஸ் நோயோடு எதிர்த்துப் போரட வேண்டியுள்ளது. இது ஒரு தொற்றுநோய்.”
உதாரணமாக, 1990-வது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதன் முறையாக குழந்தைகளில் எய்ட்ஸ் தொற்றுநோய் உலகளாவிய விதத்தில் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் அதிர்ச்சியூட்டும் அத்தாட்சியை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டது. எய்ட்ஸ் நோயை விளைவிக்கும் கிருமி, 2000 ஆண்டுக்குள் ஒரு கோடி குழந்தைகளை பெரும்பாலும் தொற்றக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கையிட்டது. “இவைகளில் மிகப் பெரும்பான்மையோர் எய்ட்ஸ் முழு வளர்ச்சியடைந்து 2000 ஆண்டுக்குள் மரித்துப் போயிருக்கும்,” என்பதாக அந்த அமைப்பின் எய்ட்ஸ் பேரிலான உலக திட்டத்தின் இயக்குநர் டாக்டர் மைக்கெல் மெர்சன் கூறினார். 1990-ன் கடைசி பகுதியினூடே முழுவளர்ச்சியுற்ற எய்ட்ஸ் உத்தேசமான 12 லட்சம் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதி ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் சம்பவித்திருப்பதாக நம்பப்படுகிறது.
எய்ட்ஸ் நோயின் பரவுதல் தொற்றுநோய் என்றழைக்கப்பட்டிருப்பது ஏதேனும் ஒரு வியப்பாக இருக்கிறதா? 1992-வது ஆண்டின் முடிவிற்குள் சுமார் 40 லட்சம் குழந்தைகள் HIV கிருமி தொற்றப்பட்ட தாய்மாருக்குப் பிறந்திருக்கும். இந்தக் கிருமியுடன் பிறந்த ஐந்தில் நான்கு குழந்தைகள் தங்களுடைய ஐந்தாவது பிறந்த நாளுக்குள் எய்ட்ஸ் நோய் வளர்ச்சியுற்றிருக்கும். அவைகள் எய்ட்ஸ் நோயால் பீடித்த பிறகு பொதுவாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்துவிடும் என்பதாக டாக்டர் மெர்சன், ஜெனீவா செய்தி மாநாட்டொன்றுக்கு சொன்னார்.
ஆப்பிரிக்க பெண்களில் மட்டுமே, 1992-ல், 1,50,000 பேர் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோர் இருப்பர் என்றும், இன்னும் 1,30,000 ஆப்பிரிக்க குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுவர் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். ஐக்கிய மாகாணங்களில் HIV தொற்றப்பட்ட பெண்களுக்கு இதுவரைக்கும் 20,000 குழந்தைகள் பிறந்திருக்கும் என்பதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கையிட்டது. நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டனிலிருந்து வரும் தி ஈவ்னிங் போஸ்ட் என்ற பத்திரிகை அதின் ஜூலை 12, 1989 இதழில், பிரேஸிலின் சிறுவர்களில், உத்தேசமாக, 1,40,000 பேர் இந்தக் கிருமியைத் தங்களில் கொண்டிருக்கின்றனர் என்று அறிக்கை செய்தது. ஆனால், “எய்ட்ஸ் எதிர்ப்பாளர்கள் இந்த உத்தேசம் குறைந்த அளவு என்று பயப்படுகின்றனர்,” என்பதாக அந்தச் செய்தித்தாள் அறிக்கை செய்தது. “விசேஷ மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டாலொழிய, இந்தத் தொகுதி நகரத்தில் கட்டுப்பாட்டில்லா அணுகுண்டாக மாறும் என்று நம்புகிறேன்” என்பதாக வயதுக்கு வராதவர்களின் நலனுக்கான தேசிய ஸ்தாபனத்தின் மருத்துவ இயக்குநர் சொன்னார். “இது மிகவும் வினைமையான பிரச்னை” என்பதாக ஒரு பிரேஸில் நாட்டு மனோதத்துவ நிபுணர் வருத்தப்பட்டார்.
பிரச்னைகள் வளர்கின்றன
இந்தக் கொள்ளைநோயினால் அவதியுறும் ஒன்றுமறியா பலியாட்களின் அவலநிலையினால் உணர்ச்சிப்பூர்வமாக இரங்காமல் எவரும் இருக்க முடியுமா? உதாரணமாக, இந்த அறிக்கையைக் கவனியுங்கள்: “நார்வே நாட்டு செஞ்சிலுவை பிரகாரம், குறைந்தபட்சம் 50 குழந்தைகள் மத்திய ஆப்பிரிக்காவில் கொல செய்யப்பட்டிருக்கின்றன—சிலர் தங்களுடைய சொந்த பெற்றோர் மூலமாக—ஏனென்றால் அவைகள் எய்ட்ஸ் நோயை தங்களில் கொண்டிருந்தன.” எய்ட்ஸ் தொற்றிய மற்ற ஆப்பிரிக்க குழந்தைகள், இந்த நோய் தொழுநோயைவிட நிந்தையானதாக இருப்பதால் அத்தகைய நோயோடு எந்த ஒரு தொடர்பையும் அழித்துப்போட குடும்பங்களால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர் என்பதாக தென் ஆப்பிரிக்காவின் ஜொஹேனஸ்பர்க்கிலிருந்து வரும் செய்தித்தாள், சன்டே ஸ்டார், அறிக்கை செய்கிறது. “சில பகுதிகளில் எய்ட்ஸ் நோய்க்குப் பலியானவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் குளங்களுக்கும் மற்றும் சர்ச்சுகளுக்கும் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதில்லை” என்பதாக இந்தச் செய்தித்தாள் அறிவித்தது.
மெய்சிலிர்க்க வைக்கும் கூடுதலான புள்ளிவிவரங்கள் மெத்தனமாய் இருக்க இடமளிப்பதில்லை. இன்னொரு விதமான சோகக்கதைக்கும் எய்ட்ஸ் தொற்றுநோய்தான் நேரடியான காரணம் என்பதாக உலகளாவிய அறிக்கைகள் குற்றம் சுமத்துகின்றன. எய்ட்ஸ் கிருமியால் தொற்றப்படாத லட்சக்கணக்கான குழந்தைகள் 1990-களில் அனாதைகள் ஆவார்கள் என்பதாக முன்தீர்மானிக்கப்படுகிறது. ஏன்? அவர்களுடைய பெற்றோர் எய்ட்ஸினால் மரித்துவிடுவார்கள். 1992-க்குள் 50 லட்சம் எய்ட்ஸ் அனாதைகள் இருப்பார்கள் என்பதாக உலக சுகாதார அமைப்பு கணிக்கிறது. “இது உருவாகிவரும் ஒரு பிரளயம். ஒரு வளர்ப்புப் பெற்றோர் ஏற்பாட்டைத் திட்டமிடும் ஒரு தூரப்பார்வையை நாம் கொண்டில்லையென்றால் நாம் பெரிய அனாதை இல்லங்களைத் திறக்கவேண்டிவரும்” என்பதாக ஒரு குழந்தை பாதுகாப்பு நிபுணர் கூறினார்.
“வேதனை பெரும்பாலும் புரிந்துகொள்ள முடியாதது” என்பதாக ஒரு நியூ யார்க் குடும்பத்தை விவரிக்கையில் ஓர் ஆய்வாளர் சொன்னார். “தாய் தொற்றப்பட்டிருக்கிறார், தந்தை தொற்றப்பட்டிருக்கிறார், குழந்தை நோயுற்றிருக்கிறது, பெற்றோரும் குழந்தையும் இறந்துவிடும் நிலையில் உள்ளனர், அவர்கள் எந்த ஒரு குடும்பமும் தனக்கிராத ஒரு 10 வயது பையனை விட்டுப்பிரிவார்கள்.”
கடைசியாக, நியூ யார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் ஏர்னஸ்ட் டிரக்கர் என்பவரின் தெளிவான குறிப்பு ஒன்று இங்கே இருக்கிறது. “ஒரு பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, குழந்தைகள் பாதுகாவலர் சண்டைகளில் தாங்கள் அகப்பட்டுக்கொள்வதைக் காண்கின்றனர். தங்கள் இழப்போடும் எய்ட்ஸ் நிந்தையோடும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் அவர்கள் ஒரு குடும்ப அங்கத்தினருக்கும் இன்னொரு குடும்ப அங்கத்தினருக்கும் இடையே விரட்டியடிக்கப்படுகின்றனர்.”
குழந்தைகள் மற்றும் வயதுவந்த இளம் பருவத்தினரிடையே மரணத்திற்கு பிரதான காரணமாக இருப்பதில் எய்ட்ஸ் வேகமாய் முன்னேறி வருகிறது. ஒன்று முதல் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே மரணத்திற்கான ஒன்பதாவது பிரதான காரணமாகவும், 25 வயதுக்கு உட்பட்ட பருவவயது மற்றும் இளம் வாலிபரிடையேயான மரணத்திற்கான ஏழாவது பிரதான காரணமாகவும் இருக்கிறது. 1990-களின் ஆரம்ப ஆண்டுகளில், எய்ட்ஸ் மரணத்தை ஏற்படுத்தும் முதல் ஐந்து முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறிவிடக்கூடும் என்பதாக செப்டம்பர் 1989 தி எய்ட்ஸ்/HIV ரெக்கார்டு அறிவிக்கிறது. இருப்பினும் இந்தப் பயங்கரமான நோயின் சாத்தியக்கூறாக இருக்கும் அநேக பலியாட்களிடையே உலகளாவிய விதத்தில் மெத்தனப்போக்கு இருப்பதை அறிக்கைகள் சுட்டிக் காண்பிக்கின்றன. சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அடுத்த கட்டுரையில் கவனியுங்கள். (g91 7⁄22)