உலகத்தைக் கவனித்தல்
அதிக நாசம் காத்திருக்கிறது
“சுற்றுப்புறச் சூழல் அழிக்கப்பட்டுவருவதால், இயற்கைச்சேதங்களின் எண்ணிக்கை 2000-வது ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவுக்கு அதிகரிக்கும்,” என்று ஷ்ஃபின்ஃபர்ட்டர் டாக்பிளாட் என்ற ஜெர்மன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறபடி, “இன்று மனிதனால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் நாசம் அதிகமதிகமாகிக்கொண்டிருக்கிறது.” போப்பால் (இந்தியா) மற்றும் செவசோ (இத்தாலி) ஆகிய இடங்களில் ஏற்பட்ட வேதியல் சார்ந்த நாசமும், ஷெர்னாபலில் (ரஷ்யாவில்) ஏற்பட்ட அணுமின் எதிரியக்கம் விபத்து, அலாஸ்காவில் ஏற்பட்ட எண்ணைக் கசிவின் பேரழிவு, குவைத்தில் எரிந்த எண்ணைக்கிணறுகள் போன்றவை ஒரு சில உதாரணங்கள். “காற்று, நீர், நிலம் மாசுபடுவது மற்றும் ஓசோன் வாயு படலத்தின் தேய்மானம் மற்றும் கண்ணாடி அறைவிளைவு தொழில் வளர்ச்சி அழிவை ஏற்படுத்தக்கூடியது,” என்று அந்தக் கட்டுரைக் கூட்டுகிறது. “இந்த நூற்றாண்டின் ஆரம்பம் முதல், 5 கோடி மக்கள் இயற்கை சேதங்களால் தங்கள் வீடுகளை இழந்துவிட்டிருக்கின்றனர்.” (g91 9/22)
உயிருள்ள தலைமுறை
நீங்கள் 1800-களின் இடைக்காலமுதல் 1920-கள் வரையிலிருந்த அமெரிக்கரை மூன்று தலைமுறைகளாகப் பிரிப்பீர்களானால், ஐக்கிய மாகாணங்களில் இன்று ஒவ்வொரு தலைமுறையிலிருந்தும் உயிரோடு இருப்பவர்கள் எத்தனை பேராக இருப்பர்? அட்லான்டா அரசியலமைப்பு குறிப்பிடுகிறபடி, மொத்தத்தில் 3 கோடிக்கு மேல் இருக்கின்றனர். அது பின்வரும் காரியத்தைப் பிரசுரித்தது: 1860 முதல் 1882 முடிய பிறந்தவர்களில், இன்று 3,000 பேர் உயிரோடிருக்கிறார்கள். 1883 முதல் 1900 முடிய 11,00,000 இன்று உயிரோடிருக்கின்றனர். 1901 முதல் 1924 முடிய பிறந்தவர்களில் 2,90,00,000 பேர் இன்று உயிரோடிருக்கின்றனர். (g91 10/8)
செயற்கைக்கோள்கள் மூலம் வாகனங்களை மீட்டல்
தென் ஆப்பிரிக்காவில் வாகனங்களைக் கடத்தல் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துவருகிறது, வாகனங்கள் கடத்துபவர்களாலும் திருடர்களாலும் கடத்தப்பட்ட வாகனங்களை மீட்பதற்கான புதிய யுக்திகளின் வரிசையில் செயற்கைக்கோள்கள் மூலம் அவற்றைப் பின்தொடருதல் அண்மைக் கண்டுபிடிப்புகளில் ஒன்று. வாகன ஓட்டுனர் இந்த உபகரணத்தைத் தன் வாகனத்தில் பொருத்திவிட்டாரானால், தன்னுடைய வாகனம் கடத்தப்படுமாயின் அல்லது திருடப்படுமாயின் அவர் இந்தச் செய்திக் கடத்தியை இயக்கிட மட்டுமே வேண்டும் என்று ஜோஹனஸ்பர்க் தினசரி தி ஸ்டார் விளக்குகிறது. அந்த வாகனம் சென்றிருக்கும் பாதை ஒரு செயற்கைக்கோளால் கண்டுபிடிக்கப்பட்டு அதன் இடம் “ஒரு நிலவரைப்படத்தில் ஒரு கம்ப்யூட்டர் திரையில் ஓர் ‘ஒலிக்குறியால்’ காண்பிக்கப்படுகிறது.” அதன் பேரில் கட்டுப்பாட்டு அறை ஹெலிக்காப்டருக்கு அல்லது தரைப் பாதுகாப்பு மையங்களுக்குத் தகவல் அனுப்ப, அவர்கள் வாகனத்தைத் தொடருகிறார்கள். அறிக்கை மேலும் கூட்டுகிறது: “ஒரு வாகனம் இருக்கும் இடம் . . . 15 நிமிடங்களுக்குள் கண்டுபிடிக்கப்படலாம், வாகனத்தை மீட்பது 95 சதவீத வெற்றியைக் கண்டிருக்கிறது . . . என்று ஆரம்ப சோதனைகள் காண்பித்திருக்கின்றன.”
பள்ளிகளில் போதைமருந்துகள்
இளைஞர் பள்ளியில் போதைமருந்துகளுக்கு எவ்வாறு அறிமுகமாகின்றனர்? “போதைமருந்துகள் பள்ளிகளுக்கு அந்நியர் மூலமாய் எட்டுவதில்லை, ஆனால் மாணவர்கள் மூலம்தானே,” என்கிறார் பிரேசில், ரியோ கிராண்டு டோ சுலிலுள்ள ஒரு காவல்துறை அதிகாரி, அபீலியு பெரேரா. “அறிமுகமில்லாத ஒருவரிடமிருந்து யாரும் போதமருந்துகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.” அவர் சொல்கிறார்: “நான் 17 வயது பையன்களிடம் மரிஹுவானா இருப்பதை பார்த்திருக்கிறேன். இப்பொழுதோ 12 வயது மற்றும் 10 வயது பையன்களுடன் பிரச்னைகள் இருக்கின்றன.” ஆரம்பமாக, போதைமருந்துகள் மகிழ்ச்சியான ஒரு சூழல் அமைந்திருக்கும் ஒரு சமயத்தில் இலவசமாகக் கொடுக்கப்படலாம், ஆனால் அந்தப் போதை வஸ்துக்களுக்கு ஒரு முறை அடிமையாகிவிட்டால், போதைமருந்து விநியோகஸ்தர்கள் அவற்றிற்கு பணம் வாங்க ஆரம்பிக்கின்றனர். “போதைமருந்துகள் பிரவேசியாத எந்த ஒரு பள்ளியும் கிடையாது,” என்கிறார் சாவோ பாலோவிலுள்ள ஒரு மாவட்ட காவல்துறை அதிகாரி ஆல்பர்ட் கொராஸா. வேஷா என்ற பத்திரிகை கூறுகிறது: “பள்ளிகளில் போதைமருந்துகள் வாங்குவது இந்தளவுக்கு எளிதாக இருந்ததில்லை, விநியோகஸ்தர்களின் மையங்களின் இணைப்பு மாணவர்கள் மத்தியில் இந்தளவுக்குப் பரவியிருந்ததில்லை, இப்படிப்பட்ட வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவதும் இந்தளவுக்குக் கடினமாயிருந்ததில்லை.”
சிகிச்சைகள் ஒப்பிடப்படுகிறது
தீவிர புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் பொதுவாய் ஏற்றுக்கொள்ளப்படாத சிகிச்சைகளுடன் ஒப்பிடப்படும்போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு நல்ல விதத்திலோ அல்லது மோசமாகவோ பிரதிபலிக்கின்றனர் என்று குறிப்பிடுவதற்கில்லை என்கிறது புது இங்கிலாந்து மருத்துவ பத்திரிகை என்ற ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த ஓர் ஆய்வு. சராசரியாக ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் குறைவாக வாழக்கூடிய நிலையிலுள்ள நோயாளிகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். பாதிபேர் பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சைகளாகிய வேதியல் முறையில் நோய்க்கிருமிகளை அழித்திடும் சிகிச்சைப் பெற்றனர், மற்ற பாதிபேர் காய்கறி உணவுமுறைகளைக்கொண்டும், காபி மூலம் குடல் கழுவுதல், நோய்த்தடுப்பு இயக்கத்தைப் பலப்படுத்த ஊசிகள் கொண்டும் சிகிச்சைப் பெற்றனர். நோயாளிகளுக்கு முற்றிய நுரையீரல் புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய், கணையப் புற்றுநோய் அல்லது கரும்புற்றுநோய்கள் இருந்தன. ஒரு வருடத்தின் கடைசியில், ஒவ்வொரு தொகுதியிலும் பாதிக்கு மேற்பட்ட நோயாளிகள் உயிரோடிருந்தனர், இரண்டு ஆண்டுகளின் முடிவில் 15 சதவீதமாக இருந்தது. “புற்றுநோய் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளுக்கு நாம் அளிக்கும் சிகிச்சைகள் அநேகமாய் அவர்களுடைய ஆயுளைக் கூட்டுவதாயில்லை,” என்றார் அந்தத் தினசரியின் ஆசிரியர் டாக்டர் பேரி காசலெத். “சிலருடைய காரியத்தில் எந்தச் சிகிச்சையும் தேவைப்படாததைக் குறிக்கும் வகையில் இந்த மக்களை எவ்விதம் அதிக செளகரியமாக வைக்கலாம் என்று நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.”
அளவுக்கு மிஞ்சிய சுத்தம்?
எக்சன் வால்டீஸ் எண்ணைக் கலம் அலாஸ்கா கடலோரப்பகுதியில் மூழ்கியபோது, அதனால் ஏற்பட்ட எண்ணைக் கசிவு விலங்குகளை ஏராளமான எண்ணிக்கையில் கொன்றது—கடைசியாக வந்த புள்ளிவிவரத்தின்படி ஏறக்குறைய 5,80,000 பறவைகள், 5,500 கடல் நீர்நாய்கள், 22 திமிங்கிலங்கள். நிரந்தர நாசம் பற்றிய பேச்சு இருக்க, அது உண்மையில் இல்லை என்றும், பெரும்பாலான உயிரினவகைகள் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் முழு அளவினை மீண்டும் அடைந்துவிட வேண்டும் என்றும் தேசீய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாகம் சொல்கிறது. “பொதுமக்களின் கூக்குரலை அமர்த்துவதற்கு ஒரு வழியாக ஒருசில கடற்கரைகளில் வெந்நீரைப் பீச்சாமல் இருந்தால், முன்னிலைக்கு மீண்டும் வருதல் இன்னும் வேகமாக நடந்திருக்கும்” என்பதாக ஃபார்ச்சூன் பத்திரிகை அறிவிப்பு செய்கிறது. “சிறிய உயிரிகள் எண்ணெயைவிட வெந்நீரால் அதிகம் மடிந்து போகின்றன என்று ஏஜென்சி ஆய்வுகள் காண்பிக்கின்றன.” தலைமை விஞ்ஞானி சில்வியா எர்வியன் பிரகாரம், “உயிரின வாழ்க்கைச் சூழலின் விபத்தை எதிர்ப்படுகையில் சில சமயங்களில் செய்வதற்கு மிகச் சிறந்ததும், வேடிக்கையாக மிகக் கடினமானதாகவும் இருப்பது எதையும் செய்யாதிருப்பதே ஆகும்.” (g91 9/22)
தவறுதலாக சட்டவிரோதமான தாக்குதல்
மாடோ கிராஸோவில் பிரேஸிலின் அதிகாரிகள், மூன்று திருடர்கள் “ஒரு கோபவேச கும்பலால் அடிக்கப்பட்டு, சாகும்படி எரிக்கப்பட்டு—அதன் காட்சிகள் வீடியோவில் பதிவுசெய்துவைக்கப்பட்ட” சட்டவிரோதமான தாக்குதல் ஒன்றை சோதனையிடுகின்றனர். வேஷா பத்திரிகை குறிப்பிடுகிறது: “சட்டவிரோதமான தாக்குதல் மற்றும் கொல குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், ஒரு சிறிய பட்டணத்தில் நல்ல குடும்பத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மேலும் நற்பெயருடைய வியாபாரிகள். அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பூசைக்கு செல்கிறார்கள்; தங்கள் வரிகளை காலந்தவறாமல் செலுத்துகின்றனர்; மேலும் தங்கள் குழந்தைகளைக் கண்டிப்பான தராதரங்களின்படி போதிக்கின்றனர்.” ஆனால் ஒரு கும்பல் தீங்கிழைக்கப்பட்டதற்கு வன்முறையால் தாங்களே எதிர்பழி செய்ய முற்படும்போது, பயங்கரமான தவறுகள் நிகழக்கூடும். உ ஏஸ்டாடோ டி சாவோ பாலோ என்ற செய்தித்தாள் அறிக்கையிடுகிறது: “சுமார் 20 பேர் ஒன்றுகூடி, தவறாக, 15 வயதான ஸோஸ்வே நாஷிமென்டோஸில்வாவை தடியாலடித்துக் கொன்றுவிட்டனர்.” மற்றொரு சம்பவத்தில் ‘சட்டவிரோத தாக்குதல் செய்பவர்கள் தோன்றியபோது சந்தேகத்திற்குரிய ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்ததற்காக குற்றமற்றவனாய் நிரூபிக்கப்பட்ட 13 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.’
ஓர் உண்மையான வாசகம்
சமீபத்தில் ஓர் உண்மையான விளம்பரத்தின் ஒரு சிறு பகுதி எதிர்பார்க்கப்படாத ஓர் இடத்தில் தோன்றிற்று—ஒரு சிகரெட்டு பெட்டியின் மீது. இந்த வருடத் துவக்கத்தில், ஒரு மண்டையோடும், குறுக்காக அமைக்கப்பட்ட இரண்டு எலும்புகளும் பகட்டாக வெள்ளைநிறத்தில் பொறிக்கப்பட்ட, முழுவதும் கறுப்பு வர்ணமுள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்த புதிய வாணிப முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகள், ஐக்கிய மாகாணத்தின் கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ் சந்தைகளில் தோன்றின. அந்தப் பெட்டியின் ஒரு பக்கத்தில் வெள்ளைநிறக் கொட்டை எழுத்துக்களில் மரணம் என்ற அதன் வாணிபப்பெயர் எழுதப்பட்டிருந்தது. நியூஸ்வீக் பத்திரிகையின்படி, அவருடைய பொருளின் வழக்கத்திற்கு மாறான—ஆனால் திருத்தமான—வாசகத்தைத்தவிர வேறு விளம்பரங்களில்லாமலே, ஏற்கெனவே 25,000, பாக்கெட்டுகள் விற்பனை செய்திருப்பதாக அதன் உற்பத்தியாளர் உரிமைப்பாராட்டுகிறார். மரணத்தைப்பற்றி பயப்படுவதற்கு சூதறியாத மற்றும் மிகவும் இளமையாக இருக்கும் புகைப்பிடிப்பவர்களை கவர்ந்து, தன்னுடைய வியாபாரத்தை நாடு முழுவதும் விஸ்தரிக்க அவர் விரும்புகிறார். அப்படிப்பட்ட நுகர்வோர் ஒவ்வொரு மரண சிகரெட்டு பாக்கெட்டுகளின் மீதுள்ள “நீங்கள் புகைபிடிப்பதில்லையென்றால், தொடங்காதீர்கள். நீங்கள் புகைப்பிடிக்கிறீர்களென்றால், நிறுத்துங்கள்,” என்ற எச்சரிப்பை பெரும்பாலும் அசட்டை செய்கிறார்கள். (g91 10/8)
குழப்பமூட்டும் காலக்கணக்கீட்டுப் பிழை
பதினொரு வருடங்களுக்கு முன்பு, கலைச்சுவையுள்ள ஒரு தென்னாப்பிரிக்க பாட்டியார், ஜான் ஆரென்ஸ், ஆப்பிரிக்க நாடோடிகளாகிய வேட்டுவ இனத்தவரின் மரபுக் கலையைப் பின்பற்றி, பாறைகளை திரைகளாக வைத்து சில நல்ல ஓவியங்களை உருவாக்கினார். பிறகு, அவருடைய வரையப்பட்ட பாறைகளில் ஒன்று பீட்டர்மரிட்ஸ்பர்க் நகரத்திலுள்ள அவருடைய முன்னாள் வீட்டிற்கருகில் மரங்களுள்ள புல்வெளிப் பரப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இறுதியாக அது அந்த நகரத்தின் அருங்காட்சிசாலையின் பொறுப்பாளரின் கைக்கு கிடைத்தது. இந்தப் பாறை ஓவியத்தின் தொடக்கத்தையறியாத பொறுப்பாளர், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ரேடியோகார்பன் உந்துவிப்பு நிலையத்தில் அதனை காலக்கணக்கிடப்பட்டு பெற்றார். இந்த ஓவியம் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்! ஏன் இப்படிப்பட்ட குழப்பமூட்டும் பிழை? தென்னாப்பிரிக்காவின் ஸன்டே டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கைப்படி “திருமதி ஆரென்ஸினால் உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய்ச்சாயம் கார்பன் அடங்கியுள்ள இயற்கை எண்ணெயைக் கொண்டுள்ளது—ஆக்ஸ்ஃபோர்டினால் காலக்கணக்கிடப்பட்ட ஒரே பொருள் கார்பனாகும்—என்பதாக உறுதிசெய்யப்பட்டது.”
பாக்கட்-அளவு மின்னணு பைபிள்கள்
“இப்போதைக்கு, மின்னணுவியல் உலகில், சிறியதே அழகானது,” என்று நியூஸ்வீக் அறிக்கை செய்கிறது. நவீன கையிலடக்கும் இயந்திரங்களில், அ. ஐ. மா.-ன் நியூ ஜெர்ஸியிலுள்ள ஒரு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் மற்றும் கிங் ஜேம்ஸ் உட்பட பைபிளின் $400 மொழிபெயர்ப்புகள் மூன்றும் உள்ளன. “ஒரு பைபிளுக்காக ஏன் $400 செலவு செய்யவேண்டும்?” என்று நியூஸ்வீக் கேட்கிறது. “ஏனென்றால் அது தட்டச்சுப் பொறி மாதிரியான விரற்கட்டைகள் மற்றும் கொஞ்சம் புத்திக்கூர்மையையும் கொண்டிருக்கிறது.” மறந்துவிட்ட வசனங்களிருக்கும் இடங்களை ஞாபகம் வைக்கக்கூடிய சில மூல வார்த்தைகளை தட்டச்சடிப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். அந்த நிறுவனம் “மறதியுடைய குருவர்க்கத்தின் கவனத்தை ஈர்த்திருக்கக்கூடும்,” என்பதாக அந்தக் கட்டுரை சொல்கிறது. “அது ஏற்கெனவே 50,000 மின்னணுவியல் பைபிள்களை ஆறு மாதங்களில் விற்றிருக்கிறது.” (g91 9/22)