உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 2/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 2/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

வாடகை தாய்மை “வாடகை தாய்மை—அது கிறிஸ்தவர்களுக்கா?” (ஜூன் 8, 1993) என்ற உங்களுடைய கட்டுரையில் லேவியராகமம் 18:20 (NW) இவ்வாறு சொல்வதாக நீங்கள் மேற்கோள்காட்டுகிறீர்கள்: “பிறனுடைய மனைவிக்கு உன்னுடைய விந்தணுக்கசிவைக் கொடுக்காதிருப்பாயாக.” எனினும், கிங் ஜேம்ஸ் வெர்ஷன் வெறுமனே: “உன் அயலானின் மனைவியோடே பாலுணர்ச்சிக்காக படுத்துக்கொள்ளாதே,” என்று சொல்கிறது. தி நியூ இங்கிலீஷ் பைபிள் மற்றும் நியூ அமெரிக்கன் ஸ்டான்டர்ட் பைபிள் அதேபோலத்தான் வாசிக்கின்றன. வேதவசனங்களை நீங்கள் மாற்றுகிறீர்கள். கடவுளுடைய மூல வார்த்தை என்ன சொன்னது?

S. S., ஐக்கிய மாகாணங்கள்

பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தை பொழிப்புரை செய்கின்றன. “தி NIV இண்டர்லீனியர் ஹீப்ரு-இங்கிலீஷ் ஓல்ட் டெஸ்டமண்ட்” மற்றும் “தி இண்டர்லீனியர் ஹீப்ரு/கிரீக் இங்கிலீஷ் பைபிள்” செய்வதைப் போலவே “புதிய உலக மொழிபெயர்ப்பு” இதனை சொல்லர்த்தமாகவே மொழிபெயர்க்கிறது. இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட பைபிள் இந்த வசனத்தை, “உன்னுடைய இனப்பெருக்க வித்தை உன் அயலானின் மனைவிக்குக் கொடுக்காதிருப்பாயாக,” என்று மொழிபெயர்க்கிறது.—ED.

கண்ணீர் “இந்தக் கண்ணீரெல்லாம் ஏன்?” (ஜனவரி 8, 1993) என்ற கட்டுரை என்னை மிகவும் உருகவைத்தது. சிலகாலமாகவே நாம் ஏன் அழுகிறோம், கண்ணீர் வகிக்கும் பாகம் என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ள நான் விரும்பினேன். இறுதியில் எனக்குப் புரிகிறது, நன்கு எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு நன்றி. அது அவ்வளவு அதிசயிக்கத்தக்க வகையில் நம்மைப் படைத்தமைக்காக யெகோவாவுக்கு ஆழ்ந்த நன்றியோடிருக்க என்னை உணரச்செய்தது.

F. G., போர்த்துகல்

வீட்டுக் கல்வி “வீட்டுக் கல்வி—அது உங்களுக்கு ஏற்றதா?” (ஜூலை 8, 1993) என்ற உங்களுடைய கட்டுரைக்காக மிக்க நன்றி. தற்போது நான் என்னுடைய நான்கு பிள்ளைகளில் இருவருக்கு வீட்டிலேயே கற்றுக் கொடுக்கிறேன். நான் என்னுடைய பிள்ளைகளை அளவுக்குமீறி பாதுகாக்கிறேன் என்று மற்றவர்கள் அநேகமுறை என்னிடம் கூறினர். ஆகவே இந்த விஷயத்தின்பேரில் உங்களுடைய நடுநிலைமையான நோக்குநிலை பெரிதும் போற்றத்தக்கது.

B. W., ஐக்கிய மாகாணங்கள்

கற்பழிப்பு “கற்பழிப்பு—ஒரு பெண்ணின் கொடுங்கனவு” என்பதன்பேரில் வந்த ஜூன் 8, 1993, இதழைப் பெற்றபோது எனக்கு ஆனந்தமும் துக்கமும் உண்டாயிற்று. பாருங்கள், பல வருடங்கள் முழுநேர பிரசங்கிப்பாளராக இருந்துவரும் என் தாய், அவர்களுடைய சொந்த வீட்டிலேயே ஒரு பயங்கரமான தாக்குதலுக்கும் கற்பழிப்பு முயற்சிக்கும் பலியானார்கள். அந்தக் கட்டுரைகளைப் படித்தது குணமாக்குதலுக்கு உதவியிருக்கின்றன.

P. G., ஐக்கிய மாகாணங்கள்

நாடுவிட்டுக் குடிபெயர்தல் “இளைஞர் கேட்கின்றனர் . . . அதிக செல்வச் செழிப்புள்ள ஒரு நாட்டுக்கு நான் மாறிப்போகவேண்டுமா?” (ஆகஸ்ட் 8, 1993) என்ற கட்டுரைக்கு என்னுடைய நன்றியுணர்ச்சியைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு 16 வயது. ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு நாட்டுக்கு மாறிப்போக நினைத்திருந்தேன். ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, நாம் எங்கு வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல என்று உணருகிறேன். நம்முடைய வாழ்க்கையில் யெகோவாவின் ராஜ்யம் முதலாவதாக இருக்க அனுமதித்தால், நாம் நிச்சயமாகவே [ஆவிக்குரிய வகையில்] செழிப்புடன் இருப்போம். ஏனென்றால் யெகோவா நமக்கு உதவுவார்.

V. L. A., பிரேஸில்

மகிழ்வித்தல் “உங்களுடைய நண்பர்களை மகிழ்விக்க நீங்கள் விரும்புகிறீர்களா?” (செப்டம்பர் 8, 1993) என்ற கட்டுரைக்காக என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவிக்க இதை நான் எழுதுகிறேன். ஒரு பொழுதுபோக்கு இசைக் கலைஞனாக, அதிலிருந்து நான் அதிக பலனடைந்தேன். இசைப்பதனாலும் பாடுவதனாலும் தோழமைக் கூட்டங்களை உயிரூட்டமுள்ளதாக்க என் நண்பர்கள் என்னை அடிக்கடி அழைப்பதுண்டு. கூடிவந்திருப்போரை அளிப்பில் ஈடுபடுத்தவும் ஒரு பல்சுவை இசைத்தொகுப்பை உருவாக்கவும் நீங்கள் கொடுத்த ஆலோசனைகள் உண்மையிலேயே பிரமாதம்!

P. S. S. M., பிரேஸில்

கருக்கலைப்பு “கருக்கலைப்பு—உயிர் கொடுத்து உயிர் எடுத்தல்” (செப்டம்பர் 8, 1993) என்ற உங்களுடைய தொடர்வரிசை என் கண்களில் கண்ணீரையும் இதயத்துக்கு வேதனையையும் கொண்டுவந்தது. இந்தத் தகவல்களை நான் எட்டு வருடங்களுக்குமுன் படித்திருந்தால் நான் ஒரு கருக்கலைப்பை செய்திருக்கவே மாட்டேன். இந்தப் பாவத்தை நான் அதன் தகப்பனாயிருந்திருக்கக்கூடிய என் கணவரிடம் மனம்விட்டு சொல்ல எனக்கு ஏறக்குறைய ஏழு வருடங்கள் தேவைப்பட்டன. கருக்கலைப்பு செய்துகொள்ள நினைக்கும் எவரும் இந்தக் கட்டுரைகளைப் படித்து உயிர் அருமையானது எனவும் கடவுளிடமிருந்து வரும் ஒரு பரிசு எனவும் உணருவார்கள் என்று நம்புகிறேன்.

G. D., ஐக்கிய மாகாணங்கள்

எனக்கு 16 வயது, நாங்கள் பள்ளியில் கருக்கலைப்பைப்பற்றி கற்றுக்கொண்டோம். எனினும், அதில் உட்பட்டிருக்கும் குழந்தைக்கான வேதனையை எப்படியோ நான் உணராதிருந்தேன். இந்தப் பத்திரிகையை நான் படிக்கும்போது, எனக்குள் கடுங்கோபம் ஏற்பட்டு, அதோடு என்னால் அடக்கமுடியாத கண்ணீரும் வந்தது. யெகோவா அன்போடு கொடுத்த அந்த அருமையான உயிரை ஜனங்கள் எப்படி அவ்வளவு அசட்டை செய்யலாம்?

N. K., ஜப்பான்

இந்தப் பத்திரிகையை நான் என்னோடு பள்ளிக்குக் கொண்டுபோனேன். மாணவியர் அதை விரும்பினர், எனக்கு ஒரே ஆச்சரியம்! என்னுடைய வகுப்பு மாணவியரில் ஒருத்தி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் அழுதாள். அந்தளவுக்கு அது அவர்களின் இருதயத்தைத் தொட்டது. சிலதினங்களுக்கு முன்புதான் அவள் கருக்கலைப்பு செய்திருந்தாள்.

L. S., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்