உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 3/8 பக். 8-10
  • நோயற்ற உலகம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நோயற்ற உலகம்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நோயின் தொடக்கம்
  • உண்மையான குணப்படுத்துதல்
  • நிரந்தரமாக சுகமடைதல் அருகாமையில் இருக்கிறது
    விழித்தெழு!—1988
  • ஊனத்திற்கு முடிவு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • வலி இல்லாத வாழ்க்கை சமீபமாயிருக்கிறது!
    விழித்தெழு!—1994
  • “குணப்படுத்தப்படக்கூடிய” நோய்களின் மறுவருகை ஏன்?
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 3/8 பக். 8-10

நோயற்ற உலகம்

“மலேரியா எவரும் கற்பனைசெய்து பார்த்ததைவிட புத்திசாலியாக இருக்கிறது” என தடுப்பாற்றலியல் நிபுணர் டாக்டர் டேன் கோர்டன் கூறுகிறார். “அதற்கு ஒரு பதில் கண்டுபிடிக்க நாங்கள் இன்னும் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.”

“எங்களுக்கு [காசநோய் பாக்டீரியாவின்] வளர்சிதைமாற்றத்தைப் பற்றி இன்னும் போதுமானளவு தெரியவில்லை,” என்கிறார் ஹாவர்டு ஹியூஸ் மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த பேரி ப்ளூம். “எந்த மருந்தும் எவ்வாறு வேலைசெய்கிறது என்று எங்களுக்கு முழுவதும் தெரியவில்லை. உண்மையிலேயே எங்களுக்குத் தெரியவேயில்லை.”

மேகநோயைக் கட்டுப்படுத்துவதில் “அபாயமற்ற பாலுறவு” பிரச்சாரங்களின் படுதோல்வியைக் கவனித்துவிட்டு, “அறிவுதானே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை,” என்று புலம்புகிறார் நோய்க் கட்டுப்பாட்டு மையங்களின் பிரதிநிதி ஒருவர். மேற்கூறப்பட்டவை சுட்டிக்காண்பிக்கிறபடி, மலேரியா, காசநோய், மற்றும் மேகநோய்க்கெதிரான போராட்டங்கள் ஏமாற்றத்தைத் தருபவையாய் இருந்திருக்கின்றன. இந்த நோய்களுக்கு எதிர்காலம் மேம்பட்ட பரிகாரங்களைக் கொண்டுவருமா?

ஒருவேளை கொண்டுவரலாம். மனிதன் சில நோய்களை வென்று, மற்றவற்றை எளிதில் சகித்துக்கொள்ளக்கூடியவையாக செய்யலாம். என்றாலும், நோய்க்கு எதிரான போரில் அவன் ஏன் முழுமையாக வெற்றியடைய முடியாது என்பதற்கு அடிப்படையான ஒரு காரணம் உண்டு.

நோயின் தொடக்கம்

நோய்க்கெதிரான போர் வெறுமனே ஒட்டுண்ணிகளுக்கும் கிருமிகளுக்கும் எதிரான போரைவிட அதிகத்தைக் குறிக்கிறது. நம்முடைய முதல் மனித தகப்பனிடமிருந்து சுதந்தரித்துக்கொண்ட பாவத்தின் விளைவுதான் நோய் என்பதாக பைபிள் விளக்குகிறது. (ரோமர் 5:12) பாவமானது மனிதன் தன் சிருஷ்டிகரோடு கொண்டிருந்த உறவைக் கெடுத்தது மட்டுமல்லாமல், அவன் மனம், உணர்ச்சி, மற்றும் சரீரப்பிரகாரமாக அழிந்துகொண்டுபோவதற்கும் வழிநடத்தியது. இதன் காரணமாக, ஒரு பரதீஸிய பூமியில் தொடர்ந்து பரிபூரணர்களாக வாழ்ந்துகொண்டிருப்பதற்குப் பதிலாக, மனிதர்கள் அபூரணர்களாகி மரணம் அவர்களை மேற்கொள்ளும்வரை அழிந்துபோனார்கள்.—ஆதியாகமம் 3:17-19.

தலைசிறந்த எந்த மருந்தினாலும்கூட, மனிதன் தன் பாவத்தன்மையை அல்லது அதன் விளைவுகளை மாற்றமுடியாது. இந்த இரண்டக நிலை மனித இனத்தை ‘மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்க [“அவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்க,” பிலிப்ஸ்]’ செய்கிறது. (ரோமர் 8:21) நோயை வெல்லுவதன் சம்பந்தமாகவும் இதுவே உண்மையாக இருக்கிறது. மருத்துவ துறையில் ஏற்படும் உயிரைக்காக்கும் முன்னேற்றம் சமுதாயத்தில் ஏற்படும் உயிரை-மாய்க்கும் சீர்குலைவினால் அடிக்கடி பயனற்றதாக்கப்படுகிறது.

“நாம் நம்மையே ஒரு கட்டுக்குள் காண்கிறோம்,” என்று டிஸ்கவர் பத்திரிகையில் எழுதுகிறார் ஜெரல்டு M. லோவன்ஸ்டைன். “நோயை எதிர்த்துப் போராடி மனித வாழ்க்கையை நீடிப்பதில் நாம் எவ்வளவு அதிகம் வெற்றிபெறுகிறோமோ, அவ்வளவு அதிகம் நாம்தாமே அற்றுப்போவதை துரிதப்படுத்துவதற்கான சாத்தியம் பேருருவாய்த் தோன்றுகிறது.” இது மக்கள்தொகை அதிகரிப்பினாலும் சுற்றுச்சூழல் அழிவினாலும் அப்படியாகிறது.

உண்மையான குணப்படுத்துதல்

நோய்க்கான உண்மையான குணப்படுத்துதல் மனிதனைச் சார்ந்திராமல் சிருஷ்டிகரைச் சார்ந்திருக்கிறது. அதனால்தான் சங்கீதக்காரன் இவ்வாறு அறிவித்தார்: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” பைபிள் மேலுமாக கூறுகிறது: “தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் . . . உண்டாக்கினவர்.” (சங்கீதம் 146:3, 5, 6) வியாதியை அதன் வேரோடுப் பிடுங்கி எறிய கடவுளுக்கு மட்டும்தான் வல்லமையிருக்கிறது. மேலும் பைபிள் கூறுகிறபடி, அவர் அவ்வாறு செய்ய நோக்கம் கொண்டிருக்கிறார். அந்த நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

தற்போதைய காரியங்களின் ஒழுங்குமுறையின் முடிவிலும் ஒரு புதிய உலகம் வருவதற்குச் சற்றுமுன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கான அநேக சான்றுகளில் “கொள்ளைநோய்களும்” ஒன்று என்பதாக இயேசு கிறிஸ்து முன்னறிவித்தார். நோயை மிகுதியாக்கும் போர், பஞ்சம், அக்கிரமம் போன்ற அதே நிலைமைகளின் அதிகரிப்பைப் பற்றியும் அவர் முன்னறிவித்தார்.—லூக்கா 21:11; மத்தேயு 24:3, 7, 12; 2 தீமோத்தேயு 3:1-5, 13.

இயேசு பூமியில் இருக்கையில், நோயாளிகளை அற்புதமாகக் குணப்படுத்தினார். இவ்வாறு, “நம்முடைய நோய்களை அவர்தாமே சுமந்தார்; நம்முடைய வேதனைகளையோ அவர் தாங்கினார்,” என்ற தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைத் தொடங்கிவைத்தார். (ஏசாயா 53:4, NW; மத்தேயு 8:17) விரைவில் கடவுள் உலகளாவிய அளவில் எதை நிறைவேற்ற நோக்கம் கொண்டிருக்கிறார் என்பதை அவர் இதன்மூலம் ஒரு சிறிய அளவில் செய்துகாட்டினார். இயேசுவைப்பற்றி பைபிள் சொல்கிறது: “அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டுப்”போனார்கள்.—மத்தேயு 15:30, 31.

அந்த அற்புதங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினர். காரணம் அந்த அற்புதங்களைச் செய்வதற்கு இயேசுவுக்கு சக்தி கொடுத்ததே அவர்தான் என்று அவர்கள் புரிந்துகொண்டனர். இயேசுவுக்குக் கிடைத்த சக்தி எதுவோ அதே சக்திதான் பிரம்மிக்கவைக்கும் நம்முடைய அண்டத்தைப் படைக்க பயன்படுத்தப்பட்டது. அதுதான் கடவுளுடைய பரிசுத்த ஆவி, அவருடைய கிரியை நடப்பிக்கும் சக்தி.—ஆதியாகமம் 1:1, 2; வெளிப்படுத்துதல் 4:11.

“வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்”லாத ஒரு காலத்தைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசி எழுதினார். (ஏசாயா 33:24) மேலும் வெளிப்படுத்துதல் 21:4, 5 இவ்வாறு அறிவிக்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின. . . . சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.”

நாம் மாறுபட்டுவரும் ஒரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பைபிள் காண்பிக்கிறது. (1 யோவான் 2:15-17) விரைவில் இந்த உலகம், அதன் நோய், துயரம், குற்றச்செயல், வன்முறை, மரணம் போன்றவற்றோடு ஒரு கடந்தகால காரியமாக இருக்கும். கடவுள் அதையும் அதன் எல்லா துன்பங்களையும் நீக்கிவிட்டு, இந்தப் பூமியில் “நீதி வாசமாயிருக்கும்” ஒரு புதிய உலகத்திற்காக வழிவகுப்பார். (2 பேதுரு 3:11-13) வரவிருக்கும் அந்தப் புதிய உலகைத்தான் இயேசு “பரதீஸ்” என்று குறிப்பிட்டார். ஏனென்றால் அது அந்த ஆதி பரதீஸிய ஏதேன் தோட்டத்தைப்போல இருக்கும், ஆனால் பூமி முழுவதும் விரிவடைந்திருக்கும்.—லூக்கா 23:43; ஆதியாகமம் 2:7, 8.

ஆகவே, வெறும் தற்காலிகமான ஒரு சிகிச்சைக்காக அல்ல, ஆனால் அபூரணத்திலிருந்தும், நோயிலிருந்தும், மரணத்திலிருந்தும் ஒரு நிரந்தர விடுதலைக்காக கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். “உன்னை சுகப்படுத்துகிற யெகோவா நானே.” “வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.” இதைப்போன்ற கடவுளுடைய வாக்குறுதியின் முழு நிறைவேற்றத்தை அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.—யாத்திராகமம் 15:26, NW; 23:25. (g93 12/8)

[பக்கம் 9-ன் படங்கள்]

இயேசு மரித்தோரை உயிர்த்தெழுப்பவும் நோயாளிகளைக் குணப்படுத்தவும் கடவுளால் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்