உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 11/8 பக். 10-11
  • 1914-ன் உண்மையான முக்கியத்துவம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1914-ன் உண்மையான முக்கியத்துவம்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • 1914 வேதனையுள்ள காலத்தை ஆரம்பிக்கிறது
  • முன்னறிவிக்கப்பட்ட உலக அழிவு எப்பொழுது வரும்?
    உண்மையான சமாதானம்
  • தற்போதைய ஒழுங்குமுறை எவ்வளவு காலம்நீடித்திருக்கும்?
    புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்
  • 1914 சந்ததி—ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • உலகத்தை அதிர வைத்த அந்த வருடம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 11/8 பக். 10-11

1914-ன் உண்மையான முக்கியத்துவம்

பக்கம் 4-ல் காட்டப்பட்டுள்ளபடி, “இந்தப் பத்திரிகை, 1914-ன் நிகழ்ச்சிகளைக் கண்ட சந்ததி ஒழிந்துபோவதற்கு முன்பு, சமாதானமும் பாதுகாப்புமுள்ள ஒரு புதிய உலகம் வரும் என்ற சிருஷ்டிகரின் வாக்குறுதியில் நம்பிக்கையை வளர்க்கிறது.”

சந்தேகமின்றி, இக்கூற்றை எம் வாசகரில் அநேகர் வியப்பூட்டுவதாய் காணக்கூடும். இருப்பினும், டிசம்பர் 1879-லேயே—அதாவது 1914-க்கு சுமார் 35 வருடங்களுக்கு முன்பே—காவற்கோபுரம் பத்திரிகை (அப்போது அது சீயோனின் காவற்கோபுரம் கிறிஸ்துவின் வந்திருத்தலை முன்னறிவிக்கிறது என்று அறியப்பட்டது) 1914-ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் என்பதை நிரூபித்த பைபிள் ஆதாரங்களை அளித்தது. இதற்கும் முன்னால்—19-ஆம் நூற்றாண்டின் மத்திப பகுதியில்—1914 பைபிள் தீர்க்கதரிசனத்தில் குறிக்கப்பட்ட வருடமாக இருக்கக்கூடும் என்பதை பிற பைபிள் மாணாக்கர்கள் சாடையாகக் குறிப்பிட்டிருந்தனர்.a

தீர்க்கதரிசனம் என்பது முன்கூட்டியே எழுதப்பட்ட சரித்திரம் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. பைபிளின் இந்த அம்சம், அது தெய்வீக ஊற்றுமூலத்திலிருந்து வந்ததற்கு சான்று அளிக்கிறது. எதிர்கால நிகழ்ச்சிகளைச் சொல்வது மட்டுமன்றி, ஒரு குறிப்பிட்ட சம்பவம் நிகழ்வதற்கு முன் எவ்வளவு காலம் செல்லும் என்றும் சில சமயங்களில் பைபிள் நமக்கு சொல்கிறது. இத்தகைய குறிப்பிட்ட சில தீர்க்கதரிசனங்கள் சில நாட்களை, சில ஆண்டுகளை, மற்றவை சில நூற்றாண்டுகளை உட்படுத்துகின்றன.

மேசியாவின் முதல் தோற்றத்தின் காலத்தைப் பற்றி முன்னறிவித்த தானியேல், ‘முடிவு காலம்’ என்றழைக்கப்படும் சமயத்தில் மேசியா எப்போது தம் “பிரசன்னத்திற்காக” திரும்ப வருவார் என்பதையும் வெளிப்படுத்தினார். (தானியேல் 8:17, 19; 9:24-27) இந்தத் தீர்க்கதரிசனம் ஒரு நீண்ட காலத்தை உட்படுத்துகிறது, ஒரு சில நூற்றாண்டுகளை அல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக—2,520 ஆண்டுகளை உட்படுத்துகிறது! இந்தக் காலத்தை இயேசு லூக்கா 21:24-ல் “புறஜாதியாரின் காலம்”b என்று அழைத்தார்.

1914 வேதனையுள்ள காலத்தை ஆரம்பிக்கிறது

பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம், நாம் 1914 முதற்கொண்டு முடிவு காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று காட்டுகிறது. இயேசு இக்காலத்தை “வேதனைகளுக்கு ஆரம்பம்” எனக் குறிப்பிட்டார். (மத்தேயு 24:8) வெளிப்படுத்துதல் 12:12-ல் நாம் வாசிக்கிறோம்: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” ஏன் இந்த உலகம் 1914 முதற்கொண்டு இவ்வளவு அதிகமாக குழப்பத்தில் இருக்கிறது என்பதை இது விளக்குகிறது.

ஆயினும், இந்த முடிவு காலம், ஒப்பிடுகையில் ஒரு குறுகிய காலமாக—ஒரு தலைமுறையளவு விரிவானதாக—இருக்க வேண்டும். (லூக்கா 21:31, 32) 1914-லிருந்து நாம் இப்போது 80 ஆண்டுகள் தாண்டி வந்திருப்பது கடவுளுடைய ராஜ்யம் கொண்டு வரப்போகும் விடுதலையை நாம் சீக்கிரம் எதிர்பார்க்கலாம் என்று காட்டுகிறது. அப்படியானால், ‘மனுஷரில் தாழ்ந்தவராகிய’ இயேசு கிறிஸ்து ‘மனுஷருடைய ராஜ்யத்தை’ தன் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் ஆக்கி சமாதானமும் நியாயமும் நிறைந்த புதிய ஓர் உலகை கொண்டு வருவதை நாம் பார்ப்போம் என்பதை அர்த்தப்படுத்துகிறது.—தானியேல் 4:17.

[அடிக்குறிப்புகள்]

a 1844-ல், ஆங்கிலேய மதகுரு இ. பி. எலியட், 1914 தானியேல் 4-ம் அதிகாரத்தில் உள்ள ‘ஏழு காலங்களின்’ முடிவடையும் தேதியாக இருக்கக்கூடும் என்று அதன் பேரில் கவனத்தை ஈர்த்தார். 1849-ல், இலண்டனைச் சேர்ந்த ராபர்ட் சீலி இதேவிதமாக இவ்விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டார். ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஜோசப் சைஸ் சுமார் 1870-ல் பதிப்பான ஒரு பிரசுரத்தில் பைபிள் கால அட்டவணையில் 1914 ஒரு முக்கிய தேதி என சுட்டிக்காட்டினார். 1875-ல் நெல்சன் H. பார்பர், காலையின் தூதன் (Herald of the Morning) என்ற தன் பத்திரிகையில் 1914-ஐ இயேசு “புறஜாதியாரின் காலம்” என்றழைத்த காலப்பகுதியின் முடிவை குறிப்பிடுவதாக எழுதினார்.—லூக்கா 21:24.

b தானியேல் தீர்க்கதரிசனத்தின் விரிவான விளக்கத்திற்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆப் இண்டியா பிரசுரித்த வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 95-7-ஐப் பார்க்கவும்.

[பக்கம் 11-ன் பெட்டி]

1914-ஐப் பற்றியும் அதற்குப் பிற்பட்ட காலத்தைப் பற்றியும் குறிப்புரைகள்

“தவிர்க்க முடியாததுபோல் தோன்றிய இரண்டு உலகப் போர்களின் பின், அணு ஆயுதங்கள் உருவாக்கப்பட்டது மூன்றாம் உலகப் போரைத் தவிர்த்து, விக்டோரியா அரசியின் ஆட்சி முதற்கொண்டு வெகு நீண்ட சமாதான காலத்தை, திகில் நிறைந்த சமாதானத்தைக் கொண்டு வந்தது. . . . மனிதகுலத்துக்கு என்ன கோளாறு ஏற்பட்டு விட்டது? பத்தொன்பதாம் நூற்றாண்டின் வாக்குறுதி ஏன் நொறுக்கப்பட்டு விட்டது? இருபதாம் நூற்றாண்டு பயங்கரமான, அல்லது சிலர் சொல்கிறபடி, தீமையான காலமாக ஏன் மாறிவிட்டது?”—பால் ஜான்சன் எழுதிய நவீன உலகின் சரித்திரம்—1917 முதல் 1980கள் வரை (ஆங்கிலம்)

“ஐரோப்பிய சமுதாயம் அனுபவித்துள்ள எல்லா அதிர்ச்சியூட்டும் மாற்றங்களைக் காட்டிலும், முதல் உலகப் போரும் சமாதான உடன்பாடும் கடந்த காலத்தோடு பொருளாதார, சமுதாய, அரசியல் அம்சங்களில் தெளிவான ஒரு திடீர் பிளவை ஏற்படுத்தின . . . சுயேச்சையாய் செயல்பட்ட ஆக்கவளமிக்க அந்த ஒழுங்குமுறையின் இனிய மகிமை போரின் சேதங்களில் மறைந்துவிட்டது. இதற்குப் பதிலாக பொருளாதார நலிவையும், சர்வதேச பொருளாதார ஏற்பாட்டில் விளைந்த, முற்றிலும் சிதைந்த நிலையையும் ஐரோப்பா சமாளிக்க வேண்டியிருந்தது . . . அந்தச் சேதம் அவ்வளவு பெரியதாக இருந்ததால், அடுத்த உலகப் போர் வரும்வரையிலும் ஐரோப்பிய பொருளாதாரம் அந்த மந்த ஸ்திரமற்ற நிலையிலிருந்து விடுபடவே இல்லை.”—உலகம் ஓர் உக்கிரமான சோதனையில், 1914-1919 (ஆங்கிலம்), பர்னடாட் E. ஷ்மிட் மற்றும் ஹெரல்ட் C. வெடலர் எழுதியது.

“இரண்டாம் உலகப் போரில் மனிதர்களிடையே இருந்த எல்லா பிணைப்புகளும் அழிய வேண்டியிருந்தது. தாங்களே அனுமதித்த ஹிட்லரின் ஆதிக்கத்தின் கீழ் ஜெர்மானியர்கள் இழைத்தக் குற்றங்கள் மனித சரித்திரத்தின் எந்த இருண்ட கால பகுதியிலும் காணமுடியாத தீமை நிறைந்தவையாக இருந்தன. ஜெர்மானிய கொலை தண்டனை முகாம்களில் ஒட்டுமொத்தமாக 60 அல்லது 70 இலட்சம் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோரை படுகொலை செய்வதற்கான ஏற்பாடுகள், பயங்கர தன்மையில் ஜெங்கிஸ் கானின் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை மிஞ்சி அவற்றை ஒன்றுமே இல்லாதது போல் தோன்ற செய்கின்றன. இரண்டாம் உலகப் போரில் கிழக்கத்திய போர்முனையில் ஜெர்மனியும் ரஷ்யாவும் வேண்டுமென்றே முழு சமுதாயங்களையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு செயல்பட்டன . . . முந்தைய நூற்றாண்டுகளில் மனிதகுலம் கற்பனையும் செய்திருக்க முடியாத பொருள் நஷ்டத்திலிருந்தும் தார்மீக நெறி கேட்டிலிருந்தும் இறுதியில் நாம் வெளி வந்திருக்கிறோம்.”—உருவாகும் புயல், இரண்டாம் உலகப் போர்-இன் தொகுப்பு 1(ஆங்கிலம்), வின்ஸ்டன் S. சர்ச்சில் எழுதியது.

“அனைத்து வகுப்பினர், தேசத்தினர், இனத்தவர் ஆகியோருடைய மனித உரிமைகளுக்கான அங்கீகாரம் இப்பொழுது இருந்துவருகிறது; ஆனாலும் அதேசமயத்தில் நாம் வகுப்புச் சண்டை, தேசப்பிரிவினை, இன பாகுபாடு ஆகியவற்றின், ஒருவேளை கேள்விப்பட்டிராத அளவு ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறோம். இந்தக் கெட்ட உணர்ச்சிகள் அறிவியல் ரீதியில் திட்டமிடப்பட்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கொடுமைகளில் வெளிப்படுகின்றன; ஒத்திணங்கிப் போகாத இரண்டு மனப்பான்மைகளும் நடத்தைத் தராதரங்களும் இன்று, அடுத்தடுத்து, ஒரே உலகத்தில் மட்டுமல்ல, ஆனால் சில சமயங்களில் ஒரே நாட்டில், ஏன் ஒரே நபரில்கூட காணப்படுகின்றன.”—சோதனைக்குட்படுத்தப்பட்டிருக்கும் நாகரீகம்(ஆங்கிலம்), அர்னல்ட் டாய்ன்பீயால் எழுதப்பட்டது.

“குறிக்கப்பட்ட நேரத்துக்கும் மேலாக தங்கியிருந்த பேயைப் போன்று பத்தொன்பதாம் நூற்றாண்டு அதன் உள்ளான ஒழுங்கு, அதன் தன்னம்பிக்கை, மனித முன்னேற்றத்தில் அதன் நம்பிக்கை ஆகியவற்றுடன் ஆகஸ்ட் 1914 வரை தாமதித்துக் கொண்டிருந்தது. அப்போது பெரும் ஐரோப்பிய அதிகாரங்கள் மொத்தமாக மனக்குழப்பத்தின் தாக்குதலை அனுபவித்தன. இது அத்தலைமுறையிலிருந்த இலட்சக்கணக்கான மிகச்சிறந்த இளைஞர் மடத்தனமாக படுகொலை செய்யப்படுவதற்கு வழிநடத்தியது. நான்கரை ஆண்டுகளுக்குப் பின் மகா யுத்தத்தின் பிழிந்தெடுக்கும் அழிவிற்குப் பின் உலகம் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்கையில், பழைய ஒழுங்கின் எஞ்சியிருந்த கடைசி அடிச்சுவடுகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்பதும் மனிதகுலம் குறைந்த பகுத்தறிவும் மனித அபூரணங்களைக் குறைந்தளவு மன்னிக்கும் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துவிட்டது என்பதும் சமகாலத்து பார்வையாளர்கள் அநேகருக்கு (நிச்சயமாக அனைவருக்கும் அல்ல) தெளிவாகியது. சமாதானம் ஒரு மேம்பட்ட உலகத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் 1919-ல் தங்கள் நம்பிக்கைகள் ஏமாற்றப்பட்டதை கண்டனர்.” —வில்லியம் K. க்ளிஞ்சமன் எழுதிய 1919—நம் உலகம் ஆரம்பித்த வருடம் (ஆங்கிலம்) புத்தகத்தில் முன்னுரை.

[பக்கம் 10-ன் படம்]

பவேரியன் ஆல்ப்ஸ்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்