பழைய களியாட்ட விழாவிற்கு புதிய பெயர்
ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்
பிரிட்டனில், 15 வயதான ஆன் என்ற பெண் கிளர்ச்சியுற்று, சற்று முன்பு தபாலில் வந்த உறையைத் திறந்து பார்க்கிறாள். ஒரு கார்டை அதிலிருந்து எடுக்கிறாள். அதன் முன்பக்கம் நேர்த்தியான இதயங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. உள்ளுக்குள் காதல் செய்தி அடங்கியிருக்கிறது, “காதலரிடமிருந்து” என்று அதில் கையொப்பமிடப்பட்டிருக்கிறது. கற்பனா கண்களோடும் உணர்ச்சி வசத்தால் ஆன் பெருமூச்சுவிடுகிறாள். அவள் முற்றமுழுக்க முகஸ்துதி செய்யப்பட்டிருந்தாலும், மலைத்துப்போகக்கூடியவளாக இருக்கிறாள். ‘இந்த வாலண்டைன் மடலை எனக்கு வரைந்தனுப்பியது யார்?’ என்று ஆன் யோசிக்கிறாள்.
ஜப்பானில், யூகோ ஓர் அலுவலகத்தில் பணிபுரிய துவங்கியிருக்கிறாள். வாலண்டைன் நினைவுநாள் நெருங்கிவருகிறது. தன்னோடு வேலைசெய்யும் ஆண்கள் ஒவ்வொருவருக்கும் சிறிய சாக்லெட் பெட்டிகளை வாங்கிக் கொடுக்க 20,000 யென் (200 டாலர், ஐ.மா.) செலவாகும் என்று யூகோவின் கணக்கீடுகள் காட்டுகின்றன. யூகோ தன் பெண் சிநேகிதிகளுக்கு அவசியம் கொடுக்கவேண்டிய கீரி சோக்கோ என்கின்ற சாக்லெட்டுகளை வாங்கிக்கொடுத்து தன் மதிய உணவுவேளையைக் கழிக்கிறாள்.
பிப்ரவரி 14-ம் நாள் உலக முழுவதிலும் காதலிக்க விரும்பும் ஆட்கள் ஏதோவொரு முறையில் “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சொல்லப்படுவதற்கு எதிர்பார்த்திருக்கிற நாளாகும்; இந்த விடுமுறை நாள் எவ்வாறு தொடங்கலானது என்பதைக் குறித்து ஆனுக்கோ யூகோவுக்கோ அறவே தெரியாது. அதைத் தெரியவந்தால் அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
இன்று வாலண்டைன் நினைவுநாள் என்றழைக்கப்படுவதன் வேர்களைப் பண்டைகால கிரீஸில் காணலாம், அங்குப் பான் தெய்வ வணக்கம் தழைத்திருந்தது. புராணக்கதையிலுள்ள பாதி-மனித-பாதி-ஆடாகிய இந்தக் கருவள தெய்வம் மனிதர்களுக்குள் பீதியைக் கிளப்பும் கொடூரமான, முன்கணிக்க முடியாத இயல்பைக் கொண்டிருந்தது. பொருத்தமாகவே பீதி என்பதற்கான ஆங்கில வார்த்தையாகிய “பேனிக்,” “பான்-ன்” என்ற நேர்பொருள் கொள்கிறது.
பான் தன் இசைக்குழலை ஊதிக்கொண்டே மந்தைகளைக் கவனித்துவரவேண்டியவனாக இருந்தான். என்றபோதிலும், எளிதாக அவன் கவனம் சிதறடிக்கப்பட்டது. பான் வனதெய்வங்களோடும் தேவதைகளோடும் காதல் ஈடுபாடுகளைக் கொண்டிருந்தான். காமத் தேவதையாகிய ஆஃப்ரோடைட்டுடன் பான் பாலுறவுகொள்ள முனைவதை ஒரு சிற்பவேலை சித்தரித்துக் காட்டுகிறது. காம தெய்வமாகிய ஈராஸ் தன் சிறகுகளை அடித்துக்கொண்டு அவர்கள் மேலாகச் சுற்றிச்சுற்றி வருகிறான்—இன்றைய வாலண்டைன்களில் காணப்படுகிற கியூபிடு என்ற மன்மதத் தெய்வத்துக்கு மிகவும் ஒத்திருக்கிறது. a
ரோமில் அநேகர் ஃபானஸ் என்ற அதற்கொத்த தெய்வத்தை வணங்கிவந்தனர். அவனும் பாதி ஆளாகவும் பாதி ஆடாகவும் சித்தரிக்கப்பட்டான். ஃபானஸ் வணக்கம் லூப்பர்கேலியாவில் மேலோங்கியிருந்தது; வருஷாவருஷம் பிப்ரவரி 15 அன்று அனுசரிக்கப்பட்டுவந்த களியாட்ட விழாவாக இது இருந்தது. இந்த விழாவின்போது முழு ஆடை தரித்திராத மனிதர்கள் ஆட்டுத்தோல் சாட்டைகளைச் சுழற்றிக்கொண்டு வேகமாக ஓடினார்கள். பிள்ளைபெற வேண்டுமென்றிருந்த பெண்கள் இந்த ஓட்டக்காரர்கள் போகும் பாதையருகே நின்றனர். சாட்டையால் ஒரு பெண்ணை அடிப்பது அந்தப் பெண் கருவுறுவதை நிச்சயப்படுத்தும் என்று ரோமர் நம்பினர்.
ஆங்கில தி கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா பிரகாரம், லூப்பர்கேலியா என்ற பண்டிகை முதலாம் போப் ஜலேஷியஸ் என்பவரால் பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒழிக்கப்பட்டது. b எனினும், “தூய திரு வாலண்டைனின் நினைவு விழாநாள்” என்ற பட்டப்பெயரில் விருத்தியடைந்துவருகிற அதற்கொத்த நவீன நாளைய பாகத்தை இன்று நாம் காண்கிறோம். “கிறிஸ்தவமாக்கப்பட்ட” இந்தப் பெயரின் தொடக்கம் சம்பந்தமாகப் பல்வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஒரு கதையின் பிரகாரம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமப் பேரரசனாகிய இரண்டாம் கிளாடியஸ் இளம் ஆண்கள் மணஞ்செய்வதற்குத் தடையுத்தரவு போட்டிருந்தான். வாலண்டைன் என்ற பாதிரி இளம் தம்பதிகளை ரகசியமாக மணம் செய்துவைத்தார். அவர் சுமார் பொ.ச. 269, பிப்ரவரி 14-ல் கொல்லப்பட்டார் என்று சிலர் சொல்கின்றனர். எப்படியிருந்தாலும், இந்தக் கொண்டாட்டத்தின் அருவருப்பான தொடக்கத்தைப் “புனித” பட்டப்பெயரால் மறைத்துவிட முடியாது. வாலண்டைன் நினைவுநாள் புறமத சடங்குகளில் வேரூன்றியிருப்பதால், மெய்க் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுவது கிடையாது. (2 கொரிந்தியர் 6:14-18) உணர்ச்சியைத் தூண்டும் விடுமுறையின் நிலையற்ற ஆசைகளைவிட வருஷம்முழுவதும் காட்டப்படும் மெய்யான அன்பின் வெளிக்காட்டுகளே மிக அதிக பலனுள்ளவையாக இருக்கின்றன.
[அடிக்குறிப்புகள்]
a ஜலேஷியஸ் “தூய்மை சடங்கு பண்டிகை”யாலேயே லூப்பர்கேலியாவை மாற்றினார் என்று சிலர் சொல்கின்றனர்.
b ஹிரோடடஸ் என்ன கூறுகிறாரென்றால் பான் வணக்கமானது எகிப்தியர்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டு வந்தது; அவர்கள் பொதுவாக ஆட்டை வணங்கி வந்தார்கள். பைபிளில் காணப்பட்டுள்ள “ஆட்டு-வடிவ பேய்கள்” என்ற சொற்றொடர் இந்த விதமான புறமத வணக்கத்தைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்.—லேவியராகமம் 17:7, NW; 2 நாளாகமம் 11:15, NW.
[பக்கம் 27-ன் பெட்டி]
காதல் பெரிய வியாபாரமாயிருக்கையில்
ஜப்பானில் வாலண்டைன் நினைவு நாள் நெருங்கிவருவது பலமான உணர்ச்சிகளைக் கிளப்புகிறது; வெறும் காமவுணர்ச்சியையல்ல, ஆனால் பெரும் வியாபாரயுணர்ச்சியை. பல பத்தாண்டுகளாக பிப்ரவரி 14 அன்று காதலின் அடையாளமாக சாக்லெட்டுகளைக் கொடுக்கும்படி பொது ஜனங்களைச் சாக்லெட் தொழிற்துறை ஊக்குவித்தது. பரவலாக விளம்பரப்படுத்தினது லாபகரமாய் முடிவடைந்தது; ஏனெனில் சாக்லெட் விற்பனை படிப்படியாக உயர்ந்தது.
மேற்கு உலகைப்போலில்லாமல், ஜப்பானிய பண்பாடானது பெண்கள் ஆண்களுக்குப் பரிசுகளை வாங்கித்தரவேண்டும். ஆனால் வாலண்டைன் நினைவு நாளின் வியாபாரம், பிப்ரவரி 14-ல் முடிவடைவதில்லை. ஒரு மாதத்திற்குப் பிற்பாடு, மார்ச் 14 அன்று ஆண்கள், வெள்ளைநிற சாக்லெட்டுகளை அதற்கு மாற்றாக தரவேண்டும். ஏன்? தி டெய்லி யோமியூரி பதிலளிக்கிறது: “வெள்ளைநிற பரிசுகள் கொடுக்கும் இந்த வேலை, பெற்றுக்கொண்ட சாக்லெட்டைச் சாப்பிடாமலிருக்கும் கஞ்சத்தனமான அல்லது தந்திரமான எந்தவொரு ஆணும், அதைத் திரும்பக் கொடுப்பதிலிருந்து தடை செய்கிறது.”
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
Old-Fashioned Romantic Cuts/Dover