உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 2/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 2/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

நகைச்சுவை “உங்கள் வாழ்க்கைக்கு நகைச்சுவையூட்டுங்கள்,” (மே 22, 1994) என்ற கட்டுரைக்கு எனது போற்றுதலைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் எப்போதுமே மற்றவர்களிலிருந்து விலகி ஒண்டியாக இருந்துவந்திருக்கிறேன், மேலும் அடிக்கடி கோபப்பட்டுமிருக்கிறேன். என் வாழ்க்கைக்கு நகைச்சுவையூட்டக் கற்றுக்கொண்டபோது, நிலைமை மாறிற்று. சிரிப்பு உண்மையிலேயே “இருவருக்கு இடையேயுள்ள மிகக் குறுகிய இடைவெளியாகவே” இருக்கிறது.

ஏ. க்யூ. ஜி., பிரேஸில்

புற்றுநோய் “மார்பகப் புற்றுநோய்—ஒவ்வொரு பெண்ணின் பயம்,” என்ற பொருளின்பேரில் வெளிவந்த உங்களுடைய ஏப்ரல் 8, 1994 தேதியிட்ட இதழின் ஒரு பிரதியைச் சமீபத்தில் என் அம்மாவுடைய டாக்டருக்குக் கொடுத்தேன். 10-ம் பக்கத்தில் ஹைட்ரஸின் சல்ஃபேட்டை ஒரு ‘நஞ்சற்ற மருந்து’ என்பதாக விவரித்திருக்கிறீர்கள். இதை மிக நஞ்சுள்ள மருந்தாக பட்டியலிடப்பட்ட ஒரு மருத்துவ பிரசுரத்தை அந்த டாக்டர் எங்களிடம் காட்டினார்.

டி. எம்., பிரான்ஸ்

இந்த ரசாயனப் பொருளின் நச்சுத்தன்மை தெளிவாகவே முரண்பாட்டுக்குரிய ஒரு விஷயமாக இருக்கிறபடியால், இந்த மருந்தைத் தவறிப்போய் நஞ்சற்றது என்று நாங்கள் அழைத்துவிட்டோம். பரிசோதனைச் சாலை எலிகளுக்கும் சுண்டெலிகளுக்கும் அதிகளவில் கொடுத்தபோது இது மிக நஞ்சுள்ளதாக இருந்ததாக ரஷ்ய ஆராய்ச்சி ஒன்று வலியுறுத்திற்று. எனினும், UCLA மருத்துவ மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் நடத்திய ஒரு மருத்துவ ஆராய்ச்சி, ஹைட்ரஸினின் நச்சுத்தன்மை “குறைவு” என்பதாக அறிக்கை செய்தது. மேலும் நோயாளிகளில் 71 சதவீதத்தினர் நக்சுத்தன்மையின் எந்த விளைவுகளையும் அறிக்கை செய்யவில்லை. இந்த மருந்தின் ஆபத்துக்களையும் கிடைக்கக்கூடிய பலன்களையும் முழுவதுமாக மதிப்பிடுமுன் அதிகமதிகமான ஆராய்ச்சி செய்யப்படவேண்டும் என்பதில் சந்தேகமேதுமில்லை.—ED.

இசைநாடகம் உங்களுடைய கட்டுரைகள் எல்லாம் பிரமாதம் என்று நான் எப்போதுமே நினைத்திருக்கிறேன்; அவை விசேஷமாக எனக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன என்றும் எப்போதுமே கருதுவதுண்டு. ஆனால் எனக்கு உண்மையிலேயே அவ்வளவு இஷ்டமான இசைநாடகத்தைப்பற்றி எழுதுவீர்கள் என்று கனவில்கூட நான் நினைத்துப் பார்த்தது கிடையாது. “இசைநாடகத்தில் ஓர் இரவு” (ஜூலை 8, 1994) என்ற அந்தக் கட்டுரையைக் கண்டபோது என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை. உங்களுக்கு மிக்க நன்றி.

எஸ். எஸ்., ருமேனியா

யேடியின் கதை “யேடி தாமதமாக பதிலைக் கண்டுபிடித்தார் ஆனால் வெகு தாமதமாக அல்ல,” (ஜூலை 22, 1994) என்ற கட்டுரை அவ்வளவு அற்புதமாக இருந்தது! அது ஒரு உண்மை சரிதையாக இருந்ததேதவிர, அதை வாசித்தது ஏதோ ஒரு நாவலை வாசிப்பதுபோல இருந்தது. அவருடைய கதையின் படிப்பினையானது, நம்முடைய அயலாருக்கு உதவுவதற்கான மிகச் சிறந்த வழி பிரசங்கிப்பதே என்று அறிந்தபோது அது என் உணர்ச்சிகளைக் கிளறிவிட்டது!

டி. எல்., இத்தாலி

யேடி கிளிண்டன் ஃப்யூவின் வாழ்க்கை சரிதையை நான் இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். நான் விழித்தெழு!-வை படித்துக்கொண்டிருக்கும் 19 வருட காலத்தில் இப்பொழுதுதான் முதன்முறையாக உங்களுக்கு நன்றி சொல்லி எழுதுகிறேன்! நானும் ஒரு கறுப்பினத்தவ பெண்தான்; ஆகவே என் வாழ்க்கை முழுவதிலும் சமூக அநீதியின் வேதனைகளை நானும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் யெகோவா கறுப்பு நிறத்தவரின் அவல நிலையைப்பற்றி உண்மையிலேயே அக்கறைகொள்கிறார் என்றும் அவர் வாக்குறுதியளித்த புதிய உலகம் அனைத்து அநீதிகளையும் சரியாக்கும் என்றும் கற்றுக்கொண்டேன்.

எல். என்., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கட்டுரை மனத்தாழ்மையோடு கலந்துள்ள அவருடைய சொல்நயத்தையும் நகைச்சுவைத் திறனையும் வெளிக்காட்டிற்று. அவர் கதைசொல்வதில் கைதேர்ந்தவர்தான்! அதன் முடிவு எனக்கு மிக உருக்கமாக இருந்தது. நான் பஸ்ஸில் இருந்துகொண்டு ஒரு கணம் சிரிப்பதும் மறுகணம் அழுவதுமாக இருந்தேன்.

டி. எம்., ஐக்கிய மாகாணங்கள்

தடியாக இருத்தல் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் இவ்வளவு தடியாக இருக்கிறேன்?” (ஏப்ரல் 22, 1994) என்ற கட்டுரை எனது மனதைக் கவர்ந்தது. நான் தடியாக இருப்பதைப்பற்றி எப்போதுமே நிலைகுலைந்து போனதுண்டு. ஆனால் நீங்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறீர்கள் என்பதையல்ல, ஆனால் இருதயத்தில் எப்படிப்பட்டவராக இருக்கிறீர்கள் என்பதை மட்டுமே யெகோவா பார்க்கிறார் என்று அந்தக் கட்டுரை கூறியது. நன்றி.

என். சி., ஐக்கிய மாகாணங்கள்

நான் மெய்யாகவே தடியாக இல்லையென்றாலும், அந்த மாடல்களைப் போல தோற்றமளித்தால் நன்றாக இருக்குமே என்று அவ்வப்போது ஆசைப்படுவதுண்டு. சிலவேளைகளில் நான் மிகவும் மனச்சோர்வடைந்து அழுவேன். இவ்வாறு உணருவது நான் மட்டும் அல்ல என்று காண்பதற்கு உங்கள் கட்டுரை உதவிற்று. அது ஆறுதலளிப்பதாக இருந்தது.

ஆர். எம்., ஐக்கிய மாகாணங்கள்

நான் தடியானவளாக இல்லை, ஆனால் பரந்த தோள்களையுடைய நல்ல வாட்டசாட்டமானவளாக இருக்கிறேன். என்னுடைய ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளும் என் அண்ணன்மார்களும் என்னை கேலிசெய்கிறார்கள். வாட்டசாட்டமாக இருக்கிறேனேதவிர எடையை குறைக்கவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை என்ற உங்களுடைய கருத்தை நான் போற்றுகிறேன்.

எம். டி., ஐக்கிய மாகாணங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்