உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 4/22 பக். 31
  • “நிதி சார்ந்த சர்வநாசம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நிதி சார்ந்த சர்வநாசம்”
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • யூத இனப்படுகொலையைக் கடவுள் ஏன் அனுமதித்தார்?
    பைபிள் தரும் பதில்கள்
  • யெகோவாவின் சாட்சிகளும் இனப்படுகொலையும்—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • காலங்கள் மாறியிருக்கின்றன
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • எல்லா மனிதவர்க்கத்துக்கும் நல்ல உடல் ஆரோக்கியம்—எப்போது?
    விழித்தெழு!—1988
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 4/22 பக். 31

“நிதி சார்ந்த சர்வநாசம்”

நைஜீரியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

ஐக்கிய நாடுகள் குழந்தை நல அவசர ஏற்பாட்டு நிதி (UNICEF) அறிக்கையின்படி, ஆப்பிரிக்காவின் கீழ் சகாரா பகுதியிலுள்ள பாலைவனம் “நிதி சார்ந்த சர்வநாசம்” அனுபவிக்கிறது. பெரும்பாலும் மக்கள் தொகையில் பாதிப்பேர்—சுமார் 22 கோடி ஆட்கள்—மிக அடிப்படையான அவர்களுடைய தேவையைக் கவனிக்க முடியாதபடி முழுமையான வறுமையில் வாழ்கின்றனர். சராசரி குடிமகன், பத்தாண்டுகளுக்கு முன்பாக அவனோ அல்லது அவளோ இருந்ததைவிட 20 சதவீதம் ஏழ்மையில் இருக்கிறான்[ள்].

“கல்வியில், 1980-கள் தொலைந்துபோன பத்தாண்டு என்பதாகவே விவரிக்கப்பட முடியும்,” என்பதாக அறிக்கை சொல்கிறது. ஒரு மாணவனுக்குச் செலவிடப்படும் பணம் மூன்றில் ஒரு பகுதியாக குறைந்துவிட்டிருக்கிறது, துவக்கப் பள்ளிகளில் சேருவோரின் எண்ணிக்கை 79-லிருந்து 67 சதவீதமாக குறைந்துவிட்டிருக்கிறது. உடல்நல பராமரிப்பு சேவைகளும்கூட அநேக ஆப்பிரிக்க தேசங்களில் மறைந்துகொண்டிருக்கின்றன, அநேக க்ளினிக்குகள் பணியாளரும் மருந்தும் இல்லாத காரணத்தால் மூடப்பட்டுள்ளன.

இராணுவச் செலவுகள், சரிந்துவரும் வியாபாரம், நிபுணர்கள் ஒருபோதும் திரும்பச் செலுத்தப்பட முடியாது என்று குறிப்பிடும் மிகப் பெரிய கடன்கள் உட்பட, கண்டத்தின் பொருளாதார நெருக்கடிக்கு அநேக பல காரணங்களை அறிக்கை பட்டியலிட்டு காட்டுகிறது. “இன்னும் எண்ணிக்கூடப் பார்க்கப்படாத மிகப் பெரிய அளவிலான சர்வதேச முயற்சியில்லாமல், ஆப்பிரிக்கா இயல்பான நிலையை எய்தமுடியாது,” என்பதாக UNICEF அறிக்கை சொல்கிறது.

இது நடக்கக்கூடுமா? பைபிள் உண்மையுடன் பின்வருமாறு சொல்கிறது: “பிரபுக்களையும் இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” (சங்கீதம் 146:3) உறுதியாக வேர்கொண்டுவிட்ட பிரச்சினைகளுக்குப் பரிகாரம் மனித அரசாங்கங்களைச் சார்ந்தில்லை. கடவுளுடைய ராஜ்யமே நிலையான விடுதலையை—ஆப்பிரிக்காவுக்கு மாத்திரமல்ல, முழு உலகுக்கும்—கொண்டுவரும்.—மத்தேயு 6:10.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்