பெண்களின் பதவியேற்பு ஆங்கிலிக்கன் குருமாரைக் கோபமூட்டுகிறது
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
நவம்பர் 1992-ல் சர்ச் ஆஃப் இங்லாண்டின் பொது ஆலோசனை சபை, பெண்களைப் பாதிரிகளாகப் பதவி நியமனம்செய்யும் திட்டத்தை முன்மொழிந்தது. அதன் விளைவு, அதிருப்தியடைந்த சுமார் 150 ஆங்கிலிக்கன் குருமார்கள், 1995-திற்குள் ராஜினாமா செய்யப்போகும் தங்களுடைய எண்ணத்தை அறிவித்துள்ளனர். அநேகர் ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் சேர்ந்துவிட ஆலோசித்துள்ளனர். ஒரு உயர் பதவியிலுள்ள மதகுரு, சபையில் உள்ள அனைவரையும், சர்ச் கட்டிடத்தையும் சேர்த்து தம்மோடு எடுத்துச் செல்ல விரும்புகிறார்! முதல் தொகுதியின் பதவியேற்பு (இறுதியில் மார்ச் 1994-ல் நடைபெற்றது) “சர்ச் ஆஃப் இங்லாண்டின் 450-வருட வரலாற்றிலேயே, மிகவும் சர்ச்சைக்குரிய பிரார்த்தனை,” ஆக இருக்கும் என்று தி ஸன்டே டைம்ஸ் எதிர்பார்த்தது.
ஏன் அநேக குருமார்கள் கோபப்பட்டார்கள்? சிலர் பெண்கள் பாதிரிகளாக இருக்கக்கூடாது என்று வெறுமனே நினைக்கிறார்கள். சர்ச் ஆஃப் இங்லாண்டை கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் மதங்களுடன் இணைக்கும் தற்போதைய முயற்சிகளை ஆலோசனை சபையின் தீர்மானம் பாழாக்கிவிடுகிறது என்று மற்றவர்கள் பயப்படுகிறார்கள். பார்க்கப்போனால், “மீண்டும் ஒன்று சேருவதற்கான அனைத்து நம்பிக்கைக்கும் ஆழமான தடை,” என்று சர்ச் ஆஃப் இங்லாண்டின் அதிகாரத்தைப்பற்றி போப்தானே கருதுவதாக வாடிகனின் பிரதிநிதி ஒருவர் அறிவித்தார்.
ஆயினும், பெண்கள் பாதிரிகளாக இருப்பதை மறுத்து வாக்களிக்கக்கூடிய சர்ச் ஆஃப் இங்லாண்ட் சபையினரின் தனிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பிஷப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து, அவருக்குப் பதிலாக ஒரு பிரயாணம் செய்யும் குருமாரைக் கொண்டிருப்பதற்கும்கூட அவர்கள் தீர்மானம் செய்யக்கூடும். இவர், நியூ யார்க் டைம்ஸ்-ன் பிரகாரம், “சமய மேய்ப்பிற்குரிய கவனிப்பை பெண் பாதிரிமார்களிடமிருந்து பெற்றுக்கொள்ள மறுப்போருக்கு அப்படிப்பட்ட கவனிப்பைக் கொடுப்பார்.”
‘நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப்பேசவும், பிரிவினைகளில்லாமல், ஏகமனதும் ஏகயோசனையுமாய் உள்ளவர்களாயிருங்கள்,’ என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த புத்திமதியிலிருந்து எவ்வளவு வித்தியாசமானது. (1 கொரிந்தியர் 1:10) இந்தக் கருத்து மாறுபாடு வளர்ந்துகொண்டே செல்கையில் சபையினரில் அநேகர் தாங்களாகவே சொந்த தீர்மானங்களை எடுக்கிறார்கள். “சர்ச் ஆஃப் இங்லாண்டில் இனிமேலும் நம்புவதற்கு எதையாகிலும் விட்டுவந்ததாக எங்களுக்குத் தோன்றவில்லை. விட்டுவந்ததன் மகிழ்ச்சி மற்றும் விடுவிக்கப்பட்டதன் உணர்வு மட்டுமே இருக்கிறது,” என்பதாக ஒரு பெண்மணி கூறினார்.