உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 8/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • நீங்கள் குறட்டை விடுகிறீர்களா?
    விழித்தெழு!—1994
  • அதிக சோர்வு அது விரைவில் உங்களைப் பாதிக்கக்கூடுமா?
    விழித்தெழு!—1995
  • அதிக சோர்வு நீங்கள் எவ்வாறு சமாளிக்கமுடியும்?
    விழித்தெழு!—1995
  • அதிக சோர்வு ஆபத்திலிருப்பது யார், ஏன்?
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 8/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

அதிக சோர்வு “அதிக சோர்வினால் நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா?” (ஜனவரி 8, 1995) என்ற தொடர்கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி. நான் ஒரு பயனியராக சேவை செய்கிறபோதிலும், நான் சில மாதங்களாக என்னுடைய பலம் உறிஞ்சப்பட்டு உந்துவிப்பற்றவளாக உணர்ந்திருக்கிறேன். நான் தனிப்பட்ட விதமாக பொருத்திப் பயன்படுத்தவேண்டிய சில குறிப்புகளை, விசேஷமாக மற்றவர்களைக் கேலிசெய்வதைத் தவிர்க்கும்படியான ஆலோசனையை அந்தக் கட்டுரை எனக்குத் தந்தது.

எம். எஸ்., ஜெர்மனி

இவை எனக்கு அசாதாரணமான கட்டுரைகளாக இருந்தன, ஏனென்றால் நான் கடைசியாக என்னுடைய பிரச்சினையை கண்டுகொண்டேன். நான் மனைவியாக, நான்கு பிள்ளைகளுக்கு தாயானவளாக இருக்கிறேன், எனக்கு ஏகப்பட்ட வீட்டுவேலை இருக்கிறது. வருந்தத்தக்க விதமாக, என்னுடைய குடும்பத்தாரிடமிருந்து எனக்கு போற்றுதலே கிடையாது. இது, எளிதில் உணர்ச்சிவசப்படுகிற ஆட்களுக்குப் பொதுவாக காணப்படுகிற ஒரு பிரச்சினை என்பதை அறிந்துகொண்டதினால் நான் மிக நன்றாக உணருகிறேன். இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள்!

ஜே. எம்., இத்தாலி

களைப்பு, ஆர்வமின்மை, உதவியற்றநிலை, நம்பிக்கையற்றநிலை, சுகவீனமடைந்த உணர்வு ஆகியவற்றை நான் அனுபவித்து வந்திருக்கிறேன். அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு வழிநடத்திய காரணிகளை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். புரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருப்பது மனதுக்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படியும், ஊக்கமளிக்கும் கட்டுரைகளை எழுதும்படி யெகோவாவும் அவருடைய அமைப்பும் நன்கு அக்கறைகொள்கிறது என்பதை அறியும்படியும் நான் விரும்புகிறேன்.

ஸெட். எல்., ஐக்கிய மாகாணங்கள்

அதிக சோர்வு, என்னுடைய பெத்தேல் சேவையைக் கைவிட்டுவிடுவதிலும் அதன் பின்பாக பயனியர் சேவையைக் கைவிட்டுவிடுவதிலும் முக்கியப் பங்கை வகித்தது. ஒரு மூப்பராக சேவை செய்வதை ஏறக்குறைய விட்டுவிடும் தறுவாயில் நான் இருந்தேன்! கடந்த காலங்களில் நான் பேச்சுத்தொடர்பு கொள்ளத் தவறிய சந்தர்ப்பங்களை என்னால் இப்பொழுது புரிந்துகொள்ள முடிகிறது. நான் இந்த விஷயத்தில் முன்னேற்றமடைந்திருக்கிறேன், என்னுடைய மனநிலையும் மிக நன்றாக இருக்கிறது.

இ. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்

கிறிஸ்தவ ஊழியர்கள் வேறுசிலர் இந்தப் பிரச்சினையை சகித்து அதை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவது உற்சாகமூட்டுவதாய் இருந்தது.

சி. எல்., ஸ்விட்சர்லாந்து

மணமாகா தாய்மார்கள் “இளைஞர் கேட்கின்றனர் . . . மணமாகா தாய்மார்கள் நிலைமையை நன்கு சமாளிப்பது எப்படி?” (அக்டோபர் 8, 1994) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. தவறுசெய்ததினால் கர்ப்பம் ஏற்பட்டது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தி, தவறுசெய்த பெண்ணை இன்னும் அதிக மோசமாக உணரச்செய்வதற்குப் பதிலாக, நீங்கள் நடைமுறையான, உதவியளிக்கும் வழிகாட்டுக் குறிப்புகளை அளிக்கிறீர்கள்.

ஜே. டி., ஐக்கிய மாகாணங்கள்

பத்து வருடங்களுக்கு முன்பு நான் மணமாகா பெற்றோராக ஆனேன். ஆனால் யெகோவா மற்றும் என்னுடைய கிறிஸ்தவ பெற்றோர்களின் உதவியுடன், நான் நன்றாக முன்னேறியிருக்கிறேன். கல்லூரியிலிருந்து பட்டம்பெற்ற பிறகு, நான் ஆறாண்டுகளாக முழுநேர ஊழியராக சேவை செய்தேன். பின்பு, இப்பொழுது ஒரு மூப்பராக சேவைசெய்கிற கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டேன். யெகோவாவின் இரக்கத்தினாலும் தயவினாலும் பேரளவாக நன்மையடைந்திருக்கிறேன். மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு என்னுடைய அனுபவத்தைப் பயன்படுத்தவும் முடிகிறது.

ஏ. எம்., ஐக்கிய மாகாணங்கள்

அந்தக் கட்டுரையை நான் வாசித்தபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. நீங்கள் விவரித்த அதே நிலைமையை நான் அனுபவித்தேன். இப்பொழுது ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருக்கிறேன், இதனால் என்னுடைய மகளை உட்பார்வையுடன் வளர்க்க முடிகிறவளாய் இருப்பதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சி. ஆர். எஸ்., பிரேஸில்

குறட்டைவிடுதல் “நீங்கள் குறட்டை விடுகிறீர்களா?” (செப்டம்பர் 8, 1994) என்ற கட்டுரை, குறட்டைவிடுவதால் வரும் சாத்தியமான பேராபத்துக்களைப் பற்றி எச்சரித்தது. ஆனால், நீங்கள் சப்தமாக குறட்டைவிடுகிறவராக இருந்தால், உங்களுக்கு தூக்க மூச்சுத்தடை (sleep apnea) இருக்கிறது என்பதாக மறைமுகமாய் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியிருக்கவேண்டிய அவசியமில்லை. குறட்டைவிடும் பழக்கம் நமக்கு வயதாக ஆக ஏற்படுகிறது. அலர்ஜிகள் மற்றும் சைனஸ் பிரச்சினைகளினாலும் அது வரக்கூடும். ஆனால், சப்தமாக குறட்டைவிடுவது சுவாசமில்லாத சமயங்களோடு, மூச்சுத்திணறல் அல்லது மூக்கின் சீறல், பகல்நேர தூக்கமயக்கம் அல்லது களைப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து வந்தால், ஒருவேளை தூக்க மூச்சுத்தடை காரணமாக இருக்கக்கூடும். மிகவும் பரவலாக செய்யப்படுகிற சிகிச்சை, அறுவைசிகிச்சை அல்ல, ஆனால் தூங்கும்போது காற்று வழிகளை தடைபடாமல் வைத்துக்கொள்வதற்கு அழுத்தப்பட்ட காற்றை பயன்படுத்துகிற கருவிகளாகும்.

சி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் குறிப்புகளை நாங்கள் போற்றுகிறோம். எங்களுடைய கட்டுரை ஏதேனும் தவறான புரிந்துகொள்ளுதலை உண்டுபண்ணியிருந்தால் அதற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். எப்பொழுதாவது குறட்டைவிடுவது அசாதாரணமானதல்ல என்பதை மருத்துவ அதிகாரிகள் ஒத்துக்கொள்கின்றனர். எல்லா மருத்துவ பிரச்சினைகளையும் போலவே, தகுந்த சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மருத்துவரால் செய்யப்படுகிற மதிப்பீடு இன்றியமையாததாகும்.—ED.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்