உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 9/8 பக். 6-7
  • 1945-1995 முன்னேற்றமிக்க 50 வருடங்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1945-1995 முன்னேற்றமிக்க 50 வருடங்களா?
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பொருளாதார முன்னேற்றங்கள்
  • பெண்கள்—அப்போதும் இப்போதும்
  • திரளான இடப்பெயர்ச்சி பிரச்சினைகளை உருவாக்குகிறது
  • சில ஆப்பிரிக்க நாடுகளின் தற்காலமும் எதிர்காலமும்
  • 50 ஆண்டுகளுக்குமுன் உலகம் எப்படியிருந்தது?
    விழித்தெழு!—1995
  • ஏன் இந்த வாழ்க்கைச் செலவு நெருக்கடி?
    விழித்தெழு!—1990
  • குடிசைப்பகுதி மிகுந்த நகரங்கள் வாழ்க்கைப் போராட்டங்கள் நிறைந்த நகர்ப்புறத்தில் கொடிய காலங்கள்
    விழித்தெழு!—1993
  • வறுமையின் கைதிகள்
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 9/8 பக். 6-7

1945-1995 முன்னேற்றமிக்க 50 வருடங்களா?

கடந்த 50 வருடங்களாக உங்களுடைய வாழ்க்கையின் தரத்தில் சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறீர்களா?a மருத்துவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கனடா, கியூபா, பிரிட்டன், ஸ்வீடன் போன்ற சில நாடுகளில், சமுதாய மருத்துவ அமைப்பைக் கொண்டுள்ள பொதுநல அரசு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு செய்ததானது நோயாளிகளின் பொருளாதார சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும், மருத்துவர்களும் மருத்துவமனை வசதிகளும் எல்லாருக்கும் கிடைக்குமென உறுதியளித்தது.

சில வளரும் நாடுகள்கூட தங்களுடைய குடிமக்களின் சுகாதார தராதரங்களை மேம்படுத்த முடிந்திருக்கிறது. “சில மூன்றாம் உலக சுகாதார அமைச்சகங்கள் தங்களுடைய நாட்டினால் சமாளிக்கமுடிகிற செலவில் அனைவருக்கும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு அளிப்பதில் வெற்றியடைந்திருக்கின்றன. . . . இலங்கை, கோஸ்டா ரிகா, சீனா ஆகிய நாடுகளிலும், இந்திய மாநிலமாகிய கேரளாவிலும் சிசு மரணத்தையும் குழந்தைப்பருவ மரணத்தையும் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது” என JAMA (தி ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன்) ஒப்புக்கொண்டிருக்கிறது.

பொருளாதார முன்னேற்றங்கள்

1945-ல் இருந்த பொருளாதார நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், 1995-ல் அநேக மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர். 50 வருடங்களுக்கு முன் சொகுசு வசதிகளைப் பெற முடியாமல் இருந்தவர்கள் இன்றோ சொந்தக் கார்கள், தொலைக்காட்சி பெட்டிகள், வீடியோக்கள், காம்பேக்ட் டிஸ்க் பிளேயர்கள், ரெஃபிரிஜிரேட்டர்கள், செல்லுலார் தொலைபேசிகள் போன்ற கருவிகளையும் நவீன வாழ்க்கை பாணியின் மற்ற சாதனங்களையும் வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஒருவேளை அப்படிப்பட்ட லட்சம்பேரில் ஒருவராக இருக்கலாம்.

எ ஹிஸ்டரி ஆஃப் ப்ரைவட் லைஃப் என்ற தொடர்புத்தகத்தின் ஆசிரியர்கள் விவரிப்பதாவது: “இரண்டாம் உலகப் போருக்குப் பின் முப்பது வருடங்களாக [மற்ற மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளோடு சேர்ந்து] பிரான்ஸ் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதுதானே வகுப்புவாதங்களை நீக்காமல், சமுதாயத்தில் உள்ள எல்லா வகுப்பினருக்குமே புதிய செழுமையைக் கொண்டுவந்தது. பொதுநல அரசு மற்றும் நவீன மருத்துவத்தின் கூடுதலான ஆசீர்வாதங்களோடு, ‘நல்ல’ வீடும், ‘எளிய’ மோட்டார் வாகனம் ஒன்றும், தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் வைத்திருந்து, பூலோகப் பரதீஸையல்ல என்றாலும், ஒரு நடுத்தரமான வாழ்க்கையையாவது அனைவரும் மகிழ்ந்தனுபவிக்கலாம்.”

இருந்தபோதிலும், கேள்வி என்னவென்றால், அதிகமான பொருளுடைமைகளை வைத்திருப்பதுதானே மக்கள் எல்லா விதத்திலுமே மேம்பட்ட நிலையில் வாழ்கிறார்கள் என்று அர்த்தப்படுத்துகிறதா? பொருளாதார அனுகூலங்களை குவித்துவைப்பதுதானே வாழ்க்கையை மேம்பட்டதாகவோ பாதுகாப்பானதாகவோ ஆக்கிவிடுகிறதா? ஒருசிலருக்கு அதிக உடைமைகள் இருப்பதானது அநேக ஏழை மக்களை ஒன்றுமில்லாமல்தான் போகச்செய்கிறது. அது திருடுதல், கொள்ளையடிக்கத் தாக்குதல், மோசடி போன்றவற்றையும், மற்ற அதிக வன்முறைச் செயல்களையும் செய்வதற்கான தூண்டுதலையுமே அதிகரிக்கிறது. ஒன்றுமேயில்லாத சிலர்—எப்படியாவது—பணக்காரர்களாக வேண்டும் என்று தீர்மானிக்கின்றனர். எடுத்துக்காட்டாக, நியூ யார்க் நகரத்தில், ஒவ்வொரு வருடமும் 1,00,000-க்கும் அதிகமான கார்கள் திருடப்படுகின்றன. பொருளாதார அனுகூலங்கள் அதிக பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதியளிப்பது கிடையாது.

மற்ற துறைகளிலும், சிலர் விரும்பிய அளவுக்கு இல்லையென்றாலும், முன்னேற்றங்கள் இருந்துவந்திருக்கின்றன.

பெண்கள்—அப்போதும் இப்போதும்

இரண்டாம் உலகப் போர் சில பெண்களுக்கு புதிய பங்கிற்கான தூண்டுவிசையைக் கொடுத்தது. அநேகர் தாய்மாராகவும் வீட்டுப் பெண்களாகவும் இருந்தனர். கணவன் குடும்பத்தைக் காப்பாற்றுபவனாக இருந்துவந்தான். இரண்டாம் உலகப் போர் இவையனைத்தையும் மாற்றிவிட்டது. ஆண்கள் போருக்கு அழைத்துக்கொள்ளப்பட்டனர். ஆகவே அவர்களுடைய மனைவிகள் திடீரென ஆயுதத் தொழிற்சாலைகளிலோ அல்லது ஆண்கள் விட்டுச்சென்ற மற்ற வேலைகளையோ செய்யவேண்டியதாயிற்று. மிகவும் சமீபகாலத்தில், சிலர் ராணுவ சேவையில் சேர்ந்து, கொல்லுவதற்குக் கற்றுக்கொண்டிருக்கின்றனர். லட்சக்கணக்கான பெண்கள் சம்பாதிப்பவர்களாகி பணத்திற்காக மற்றவர்களை சாராது இருக்கும் ஒரு வித்தியாசமான வாழ்க்கை-பாணியை ருசிபார்த்தனர். வரப்போகும் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கவே செய்த இது, படிப்படியாக இன்றைய “விடுதலைப் பெண்களாக” ஆவதற்கு அவர்களுக்கு வாயிலைத் திறந்துவைத்தது. சமவுரிமைக்கான அவர்களுடைய போராட்டத்தில், அநேக நாடுகளில் பெண்கள் சமவுரிமை அடைவதற்கு இன்னும் வெகுதூரம் இருக்கிறது என்பதாக சில பெண்கள் சொல்லுகின்றனர். அநேக வேலைகளில், தங்களுக்கு உயர்பதவி கிடைப்பதற்குக் “கண்ணாடித் தடை” (glass ceiling) இருப்பதாக அவர்கள் சொல்லுகின்றனர்.

திரளான இடப்பெயர்ச்சி பிரச்சினைகளை உருவாக்குகிறது

கடந்த 50 வருடங்களில் ஏற்பட்ட மற்றொரு பெரிய மாற்றமானது, கிராம வாழ்க்கையையும் விவசாயத்தையும் விட்டுவிட்டு மேம்பட்ட ஒரு வாழ்க்கையைத் தேடும் முயற்சியில் நகரங்களுக்கு மாறிச்செல்வதாகும். ஒருசிலருக்கு இந்தக் கனவு பலித்திருக்கிறது. ஆனால் மற்ற அநேகருக்கு அதன் பாதிப்புகள் என்னவாக இருந்திருக்கின்றன?

போதுமான வீடுகள் இல்லாமலும் வீடு கிடைப்பதற்கு நிறைய செலவும் ஆகிற, ஏற்கெனவே மக்கள் நெருக்கடி நிறைந்த நகரங்களுக்கு ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான ஆட்கள் குடியேறிச் செல்கின்றனர். ஒரு பாதிப்பு என்ன? நோய்கள், குற்றச்செயல்கள், மற்றும் அரசியலை நிலையற்றதாக்குதல் போன்றவற்றின் உற்பத்தி ஸ்தலமாக இருக்கும் குடிசைப்பகுதிகளே. தூக்கியெறியப்பட்ட அட்டைகளையும் தகரங்களையும் வைத்து சொந்தமாகக் கட்டப்படும் இந்தக் குடியிருப்புகள் (ஸ்பானிய மொழியில்) பாராக்காஸ் அல்லது ச்சாபோலாஸ் என்றழைக்கப்படும் எளிய குடிசைகளாகும். வாழ்க்கையில் போராடும், வறுமைக்கு இரையான, உலகின் தாழ்ந்த வகுப்பினருக்கு இவை இருப்பிடங்களாக அமைகின்றன. இந்தக் குடிசைப்பகுதிகள், போர்ச்சுகீசிய மொழியில் ஃபாவீலா என்றும் துருக்கிய மொழியில் (“ஒரே ராத்திரியில் கட்டப்பட்டது” என்று அர்த்தப்படுத்தும்) கெஜெக்கான்டூ என்றும் அழைக்கப்படுகின்றன. ஆப்பிரிக்கா, இந்தியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தாலும்சரி அல்லது வேறெந்த இடத்தில் இருந்தாலும்சரி இந்தக் குடிசைப்பகுதிகள் கண்டுகொள்ளாமல் விடமுடியாத, வாழ்க்கையின் உண்மைகளாக இருக்கின்றன.

சில ஆப்பிரிக்க நாடுகளின் தற்காலமும் எதிர்காலமும்

ஆப்பிரிக்காவைப்பற்றி என்ன சொல்லலாம்? JAMA பத்திரிகைக்கு எழுதும் இரண்டு டாக்டர்கள் தங்கள் கட்டுரைக்குக் கொடுத்த தலைப்பு இதுதான்: “ஆப்பிரிக்கா அபாயத்தில்—அச்சுறுத்தினாலும் இன்னும் நம்பிக்கையிழக்க வைக்காத எதிர்காலம்.” ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் அரசியல் மற்றும் சமுதாய நிலைமைகள் வெடித்தெழும் பிரச்சினைகளை எழுப்புகின்றன என்பதை அவர்கள் ஒத்துக்கொள்கின்றனர். அவர்கள் எழுதியதாவது: “சஹாராவை ஒட்டியுள்ள ஆப்பிரிக்க பகுதிகளுக்கு [45 நாடுகளின் பரப்பளவு], கடந்த 20 வருடங்கள் பேரழிவு நிறைந்தவையாய் இருந்திருக்கின்றன. இப்பகுதி பஞ்சம், வறட்சி, உள்நாட்டுப் போர்கள், அரசியல் ஊழல், எய்ட்ஸ், மக்கள்தொகையின் திடீர் அதிகரிப்பு, உணவு உற்பத்திக் குறைவு, சுற்றுச்சூழல் சீரழிவு போன்றவற்றால் நெருக்கப்படுகிறது . . . மேன்மேலுமான பொருளாதார வீழ்ச்சி, வறுமை, துன்பம் போன்றவை கொஞ்சம் காலத்திற்காவது தவிர்க்கமுடியாதவையாக இருக்கும் என்று வல்லுநர்கள் ஏகமனதாக முன்னறிவிக்கின்றனர்.” உலகிலேயே மிகமிக ஏழ்மையிலிருக்கும் 40 நாடுகளில் 32 நாடுகள் சஹாராவை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கப்பகுதியில் அமைந்திருக்கின்றன என்பதாக அதே கட்டுரை அறிவிக்கிறது.

உலகில் தற்போதுள்ள ஒழுக்கநெறி சூழ்நிலையைப்பற்றி என்ன? இந்த விஷயத்தில் உலகத்தின் “முன்னேற்றம்” என்ன என்பதுபற்றி அடுத்து வரும் கட்டுரை சுருக்கமாக சிந்திக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a போதுமான இடம் இல்லாததனால், கடந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட முன்னேற்றங்களையோ மாற்றங்களையோ உட்படுத்தும் அனைத்து அம்சங்களையும் நாங்கள் குறிப்பிடவில்லை.

[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]

USAF photo

[பக்கம் 7-ன் படத்திற்கான நன்றி]

NASA photo

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்