உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 3/22 பக். 25-27
  • கடவுளின் பரிசாகிய சமநிலை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளின் பரிசாகிய சமநிலை
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அது என்ன? அது எப்படி வேலை செய்கிறது?
  • வெஸ்டிபுலார் அமைப்பு செயல்படுவதில் குறைபாடுகள்
  • காரணங்களும் சிகிச்சைகளும்
  • உங்கள் செவி செய்தித்தொடர்புக்குச் சிறந்த இணைப்புச்சாதனம்
    விழித்தெழு!—1991
  • உங்கள் செவியுணர்வு—பேணிக் காக்கவேண்டிய ஒரு பரிசு
    விழித்தெழு!—1997
  • மனிதன் என்ற அற்புதம்
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • உங்கள் மூளை—எவ்வாறு செயல் புரிகிறது?
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 3/22 பக். 25-27

கடவுளின் பரிசாகிய சமநிலை

“அது கப்பலின் அசைவிற்கு ஏற்ப உடல் தகவமைத்துக் கொண்டதன் விளைவுதான், அது பல நாட்களுக்கு அப்படித்தான் இருக்கும்” என்று என் நண்பர்கள் என்னிடம் கூறினர். அது அக்டோபர் 1990, கரிபியன் கடலில், சுற்றுப்பயணக் கப்பலில் ஏழு-நாள் பயணம் செய்த பிறகு உலர்ந்த தரைமீது கால்வைத்தேன். வெறும் சிலநாட்கள் மட்டுமே அவ்விதம் இருக்குமென்று நான் நினைத்திருந்த அனுபவம், பல மாதங்களாக அவ்விதமே இருந்திருக்கிறது. நான் கப்பலிலிருந்து இறங்காதது போலவே இருந்தது. மூளையுடன் அதன் மத்திப பாகம் இணைக்கப்பெற்றுள்ள உட்செவியின் சிக்கலான சமநிலை அமைப்பாகிய வெஸ்டிபுலார் அமைப்பில் ஏதோ தவறு ஏற்பட்டுவிட்டது.

அது என்ன? அது எப்படி வேலை செய்கிறது?

உங்கள் சமநிலையை ஒன்றுபடுத்தும் மையம், உங்கள் மூளையின் அடிப்பகுதியில் உள்ள மூளைத்தண்டு என்றழைக்கப்படும் பகுதியில் காணப்படுகிறது. உங்கள் உடல்நலம் நன்றாயிருக்கையில், உங்கள் கண்கள், தசைகள், வெஸ்டிபுலார் அமைப்பு ஆகியவற்றிலிருந்து எண்ணற்ற தூண்டுதல்கள் பெறப்படுவதால் நீங்கள் உங்கள் சமநிலையைக் காத்துக்கொள்ள முடிகிறது.

உங்கள் கண்கள், உங்களுக்கு வெளியே இருக்கும் சுற்றுப்புற சூழ்நிலைகளைப்பற்றிய தொடர்ச்சியான உணர்தகவல்களை மூளைத்தண்டிற்கு அளிக்கின்றன. உங்கள் தசைகளிலுள்ள புரோப்ரியோசெப்டார்கள் என்றழைக்கப்படும் உணர் ஏற்பிகள், நீங்கள் நடந்துசெல்லும் அல்லது தொடும் பரப்புகளின் தன்மையைப்பற்றிய தகவலை உங்கள் மூளைக்குச் செலுத்துகின்றன. ஆனால் உங்கள் உடல் பூமியிலிருந்தும், அதன் ஈர்ப்புச் சக்தியிலிருந்தும் எவ்வளவு தொலைவு வெளியில் உள்ளது என்பதுபற்றிய தகவலை உங்கள் மூளைக்கு அறிவிக்கும் உட்புற அறிவுரை அமைப்பாகச் செயல்படுவது, உங்கள் வெஸ்டிபுலார் அமைப்புதான்.

இந்த வெஸ்டிபுலார் அமைப்பு, சமநிலையோடு தொடர்புடைய ஐந்து பகுதிகளால் ஆனது: இந்த அரை வட்டக் குழல்கள் மூன்று மற்றும் திசுப்பைகள் இரண்டு. அரை வட்டக் குழல்கள், மேற்புறக் குழல், கிடைமட்டக் குழல், கீழ்ப்புறக் குழல் என்று அழைக்கப்படுகின்றன. அவ்விரண்டு திசுப்பைகளும் யூட்ரிகிள், சேக்யூல் என்று அழைக்கப்படுகின்றன.

அந்த அரை வட்டக் குழல்கள், ஓர் அறையின் மூலையில் சுவர்களும் தரையும் சந்திப்பதைப்போன்று, சமதளத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்துள்ளன. இக்குழல்கள், பொட்டெலும்பு என்றழைக்கப்படும் கடின எலும்பில் மறைக்கப்பட்டுள்ள ஒரு சிக்கலமைப்பை உண்டாக்கும் பாதைகளாய் உள்ளன. இந்த எலும்பு சிக்கலமைப்பின் உட்பகுதியில், சவ்வுச் சிக்கலமைப்பு என்றழைக்கப்படும் மற்றொரு சிக்கலமைப்பு உள்ளது. சவ்வினாலான அரை வட்ட நாளம் ஒவ்வொன்றின் முடிவிலும், புடைப்பு போன்றிருக்கும் ஓர் அமைப்பு உள்ளது, அது ஆம்புல்லா என்றழைக்கப்படுகிறது. சவ்வினாலான சிக்கலமைப்பின் உட்புறத்தில் உள் நிணநீர் என்றழைக்கப்படும் ஒரு விசேஷ திரவம் உள்ளது. சவ்வின் வெளிப்புறத்தில், வெளி நிணநீர் என்றழைக்கப்படும் வேறுபட்ட வேதியியல் கூட்டமைவான மற்றொரு திரவம் உள்ளது.

அந்த நாளத்தின் வீங்கிய பகுதியான ஆம்புல்லாவில், விசேஷித்த மயிர் செல்கள் கற்றைக் கற்றையாக காணப்படுகின்றன. இவை குப்புலா எனப்படும் ஜெலாட்டின் திரளின்மீது பதிக்கப்பெற்றுள்ளன. நீங்கள் எந்தத் திசையில் உங்கள் தலையைத் திருப்பினாலும், உள் நிணநீர் திரவம், குழல்களின் அசைவின்போது அதற்கேற்ப அசையாமல், சற்றுப் பின்தங்கி நின்றுவிடுகிறது; அவ்வாறு செய்வதால் குப்புலாவையும் அதற்குள்ளிருக்கும் மயிர்க் கற்றைகளையும் வளைக்கிறது. மயிர்க் கற்றைகளின் அசைவு, மயிர் செல்லின் மின்தன்மைகளில் மாற்றத்தை உண்டாக்குகிறது, இது நரம்பணுக்களின் வழியாக உங்கள் மூளைக்கு செய்திகளைக் கடத்துகிறது. ஈர்ப்பு நரம்புகள் மூலமாக தனித்தனியே உள்ள இந்த மயிர் செல்களிலிருந்து மட்டும் மூளைக்குச் செய்திகள் கடந்து செல்வதில்லை, ஆனால் மீண்டும் மூளையிலிருந்து ஒவ்வொரு மயிர் செல்லுக்கும் விடுப்பு நரம்புகள் மூலமாக தேவைப்படும்போது சரியீடு செய்யும் தகவலும் கடந்துசெல்கிறது.

அந்த அரை வட்டக் குழல்கள், எந்தத் திசையிலாவது உங்கள் தலை சாயும்போதோ, சுழலும்போதோ அதாவது, முன்புறம் அல்லது பின்புறம் அதைச் சாய்க்கையில், ஒரு பக்கம் அல்லது மறுபக்கம் அதைப் படுக்கவைக்கையில், அல்லது இடப்புறமோ வலப்புறமோ அதைச் சுழற்றுகையில் அதைக் கண்டறிகின்றன.

மறுபட்சத்தில், அந்த யூட்ரிகிளும் சேக்யூலும் நேரான பாதையிலுள்ள விரைவு அசைவைக் கண்டறிகின்றன; ஆகவே அவை ஈர்ப்பு உணர்புலன்கள் என்றழைக்கப்படுகின்றன. அவையும் மாக்யூலா என்று அழைக்கப்படுவதில் மயிர் செல்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, சேக்யூலை எடுத்துக்கொண்டால், அது நீங்கள் ஓர் உயர்த்தியில் ஏறிக்கொண்டிருக்கையில் மேல்நோக்கி விரைந்து செல்லும் உணர்வைத் தரக்கூடிய தகவலை உங்கள் மூளைக்கு அனுப்புகிறது. நீங்கள் காரில் செல்லும்போது, திடீரென்று விரைவாகச் செல்வதை முக்கியமாகக் கண்டறிந்து அதற்கேற்ப செயல்படுவது யூட்ரிகிள் ஆகும். அதுதான் நீங்கள் முன்னோக்கி அல்லது பின்னோக்கி உந்தப்படுவது போன்ற உணர்வை அளிக்கும்படி உங்கள் மூளைக்குத் தகவலை அனுப்புகிறது. பிறகு உங்கள் மூளை, தெளிவாகத் தெரியும் உங்கள் அசைவிற்குப் பிரதிபலிக்கும் வகையில் உங்கள் கண்களையும் கைகளையும் எப்படி அசைக்கவேண்டும் என்பது போன்றவற்றைத் தீர்மானிப்பதற்காக, இத்தகவலோடு மற்ற தூண்டுதல்களையும் சேர்க்கிறது. அது நீங்கள் இடம்-திசை உணர்வைக் காத்துக்கொள்ள உங்களுக்கு உதவுகிறது.

அது அதன் அமைப்பாளராகிய யெகோவா தேவனை கனப்படுத்தும் ஓர் அற்புதமான அமைப்பாகும். ஆராய்ந்தறியும் விஞ்ஞானிகளும்கூட அதன் திட்ட அமைப்பால் கவரப்படாமல் இருக்க முடிவதில்லை. சயன்டிஃபிக் அமெரிக்கன் என்ற பத்திரிகையில், உயிரியல் மற்றும் உடலியங்கியலின் பேராசிரியரான ஏ. ஜே. ஹட்ஸ்பெத் எழுதினார்: “என்றபோதிலும், கூடுதலான ஆய்வானது உயிரியல் சார்ந்த இந்த சிறிதாக்கப்பட்ட உபகரணத்தின் கூருணர்வுத்திறத்தைப் பற்றியும் அதன் சிக்கலான தன்மையைப் பற்றியும் உள்ள ஓர் ஆச்சரிய உணர்வை வலுப்படுத்தத்தான் முடியும்.”

வெஸ்டிபுலார் அமைப்பு செயல்படுவதில் குறைபாடுகள்

என் விஷயத்தில், என் உட்செவியின் பிரச்சினை, ஓட்டோஸ்பஞ்சியோஸிஸ் அல்லது ஓட்டோஸ்க்லெரோஸிஸ் [உட்செவி எலும்பு இறுக்கம்] என்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இது, ஒருவரது வெஸ்டிபுலார் அமைப்பு எந்த எலும்பில் அமைந்துள்ளதோ, அந்த எலும்பு மிருதுவாகவோ கடற்பஞ்சு போலவோ ஆகிவிடும் நிலையாகும். பொதுவாக இவ்வெலும்பு மிகக் கடினமானதாயிருக்கும்; உங்கள் உடலிலுள்ள மற்றெல்லா எலும்புப்பகுதிகளைவிடக் கடினமானதாயிருக்கும். மிருதுவாகும் செய்முறையின்போது, ஓர் என்ஸைம் உற்பத்தி செய்யப்பட்டு, அது உட்செவியிலுள்ள திரவத்தினுள் நுழைந்து அத்திரவத்தை வேதியியல் ரீதியில் கெடுத்துவிடுகிறது அல்லது மொத்தத்தில் அதை நச்சுப்படுத்திவிடுகிறது. நீங்கள் நின்றுகொண்டிருக்கையிலோ, கிடையாகப் படுத்திருக்கையிலோகூட தொடர்ந்து அசைந்துகொண்டிருப்பது போன்ற நூதனமான உணர்வை இது அளிக்கக்கூடும்.

எனக்கிருந்த பிரச்சினையானது, என் பாதத்தின்கீழ் இருந்த தளவரிசை செய்யப்பட்ட பாதை, சில சமயங்களில் ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பங்கு உயரம் வரைகூட எழும்பும் அலையின் விளிம்பு அசைவதைப் போன்று உணரச்செய்ததாகும். படுத்திருக்கையில், ஒரு மீட்டர் உயரமுள்ள சமுத்திர அலைகளின் மத்தியில் இருக்கும், துடுப்பால் இயக்குவிக்கும் ஒரு படகின் அடித்தளத்தில் படுத்திருப்பது போன்று நான் உணர்ந்தேன். அவ்வப்போது வரும் தலைசுற்றல் போன்று அந்த உணர்வு வருவதும் போவதுமாய் இருக்கவில்லை, ஆனால் அது வந்ததிலிருந்து ஒரு நாளின் 24 மணிநேரம் முழுவதுமாக, மாதக்கணக்கில் விடாமல் தொடர்ந்திருந்தது. நான் தூங்கும் நேரத்தில் உணர்வின்றி இருக்கும்போது மட்டுமே எனக்கு அவ்வுணர்விலிருந்து விடுதலை கிடைத்தது.

காரணங்களும் சிகிச்சைகளும்

பரம்பரை அம்சத்தோடு சிறிது தொடர்புடையதாய் இருக்கலாமென்றாலும், ஓட்டோஸ்பஞ்சியோஸிஸ் அல்லது ஓட்டோஸ்க்லெரோஸிஸ் ஏற்படுவதன் காரணம் இன்னும் அறியப்படாமலிருக்கிறது. இந்த நிலை மனிதருக்கு ஏற்படுகையில் தனித்தன்மையுடையதாய்த் தோன்றுவதால் இதைப்பற்றி ஆய்வு செய்வது மருத்துவ விஞ்ஞானத்திற்குக் கடினமாக இருந்திருக்கிறது. அப்படியே ஏற்படினும், விலங்குகளுக்கு இது அரிதாகவே ஏற்படுகிறது. ஓட்டோஸ்க்லெரோஸிஸ் இரைச்சலை (காதில் ஒலித்தல்), நிறைந்திருக்கும் ஓர் உணர்வை, தலை வெறுமையாய் இருப்பது போன்ற ஓர் உணர்வை, சமநிலையற்ற ஓர் உணர்வை அல்லது தலைசுற்றலின் (கிறுகிறுப்பு) பல்வேறு விதங்களை ஏற்படுத்தலாம். அதே நிலை, நடுச்செவியிலுள்ள அங்கவடி எலும்புகளில் நிலைத்தன்மையை ஏற்படுத்தி, கடத்துவதில் செவிட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம். ஓட்டோஸ்க்லெரோஸிஸ் காக்ளியாவைச் சென்றெட்டினால், அது நரம்பு செயல்படுவதையே அழித்துப்போடுவதன்மூலம், உணர்நரம்பு செவிட்டுத்தன்மையையும் ஏற்படுத்தலாம்.

இந்நிலையைச் சரிசெய்வதற்கு சிகிச்சைகள் உள்ளன. சில சிகிச்சைகள் அறுவை மருத்துவத்தை உட்படுத்துகின்றன (விழித்தெழு! ஜூலை 8, 1989, பக்கம் 20-ஐக் காண்க); பிற சிகிச்சைகள் கால்சியம், ஃப்ளூரைடு ஆகியவற்றின் அளவை அதிகரிக்கச் செய்வதன்மூலம் எலும்பு சிதைவுறுதலை நிறுத்தும் ஒரு முயற்சியைச் செய்கின்றன. உட்செவிக்கு, இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து அதிகம் தேவைப்படுவதால், சர்க்கரைச் சத்து இல்லாத உணவு வகைகள் சில சமயங்களில் பரிந்துரைக்கப்படுகின்றன. உண்மையில், மூளைக்கு ஆற்றலளிக்கத் தேவைப்படும் சர்க்கரையின் அளவைப்போன்று மூன்று மடங்கு சர்க்கரையளவு உட்செவிக்கு ஆற்றலளிக்கத் தேவைப்படுகிறது. நல்ல ஆரோக்கியமுள்ள ஒரு செவி சாதாரணமாக இரத்தத்திலுள்ள சர்க்கரையளவின் ஏற்ற இறக்கங்களை நன்கு கையாளுகிறது; ஆனால் அச்செவி ஒருமுறை சேதமடைந்துவிட்டால், இந்த ஏற்ற இறக்கங்கள், நீங்கள் சுழலுவது போன்று உணரச்செய்யலாம். உங்கள் உட்செவி ஒருமுறை சரியாக வேலைசெய்யாமல் போய்விட்டால், காபின், ஆல்கஹால் ஆகியவைகூட அதைச் சேதமடையச் செய்வதாய்த் தோன்றுகிறது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்ட சுற்றுப்பயணக் கப்பல் பிரயாணம் இந்தப் பிரச்சினைக்கு உண்மையில் காரணமாய் இருக்கவில்லை, ஆனால் தட்பவெப்பநிலை, ஈரப்பதம், உணவுப்பழக்கங்கள் ஆகியவை ஒருவேளை இந்த சமநிலையற்ற தன்மையைத் தூண்டுவித்திருக்கலாம்.

உங்கள் உட்செவி நீங்கள் கேட்பதைவிட அதிகத்தைச் செய்கிறது. ஓர் அற்புதமான விதத்திலும் ஆச்சரியமான விதத்திலும் அது உங்கள் சமநிலையைக் காத்துக்கொள்ள உதவுகிறது. அதன் திட்ட அமைப்பு நம்மை உருவாக்கினவரின் கைவினையைப் பற்றி நாம் வியக்கும்படி நம்மைச் செய்விக்க வேண்டும், மேலும் அது அவரது சிருஷ்டி-கர்த்தத்துவத்திற்கான நமது போற்றுதலை ஆழமாக்க வேண்டும்.—அளிக்கப்பட்டது.

[பக்கம் 26-ன் வரைப்படம்/படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

உங்களது பிரமிப்பூட்டும் வெஸ்டிபுலார் அமைப்பு

மேல் அரைவட்டக் குழல்

நீள்வட்டச் சாளரம்

காக்ளியா

பொட்டெலும்பு

சவ்வுச் சிக்கலமைப்பு

ஆம்புல்லா

சேக்யூல்

கிறிஸ்டா

கிடைமட்ட அரைவட்டக் குழல்

பின் அரைவட்டக் குழல்

வட்டச் சாளரம்

காக்ளியா

மாக்யூலா

யூட்ரிகிள்

கிறிஸ்டா

வெளித் தோற்றம்

வளைவான அசைவை அளக்கிறது

நேரான அசைவு டிடெக்டார்

உள் தோற்றம்

கேட்கும் உறுப்பு

கிடைமட்ட அசைவு டிடெக்டார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்