உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 7/22 பக். 31
  • வேகத்தில் தலைசிறந்தது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வேகத்தில் தலைசிறந்தது
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • சீட்டா—பூனைகளில் மிக வேகமானது
    விழித்தெழு!—1997
  • இவை ஏன் அழிகின்றன?
    விழித்தெழு!—2004
  • விலங்கு உலகில் குட்டிகளை ஊட்டி வளர்த்தல்
    விழித்தெழு!—2005
  • நகைச்சுவைமிக்க—உவார்ட்ஹாகு
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 7/22 பக். 31

வேகத்தில் தலைசிறந்தது

தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்

இந்தப் பட்டத்தைத் தாங்கியிருப்பது யார்? சிறிய தூரங்கள் ஓடுகையில் உலகிலேயே மிகவும் விரைவாக ஓடும் விலங்காகிய சீட்டா (வேட்டைச் சிறுத்தை). ஒவ்வொரு சீட்டாவும் அதனதன் சொந்த தனிவகையான புள்ளிகளின் அமைப்பைக் கொண்டிருக்கிறது—இதன் காரணமாகவே சீட்டா என்ற பெயர், “சிறு புள்ளிகளுள்ள உடல்” என்று அர்த்தப்படும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வருகிறது.

முதற்கண்ணோட்டத்தில் இந்தப் பூனையெங்கும் கால்களாக இருப்பதுபோல் தோன்றுகிறது என்று சிலர் சொல்கின்றனர். அதன் முதுகுப் பகுதி வளைந்திருக்கிறது என்றும் அதன் தலை மிகவும் சிறியது என்றும் மற்றவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தத் தோற்றக்கூறுகள்தாமே சீட்டாவுக்குப் பயனுள்ளவையாய் நிரூபிக்கின்றன. நீண்ட பின்னங்கால்கள் துணைவலுவை அளிக்கின்றன; சீட்டா, ஒரு நளினத்துடன் நடப்பதற்கும் நேர்த்தியுடன் ஓடுவதற்கும் இது உதவுகிறது. இந்த விலங்கு உண்மையிலேயே விரைவாக ஓட முடியும்! இடம்பெயராத ஒரு நிலையிலிருந்து, பல விநாடிகளுக்குள் ஒரு சீட்டா, ஒரு மணிநேரத்திற்கு சுமார் 110 கிலோமீட்டர் சென்றெட்ட முடியும்.

மிகச் சிறந்த அளவு வேகத்திற்காக சீட்டா நன்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் குறைந்த எடையுள்ள எலும்பமைப்புச் சட்டம், ஒரு ஸ்பிரிங்கைப் போல சுருண்டு விரிந்துகொடுக்கிற, வழக்கத்திற்கு மாறாக வளைந்துகொடுக்கிற முதுகெலும்பையும் கொண்டிருக்கிறது. சீட்டாவுக்கு ஆழமான மார்பும், பரந்த நுரையீரலும், பலமான இருதயமும், சமநிலையை அளிக்கிற ஒரு வாலும், விரைவான சுவாசித்தலுக்கு இடமளிக்கும் பெரிய மூக்கு துவாரங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன—இவை அனைத்தும் இந்த விலங்கின் ஈடற்ற வேகத்திற்கு உதவியாக இருக்கின்றன. என்றபோதிலும், சீட்டாவின் திடீர் சக்தி வெளிப்பாடு, குறுகிய நேரத்திற்குரியதே. முழு வேகத்தில் வெறுமனே 400 மீட்டர் ஓடியதும், அது இளைப்பாறுவதற்காக நிற்க வேண்டும்.

வழக்கமாக சீட்டாக்கள் மனிதருக்கு அச்சுறுத்தலாக இல்லை. வருடக்கணக்கில் சீட்டாக்களை வளர்த்துவந்த அன் வான் டைக், டெ வில்ட்டின் சீட்டாக்கள் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “உணவளித்து முடித்தப் பிறகு, இருட்டுவதற்கு முன் அந்தக் கடைசி சில கணங்களை என் பூனைக் குடும்பத்துடன் செலவிட நான் விரும்பினேன். எங்களுக்கிடையில் ஒரு நம்பிக்கை உணர்வு வளர்ந்திருந்தது; அவை பழக்கப்படுத்தப்படாதவையாய் இருந்தாலும் அவை எனக்கு தீங்கு செய்யாது என்று எனக்குத் தெரியும்.”

என்றபோதிலும், மனிதர் எப்போதுமே சீட்டாவோடு அவ்வளவு தயவுடன் நடந்துகொண்டதில்லை. உதாரணமாக, ஆப்பிரிக்காவிலுள்ள வேட்டைக்காரர்கள், அதன் அசாதாரணமான உரோமத்திற்காகப் பேராசைப்பட்டனர்; மேலும் குடியேற்றமயமாதல் சீட்டா ஓடுவதற்கான இடத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. இது கணிசமான அளவுக்கு சீட்டாவின் தொகையைக் குறைத்திருக்கிறது. ஒருகாலத்தில் இந்தியாவில் அதிகப்படியாக இருந்த சீட்டா, 1952-ல் அங்கு அற்றுப்போனது. கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியின் ஓரத்திலுள்ள சில நாடுகளிலும் அவை இனிமேலும் காணப்படுவதில்லை.

கடவுளுடைய புதிய உலகில், பேராசையுள்ள மனிதரால் இனிமேலும் விலங்குகள் அச்சுறுத்தப்பட மாட்டா என்பதால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம்! (ஏசாயா 11:6-9) வேகத்தில் தலைசிறந்ததாக விளங்கும், மகத்தாக வடிவமைக்கப்பட்ட இந்தச் சீட்டாவைக் காணும் சிலாக்கியத்தை நீங்கள் ஒருவேளை அந்தச் சமயத்தில் கொண்டிருக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்