உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 6/22 பக். 24
  • ஆல்பட்ராஸின் எதிர்காலம் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆல்பட்ராஸின் எதிர்காலம் என்ன?
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • எங்கிருந்தோ வந்த அந்தப் பெரிய வெண்பறவை
    விழித்தெழு!—1998
  • வனவிலங்குகளை கண்காணித்தல்
    விழித்தெழு!—2002
  • பெருங்கடலின் அருஞ்சுவை வீரர்கள்
    விழித்தெழு!—1999
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 6/22 பக். 24

ஆல்பட்ராஸின் எதிர்காலம் என்ன?

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்

உலகின் மிகப்பெரிய கடற்பறவையான ஆல்பட்ராஸின் எதிர்காலம் என்ன? “அவ்வளவு பிரகாசமாக இல்லை” என்று லண்டனின் த டைம்ஸ் அறிவிக்கிறது. அவை பத்தாயிரக்கணக்கில்—ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஏறக்குறைய 44,000 என்று கணிக்கின்றனர்—ஒவ்வொரு வருடமும் கொல்லப்படுகின்றன. உண்மையில், மூன்று மீட்டர் நீளமான அழகிய சிறகுகளையுடைய பறந்துதிரியும் ஆல்பட்ராஸ், சீக்கிரத்தில் இல்லாமற்போகும் என்று சில அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஆல்பட்ராஸ்கள் பறக்கத் தயாரான பிறகு, அவை தொடர்ச்சியாக ஏழு வருடங்களைக் கடலிலேயே, பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் உயரப்பறந்தும் காற்றில் மிதந்தும் பறக்கும்போதே தூங்கிக்கொண்டும் கழிக்கின்றன. குஞ்சுபொரிப்பதற்காக தாங்கள் பிறந்த இடத்திற்கு திரும்புவதற்கு முன் அந்தப் பறவைகள், பூமியை பல தடவை வலம் வருகின்றன என்று சிலர் நம்புகின்றனர்.

ஆல்பட்ராஸ்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஒரு குஞ்சு மாத்திரம் பொரித்து வளர்க்கின்றன. ஆனால் கடந்த 20 வருடங்களில், தென் அட்லாண்டிக்கிலுள்ள தென் ஜார்ஜியாவிலும், இந்தியப் பெருங்கடலில் உள்ள க்ரோஸெட் தீவுகளிலும், அலைந்துதிரியும் ஆல்பட்ராஸின் எண்ணிக்கை ஏறக்குறைய பாதியாகக் குறைந்திருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று சிலர் நினைக்கின்றனர்? நூற்றுக்கணக்கான கொக்கிகளை உடைய நீளமான இழைகளைக் கொண்டு மீன்பிடித்தலே.

நீலத்துடுப்பு சூரைமீனைப் பிடிப்பதற்கு, நூற்றுக்கணக்கான பெரிய கொக்கிகளையுடைய பல நீளமான இழைகளை (longlines), மீனவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த இழைகள் படகின் பின்பகுதியிலிருந்து தண்ணீரில் இறக்கிவிடப்படுகின்றன. ஒவ்வொரு கொக்கியிலும் இறையாக ஒரு ஊசிக்கணவா—ஆல்பட்ராஸின் முக்கிய உணவு—வைக்கப்பட்டிருக்கும். ஊசிக்கணவாவை பிடிப்பதற்காக ஆல்பட்ராஸ் வரும்போது, சில சமயங்களில் அது கொக்கியையும் சேர்த்து விழுங்கிவிடுகிறது. மாட்டிக்கொண்ட ஆல்பட்ராஸ் கனமான கொக்கியோடு சேர்ந்து மூழ்கி இறந்துபோகிறது.

ஆல்பட்ராஸைப் பாதுகாக்க, நீலத்துடுப்பு சூரைமீனைப் பிடிக்கும் சில மீனவர்கள் இரவு நேரங்களில் தங்கள் இழைகளைப் போடும்படி வெற்றிகரமாக உற்சாகப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். ஏனென்றால், இரவில் இந்தப் பறவைகள் மீன்பிடிப்பதில்லை. மேலுமாக, மீனவர்கள் ஆல்பட்ராஸ் இரையைப் பார்க்கமுடியாதபடி தங்கள் படகுகளுக்குக் கீழிருந்து இழைகளை விடுவதற்கான வழிகளையும் தேடிவருகின்றனர். பயன்படுத்தப்பட்டிருக்கும் மற்ற வழிமுறைகளாவன, வேகமாக மூழ்கிவிடும் கனமாக்கப்பட்ட இழைகளைப் பயன்படுத்துவது, அந்தப் பறவைகளை பயமுறுத்துவதற்காக சில கருவிகளைப் பயன்படுத்துவது ஆகியவையே.

தென் அட்லாண்டிக்கின் ஆழ்கடலிலோ, மீன்பிடிப்புப் படகுகள் உபயோகிக்கும் முறைகள் கவனமாக கண்காணிக்கப்படுவதில்லை. நியூ ஜீலாந்து அருங்காட்சியகத்தைச் சேர்ந்த கடற்பறவை நிபுணரான சான்டி பார்டலின்படி, அங்குள்ள படகுகள், “ஆல்பட்ராஸ்கள் கொல்லப்படுவதைத் தடுக்க ஒன்றும் செய்வதில்லை.” உண்மையில், கம்பீரமான ஆல்பட்ராஸுக்கு வரக்கூடிய சாத்தியமான முடிவு, மனித கவனக்குறைவிற்கும் அக்கறையின்மைக்கும் ஒரு அத்தாட்சியாக விளங்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்