ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
வெனிஸுலாவில் தேவராஜ்ய விஸ்தரிப்பு
பல நாட்களாக கடுமையான வெயில் தொடர்ந்திருந்தது எல்லோரும் நிழலிலும் குளுகுளு அறையிலும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் வேளையாட்கள் கடுமையாக உழைப்பதைப் பார்த்து அந்த வழியாகப் போய்வந்த ஆட்கள் ஆச்சரியப்பட்டார்கள், படிப்படியாக, ஒரு புதிய கட்டிடம் உருவாக ஆரம்பித்தது. நான்கு மாடி கட்டிடத்தை அவர்கள் மூன்றரை மாதங்களில், கட்டிமுடித்தனர்—வெனிஸூலாவிலுள்ள லா விக்டோரியா காவற்கோபுர சங்கத்தின் கிளைக்காரியாலயத்திற்கு ஒரு புதிய இணைப்பு.
வெனிஸுலாவில் கிளைக்காரியாலயம் நிறுவப்பட்டு 1946-ம் ஆண்டு முதல் இது இரண்டாம்முறை விரிவடைந்திருக்கிறது. 1977-ல் அவர்களுடைய எண்ணிக்கை 13,000-க்கு உயர்ந்திருக்கிறது. அந்த வருடத்தில்தானே லா விக்டோரியாவில் ஒரு புதிய கிளைக் காரியாலய கட்டிடம் முடிக்கப்பட்டது. அது முதல், அந்த தேசத்திலுள்ள சாட்சிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்திருக்கிறது. மறுபடியும் அதிகரிப்புக்கான காலமாக இருந்தது.
இந்தப் புதிய கட்டிடம் 20, 000 அதிகமான சதுர அடிக்கும் (1,900 சதுர மீட்டர்) அதிகமான தரை பரப்பு கிளைக்காரியாலயத்தின் மொத்த தரைபரப்பிற்கு இரு மடங்கு அதிகமாகும் வலது கோடியிலுள்ள வாகன போக்குவரத்துக்கான பாதை 15 கார்கள் நிறுத்தி வைக்கப்படும் கூடத்திற்கு வழிநடத்துகிறது. 1977-ல் கட்டப்பட்ட கட்டிடத்திலிருந்து அச்சு பகுதி (நடுவே இருக்கும் பெரிய கட்டிடம்) புதிதாக சேர்க்கப்பட்டு அடிதளத்திற்கு மாற்றப்பட்டது. இங்கேதான் பராமரிப்பு மற்றும் அச்சு கூடங்களும், சில அலுவலகங்களும் இருக்கின்றன. புதிய கட்டிடத்தின் மற்ற பாகம் பெத்தேல் குடும்பத்தினர் தங்கும் அறைகளாக இருக்கின்றன.
இந்தப் புதிய கட்டிடத்தில் தண்ணீர் தொட்டிகளும் அவசர தேவைக்கான ஜெனரேட்டர்களும் இருக்கிறது. உலகத்தின் இந்தப் பாகத்தில் தண்ணீர் தட்டுப்பாடும், மின்சாரதட்டுப்பாடும் அதிகம். வெளிச்சத்தையும் காற்றையும் முழுவதுமாகபயன்படுத்திக்கொள்ள சலவைப் பகுதி கட்டிடத்தின் மேல் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஜனங்கள் புதிய கட்டிட வேலையைக் குறித்து என்ன நினைக்கின்றனர்? அழகான தோட்டம் இழக்கப்பட்டதே என்று சிலர் வருத்தப்பட்டாமலும் இந்தக் கட்டிடத்தின் தோற்றம் சுற்றுவட்டாரத்திற்கு மதிப்பைக் கூட்டியிருப்பதாகப் பலர் உணருகின்றனர் கட்டிட கலைஞர் ஒருவர் இந்தக்கட்டிடத்தை நேரில் பார்க்கவந்தபோது சகோதரர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “லா விக்டோரியாவிலேயே சிறந்த முறையில் அமைக்கப்பட்ட கட்டிடம்.” நகராண்மை பொறியாளரும் இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்தினார். அதிக மகிழ்ச்சியோடு குடிப்போகும் அனுமதியை வழங்கி, “இது போன்ற ஒரு கட்டிடத்திற்குக் குடிப்போகும் அனுமதியை வழங்குவது அதிக பெருமைக்குரிய ஒரு காரியம்,” என்றார்.
வெனிஸுலாவில் ஏப்ரல் 21, 1985 அன்று 15,802 பேர் ஒப்புக்கொடுத்தல் நிகழ்ச்சிக்கு கூடி வந்தபோதும், 39,059 பேர் இன்னும் வேறு ஐந்து பட்டணங்களில், தொலைப்பேசி இணைப்பின் மூலம் நிகழ்ச்சி நிரலை கேட்க கூடி வந்தபோதும், வெனிஸுலாவில் சாட்சிகள் பெருமகிழ்ச்சியடைந்தனர். ஆஜராயிருந்தவர்களின் எண்ணிக்கை அந்த தேசத்திலுள்ள பிரஸ்தாபிகளைவிட அதிகமாயிருந்தது. இந்த ஒழுங்குமுறையின் முடிவு வருவதற்கு முன்பாக ராஜ்ய நற்செய்தியை முழுமையாகப் பிரசங்கிப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்துவதற்கு உதவியை இந்த தெய்வீக ஏற்பாட்டிற்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாயும் பெருமகிழ்ச்சியடைந்தவர்களாயும் இருக்கிறார்கள்.—மத்தேயு 24:14. W86 2/1