ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
ஒரு தலைவர் தன் கருத்தை வெளிப்படக்கூறுகிறார்
இந்த உலகில் உயர்பதவியிலுள்ள ஆட்களில் சிலர், நேர்மையையும் நியாயத்தையும் நேசிக்கிறவர்களும் இந்தப் பண்புகளை ஆதரிப்பதற்காக வெளிப்பட பேசுகிறவர்களுமாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது உற்சாகமளிப்பதாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளின் வேலை தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு ஆப்பிரிக்க தேசத்திலுள்ள ஒரு தலைவர் இதற்கு உதாரணமாக இருக்கிறார். அறிக்கை நமக்கு விஷயத்தைச் சொல்லட்டும்:
“அண்மையில் வித்தியாசமான மதப்பிரிவுகள், கலப்பு விசுவாச மாநாடு ஒன்றை எங்கள் ஊரில் நடத்தினார்கள். இதில் கத்தோலிக்கர், பிரஸ்பிட்டேரியன் மற்றும் பெந்தெகோஸ்து சபையைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள். மாநாட்டின் முடிவான நிகழ்ச்சியில், மேதகவாளத் தலைவர் பேசும்படியாக அழைக்கப்பட்டிருந்தார். மற்ற காரியங்களோடு கூட, அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய நேர்மையையும் உயர்ந்த ஒழுக்க தராதரங்களையும் பின்பற்றும்படியாகவும், யெகோவாவின் சாட்சிகளைப் போல அனைவரும் இருந்தால், தேசத்தில் அமைதி இருக்கும் என்பதாகவும் அவர்களுக்குச் சொன்னபோது, இது கூடிவந்திருந்த அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தது.
“அடுத்த நாள், மாநாட்டில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருந்த சர்ச்சுகளிலுள்ள முக்கிய உறுப்பினர்கள் தலைவரின் அரண்மனைக்கு வந்து, அவருடைய உரையில், சாட்சிகளைப் புகழ்ந்து பேசியதற்காக அவேசமாக எதிர்ப்பு தெரிவித்து. அவர்கள் தேசத்தில் தடைசெய்யப்பட்டிருப்பதை அவர் அறிந்திருக்கிறாரா என்பதாகக் கேட்டார்கள். தலைவர் தனக்கு அது தெரியும் என்பதாக பதிலளித்து யெகோவாவின் சாட்சிகளிடம் தான் எந்தத்தவறையும் காண்பதில்லை என்பதாகச் சொன்னார். அவர் தொடர்ந்து சொன்னதாவது: ‘மேதகவாள தலைவரான நான் இத்தனை ஆண்டுகளிலிருந்து ஒருமுறைகூட மோசமான குற்றத்துக்காக ஒரு யெகோவாவின் சாட்சியும்கூட என்னுடைய வழக்குமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டதில்லை. மறுபட்சத்தில் என்னுடைய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு திருடப்பட்டதென்றால். அநேகமாக திருடன் ஒரு கத்தோலிக்கனாக இருக்கிறான். கொடிவள்ளி திருடப்பட்டதென்றால், பிரிஸ்பிட்டேரியன் பிரிவைச் சேர்ந்தவனே அதற்கு பொறுப்பாக இருக்கிறான். உங்களுடைய சர்ச்சின் உறுப்பினர்கள் கருச்சிதைவு செய்து என்னுடைய தேசத்தின் தூய்மையை கொடுத்துவிட்டிருக்கிறார்கள். ஆனாலும் இப்படிப்பட்ட குற்றங்களுக்காக ஒரு யெகோவாவின் சாட்சியும் கூட வழக்கு மன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது கிடையாது. கடவுளுடைய சட்டங்கள் இப்படிப்பட்ட பாவங்களைத் தடை செய்வதில்லையா அல்லது சர்ச்சுகள் இனிமேலும் கடவுளுடையச் சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லையா?’ என்று அவர் கேட்டார், மத குருமார்களிடம் இதற்கு பதில் இல்லை.
“பின்னால், மேதகவாளத் தலைவர் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கடவுளுடையப் பெயரும், மேதகவாளத் தலைவராக, யெகோவாவின் சாட்சிகளுக்காக. வெளிப்படையாக பேசின தன்னுடைய பெயரும் நிந்திக்கப்படாதபடிக்கு நல்லவிதமாக தங்களை நடத்திக்கொள்ள கவனமாயிருக்கும்படியாக அறிவுரைக் கூறினார்.”
இப்பொழுது அநேக புதியவர்கள் சத்தியத்துக்காக நிலைநிற்கை எடுத்துக் கொண்டிருப்பதை அறிக்கை குறிப்பிடுகிறது. ஒரு சாட்சி அண்மையில் அந்தப் பகுதியிலுள்ள மூன்றுத் தலைவர்களோடு தன்னால் ஒரு பைபிள் படிப்பை, ஆரம்பிக்க முடிந்திருப்பதைச் சொல்லுகிறார். இவர்களில் ஒருவர் மேதகவாளத் தலைவராக இருக்கிறார். மூவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்!
சத்தியத்தையும் நீதியையும் நேசித்து தம்முடைய ஊழியர்களின் சார்பாக பேசுகிறவர்களை யெகோவா தேவன் கவனிக்கிறார்.—மத்தேயு 10:42. (W87 10/1)