செய்திகளின் பேரில் உட்பார்வை
தவறான ராசி
“உங்களுடைய ராசி என்ன?” ஜோதிடர்களால் தயாரிக்கப்படும் “நட்சத்திர ராசி” அட்டவணைகளைப் பார்த்து அதன்படி வழிநடத்தப்படும் ஆட்களுக்கு அந்தக் கேள்வி மிக முக்கியமானதாகும். நட்சத்திரங்கள், கிரகங்கள், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் இராசி மண்டலத்தின் கிரகநிலை ஒருவரின் பிறப்பின் போது இருப்பவை நேரடியாக அந்த ஆளின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடியதாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இருந்தபோதிலும், லண்டனின் இன்டிபென்டன்ட் என்ற தினசரியின்படி ஜோதிடர்கள் மக்களுக்குத் தவறான ராசிகளைக் கொடுக்கின்றனர். ஜாதகங்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் “நட்சத்திர ராசி” அட்டவணை 2,000 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ஜோதிட “விதிகளை” அடிப்படையாக கொண்டவை.
இன்டிபென்டன்ட் இவ்வாறு சொல்லுகிறது: “இன்று புதிதாகப்பிறந்த பிள்ளையின் பெற்றோரிடம் அவனோ அல்லது அவளோ கடக ராசியில் இருப்பதாக ஒரு ஜோதிடர் சொல்லுவார்.” இருந்தபோதிலும் அறிக்கை தொடர்கிறது: “ஆனால் வானத்தில் சூரியனின் நிலையைப் பார்க்கும் போது சூரியன் உண்மையில் மிதுன ராசியில் இருப்பதை அவர்கள் காணக்கூடும்.” இதற்குக் காரணம் என்ன? வான சாஸ்திரிகள் இதை “சம இராப்பகலுள்ள முறையில் சுற்றுதல்” (Preccission of the equinoxes) என்று கூறுகின்றனர். பூமி அதன் அச்சில் கூற்றும்போது ஏற்படும் அசைவு வேகம் குறைவதற்கு முன் பொம்பரம் தற்றித்தடுமாறுவது போன்றதாயிருக்கிறது. இந்த அசைவு அல்லது “சுற்று” 25,800 ஆண்டுகளில் 360 கோண அளவு சுற்றை முடிக்கிறது. அதாவது இந்தச் சம இராப்பகல் ஒவ்வொரு ஆண்டும் 50 நொடி பரிதியைக் கடக்கிறது அல்லது 72 ஆண்டுகளில் ஒரு கோணம் நகர்கிறது. இவ்வாறு கடந்த 2,000 ஆண்டுகளில் சூரியனின் நிலை இராசி மண்டலத்தின் ஒரு முழு ராசியளவாக பின் சரிந்திருக்கிறது. இதன் விளைவாக “ஒருவரின் பிறப்பின் போது உள்ள ஜாதகமானது வான மண்டலத்தின் உண்மையான படத்தை பிறப்பின் சமயத்தில் பெறமுடியாது” என்று ரிச்சர்ட் F. ஸ்மித் தன்னுடைய புத்தகமாகிய “விஞ்ஞானத்திற்கு முகவுரை” (Prelude to Science) என்ற ஆங்கில புத்தகத்தில் விவரிக்கிறார். “இந்த பூமியில் சூரியன் துலாராசியிலிருக்கும்போது அநேகம்பேருக்கு விருச்சிக ராசியிலும், சிம்மராசியானது உண்மையில் கடகராசியாகவும், கடகராசியானது மிதுனராசியாகவும் இவ்வாறு மாறி மாறி இருக்கும்” என்று விவரிக்கிறார்.
இந்த நட்சத்திர அட்டவணைகளையும் மற்றும் ஜாகங்களையும் நம்பமுடியாது என்ற உண்மையானது ஞானமான முறையில் வழிநடத்துதலுக்கு சிருஷ்டிகரிடமாக நோக்க வேண்டியதை அழுத்திக் காட்டுகிறது. ஆனால் வழிநடத்துதலுக்கு அவரால் சிருஷ்டிக்கப்பட்ட காரியங்களை நோக்குவதற்கல்ல. (ரோமர் 1:24, 25) இருந்தபோதிலும், இவற்றைத் தவிர்ப்பதற்கு இதைக்காட்டிலும் மிகப்பெரிய காரணம், இந்த ஜாதகங்கள் நம்மை அவற்றிற்கு வணக்கத்தைச் செலுத்தும் நிலைக்குக் கொண்டு செல்லும் “சந்திர சூரியன் முதலான வான சேனைகளை” வணங்குதல் கடவுளால் கட்டளையிடப்படாத ஒன்று.—உபாகமம் 17:2-5.
தண்ணீர் இல்லை—ஜீவன் இல்லை
1965-76-ல் செவ்வாய் கிரகத்திற்கு மாரினர் (Mariner) மற்றும் வைக்கிங் (Viking) விண்வெளி கப்பல்களை அனுப்பின குழுவைச் சேர்ந்த பேராசிரியர் நார்மன் H. ஹோரோவிட்ஸ் என்பவரால் அடையப்பெற்ற தீர்மானமாக இது இருக்கிறது.
உட்டோப்பியாவுக்குச் சென்று திரும்புதல்: சூரிய மண்டலத்தில் ஜீவனைத் தேடுதல் (To Utopia and Back: The Search for Life in the Solar System) என்ற ஆங்கில நூலில் பேராசிரியர் ஹோரோவிட்ஸ் இந்த குழு மூலம் கண்டுபிடிக்கப்பட்டவைகளின் குறிப்பு செவ்வாய் கிரகத்திலோ அல்லது சூரிய மண்டலத்தின் மற்ற எந்தக் கிரகத்திலோ ஜீவன்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலைத் தீர்மானிக்கிறது. “செவ்வாய் கிரகத்தில், நம்முடைய சொந்த கிரகத்தில் இருக்கும் அசாதாரண சுற்றுப்புறச் சூழலைக் கொண்ட நிலை, சூரியனின் முழுத்தோற்றத்தையும் பெறும் நிலையில் உள்ள தண்ணீரைக் கொண்ட சமுத்திரங்கள் இல்லை,” என்று கூறுகிறார். செவ்வாய்க் கிரகம் தண்ணீரற்றதாயிருக்கிறது என்று இந்த ஆராய்சி உறுதிப்படுத்தினது.
கவனமான ஆராய்ச்சிக்குப் பின் செவ்வாய் கிரகத்தில் ஜீவனிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்ற பிறகு ஹோரோவிட்ஸ் கூறுகிறார்: “செவ்வாய் கிரகத்தில் ஜீவன்கள் இல்லை என்ற கண்டுபிடிப்பு தோல்வியடைந்துவிட்டது ஒரு ஏமாற்றமே ஆனால் இது ஒரு வெளிப்படுத்துதலும் கூட, சூரிய மண்டலத்தில் அதிகப்படியான வசிக்கும் நிச்சயத்தை செவ்வாய்க்கிரகம் அளித்தது. ஆனால் இப்பொழுது நம்முடைய பால்வீதிமண்டலத்தில் பூமி மட்டுமே ஜீவன்களை கொண்டிருக்கும் ஒரு கிரகமாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.”
பூர்வ தீர்க்கதரிசியாகிய ஏசாயா இந்தப் பூமியைப்பற்றி இதன் சிருஷ்டிகர் இதைக் “குடியிருப்புக்காக செய்து படைத்தார்” என்று குறிப்பிட்டெழுதியிருப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! (ஏசாயா 45:18) பைபிளில் சிருஷ்டிப்பின் காரியங்களைப் பற்றி ஆதியில் கூறும்போது தண்ணீரைப் பற்றியும் சொல்லப்படுகிறது. தெளிவாகவே, பூமிக்குரிய எந்த ஒரு சிருஷ்டியும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன் தண்ணீர் இருக்கும்படி ஏற்பாடு செய்வது அத்தியாவசியமாக இருந்தது. செவ்வாய் கிரகத்திற்கான குழு தீர்மானித்தபடி: ஆவி மண்டலத்தைத் தவிர, விண்வெளியில் வேறே எங்கேயும் உயிர் இருக்கமுடியாது.—ஆதியாகமம் 1:1-10. (w88 1⁄15)
[பக்கம் 7-ன் படம்]
செவ்வாய் கிரகத்தில் ஜீவனில்லாத நிலப்பகுதி, “வைக்கிங் II” விண்வெளி விமானத்தின் மூலம் பெறப்பட்டது
[படத்திற்கான நன்றி]
NASA photo