“பேராசையின் சகாப்தம்”
மனிதன் சாதாரண ஜலதோஷத்தையே முற்றிலும் நீக்கிடுவது கடினமாயிருக்கும்போது, அதைவிட அதிக சிக்கலான ஒரு நோயாக இருக்கும் பேராசையை முற்றிலும் நீக்கிவிடுவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?
பேராசையும் தன்னலமும் கற்றுக்கொள்ளப்படக்கூட வேண்டியதாயில்லை—அது சிறுபிராயம் முதல் இருப்பதாய்த் தெரிகிறது. இரண்டு சின்னஞ்சிறுசுகள் தங்களுடைய விளையாட்டுச் சாமான்களோடு விளையாடும்போது அதை நீங்கள் காணக்கூடும்.
தனிப்பட்ட நபர்கள் பேராசையுள்ளவர்களாயிருப்பது சாதாரண காரியம் என்றாலும், மோசமான காரியமுங்கூட, ஆனால் தேசிய அல்லது சர்வதேசிய பேராசையைக் கவனிக்கையில், அதனால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, சர்வதேசிய மருந்து வியாபாரத்தைக் கவனியுங்கள். இதுதான் உலகின் மிகப்பெரிய வியாபாரம்—வருடத்திற்கு 3 கோடி டாலர்—என்று ஒரு ஸ்பானிய மொழி பத்திரிகை கூறுகிறது. இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாழாக்கப்படுகிறது, மருந்துகளின் துர்ப்பிரயோகம் ஏராளமானவர்களின் அகால மரணத்திற்குக் காரணமாயிருக்கிறது. இதற்குக் காரணமாயிருக்கும் மருந்து வியாபாரத்தின் எச்சரிப்புக்குரிய பெருக்கத்திற்குக் காரணம் என்ன? சந்தேகமின்றி, பேராசைத்தான்.
உவர்ல்டு பிரஸ் ரிவ்யு இந்தப் பேராசை எண்ணத்திற்குக் கவனத்தைத் திருப்புகிறது. அது கேம்பியோ 16 என்ற மாட்ரிட் செய்திப் பத்திரிகையை மேற்கோள் காட்டுகிறது. “மருந்து விற்பனையில் 10 முதல் 20 சதவீத இலாபம்தானே அவற்றை உற்பத்திச் செய்யும் நாடுகளுக்குக் கிடைக்கிறது. ஆய்வுக்கூடங்கள், போக்குவரத்து, மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றில் மறுமுதலீடு செய்வதன் மூலம் மற்றொரு 10 சதவீதம் இவ்வாணிக இணைப்பில் திருப்பப்படுகிறது. . . . எஞ்சிய இலாபம் மருந்துகளை வாங்கும் நாடுகளிலும் உலக வங்கி முறையின் வரிக் காப்பகப் பிரிவுகளிலும் சேர்ந்துவிடுகிறது.”
தேவையே பேராசைக்குக் காரணம், பேராசை, வறுமையிலுள்ளவர்களில் அல்லது வாய்ப்பிழந்தவர்களில் காணப்படும் பண்பு என்ற கருத்தை இது தவறெனக் காண்பிக்கிறது. தெளிவாகவே, பேராசை உண்மையிலேயே தேவையிலில்லாதவர்களும் அடங்கிய முழு சமுதாயத்தையும் உட்படுத்துகிற எங்கும் பரம்பியிருக்கும் ஒரு மனித குறைபாடாகும். பேராசையின் ஒரு விநோதமான தன்மை என்னவென்றால், தங்களுடைய வாழ்வுக்காக இருப்பவற்றில் பொதுவாய்த் திருப்தியாயிருப்பவர்களுங்கூட, எதிர்பாராத சந்தர்ப்பம் அளிக்கப்படும்போது, பேராசையை வெளிப்படுத்திடுவர்.
எழுத்தாசிரியர் மெக் கிரீன்ஃபீல்டு இப்படியாகப் புலம்புகிறார்: “எந்த ஒரு நாளாயிருந்தாலுஞ்சரி, நீங்கள் தினசரியைத் திறந்து பார்ப்பீர்களானால், மகா சான்றாயர்கள் குறித்தும், விசேஷ குற்ற வழக்கு நடத்துவோர் குறித்தும், கேள்விக்குரிய அழைப்புகளும், பரபரப்புகளும், சூழ்ச்சிக்கிரையாகி தோல்வியுறுதலும் போன்ற காரியங்கள் குறித்தும் நீங்கள் வாசிக்கிறீர்கள், இது அதிக சோர்வை ஏற்படுத்துகிறது. கொண்டுவரப்படும் சில குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, சில அளவுக்கு மிஞ்சி பெரிதுபடுத்தப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொண்டாலும், மக்கள் அனுமதிக்கப்படக்கூடாத காரியங்களை மீண்டும் மீண்டும் செய்யவும், தப்பிடவும் அனுமதிக்கப்பட்டார்கள் என்பது எனக்குத் தெளிவாகிறது. . . . இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்: நம்முடைய பொதுநலன் அக்கறையுங்கூட பேரளவில் சுயநலமாகவும், பேராசை கொண்டதாகவும் இருக்கிறது.”
எந்தளவுக்குப் பரவியிருக்கிறது?
பேராசை இந்த 20-வது நூற்றாண்டு அழுத்தங்களினால் உச்சத்தை எட்டிவிட்டிருப்பினும், இது மனிதவர்க்கத்திற்குப் புதியதோர் காரியமல்ல. இது அந்தளவுக்குப் பரவியிருப்பதால், கிறிஸ்தவ நூற்றாண்டு என்ற பத்திரிகையில் தலையங்கக் கட்டுரை, “கவலைகளின் சகாப்தம்” என்று 1950-களின் பத்தாண்டுகளும் “நான் என்ற பத்தாண்டுகள்” என்று 1970-களும் குறிப்பிடப்பட்டதற்கேற்ப 1980-களுக்கு ஒரு பெயரை வழங்கியது. 1980-களை அது “பேராசையின் சகாப்தம்” என்று அழைக்கிறது!
இன்று மக்கள் கூடிவரும் எல்லா இடங்களிலுமே—வேலை செய்யும் இடங்களில், பள்ளிகளில், மற்றும் சமுதாயத்தில் பேராசையைக் காணலாம். அதன் மோசமான செல்வாக்கை வர்த்தகத்திலும், அரசியலிலும், உலகத்தின் முக்கிய மதங்களிலும் செலுத்தியிருக்கிறது.
அநேக சமயங்களில் பேராசை சட்டவிரோதமான ஊழல் அல்லது மோசடியாக வளர்ந்துவிடுகிறது. உதாரணமாக, கார் ஈட்டுறுதி மோசடியில் உலகை வழிநடத்தியிருக்கும் ஐயப்பாட்டுக்குரிய கனத்தைக் கேன்பரா டைம்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு அளித்திருக்கிறது. இந்தக் காரியத்தை ஆஸ்திரேலியாவின் சட்டம் சங்க பத்திரிகை ஆதரிப்பதாய்த் தெரிகிறது. அது சொல்வதாவது: “ஈட்டுறுதிச் செய்துகொண்ட ஆட்களின் பொய்க் கோரிக்கைகள் ஈட்டுறுதி நிறுவனங்களுக்கும் மறைமுகமாக ஈட்டுறுதிச் செய்துகொண்ட ஆட்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான டாலர் செலவை உட்படுத்துகிறது.” “இது அதிகரித்துக்கொண்டிருக்கும் கவலைக்கிடமான பிரச்னை, விசேஷமாக தீக்கு இறையாகும் காரியங்கள், கப்பல்துறை மேடைக் கட்டணக் கொள்ளை, வாகனங்கள் மற்றும் வீட்டுச் சாமான்கள் ஈட்டுறுதியில் இப்படியிருக்கிறது” என்று மேலுமாக பத்திரிகை குறிப்பிடுகிறது.
எனவே பேராசை முழுவதுமாக நீக்கப்படும் என்ற எண்ணத்தை ஏன் அநேகர் எள்ளி நகைக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் எளிதாயிருக்கிறது. ஏன், பேராசை எப்பொழுதுமே நம்மோடுத்தான் இருக்கும், பேராசையற்ற ஓர் உலகம் சாத்தியமாயிராத ஒரு கனவு என்று அவர்கள் கருதுகின்றனர்.
பேராசை முற்றிலும் நீக்கப்படும்
சாத்தியமற்றதாய்த் தொனிக்கும் இந்தப் பலமான உரிமைப்பாராட்டலுக்கு என்ன அடிப்படை இருக்கிறது? பேராசை இல்லாத வாழ்க்கை இப்பொழுதே சாதிக்கப்பட்டுவருகிறது என்ற உண்மையில் சார்ந்ததாயிருக்கிறது. இந்தச் சாதனை பூரணமாயில்லாதபோதிலும், சரியான கல்வி மற்றும் ஊக்கத்தால் என்ன நிறைவேற்றப்படலாம் என்பதை இது காட்டுகிறது. பேராசையில்லாத ஒரு முழு உலகம் எப்படி சாத்தியமாகும் என்பதை அடுத்த கட்டுரை காண்பிக்கும். (w90 2/15)