ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
இந்தியாவில் தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தல்
ராஜ்யத்தின் நற்செய்தி இந்தியாவில் 11,524 மகிழ்ச்சியுள்ள சாட்சிகளால் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. (மத்தேயு 24:14) 1991 ஊழிய ஆண்டின் போது முழுக்காட்டப்பட்ட 1,066 பேர் ராஜ்ய பிரஸ்தாபிகளாக தங்கள் வெளிச்சத்தை மற்றவர்களுக்குப் பிரகாசிக்கச் செய்துவருகிறார்கள். கிறிஸ்துவின் மரண ஞாபகார்த்த ஆசரிப்புக்கு 28,866 பேர் ஆஜராயிருப்பதைக் காண அனைவரும் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தனர்!
◻ அநேகர் ராஜ்ய நம்பிக்கையைக் குறித்து முறைப்படி அமையாத சாட்சிகொடுத்தலின் மூலம் கேள்விப்படுகிறார்கள். உதாரணமாக, சாட்சி ஒருவர் தச்சர்களாக இருந்த தன் சகவேலையாட்களிடம் ராஜ்யத்தைப் பற்றி பேசினார். சகவேலையாள் ஒருவர் செவிசாய்த்துத் தன்னுடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் தன்னுடைய வெளிச்சம் பிரகாசிக்கும்படி செய்ய ஆரம்பித்தார். இவர்கள் சந்தோஷத்தோடே இந்த அதிசயமான ராஜ்ய செய்தியை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். அறிக்கைகளின்படி, ஒரு சில ஆண்டுகளுக்குள், ‘30க்கும் மேற்பட்டவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.’ யெகோவா இவரையும் இவருடைய புதிய ஆவிக்குரிய சகோதரர்களையும் தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்ததற்காக ஆசீர்வதித்தார்.
◻ மற்றொரு சபையிலிருந்த ஓர் இளம் சகோதரர் பள்ளியில் தன் உடன் மாணவர்களுக்கு முறைப்படி அமையாத சாட்சி கொடுப்பதன் மூலம் தன் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தார். அவர்களில் சிலர் ராஜ்ய நம்பிக்கையில் அக்கறையுள்ளவர்களாக இருந்தனர், அடிக்கடி அவர் பைபிளை அவர்களுக்கு நள்ளிரவுக்கு பின்பும்கூட விளக்கியிருக்கிறார். கத்தோலிக்கனான இருந்த ஒருவர், சாட்சிகளோடு தொடர்ந்து கூட்டுறவுக் கொண்டால் கடுமையான விளைவுகளை எதிர்ப்பட வேண்டியிருக்கும் என்பதாக ஒரு பாதிரி கொடுத்த எச்சரிப்பையும் பொருட்படுத்தாது சத்தியத்துக்காக உறுதியான ஒரு நிலைநிற்கையை எடுத்தார். என்றபோதிலும், அந்த மாணவன் தான் சாட்சிகளிடமிருந்து பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டிருப்பதை உறுதியாக நம்பினார், தொடர்ந்து அறிவை எடுத்துக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் முழுக்காட்டப்பட்டு இப்பொழுது சபையில் ஓர் உதவி ஊழியராக பணியாற்றி வருகிறார். சத்தியத்தின் அதிசயமான வெளிச்சத்தின் மூலமாக வரும் நம்பிக்கையில் அவர் களிகூருகிறார்!—ரோமர் 12:12.
◻ இந்த இளம் மாணவருக்குச் செவிசாய்த்த மற்றொருவர் மிகப்பிரபலமான மாணவராக, கடவுளை நம்புவதாகச் சொல்கிறவர்களை வழக்கமாக பரிகாசம் செய்துவந்த ஒரு நாத்திகராக இருந்தார். ஆனால் ஒரு நாள் கலந்தாலோசிப்பில் சேர்ந்துகொண்டு இவர் அநேக கேள்விகளைக் கேட்டார். தன்னுடைய எல்லா கேள்விகளுக்கும் நியாயமான பதில்களை அவர் பெற்றுக்கொண்ட போது அவர் ஆச்சரியமடைந்து, பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான் என்ற முடிவுக்கு வந்தார். அவர் பைபிள் அறிவில் முன்னேறி கடைசியாக முழுக்காட்டுதல் பெற்றார். இந்துவாக இருந்த அவருடைய தந்தை வீட்டைவிட்டு அவரை வெளியேற்றும் அளவுக்கு அவரை எதிர்த்தார். என்றபோதிலும், இவருடைய மாம்சப்பிரகாரமான இரண்டு சகோதரர்களும் இரண்டு நண்பர்களும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்ற போது சத்தியத்துக்காக இந்த இளம் மனிதன் எடுத்த உறுதியான நிலைநிற்கைக்குப் பலன் கிடைத்தது. அவருடைய சகோதரர்களில் ஒருவர் இப்பொழுது இந்தியாவில் கிளைக்காரியாலயத்தில் சேவித்து வருகிறார்.
◻ மாணவர் அமைப்பாளர் ஒருவரும்கூட இளம் சாட்சியோடு கலந்தாலோசிப்பில் சேர்ந்துகொண்டார். அவர் ஓயாது புகைத்துக்கொண்டும் அதிகமாக குடித்துக்கொண்டும் இருந்தவர். ஒரு சமயம், சாட்சிகளிடமிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொண்ட இரண்டு சக மாணவர்களை அடிக்க விரும்பியிருக்கிறார். சத்தியத்தை ஏற்றுக்கொண்டதன் காரணமாக, அவர்கள் கல்லூரி வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளவும், மேலும் மாணவர் அமைப்பாளர் தலைமையில் நடைபெற்ற இரத்தம்-சேகரிப்பு நிகழ்ச்சியின்போது இரத்ததானம் செய்யவும் மறுத்திருக்கிறார்கள். இந்த இளம் மனிதன் இப்போது யெகோவாவுக்கு ஒளி-கொண்டு செல்லும் ஒரு சாட்சியாக இருப்பதில் மகிழ்ச்சியைக் காண்கிறார்.
◻ மொத்தத்தில், முதலில் தன் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்த மாணவன் முறைப்படி அமையாத சாட்சிகொடுத்தலின் மூலமாக தன் சகாக்களில் 15 பேர் ஒப்புக்கொடுக்கவும் முழுக்காட்டப்படவும் உதவி செய்வதில் கருவியாக இருந்திருக்கிறார்.
அந்த மிகப்பெரிய தேசத்திலுள்ள அநேகர் கடவுளின் புதிய உலகைப் பற்றிய பைபிளின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு யெகோவா தேவன் அவருடைய ராஜ்யத்தின் கீழ் என்றுமாக வாழ்வதற்குக் கூட்டிச்சேர்த்துவரும் உலகளாவிய சகோதரத்துவத்தைச் சேர்ந்துகொள்வதைக் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.