வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
போஜனம் சாப்பிடுங்கள் ரொட்டி சாப்பிடுங்கள்
ஒரு சமயத்தில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒரு வீட்டில் இருக்கையில், ஜனக்கூட்டத்தின் காரணமாக, “அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லா”திருந்தனர். (மாற்கு 3:20) இன்னொரு சமயத்தில் இயேசு “போஜனம் பண்ணும்படிக்கு” ஒரு பரிசேயனுடைய வீட்டுக்கு சென்றிருந்தார். (லூக்கா 14:1) எவ்வகையான ஒரு போஜனம் உங்கள் நினைவுக்கு வருகிறது?
“போஜனம் பண்ணு” என்பதற்கு உரிய எபிரெய மற்றும் கிரேக்கச் சொற்றொடர்கள், “ரொட்டியை சாப்பிடு” என்ற நேர்பொருளை கொடுத்ததால் பூர்வ இஸ்ரவேலர் ஒருவேளை ரொட்டியை நினைத்திருக்கக்கூடும். கோதுமை அல்லது வாற்கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டி அவர்களுடைய உணவு பழக்கத்தில் முக்கிய ஆகாரமாக இருந்ததால் இது புரிந்துகொள்ளத்தக்கதே.
இன்றுள்ள அநேகர் எபிரெய முற்பிதாக்களை மேய்ப்பர்களாகவும் இயேசுவுடைய சீஷர்களை மீனவர்களாகவும் நினைக்கிறார்கள். சிலர் அப்படி வாழ்ந்துவந்தனர், ஆனால் எல்லாரும் உண்மையில் அப்படி இல்லை. அநேகருக்கு கோதுமை வாழ்க்கையில் முக்கிய ஆகாரமாக இருந்தது. ஈசாக்கு, யாக்கோபுடைய விஷயத்தில் சிலசமயங்களில் இப்படி இருந்தது என்று ஆதியாகமம் 26:12; 27:37; மற்றும் 37:7 போன்ற வசனங்களிலிருந்து நாம் முடிவுக்கு வரலாம். இயேசுவின் காலத்தில் கலிலேயாவிலே விவசாயம் செய்வது ஒரு முக்கியமான தொழிலாக இருந்ததால், அப்போஸ்தலராக ஆனவர்களில் சிலர் கோதுமை விவசாயிகளாக இருந்திருக்கக்கூடுமா?
இருந்திருக்கலாம், ஏனெனில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் கோதுமை விளைவிப்பது பரவலாக இருந்தது. இதற்கு பைபிள்பூர்வ ஆதாரக் குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. (உபாகமம் 8:7-9; 1 சாமுவேல் 6:13) என்ன உட்பட்டிருந்தது?
அக்டோபரிலும் நவம்பரிலும் வரும் தொடக்கக்கால மழை நிலத்தை பதப்படுத்திய பின்னர், கோதுமை விளைவிக்கும் விவசாயி உழுது, பின்பு தன் விதையை விதைப்பான். பின்னர் வரும் மழை, அவனுடைய பயிரை வளரச்செய்து பின்னர் ஏப்ரல் மே மாத கோடைகால வெப்பத்திற்கு முன்னர் அதை பொன்னும்-பழுப்பும் கலந்த நிறமாக பக்குவ நிலையையடையச் செய்கிறது. கோதுமை அறுவடை மிக நன்றாக அறியப்பட்டிருந்த அளவுக்கு இருந்ததால் அது ஒரு பருவகாலத்தையே சுட்டிக்காட்டியதாக நீங்கள் வாசிப்பீர்கள். (ஆதியாகமம் 30:14; நியாயாதிபதிகள் 15:1) இடது பக்கத்திலுள்ள புகைப்படம் அந்த ஆண்டில் எப்போது எடுக்கப்பட்டது என்பதை உங்களால் தீர்மானிக்க முடியுமா?a மேலும் இயேசுவின் சீஷர்கள் சில பச்சையான, பயிர்களைப் பறித்தெடுத்த காலம் எதுவாக இருந்தது?—மத்தேயு 12:1.
கோதுமையை அறுவடை செய்வது விவசாயிகளுக்கு அதிக வேலையை உட்படுத்தியது. அறுவடைக்காரர்கள், நீங்கள் கீழே காண்கிறபடி, அரிகளை ஓர் அரிவாளால் அறுத்து, அரிக்கட்டுகளாக செய்வார்கள். சில அரிகள் பார்க்காமல் விடப்பட்டோ அரிக்கட்டுகளிலிருந்து சிந்தப்பட்டோ போகலாம் என்பது உண்மைதான். இதனால்தான் ரூத்திற்கு இந்த பொறுக்கும் வேலையை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. (ரூத் 2:2, 7, 23; மாற்கு 4:28, 29) இந்தக் கோதுமை அரிகள் அடுத்து அர்வனாவின் களத்தைப் போல ஒரு போரடிக்கும் களத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு என்ன நடந்தது? “போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும்” பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (2 சாமுவேல் 24:18-22; 1 நாளாகமம் 21:23) கோதுமை அரிகள் கல் அல்லது மண்ணாலான தட்டையான மேற்பரப்பில் பரப்பி வைக்கப்பட்டது. ஒரு காளையோ வேறொரு மிருகமோ கோதுமையை மிதித்தவாறு சுற்றி சுற்றி வரும். அந்த மிருகம் அரிதாளை உடைத்து தாளை வெளியே எடுப்பதற்கு உதவியாக ஒரு மர நுகத்தை இழுத்துக்கொண்டிருக்கும்.—ஏசாயா 41:15.
பின்னர் புடைப்பதற்கு அது தயாராயிருக்கிறது, மண்வாரியைக்கொண்டோ கவையைக்கொண்டோ மேலே காண்கிற பிரகாரம் காற்றில் தூற்றப்படுவதன் மூலம் அது செய்யப்படுகிறது. (மத்தேயு 3:12) விவசாயி மாலையிலே புடைப்பான், அப்போது காற்று பதரை பறக்கடித்து (தாளிலிருந்து உமிகளை எடுப்பது) அரிதாளை ஒரு பக்கமாக சேர்க்கும். தானியத்திலிருக்கக்கூடிய எல்லா கூழாங்கல்லையும் நீக்குவதற்கு தானியம் சேர்க்கப்பட்டு, சலித்தெடுக்கப்பட்டவுடன், அது சேர்த்துவைக்கப்படுவதற்கு தயாராயிருந்தது—அல்லது மிக முக்கியமான உணவாக மாற்ற, ரொட்டியாக மாற்ற தயாராயிருந்தது.—மத்தேயு 6:11.
அந்த வேலையைச் செய்யக்கூடிய வீட்டு மனைவியாக நீங்கள் இருந்தீரானால், அந்தத் தானியத்தை மாவாக அரைப்பதற்கு, ஒருவேளை ஓரளவு சுரசுரப்பான கோதுமைமாவாக அரைப்பதற்கு ஓர் உரலையும் குழவியையும் ஒவ்வொரு நாளும் நீங்கள் உபயோகிப்பீர்கள், அல்லது, மாம்ச உருவெடுத்து வந்த தூதர்களுக்கு “அப்ப”தை உண்டாக்க சாராள் பயன்படுத்தியதும் அல்லது யெகோவாவுக்கு போஜனபலிகளை அளிக்க இஸ்ரவேலர்கள் உபயோகித்ததுமான “மெல்லிய மா”வை நீங்கள் அரைத்துகொள்வீர்கள் (ஆதியாகமம் 18:6; யாத்திராகமம் 29:2; லேவியராகமம் 2:1-5; எண்ணாகமம் 28:12) சாராள் கோதுமை மாவோடு தண்ணீரைக் கலந்து நனைத்து மாவைப் பிசைந்தாள்.
கீழே, மாவு உருண்டைகளும், ஒரு தட்டையான, மெல்லிய ரொட்டித்துண்டு பரப்பிவைக்கப்பட்டு சுடுவதற்கு காத்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்தப் பெண் செய்வதுபோல, இப்படிப்பட்ட பெரிய அப்பங்கள் கல்களிலோ இரும்புக் கல்களிலோ சுடப்படும். அடுத்து சாராள், பார்க்கவந்திருந்த தூதர்களுக்கு என்ன செய்தாள் மேலும் அதற்கு பின்னர் லோத்தின் குடும்பத்தினர் என்ன செய்தனர் என்பதை கற்பனை செய்து பார்க்க இது உங்களுக்கு உதவுகிறதா? நாம் வாசிக்கிறோம்: “[தூதர்கள்] அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள், அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.”—ஆதியாகமம் 19:3.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டி, 1992, ஒப்பிட்டுப் பார்க்கவும்.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Garo Nalbandian