உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 12/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • இதே தகவல்
  • அதிர்ஷ்ட மந்திரப் பொருட்கள் உங்களைப் பாதுகாக்க முடியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • தவறை ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • உண்மையான பாதுகாப்பு கூடியகாரியமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • ‘நீடிய பொறுமையைத் தரித்துக்கொள்ளுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 12/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அண்மையில் வெளியான காவற்கோபுரம் இதழ்களைப் படிப்பதில் போற்றுதல் உணர்வைக் காண்பித்தீர்களா? அப்படியானால் பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கொடுக்க முடியுமா என்று ஆராய்ந்துபாருங்கள்:

◻நோயுற்றவர்களும் முதிர்வயதினருக்கும் என்ன நடைமுறையான உதவி இன்று சபையில் கொடுக்கப்படலாம்?

ஆரம்பக் கிறிஸ்தவச் சபையில், பொருளாதார உதவி தேவைப்பட்ட விதவைகளின் பட்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. (1 தீமோத்தேயு 5:9, 10) அதைப்போலவே இன்று, மூப்பர்கள் விசேஷித்த கவனம் தேவைப்படும் நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் ஆகியோரின் பட்டியலைப் போடலாம். எனினும், இதைப் பற்றி, மூப்பர்கள் மட்டுமே அக்கறைகொள்ளவேண்டும் என்று விட்டுவிடக்கூடாது. இப்படிப்பட்ட தேவைகளைக் குறித்து சபையில் உள்ள அனைவரும் அறிந்திருப்பது அவசியம். (1 தீமோத்தேயு 5:4-8)—8/15, பக்கங்கள் 28-9.

◻கடல்வாழ் விலங்கு ஒன்றினால் விழுங்கப்பட்ட யோனாவைப் பற்றிய பைபிள் கதை நம்பமுடியாததா?

இல்லை, ஸ்பெர்ம் திமிங்கலமோ ஒரு மிகப்பெரிய வெள்ளை சுறாவோ திமிங்கலச் சுறாவோ ஒரு மனிதனை விழுங்கக்கூடும். மேலும், யோனாவின் பதிவு உண்மை என்று இயேசுதாமே உறுதிப்படுத்தினார். (மத்தேயு 12:39, 40)—8/15, பக்கம் 32.

◻தாயத்துகளையும் மந்திரப்பொருட்களையும் பயன்படுத்துவதினால் என்ன பாதிப்பு உண்டாகிறது?

அவற்றைப் பயன்படுத்துவது, மக்கள் தங்களுடைய பிரச்னைகளைப் புத்தியுடன் கையாளுவதிலிருந்து உண்மையில் தடுத்து, எல்லாவற்றையும் குணப்படுத்தும் ஒன்றாக அதிர்ஷ்டத்தை நோக்கி இருக்கும்படி உற்சாகப்படுத்துகிறது. அவை பயன்படுத்துபவருக்கு ஒரு பொய்யான பாதுகாப்புணர்ச்சியையும் கொடுக்கின்றன. மிக முக்கியமாக, மந்திர தாயத்துகள் மற்றும் அதிர்ஷ்ட மந்திரப் பொருட்களில் விசுவாசம் வைக்கும் ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையின்மீதான கட்டுப்பாட்டைக் காணக்கூடாத பேய்த்தனமான சக்திகளிடம் ஒப்படைக்கக்கூடும்.—9/1, பக்கம் 4.

◻ஒரு திருமண வாழ்க்கையை நீடிக்கவைக்கும் நான்கு அடிப்படை கூறுகள் யாவை?

அவை, செவிகொடுத்துக் கேட்பதற்கான மனமுவந்த தன்மை, மன்னிப்புக் கேட்பதற்கான திறமை, நிலையான உணர்ச்சிப்பூர்வ ஆதரவை அளிப்பதற்கான ஆற்றல், அன்புணர்வுடன் தொடுவதற்கான ஆசை ஆகியவை. (1 கொரிந்தியர் 13:4-8; எபேசியர் 5:33; யாக்கோபு 1:19)—9/1, பக்கம் 20.

◻சோதனைகளை எதிர்ப்படுவோருக்குச் சகிப்புத்தன்மையை யெகோவா கொடுக்கும் ஒரு வழி என்ன?

யெகோவா அவருடைய வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள சகிப்புத்தன்மைக்கான உதாரணங்களின்மூலம் இதைச் செய்கிறார். (ரோமர் 15:4) இவற்றை ஆழமாகச் சிந்திக்கையில், நாம் சகிப்பதற்கு உற்சாகப்படுத்தப்படுகிறோம், மேலும் எப்படிச் சகிக்கலாம் என்பதைப் பற்றியும் அதிகத்தைக் கற்றுக்கொள்கிறோம்.—9/15, பக்கங்கள் 11-12.

◻தேவபக்தி என்றால் என்ன?

தேவபக்தி யெகோவாவுக்கான பக்தியைக் குறிக்கிறது; அது அவருக்குப் பிரியமாய் இருக்கும் காரியத்தைச் செய்ய நம்மை உந்துவிக்கிறது. அது கடினமான சோதனையை எதிர்ப்படும்போதும்கூட காண்பிக்கப்படுகிறது; ஏனென்றால், நாம் கடவுளுக்கு இருதயப்பூர்வமாக அன்புகாட்டுகிறோம்.—9/15, பக்கம் 15.

◻கடவுளுடைய இரக்கத்தை நாம் எவ்வாறு கருதவேண்டும்?

நாம் ஒருபோதும் கடவுளுடைய பெரிய இரக்கத்தை அலட்சியமாகக் கருதிவிடக்கூடாது. பவுலைப் போல் நாம் இருந்து, நம் சொந்த அபூரணங்களுக்கு எதிராகப் போராடுவதன்மூலம் நம்முடைய போற்றுதலைக் காண்பிக்கலாம். (1 கொரிந்தியர் 9:27) இந்த வழியில் கஷ்டங்களை எதிர்ப்படும்போதும்கூட சரியானதைச் செய்வதற்கு ஓர் உண்மையான ஆசையை நாம் கொண்டிருப்பதாக காண்பிக்கலாம்.—10/1, பக்கம் 23.

◻அன்பின் முதல் அம்சமாக பவுல் நீடிய பொறுமையைப் பட்டியலிடுவது ஏன் பொருத்தமாய் இருக்கிறது?

நீடிய பொறுமை இல்லாமல், அல்லது அமைதலாக ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லாமல், கிறிஸ்தவக் கூட்டுறவு என்ற ஒன்று இருக்கமுடியாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது ஏனென்றால் நாம் அனைவருமே அபூரணராக இருக்கிறோம். நம் அபூரணமும் குறைபாடுகளும் மற்றவர்களுக்குச் சோதனையாக இருக்கின்றன. எனவே, சகோதரர்கள் மத்தியில் அன்பு இருக்கவேண்டும் என்றால், நீடிய பொறுமை அத்தியாவசியம் ஆகும்.—10/15, பக்கம் 21.

◻ஆரம்பக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார்களா?

அத்தாட்சி ஆம் என்று காண்பிக்கிறது. இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கடவுளிடம் ஜெபிக்க கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) மேலும் அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் முடிவில், அவர் இவ்வாறு ஜெபித்தார்: “நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.” (யோவான் 17:6) இதைத்தவிர, செப்டுயஜின்ட்டின் பூர்வ நகல்கள், கடவுளுடைய பெயரை எபிரெய நான்கெழுத்துச் சொல்லின் வடிவில் கொண்டிருந்தன.—11/1, பக்கம் 30.

◻நாம் நம்முடைய தவறுகளைக் கையாளும்விதம் நம் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்று என்ன பைபிள் உதாரணங்கள் காண்பிக்கின்றன?

சவுல் ராஜா அறிவுரையைப் பிடிவாதமாய் எதிர்த்தான், அவனுடைய தவறுகள் பெருகி, முடிவில் கடவுளுடைய தயவை இழந்து அவன் மரிப்பதில் முடிவடைந்தது. (1 சாமுவேல் 15:17-29) மறுபட்சத்தில், தாவீது தவறுகளும் பாவங்களும் செய்திருந்தபோதிலும், திருத்தப்படுதலை அவர் மனந்திரும்புதலுடன் ஏற்று, யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார். நம்முடைய தவறுகளை நாம் ஒத்துக்கொள்வது கடவுளோடு ஒரு நல்ல உறவைக் காத்துக்கொண்டு, அதனால் நித்திய ஜீவன் பெறும் எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதற்கு நமக்கு உதவிசெய்யும் என இந்தப் பைபிள் உதாரணங்கள் காண்பிக்கின்றன. (சங்கீதம் 32:1-5)—11/15, பக்கங்கள் 29-30.

◻யெகோவா தம்முடைய மக்கள் இயற்கைச் சேதங்கள் அல்லது மற்ற பாதிப்புகளினால் அல்லற்படும்போது அவர்களுக்கு எப்படிச் சகாயஞ்செய்கிறார்?

அற்புதரீதியில் இயற்கை சக்திகளை முற்றிலும் மாற்றுவதன் மூலமாகவோ வேறு ஏதோவொரு இயற்கை கடந்த செயலின் மூலமாகவோ அவர் சகாயஞ்செய்யாமல், பெரும்பான்மையர் உண்மையில் புரிந்துகொள்ள முடியாத வேறொரு சக்தியின் மூலம், அன்பின் மூலம் அவர் சகாயஞ்செய்கிறார். ஆம், யெகோவா தம்முடைய மக்களை உண்மையில் நேசிக்கிறார். மேலும் அவர்கள் மத்தியில் அந்தளவுக்கு ஒருவரிலொருவர் பலமான அன்பை வளர்த்திருப்பதினிமித்தம், அவர்களுக்கு அற்புதமாகத் தோன்றுமொன்றை நிறைவேற்றக்கூடியவராக இருக்கிறார். (1 யோவான் 4:10-12, 21)—12/1, பக்கம் 10.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்