கிறிஸ்த வமண்டலத்தின் வழிபாட்டை கடவுள் எவ்வாறு கருதுகிறார்?
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! . . . உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்,” என்று இயேசு கிறிஸ்து கூறினார்.—மத்தேயு 7:21-23.
கடவுள், அவருடைய புனித வார்த்தையாகிய பரிசுத்த பைபிளின் மூலம் தம்முடைய சித்தம் என்ன என்பதைத் தெளிவாக்கியுள்ளார். கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் கடவுளின் சித்தத்தைச் செய்கின்றனவா? அல்லது அவர்கள், இயேசு அழைத்த ‘அக்கிரமச் செய்கைக்காரர்களா’?
இரத்தம் சிந்துதல்
தன்னுடைய எஜமான் மரிப்பதற்கு முந்தைய இரவில் பேதுரு, இயேசுவை கைதுசெய்ய அனுப்பப்பட்டிருந்த போர்வீரர்களின் கூட்டத்துடன் ஆயுதம் தரித்த போராட்டத்தைக் கிட்டத்தட்ட ஆரம்பித்துவிட்டார். (யோவான் 18:3, 10) ஆனால் இயேசு அமைதியை நிலைநாட்டிவிட்டு, பேதுருவை இவ்வாறாக எச்சரித்தார்: “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.” (மத்தேயு 26:52) இந்தத் தெளிவான எச்சரிக்கை மறுபடியும் வெளிப்படுத்துதல் 13:10-ல் சொல்லப்படுகிறது. இதற்கு கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் செவிசாய்த்திருக்கின்றனவா? அல்லது உலகில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் போர்களுக்குக்கான உத்தரவாதத்தில் அவை பங்குவகிக்கின்றனவா?
இரண்டாம் உலகப் போரின்போது, மதத்தின் பெரில் ஆயிரக்கணக்கான செர்பியர்களும் க்ரோஷியர்களும் கொலைசெய்யப்பட்டனர். தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா அறிவிக்கிறது, “வளர்ந்துகொண்டிருந்த பாசிச ஆட்சி ‘இன சுத்திகரிப்பு’ என்னும் கொள்கையை க்ரோஷியாவில் நடைமுறைப்படுத்த துவங்கியது, அது நாசி செயல்களையும் மிஞ்சி சென்றது. . . . செர்பிய மக்கள் தொகையினரில் மூன்றில் ஒரு பகுதியினர் நாடுகடத்தப்படுவர், மூன்றில் ஒரு பகுதியினர் ரோமன் கத்தோலிக்கர்களாக மதமாற்றம் செய்யப்படுவர், மூன்றில் ஒரு பகுதியினர் பூண்டோடு அழிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. . . . இந்தச் செயல்களுக்கு கத்தோலிக்க மதகுருக்களின் பாரபட்சமான ஒத்துழைப்பு, போருக்குப் பின் சர்ச்-அரசாங்க உறவுகளை மிகவும் பாதித்தது.” எண்ணற்ற மக்கள் கத்தோலிக்க மதத்திற்கு மாறவேண்டும் அல்லது சாகவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர்; ஆயிரக்கணக்கான மற்ற ஆட்களுக்குத் தெரிவுசெய்யும் வாய்ப்புக்கூட கொடுக்கப்படவில்லை. முழு கிராமங்கள்—ஆண்கள், பெண்கள், பிள்ளைகள்—அவற்றினுடைய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளுக்கு இழுத்துச்செல்லப்பட்டு கொல்லப்பட்டன. எதிர்க்கும் கம்யூனிஸ்ட் படைகளைப் பற்றியது என்ன? அவையும் மதம் சார்ந்த ஆதரவைக் கொண்டிருந்தனவா?
யுகோஸ்லாவியாவின் வரலாறு (ஆங்கிலம்) என்ற புத்தகம் அறிவிக்கிறது, “புரட்சிப் படைகளின் சார்பிலிருந்த சில பாதிரிமார்கள் போரில் ஈடுபட்டனர்.” “எதிர்த்து போரிட்ட படையில், செர்பியாவின் ஆர்த்தடாக்ஸ் மற்றும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளிலிருந்து வந்த பாதிரிமாரும் அடங்குவர்” என்று யுகோஸ்லாவியாவும் புதிய கம்யூனிஸ கொள்கையும் (ஆங்கிலம்) என்னும் புத்தகம் குறிப்பிடுகிறது. பால்கன் தீபகற்ப நாடுகளில், மத வேற்றுமைகள் தொடர்ந்து போரை இன்னும் தீவிரமடைய செய்கின்றன.
ருவாண்டாவைப் பற்றியது என்ன? தி மந்த் என்னும் பத்திரிகையில், கத்தோலிக்க சர்வதேச நல்லுறவு நிலையத்தின் பொது செயலாளர் இயன் லிண்டன் கீழ்க்காண்பனவற்றை ஒப்புக்கொண்டார்: “லண்டனிலுள்ள ஆப்பிரிக்க உரிமைகள் இயக்கங்களினால் நடத்தப்பட்ட புலனாய்வுகள், உள்ளூர் கத்தோலிக்க, ஆங்கிலிக்கன், பாப்டிஸ்ட் சர்ச் தலைவர்கள் அறிந்தோ அறியாமலோ இராணுவ கொல்லுதலில் பங்கேற்ற ஓரிரு உதாரணங்களை அளிக்கின்றன. . . . பாதிரிமாரின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முக்கியஸ்தர்களாக இருந்த கிறிஸ்தவர்களில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் கொல்லுதலில் உட்பட்டிருந்தார்கள் என்பதற்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை.” வருந்தத்தக்கவிதமாக, பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவோரின் இடையே நடக்கும் சண்டை மத்திய ஆப்பிரிக்காவை தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது.
வேசித்தனமும் விபசாரமும்
கடவுளுடைய வார்த்தையின்படி, உடலுறவு கொள்ள ஒரே ஒரு கௌரவமான ஏற்பாடு இருக்கிறது, அதாவது திருமண ஏற்பாட்டிற்குள் மாத்திரமே அது உண்டு. “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (எபிரெயர் 13:4) கடவுளின் இந்தப் போதனையை சர்ச் தலைவர்கள் உறுதியாகக் கடைப்பிடிக்கின்றனரா?
ஒரு ஜோடி ஒருவருக்கொருவர் முழுமையாக ஒத்துக்கொண்டிருந்தால், திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது தவறல்ல என்று குறிப்பிட்ட பாலியல் பேரிலான அதிகாரப்பூர்வ ஆவணத்தை 1989-ல் ஆஸ்திரேலியாவிலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச் வெளியிட்டது. வெகு சமீபத்தில், ஸ்காட்லாந்திலுள்ள ஆங்கிலிக்கன் சர்ச்சின் தலைவர் குறிப்பிட்டார்: “கள்ளக் காதல் விவகாரங்களைப் பாவமான மற்றும் தவறான செயல் என்று சர்ச் கண்டனம் செய்யக்கூடாது. விபசாரம் நமது மரபியலினால் தூண்டப்படுகிறது என்பதைச் சர்ச் ஒத்துக்கொள்ள வேண்டும்.”
தென் ஆப்பிரிக்காவில், ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சிக்குச் சாதகமாக பாதிரிமாரில் பலர் குரலெழுப்பி உள்ளனர். உதாரணமாக, 1990-ல் யூ என்னும் தென் ஆப்பிரிக்க பத்திரிகை, முக்கிய ஆங்கிலிக்கன் ஊழியர் ஒருவர் இவ்வாறு சொல்லியதாக மேற்கோள் காட்டியது: “வேதவசனம் என்றென்றைக்குமாகக் கட்டுப்படுத்துவதில்லை. . . . ஒத்தப் பாலின புணர்ச்சிக்காரர் பற்றிய சர்ச்சின் நோக்குநிலையிலும் கொள்கையிலும் மாற்றங்கள் நடந்தேறும் என்று நான் நம்புகிறேன்.”—ரோமர் 1:26, 27-ஐ வேறுபடுத்தி காண்க.
1994 பிரிட்டானிக்காவின் வருடாந்தர புத்தகத்தின்படி, (ஆங்கிலம்) அமெரிக்க சர்ச்சுகளில் பாலியல் ஒரு முக்கிய சர்ச்சையாக மாறியுள்ளது, விசேஷமாக “ஆண்புணர்ச்சிக்காரர்கள், பெண்புணர்ச்சிக்காரர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களைச் சேவையில் நியமனம் செய்தல், ஒத்தப் பாலின புணர்ச்சிக்காரர்களின் உரிமைகளை மத சம்பந்தமாகப் புரிந்துகொள்ளுதல், ‘ஆண்புணர்ச்சிக்காரர்களின் திருமணத்தை’ ஆசீர்வதித்தல், ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியோடு தொடர்புடைய சட்டப்பூர்வமான அல்லது கண்டனத்துக்குரிய வாழ்க்கை பாணி,” போன்ற விவகாரங்களே சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றன. பாலியல் சுதந்திரம் இன்னும் அதிகம் வேண்டும் என உத்வேகத்துடன் குரலெழுப்பும் பாதிரிமாரை பெரும்பாலான சர்ச் பிரிவுகள் சகித்துக்கொண்டிருக்கின்றன. 1995 பிரிட்டானிக்காவின் வருடாந்தர புத்தகத்தின்படி, எதியோபியாவைச் சேர்ந்த 55 பிஷப்புகள் “ஒத்தப் பாலின புணர்ச்சிக்காரர்களின் நியமிப்பையும் அவர்களுடைய பழக்கத்தையும் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும்” அறிக்கையில் கையொப்பமிட்டார்கள்.
சில பாதிரிமார், ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சிக்கு எதிராக இயேசு ஒருபோதும் ஒன்றுமே சொல்லவில்லை என்று அதற்குச் சாதகமாக வாதிடுகிறார்கள். ஆனால் அது உண்மைதானா? கடவுளுடைய வார்த்தையே சத்தியம் என்று இயேசு கிறிஸ்து அறிவித்தார். (யோவான் 17:17) அப்படியென்றால், அவர் லேவியராகமம் 18:22-ல் விவரிக்கப்பட்டுள்ள ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியைப் பற்றிய கடவுளின் கருத்தை ஆதரித்தார், அது வாசிப்பதாவது: “பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.” மேலும், இயேசு வேசித்தனத்தையும் விபசாரத்தையும் ‘உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் பொல்லாங்கான காரியங்களோடு’ பட்டியலிட்டார். (மாற்கு 7:21-23) வேசித்தனம் என்பதற்கான கிரேக்க வார்த்தை விபசாரம் என்ற வார்த்தையைக் காட்டிலும் அதிக பொருள் பொதிந்துள்ள பதமாகும். அது ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சியையும் உள்ளடக்கி, சட்டப்பூர்வமான திருமணத்திற்குப் புறம்பான எல்லா வகையான உடலுறவுகளையும் விவரிக்கிறது. (யூதா 7) வேசித்தனத்தின் தீவிரத்தன்மையைக் குறைத்திடும், பெயரளவில் கிறிஸ்தவ போதகராக உரிமைபாராட்டுவோரைப் பொறுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை எச்சரித்தார்.—வெளிப்படுத்துதல் 1:1; 2:14, 20.
ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும் பெண்புணர்ச்சிக்காரர்களுக்கும் திருக்கோயில் பதவி அளிக்குமாறு மதத்தலைவர்கள் குரலெழுப்பினால், அவர்களுடைய சர்ச்சுகளின் அங்கத்தினர்மீது, விசேஷமாக இளைஞர்கள்மீது இது எத்தகைய பாதிப்பை கொண்டிருக்கும்? இது திருமணத்திற்குப் புறம்பே உடலுறவை அனுபவித்துப்பார்க்க ஒரு தூண்டுதலாக இருக்காதா? இதற்கு நேர்மாறாக, “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று கடவுளுடைய வார்த்தை கிறிஸ்தவர்களைத் துரிதப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 6:18) ஓர் உடன் விசுவாசி அத்தகைய ஒரு பாவத்தில் விழுந்துவிட்டால், கடவுளின் தயவில் மறுபடியும் நிலைநிறுத்தப்படுவதற்கு அன்பான உதவியை அவருக்கு அளிக்கலாம். (யாக்கோபு 5:16, 19, 20) ஒருவேளை இந்த உதவி நிராகரிக்கப்பட்டால்? அத்தகையோர் மனந்திரும்பினாலொழிய, “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்று பைபிள் குறிப்பிடுகிறது.—1 கொரிந்தியர் 6:9, 10.
“விவாகம்பண்ணாதிருக்கவும்”
ஆயினும், “வேசித்தனம் பரவியுள்ளபடியால்,” பைபிள் சொல்கிறது, “விரகதாபத்தால் வேகுகிறதைக் காட்டிலும் திருமணம் செய்வது நலம்.” (1 கொரிந்தியர் 7:2, 9, NW) 2. ஆயினும், வேசித்தனம் பரவியுள்ளபடியால், ஒவ்வொரு புருஷனும் தன் சொந்த மனைவியையும், ஒவ்வொரு மனைவியும் தன் சொந்த புருஷனையும் கொண்டிருக்க வேண்டும். 9. ஆனால் அவர்களுக்கு ஒருவேளை இச்சையடக்கம் இல்லை என்றால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனென்றால் [விரகதாபத்தால்] வேகுகிறதைக் காட்டிலும் திருமணம் செய்வது நலம்.இந்த ஞானமான புத்திமதி இருந்தும், பாதிரிமார்களுள் பலர் பிரமச்சாரிகளாக, அதாவது திருமணம் செய்யாமலே இருந்துவிட வற்புறுத்தப்படுகின்றனர். தி வட்டிகன் பேப்பர்ஸ் என்னும் தன்னுடைய புத்தகத்தில் நீனோ லொ பெல்லோ விளக்குகிறார், “ஒரு பாதிரியோ, மடத்துத் துறவியோ, கன்னிகாஸ்திரீயோ உடலுறவு கொண்டால் பிரமச்சரியத்திற்கான உறுதிமொழி மீறப்படவில்லை. . . . பாவமன்னிப்பு அறிக்கையிடும்போது, ஒளிவுமறைவின்றி அறிவிப்பதன் மூலம் அத்தகைய பாலியல் உறவுகளுக்கான மன்னிப்பைப் பெறமுடியும், அதற்கு மாறாக எந்தப் பாதிரியின் திருமணமும் சர்ச்சால் வெறுமனே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.” இந்தப் போதனை நல்ல பலன்களை விளைவித்திருக்கிறதா அல்லது கெட்டப் பலன்களையா?—மத்தேயு 7:15-19.
பல பாதிரிகள் ஒழுக்க ரீதியில் கற்புள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் பெரும் எண்ணிக்கையினர் அவ்வாறு இல்லை. 1992 பிரிட்டானிக்காவின் வருடாந்தர புத்தகத்தின்படி, “ரோமன் கத்தோலிக்க சர்ச், பாதிரிமாரின் பாலியல் துர்ப்பிரயோக வழக்குகளைத் தீர்ப்பதில் $300 மில்லியனை செலவிட்டதாக அறிவிக்கப்பட்டது.” அதற்குப்பின் 1994-ன் பதிப்பு கூறியது: “எய்ட்ஸ் நோயால் பல பாதிரிமார் மரித்தது, ஒத்தப் பாலின புணர்ச்சிக்கார பாதிரிகள் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டி, ஒத்தப் பாலின புணர்ச்சிக்காரர்கள் மிகப் பலர் . . . குருத்துவத்திற்கு கவர்ந்திழுக்கப்படுவதைக் காணும்படி செய்தது.” “விவாகம்பண்ணாதிருக்கவும்” என்பதை ‘பிசாசுகளின் உபதேசங்கள்’ என்று பைபிள் குறிப்பிடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. (1 தீமோத்தேயு 4:1-3) பீட்டர் டி ரோஸா தன்னுடைய புத்தகமாகிய விக்கார்ஸ் ஆஃப் கிறைஸ்ட்-ல் எழுதுகிறார்: “சில வரலாற்று அறிஞர்களின் கருத்தின்படி, விபசார செயல் உட்பட மேற்கத்திய உலகிலுள்ள எந்த ஒரு செயலைக்காட்டிலும் [குருத்துவ பிரமச்சரியம்] ஒழுக்கநெறிகளுக்கு அநேகமாக பெரும் தீமையையே விளைவித்துள்ளது. . . . [இது] அடிக்கடி கிறிஸ்தவத்திற்கு ஒரு இழுக்காகவே இருந்து வருகிறது. . . . பாதிரி வர்க்கத்தின்மீது திணிக்கப்பட்ட பிரமச்சரியம் மாய்மாலத்துடன் நடந்துகொள்ளவே எப்போதும் வழிநடத்தி இருக்கிறது. . . . ஒரு பாதிரி ஆயிரம் தடவை ஒழுக்கம்கெட்டு நடக்கலாம், ஆனால் கிறிஸ்தவ சமயச்சட்டத்தினால் ஒரே தடவை திருமணம் செய்வது தடைசெய்யப்படுகிறது.”
பாகால் வழிபாட்டை பற்றிய கடவுளின் கருத்தைக் கவனத்தில் கொண்டபின், இந்தப் பிரிந்து கிடக்கும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளை கடவுள் எவ்வாறு கருத வேண்டும் என்பதை அறிவது ஒன்றும் கடினம் அல்ல. “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என்னும் ஒரு பெயரின்கீழ் எல்லா வகையான பொய் வழிபாடுகளையும் பைபிளின் கடைசி புத்தகம் ஒருங்கிணைக்கிறது. பைபிள் மேலும் கூறுகிறது: “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.”—வெளிப்படுத்துதல் 17:5; 18:24.
இவ்வாறாக, தம்முடைய உண்மை வணக்கத்தாராக இருக்க விரும்பும் அனைவரையும் கடவுள் துரிதப்படுத்துகிறார்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். . . . அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.”—வெளிப்படுத்துதல் 18:4, 8.
இப்பொழுது எழும் கேள்வி: பொய் மதத்திலிருந்து ஒருவர் வெளிவந்தபின், அவர் எங்கே செல்லவேண்டும்? கடவுள் ஏற்கத்தக்க வழிபாட்டின் வகை எது?
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
விக்கிரக வழிபாடு
பாகால் வழிபாடு விக்கிரகங்களை உபயோகிப்பதை உட்படுத்தியது. இஸ்ரவேலர்கள் யெகோவாவின் வழிபாட்டுடன் பாகாலுடையதையும் கலந்திட முயன்றார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்குள்ளும் விக்கிரகங்களைக் கொண்டுவந்தனர். எருசலேம் மீதும் அதன் ஆலயத்தின் மீதும் கடவுள் அழிவைக் கொண்டுவந்தபோது, விக்கிரக வழிபாட்டைப்பற்றிய கடவுளின் கருத்து தெளிவாக்கப்பட்டது.
கிறிஸ்தவமண்டலத்தின் பல சர்ச்சுகள் விக்கிரகங்களால் நிறைந்திருக்கின்றன, அவை ஒருவேளை சிலுவை, வழிபாட்டு உருவங்கள் அல்லது மரியாளின் சிலைகள் ஆகிய வடிவங்களில் உள்ளன. மேலும் சர்ச்சுக்குச் செல்வோரில் பலருக்கு விக்கிரகங்களுக்கு முன் தலைதாழ்த்தி வணங்கவும், முழங்கால்படியிடவும் அல்லது சிலுவையின் அடையாளத்தைப் போடவும் கற்பிக்கப்படுகிறது. அதற்கு நேர்முரணாக, உண்மை கிறிஸ்தவர்கள் “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்” என்று கட்டளையிடப்பட்டுள்ளனர். (1 கொரிந்தியர் 10:14) சடப்பொருள்களின் துணையைக்கொண்டு கடவுளை வழிபட அவர்கள் முயற்சிப்பதில்லை.—யோவான் 4:24.
[படத்திற்கான நன்றி]
Musée du Louvre, Paris
[பக்கம் 7-ன் பெட்டி]
“சர்ச் தலைவர் குற்றமற்றவராக இருக்கவேண்டும்”
இந்தச் சொற்றொடர் டுடேஸ் இங்கிலிஷ் வர்ஷன் பிரகாரம், தீத்து 1:7-லிருந்து எடுக்கப்பட்டது. “பிஷப் என்பவர் குற்றமற்றவராக இருக்க வேண்டும்” என்பதாக கிங் ஜேம்ஸ் வர்ஷன் வாசிக்கிறது. “பிஷப்” என்னும் வார்த்தை “கண்காணி” என்ற அர்த்தமுடைய கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. இவ்வாறாக, உண்மையான கிறிஸ்தவ சபையை வழிநடத்த நியமிக்கப்பட்டுள்ள ஆட்கள் பைபிளின் அடிப்படையான தராதரங்களுக்கு இசைவாக வாழவேண்டும். அவர்கள் அவ்வாறு இல்லையென்றால், கண்காணிப்பு பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும், ஏனெனில் இனியும் அவர்கள் “மந்தைக்கு மாதிரிகளாக” இல்லை. (1 பேதுரு 5:2, 3) இந்தத் தேவையை கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் எவ்வளவு கருத்தூன்றி ஏற்றுள்ளன?
உங்கள் திருமணத்தைப் பற்றி நான் அக்கறைக் கொள்கிறேன் (ஆங்கிலம்) என்னும் தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் இவ்ரட் வோர்த்திங்டன், அ.ஐ.மா.-வில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் 100 பாதிரிமாரைச் சுற்றாய்வு செய்ததைக் குறிப்பிடுகிறார். 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், தங்களுடைய திருமண துணை அல்லாதவருடன் ஏதேனும் ஒரு வகை காம இச்சையைத் தூண்டும் செயலில் ஈடுபட்டிருந்ததை ஒத்துக்கொண்டனர். அவர்களில் பெரும் எண்ணிக்கையினர் விபசாரம் செய்திருந்திருக்கிறார்கள்.
இன்றைய கிறிஸ்தவம் (ஆங்கிலம்) பின்வரும் கருத்தைத் தெரிவிக்கிறது, “கடந்த பத்தாண்டுகளில், மிகவும் கௌரவமான தலைவர்கள் சிலரின் ஒழுக்கங்கெட்ட நடத்தை வெளியே தெரிய வந்ததனால், சர்ச் திரும்பத்திரும்ப தடுமாறுகிறது.” “விபசாரம் செய்த பாதிரிமார்களை உடனே திரும்பவும் ஏன் நிலைநிறுத்தக்கூடாது” என்ற கட்டுரை சர்ச் தலைவர்கள் “பாலியல் பாவம் செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட” பிறகும், உடனே அவர்களுடைய பழைய பதவிகளுக்கு மீண்டும் அமர்த்தும் சர்ச்சின் வழக்கமான பழக்கத்திற்குச் சவால் விட்டது.