உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 11/1 பக். 27
  • “யெகோவா அருளிய அரும்பொருள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “யெகோவா அருளிய அரும்பொருள்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • இதே தகவல்
  • “யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய எனது அபிப்பிராயத்தை மாற்றிவிட்டீர்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • சிறையில் விடுதலையை நான் பெற்றேன்!
    விழித்தெழு!—1988
  • போற்றுதலுள்ள ஒரு வயதான பெண்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 11/1 பக். 27

“யெகோவா அருளிய அரும்பொருள்”

காவற்கோபுரம் மே 1, 1996-ன் வெளியீட்டில், கிறிஸ்தவ நடுநிலைவகிப்பைப் பற்றியும், யெகோவாவுக்குரியவையும் ‘இராயனுக்குரியவையுமான’ நம்முடைய கடமைகளை சமநிலைப்படுத்துவது எவ்வாறு என்பதைப் பற்றியுமான ஆழ்ந்த கருத்துடைய ஆய்வுரை அடங்கியிருந்தது. (மத்தேயு 22:21) கொடுக்கப்பட்ட புதிய தகவலுக்காக நன்றிமதித்துணர்வை வெளிப்படுத்தும் பல கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றில், கிரீஸிலுள்ள ஒரு சாட்சி, யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவுக்கு விலாசமிட்டு எழுதின பின்வரும் கடிதம் இருந்தது:

“அன்பான சகோதரரே, ஆவிக்குரிய பிரகாரம் எங்களை அவ்வளவு நன்றாகக் கவனித்து வருவதற்காக உங்களெல்லாருக்கும் என் மிக ஆழ்ந்த நன்றியுணர்வைத் தெரிவிக்க நான் விரும்புகிறேன். என் கிறிஸ்தவ விசுவாசத்தினிமித்தமாக ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் சிறையிருப்பில் நான் செலவிட்டிருப்பதால், மே 1, 1996-ன் காவற்கோபுர வெளியீட்டில் அடங்கிய அருமையான கருத்துக்களை நான் உண்மையில் நன்றியோடு மதிக்கிறேன். (ஏசாயா 2:4) இது யெகோவா அருளிய அரும்பொருள்.—யாக்கோபு 1:17.

“இந்தக் கட்டுரைகளை நான் வாசித்து மகிழ்கையில், முந்திய ஒரு காவற்கோபுரத்தில் இருந்த ஒரு குறிப்புரை என் நினைவுக்கு வந்தது (ஆகஸ்ட் 1, 1994, பாரா 14): ‘தெளிவாகவே, நியாயத்தன்மை என்பது ஒரு அருமையான குணம்; யெகோவாவை இன்னும் அதிகமாக நேசிக்கும்படி நம்மை அசைவிக்கும் ஒரு குணம்.’ ஆம், சகோதரரே, யெகோவாவின் ஞானத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்கிற, தயவும் அன்புமுள்ள அவருடைய அமைப்பின் ஒரு பாகமாக நான் இருப்பதற்காக யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன்.—யாக்கோபு 3:17.

“மே 1 காவற்கோபுரத்திலுள்ள அதிகரிக்கப்பட்ட ஒளி இங்கே கிரீஸில் நன்றாய் ஏற்கப்பட்டிருக்கிறது. முக்கியமாய் தங்கள் விசுவாசத்தினிமித்தமாக சிறையில் பல ஆண்டுகள் கழித்தவர்களால் அல்லது இன்னும் சிறையில் இருக்கிறவர்களால் அவ்வாறு ஏற்கப்பட்டிருக்கிறது. மறுபடியுமாக உங்களுக்கு நன்றி. இந்த இக்கட்டான காலங்களில் மதிப்புவாய்ந்த ஆவிக்குரிய உணவை எங்களுக்குத் தொடர்ந்து அளித்துவரும்படி யெகோவா தம்முடைய ஆவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்துவாராக.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்