உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 4/1 பக். 9
  • “வலிமையானவை, நம்பவைப்பவை”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வலிமையானவை, நம்பவைப்பவை”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • இதே தகவல்
  • கடவுள் சொல்லும் நற்செய்தி! சிற்றேட்டைப் பயன்படுத்துவது எப்படி?
    நம் ராஜ்ய ஊழியம்—2013
  • நம்முடைய பிரச்னைகள் புரொஷூரில் படிப்புகள்தொடங்குதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • சிற்றேடுகளைக் கொண்டு ராஜ்ய நற்செய்தியை அறிவியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • பல்வகை சிற்றேடுகளை உங்கள் ஊழியத்தில் பயன்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 4/1 பக். 9

“வலிமையானவை, நம்பவைப்பவை”

“நாளை காலையிலிருந்தே இதை நான் பிரசங்க ஊழியத்தில் உபயோகிக்கப் போகிறேன், இதில் இருக்கிற விவாதங்கள் உண்மையில் வலிமையானவை, நம்பவைப்பவை” என்று பிரான்ஸிலிருந்து யெகோவாவின் சாட்சி ஒருவர் எழுதினார். அமெரிக்க மாநிலங்களிலிருந்து இன்னொரு சாட்சி இவ்வாறு எழுதினார்: “கிடைத்த உடனே இதை நான் வாசித்து பார்த்தேன்; வாசித்ததிலிருந்து இதை ஊழியத்தில் உபயோகிக்க துடியாய்துடிக்கிறேன். ஏனென்றால் பைபிளை நம்பாத, ஏனோதானோ என்று அசட்டையாக இருக்கிற நிறையப் பேரை நாங்கள் ஊழியத்திலே சந்திக்கிறோம்.” இவர்கள் எதைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? 1997/98-ல் நடைப்பெற்ற “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” என்னும் மாவட்ட மாநாட்டில், உவாட்ச் டவர் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற தலைப்பையுடைய 32 பக்க சிற்றேட்டைப் பற்றித்தான் சொல்கிறார்கள்.

நன்கு படித்த, ஆனால் பைபிளை பற்றி கொஞ்சமே அறிந்திருக்கும் மக்களை குறிப்பாக மனதில் வைத்து, இந்தப் புதிய சிற்றேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அநேக ஆட்கள், பைபிளை தனிப்பட்டமுறையில் ஒருபோதும் படிக்காவிட்டாலும்கூட அதைப்பற்றி ஆணித்தரமாக கருத்துகளை உருவாக்கியுள்ளனர். குறைந்தபட்சம் ஆராய்ந்துபார்ப்பதற்கு பைபிள் தகுதியானதே என்று வாசகருக்கு காட்டவேண்டும் என்பதே இந்தச் சிற்றேட்டின் நோக்கம். பைபிள் கடவுளால் ஏவப்பட்ட வார்த்தைதான் என்ற கருத்தை வாசகர்மீது திணிக்க இந்தச் சிற்றேடு முயலுவதில்லை. அதற்குமாறாக, உண்மைகளை பேசும்படி அனுமதிக்கிறது. இது வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தவில்லை, விஷயத்தை தெளிவாகவும் நேரடியாகவும் சொல்கிறது.

மாநாடுகளில் ஆஜராயிருந்தவர்கள் இந்தச் சிற்றேட்டை வெளி ஊழியத்தில் உபயோகிக்கவேண்டும் என ஆவலோடு இருந்தார்கள் என்பது மேலே மேற்கோள் காட்டிய குறிப்புகளிலிருந்து தெரிகிறது. உதாரணத்திற்கு, ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் விசேஷ வெளி ஊழியம் பிரான்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டது. அச்சமயம், உலக இளைஞர் தினத்திற்காக உலகின் பல பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பாரிஸில் வந்து குழுமினார்கள். சுமார் 2,500 சாட்சிகள் (இவர்களில் பெரும்பான்மையினர் 16 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்) இந்தச் சிற்றேட்டை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி, போலிஷ், ஸ்பானிஷ் மொழிகளில் 18,000 பிரதிகளை விநியோகித்தனர்.

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற இச்சிற்றேட்டை நாம் கண்டிப்பாக ஊழியத்தில் உபயோகிப்போமாக. பைபிளை தாங்களாகவே ஆராய்ந்துபார்க்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தை நியாயமான ஆட்களிடம் தோற்றுவிக்க இந்தப் பிரசுரம் மிகவும் உபயோகமாக இருக்கட்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்