உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 4/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • ஒப்பந்தப் பெட்டி என்பது என்ன?
    பைபிள் தரும் பதில்கள்
  • தீமையை நன்மை வெல்லும் விதம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 4/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா என்று பாருங்கள்:

• உலகில் தீமை நிறைந்திருப்பதற்கான காரணங்கள் யாவை?

கெட்டதை செய்வதற்கான மனச்சாய்வு மனிதர்களுக்கு இருப்பதே முதல் காரணம். (ஆதியாகமம் 8:21) அநேகருக்கு கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய திருத்தமான அறிவு இல்லாதிருப்பது இன்னொரு காரணம். அதோடுகூட, தீமைக்கெல்லாம் தலைவனான சாத்தான் மனித விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டு வருவதும் மற்றொரு காரணம்.​—⁠1/1, பக்கங்கள் 4-6.

• சரியான நேரத்தில் மற்றவர்களை பாராட்டுவதால் என்ன நல்ல பலன்கள் கிடைக்கும்? (நீதிமொழிகள் 12:25)

பாராட்டைப் பெறுபவருக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது, அவரை உற்சாகப்படுத்தித் தூண்டுவிக்கிறது, வேண்டப்பட்டவர் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், மற்றவர்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் நல்லதைக் காண நமக்கு உதவுகிறது.​—⁠1/1, பக்கங்கள் 16-17.

• உடன்படிக்கை பெட்டியில் என்னென்ன இருந்தன?

கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளும், அதோடு கொஞ்சம் மன்னாவும் அதில் இருந்தன. கோராகுவின் கலகத்திற்கு பிறகு, ஆரோனின் கோலும் அதில் வைக்கப்பட்டது. இது கலகக்கார சந்ததியாருக்கு விரோதமான ஓர் அடையாளமாக அல்லது அத்தாட்சியாக இருந்தது. (எபிரெயர் 9:4) சாலொமோன் கட்டிய ஆலயத்தின் பிரதிஷ்டைக்கு முன்பு, ஆரோனின் கோலும் மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும் உடன்படிக்கைப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்.​—⁠1/15, பக்கம் 31.

• நெகேமியாவின் காலத்திலிருந்த யூதர்கள் ஏன் ஆலயத்திற்கு விறகு கொண்டுவர வேண்டியிருந்தது?

நியாயப்பிரமாணத்தில் விறகை காணிக்கையாக செலுத்தும்படி கட்டளையிடப்படவில்லை. ஆனால் நெகேமியாவின் காலத்தில், பலிகளைத் தகனிப்பதற்கு எப்போதுமே விறகு தேவைப்பட்டது.​—⁠2/1, பக்கம் 11.

• மியூராட்டோரியன் பதிவு என்றால் என்ன?

இது லத்தீன் கையெழுத்துப் பிரதியின் ஒரு பாகமாகும். பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பதிவு கிரேக்கில் எழுதப்பட்டதாக தெரிகிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள புத்தகங்களைக் குறிப்பிடுகிற அதிகாரப்பூர்வ பட்டியல்களிலேயே இது மிகப் பழமையானதாகும். அந்தப் புத்தகங்களையும் அவற்றின் எழுத்தாளர்களையும் பற்றிய விவரங்களைக்கூட இது அளிக்கிறது.​—⁠2/15, பக்கங்கள் 13-14.

• ராஜா அழைத்தபோது பெர்சியாவின் ராணியாகிய வஸ்தி ஏன் வர மறுத்தாள்? (எஸ்தர் 1:10-12)

அவளுடைய உள்ளெண்ணத்தைப் பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடவில்லை. குடித்திருக்கும் விருந்தினர் முன் சென்று தன்னுடைய மதிப்பைக் கெடுத்துக்கொள்ள விரும்பாததால்தான் அவள் வராமலிருந்தாள் என சில அறிஞர்கள் கூறுகிறார்கள். அல்லது, அந்த ராணி பார்வைக்கு அழகி என்றாலும் உண்மையில் அடங்காதவளாகவே இருந்திருக்கலாம். இவ்விதமாக பெர்சிய மாகாணங்களிலுள்ள மனைவிகளுக்கு ஒரு கெட்ட முன்மாதிரியாக இருந்தாள்.​—⁠3/1, பக்கம் 9.

• மீட்கும்பொருள் எவ்வழிகளில் நம்மை விடுவிக்கிறது?

நாம் வழிவழியாய்ப் பெற்றிருக்கும் பாவத்திலிருந்தும், அதன் படுபயங்கர பாதிப்புகளிலிருந்தும் இயேசுவின் பலி நம்மை விடுவிக்கிறது. (ரோமர் 6:23) குற்றமுள்ள மனசாட்சியிலிருந்தும் அது உண்மை கிறிஸ்தவர்களை விடுவிக்கிறது. மேலும், மீட்கும்பொருள் மீது நம்பிக்கை வைக்கையில், கடவுளுக்கு முன்பாக நல்ல நிலைநிற்கையை இழந்துவிடுவோமோ என்ற பயத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. (1 யோவான் 2:1)​—⁠3/15, பக்கம் 8.

• “வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்” என்ற நியாயப்பிரமாண கட்டளையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (யாத்திராகமம் 23:19)

ஒரு குட்டியை அதன் தாயின் பாலிலேயே சமைப்பது, மழையை வரவழைப்பதற்குப் புறஜாதியினர் செய்த சடங்காக இருந்திருக்கலாம். (லேவியராகமம் 20:23) போஷாக்கைப் பெற்று வளருவதற்காகத்தான் குட்டிக்குத் தாய்ப்பால் கிடைக்கும்படி யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, அந்தத் தாய்ப்பாலிலேயே குட்டியை சமைப்பது, தாய்க்கும் சேய்க்கும் இடையே கடவுள் ஏற்படுத்தியுள்ள உறவை அவமதிப்பதாக இருக்கும். இந்த சட்டம் கடவுளுடைய கனிவான இரக்கத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.​—⁠4/1, பக்கம் 31.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்