‘ஒரே இருதயத்துடனும் ஒரே மனதுடனும்’ கடவுளைச் சேவித்தல்
பெந்தெகொஸ்தே பண்டிகை நாள் அது. யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களைச் சூழ நிற்கிறார்கள். அவர்கள் எல்லாரும் மேற்கே ரோம்முதல் கிழக்கே பார்த்தியாவரை உள்ள தொலைதூர இடங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தாரின் மத்தியில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், அவர்களோடு பேசுகிற இயேசுவின் சீஷர்கள் கலிலேயர்கள். அதனால், கூட்டத்தாரில் சிலர் திகைத்துப்போய், “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” எனக் கேட்கிறார்கள்.—அப். 2:8.
அப்போஸ்தலன் பேதுரு எழுந்து நின்று, அவர்கள் கண்ணாரக் காண்கிற இந்த அற்புதத்திற்கான காரணத்தை விளக்குகிறார். அவர்கள் உடனடியாகச் செயல்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்! (அப். 2:41) கிறிஸ்தவ சபை கிடுகிடுவென வளருகிறது; அதே சமயத்தில் ஒற்றுமையாக இருக்கிறது. “விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்” என பைபிள் எழுத்தாளரான லூக்கா சொல்கிறார்.—அப். 4:32.
பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று ஞானஸ்நானம் பெற்ற ஆயிரக்கணக்கானோர் தாங்கள் ஏற்றுக்கொண்ட புதிய மதத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக எருசலேமிலேயே இன்னும் சில காலம் தங்கியிருக்க விரும்பினார்கள். ஆனால், அப்படித் தங்கியிருக்கும் எண்ணத்தோடு அவர்கள் அங்கே வந்திருக்கவில்லை. ஆகவே, அவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டப்பட்டது. விசுவாசிகள் சிலர் தங்களுடைய சொத்துகளை விற்று அந்தப் பணத்தை அப்போஸ்தலரிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். (அப். 2:42–47) அவர்கள் காட்டிய அன்பும் தாராள குணமும் எத்தனை மெச்சத்தக்கது!
உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்போதுமே இப்படிப்பட்ட அன்பையும் தாராள குணத்தையும் காட்டியிருக்கிறார்கள். இன்றும்கூட, அவர்கள் சபையாகத் தொடர்ந்து ‘ஒரே இருதயத்துடனும் ஒரே மனதுடனும்’ ஒன்றுபட்டு யெகோவாவுக்குச் சேவைசெய்து வருகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருமே, நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகவும் ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஆதரிப்பதற்காகவும் தங்களுடைய நேரம், சக்தி, பணம் ஆகியவற்றைத் தாராளமாகச் செலவிடுகிறார்கள்.—“சிலர் வழங்க விரும்பும் வழிகள்” என்ற பெட்டியைக் காண்க.
[பக்கம் 6-ன் பெட்டி]
சிலர் வழங்க விரும்பும் வழிகள்
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
அநேகர் திட்டமிட்டு பணம் ஒதுக்கி, “உலகளாவிய வேலை” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதைப் போடுகிறார்கள்.
இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் இந்த அலுவலகங்களுக்கு அல்லது உங்கள் நாட்டிற்குரிய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். காசோலைகளை “Watch Tower”a என்ற பெயரில் எடுக்க வேண்டும். நகைகளை அல்லது விலைமதிப்புள்ள மற்ற பொருள்களைக்கூட நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படுகிற அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
நிபந்தனையின் பேரில் நன்கொடை டிரஸ்ட் ஏற்பாடுb
உலகளாவிய வேலைக்காக டிரஸ்ட் ஏற்பாடுமூலம் “Watch Tower”c என்ற பெயருக்குப் பணம் அளிக்கலாம். என்றாலும், கொடுப்பவரது கோரிக்கையின் பேரில் பணம் திரும்பக் கொடுக்கப்படும். கூடுதல் தகவலுக்காக, தயவுசெய்து உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.
திட்டமிட்ட நன்கொடைd
நிபந்தனையற்ற பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற வழிமுறைகளும் இருக்கின்றன. அவையாவன:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.
வங்கிக் கணக்குகள்: வங்கிக் கணக்குகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின்மூலம் அல்லது தன் மரணத்திற்குப் பிறகு உவாட்ச் டவர் சொஸைட்டிக்குக் கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.
பங்குகளும் பத்திரங்களும்: பங்குகளையும் பத்திரங்களையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்; அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம்வரை அதை அனுபவிப்பதற்கான ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரத்தில் எழுதுவதற்கு முன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
வருடாந்தர அன்பளிப்பு: இது, ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது செக்யூரிட்டி டெபாஸிட்டுகளை உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதிக் கொடுக்கும் ஏற்பாடாகும். நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்குக் கைமாறாகப் பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டைச் செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரிச் சலுகைகள் உண்டு.
உயில்களும் டிரஸ்ட்டுகளும்: சொத்து அல்லது பணத்தைச் சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள்மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்குச் சேரும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம். மத அமைப்புக்கு உதவும் ஒரு டிரஸ்ட்டுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கலாம்.
“திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இதுபோன்ற திட்டமிட்ட நன்கொடைமூலம் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவ உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.e பல்வேறு வழிகளில் இப்போதே நன்கொடையாகக் கொடுப்பது அல்லது மரணத்திற்குப்பின் அனுபோகிக்கக் கொடுப்பது பற்றிய தகவல்களை அளிப்பதற்காக இச்சிற்றேடு தயாரிக்கப்பட்டது. அநேகர் இந்தச் சிற்றேட்டைப் படித்துவிட்டு, தங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்தாலோசித்த பிறகு உலகமுழுவதும் நடக்கும் நமது மத வேலைகளுக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் உதவியிருக்கிறார்கள்; அதேசமயம், தாங்களும் அதிக வரிவிலக்கைப் பெற்றிருக்கிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம்மூலம் அல்லது தொலைபேசிமூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
Jehovah’s Witnesses,
Post Box 6440,
Yelahanka,
Bangalore 560 064,
Karnataka.
Telephone: (080) 28468072
[அடிக்குறிப்புகள்]
a இந்தியாவில், “The Watch Tower Bible & Tract Society of India” என்ற பெயரில் எடுக்க வேண்டும்
b இந்தியாவுக்குப் பொருந்தாது
c இந்தியாவில், “The Watch Tower Bible & Tract Society of India” என்ற பெயருக்குப் பணம் அளிக்கலாம்
d குறிப்பு: வரி விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். எனவே, வரியுடன் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் திட்டங்களையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் கணக்கரையோ வக்கீலையோ தொடர்புகொள்ளுங்கள். அதோடு, முடிவாக எந்த ஒரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன் உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தையும் தொடர்புகொள்ளுங்கள்.
e இந்தியாவில் கிடைப்பதில்லை