‘யெகோவாவுக்குக் காணிக்கை கொடுப்போம்’
உங்களுக்கு யாராவது உதவிக்கரம் நீட்டினால், அவர்களுக்கு எப்படி நன்றியை வெளிக்காட்டுவீர்கள்? சரி, இஸ்ரவேலின் படைத் தலைவர்கள் மீதியானியருடன் போர் செய்துவிட்டு வந்தபின் எப்படித் தங்களுடைய நன்றியைக் காட்டினார்கள் என்பதைக் கவனியுங்கள். இஸ்ரவேலர் பாகால் பேயோர் தெய்வத்தை வணங்கியதன் மூலம் ஒரு பெரிய பாவம் செய்த சம்பவத்திற்குச் சில காலத்திற்குப் பின், அந்தப் போர் நடைபெற்றது. அந்தப் போரில் கடவுள் தமது மக்களுக்கு வெற்றி தேடித் தந்தார்; கொள்ளைப்பொருள்களை 12,000 படைவீரர்களும் இஸ்ரவேலில் இருந்த மற்றவர்களும் பங்கிட்டுக் கொண்டார்கள். யெகோவாவின் கட்டளைப்படி, படைவீரர்கள் தங்களுடைய பங்கில் ஒரு பாகத்தைக் குருமார்களுக்குக் கொடுத்தார்கள்; இதேபோல் மற்ற இஸ்ரவேலரும் கொடுத்தார்கள்.—எண். 31:1-5, 25-30.
ஆனால், படைத் தலைவர்கள் இன்னும் நிறையச் செய்ய விரும்பினார்கள். “உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்த மனிதரைத் தொகை பார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை” என்று மோசேயிடம் அவர்கள் சொன்னார்கள். அதனால், பொன்னையும் பல்வேறு ஆபரணங்களையும் யெகோவாவுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தார்கள். பொன் ஆபரணங்களின் மொத்த எடை 190 கிலோகிராமுக்கும் அதிகமாய் இருந்தது.—எண். 31:49-54.
அதேபோல் இன்றும் அநேகர் தங்கள்மீது யெகோவா பொழிந்திருக்கிற ஆசீர்வாதத்திற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நன்றியைக் காட்டுகிறார்கள். உதாரணமாக, 2009-ஆம் ஆண்டில், இத்தாலியில் பொலோக்னா என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டு அரங்கத்திற்குப் பிரதிநிதிகளை பஸ் டிரைவர் ஒருவர் அழைத்துச் சென்று, பின்பு அங்கிருந்து திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தார். அவர் மிகவும் கவனமாக ஓட்டினார், அதோடு கனிவாகவும் நடந்துகொண்டார். அதனால், பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் அவருக்கு ‘தேங்க் யூ’ கார்டும் டிப்ஸும், அதோடு பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகமும் கொடுத்தார்கள். அப்போது, அந்த டிரைவர் சொன்னார்: “இந்தப் புத்தகத்தையும் கார்டையும் சந்தோஷமாக வாங்கிக்கொள்கிறேன், ஆனால் நீங்கள் செய்கிற வேலையைத் தொடர்ந்து செய்வதற்கு இந்தப் பணத்தை அப்படியே நன்கொடையாக உங்களுக்குத் தருகிறேன். நான் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லையென்றாலும் இந்த நன்கொடையைக் கொடுக்கிறேன், ஏனென்றால் நீங்கள் எல்லாவற்றையும் அன்பினால் செய்வதைப் பார்க்கிறேன்.”
யெகோவா உங்களுக்காகச் செய்த நன்மைகளுக்கெல்லாம் நன்றி தெரிவிக்க விரும்பினால், யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு நன்கொடை வழங்கலாம். (மத். 24:14) சிலர் எவ்வாறெல்லாம் நன்கொடை வழங்குகிறார்கள் என்பதை இங்கே உள்ள பெட்டியில் பாருங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தியாவில், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயரில் எடுக்க வேண்டும்
b இந்தியாவுக்குப் பொருந்தாது
c குறிப்பு: வரி விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். எனவே, வரியுடன் சம்பந்தப்பட்ட சட்டங்களையும் திட்டங்களையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் கணக்கரையோ வக்கீலையோ தொடர்புகொள்ளுங்கள். அதோடு, முடிவாக எந்த ஒரு தீர்மானத்தையும் எடுப்பதற்குமுன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்தையும் தொடர்புகொள்ளுங்கள்.
d இந்தியாவில், “The Watch Tower Bible and Tract Society of India” என்ற பெயரில் எடுக்க வேண்டும்
e இந்தியாவில் கிடைப்பதில்லை