உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 11/15 பக். 8-9
  • உதவிக்கரம் நீட்ட தயாரா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உதவிக்கரம் நீட்ட தயாரா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • இதே தகவல்
  • அவர்களுடைய மிகுதி பற்றாக்குறையை ஈடுகட்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • மிகப் பிரமாண்டமான வேலை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • யெகோவாவுடைய தாராள குணத்துக்கு நன்றியோடு இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • மனதார கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 11/15 பக். 8-9
[பக்கம் 8-ன் படம்]

உதவிக்கரம் நீட்ட தயாரா?

“தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெடித்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்” எனச் சொல்கிறார் வளர்ந்துவரும் ஒரு நாட்டில் மூப்பராகச் சேவை செய்யும் ஃப்ரான்ஸ்வா. “உணவுக்கும் மருந்துக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது; கிடைத்த ஒருசில பொருள்களின் விலையும் ரொம்ப அதிகமாக இருந்தது. வங்கிகள் மூடப்பட்டன, ஏ.டி.எம். மெஷின்களில் பணம் காலியாயின, சில செயல்படாமல் போயின” என்கிறார் அவர்.

வீடிழந்து தவித்த சாட்சிகள் நாடெங்கும் வெவ்வெறு ராஜ்ய மன்றங்களில் தஞ்சம் புகுந்தனர். கிளை அலுவலக சகோதரர்கள் துளியும் தாமதிக்காமல் அவர்களுக்குப் பணத்தையும் பொருள்களையும் அனுப்பிவைத்தனர். ஆனால், எதிரெதிர் கோஷ்டியினர் சாலைகளை அடைத்து வைத்திருந்தனர். என்றாலும், யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகிப்பதில் பேர்போனவர்கள் என்பது அந்த இரண்டு கோஷ்டியினருக்கும் தெரிந்திருந்ததால் கிளை அலுவலக வண்டிகளைச் செல்ல அனுமதித்தனர்.

ஃப்ரான்ஸ்வா தொடர்கிறார்: “ஒரு ராஜ்ய மன்றத்திற்கு நாங்கள் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென மறைவிலிருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் எங்களைக் குறிவைத்தன. நல்லவேளை, எங்கள்மீது குண்டு பாயவில்லை. ஒரு படைவீரர் கையில் துப்பாக்கியுடன் எங்களை நோக்கி ஓடி வருவதைப் பார்த்ததும், சர்ரென்று வண்டியைக் கிளை அலுவலகத்திற்கே திருப்பினோம். உயிரைக் காப்பாற்றியதற்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னோம். மறுநாள், அந்த ராஜ்ய மன்றத்திலிருந்த 130 சகோதரர்கள் பாதுகாப்பான இடத்திற்குப் போய்ச்சேர்ந்தார்கள். சிலர் கிளை அலுவலகத்திற்கு வந்தார்கள்; நிலைமை சரியாகும்வரை அவர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களுடைய ஆன்மீகத் தேவைகளையும் மற்ற தேவைகளையும் கவனித்துக்கொண்டோம்.”

“பிற்பாடு, நாடெங்குமிருந்து சகோதரர்கள் தங்களுடைய உள்ளப்பூர்வ நன்றியைத் தெரிவித்து ஏராளமான கடிதங்களை கிளை அலுவலகத்திற்கு அனுப்பினார்கள். வெவ்வேறு இடங்களிலிருந்த சகோதரர்கள் உதவிக்கரம் நீட்டியபோது யெகோவாமீது அவர்களுக்கிருந்த நம்பிக்கை இன்னும் அதிகமானது” என்கிறார் ஃப்ரான்ஸ்வா.

இயற்கைப் பேரழிவுகளும் மனிதரின் நாசகர செயல்களும் கோர முகம் காட்டுகிற சமயங்களில் நம் சகோதர சகோதரிகளிடம், “உங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ளுங்கள், வயிறாரச் சாப்பிடுங்கள்” என்று நாம் வாயளவில் சொல்வதில்லை. (யாக். 2:15, 16) மாறாக, அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருகிறோம். முதல் நூற்றாண்டிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது; பஞ்சக் காலத்தைப் பற்றிய முன்னெச்சரிப்பு கிடைத்தபோது “சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார்கள்.”—அப். 11:28-30.

யெகோவாவின் ஊழியர்களான நாம், கஷ்டத்தில் தவிப்போருடைய பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யத் தயாராய் இருக்கிறோம். அதே சமயத்தில், மக்களுக்கு ஆன்மீகத் தேவையும் இருக்கிறது. (மத். 5:3) அந்தத் தேவையை அவர்களுக்கு உணர்த்தி, அதைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே சீடராக்கும் வேலையை இயேசு நமக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 28:19, 20) அந்த வேலைக்காக நம்முடைய நேரத்தையும், சக்தியையும், வளங்களையும் அளிக்கிறோம். அமைப்பிற்கு வரும் நன்கொடையில் ஒரு சிறிய தொகை பொருளாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மீந்திருக்கிரும் தொகை முழுவதும் கடவுளுடைய சேவைக்காகவும் பிரசங்க வேலைக்காகவுமே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, கடவுள்மீதும் மக்கள்மீதும் நமக்கு அன்பு இருப்பதைக் காட்டுகிறோம்.—மத். 22:37-39.

யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு கிடைக்கும் நன்கொடைகள் சிறந்த விதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதில் நிச்சயமாய் இருங்கள். கஷ்டத்தில் தவிக்கும் உங்கள் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்ட உங்களால் முடியுமா? சீடராக்கும் வேலையை ஆதரிக்க உங்களுக்கு ஆசை இருக்கிறதா? அப்படியானால், ‘நன்மை செய்யும்படி உங்களுக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இருக்காதீர்கள்.’—நீதி. 3:27.

உலகளாவிய வேலைக்கு சிலர் நன்கொடை வழங்க விரும்பும் வழிகள்

அப்போஸ்தலன் பவுலுடைய நாட்களில் அநேகர் எப்படி நன்கொடை அளித்தார்களோ அப்படியே இன்றும், அநேகர் திட்டமிட்டுப் பணம் ஒதுக்கி, “உலகளாவிய வேலை” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதைப் போடுகிறார்கள். (1 கொ. 16:2) இத்தொகையைச் சபைகள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. நீங்கள் மனப்பூர்வமாக அளிக்கும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.a கீழ்க்காணும் வழிகளில் அனுப்பி வைக்கலாம்:

  • நிபந்தனையற்ற நன்கொடை

    • பணம், நகை, அல்லது விலைமதிப்புள்ள மற்ற பொருள்களை நன்கொடையாக வழங்கலாம்.

    • எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படுகிற நன்கொடை என்பதைக் குறிப்பிடும் கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.

  • நிபந்தனையின் பேரில் நன்கொடை

    • நன்கொடைப் பணம் கொடுப்பவரது கோரிக்கையின் பேரில் திரும்பக் கொடுக்கப்படும்.

    • நிபந்தனையின் பேரில் நன்கொடை கொடுக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் கடிதத்தோடு அதை அனுப்பி வைக்க வேண்டும்.

  • திட்டமிட்ட நன்கொடைb

    நிபந்தனையற்ற பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய சேவைக்கு நன்கொடை அளிக்க மற்ற வழிகளும் இருக்கின்றன. அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த வழியில் அல்லது வழிகளில் நன்கொடை அளிக்க விரும்பினாலும் உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்திடம் விவரங்களை முன்னதாகக் கேட்டறியுங்கள். வரி விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். எனவே, வரியுடன் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களைத் தெரிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் கணக்கரையோ வக்கீலையோ தொடர்புகொள்ளுங்கள்.

    இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தில் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.

    வங்கிக் கணக்குகள்: வங்கிக் கணக்குகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலமோ அவரது மரணத்திற்குப் பிறகோ யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குக் கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.

    பங்குகளும் பத்திரங்களும்: பங்குகளையும் பத்திரங்களையும் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம் அல்லது சட்டப்பூர்வ உயிலில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.

    நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு அளிக்கலாம்; அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம்வரை அதை அனுபவிப்பதற்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

    வருடாந்தர அன்பளிப்பு: ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது பத்திரங்களை யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குக் கொடுக்கும் ஏற்பாடு இது. இந்த ஏற்பாட்டின்படி, நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டைச் செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரிச் சலுகைகள் உண்டு.

    உயில்களும் டிரஸ்ட்டுகளும்: சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலம் சொத்து அல்லது பணம் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குச் சொந்தமாகும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம். இந்த ஏற்பாட்டில் சில வரிச் சலுகைகள் கிடைக்கலாம்.

“திட்டமிட்ட நன்கொடை” என்பது, நன்கொடை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலையை ஆதரிக்க விரும்புகிறவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.c பல்வேறு வழிகளில் இப்போதோ பிற்பாடோ நன்கொடை கொடுப்பது பற்றிய தகவல்களை அளிப்பதற்காக இந்தச் சிற்றேடு தயாரிக்கப்பட்டுள்ளது. உங்கள் நாட்டினுடைய வரிச் சட்டம் அல்லது வேறு சட்டங்கள் காரணமாக இந்தச் சிற்றேட்டிலுள்ள எல்லாத் தகவல்களும் உங்களுடைய சூழ்நிலைக்குப் பொருந்தாதிருக்கலாம். எனவே, இந்தச் சிற்றேட்டைப் படித்துவிட்டு, உங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்தாலோசியுங்கள். மேற்குறிப்பிடப்பட்ட வழிகளில் நன்கொடை அளித்ததன் மூலம் உலகமுழுவதும் நடக்கும் நமது மத வேலைகளுக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் அநேகர் உதவியிருக்கிறார்கள்; இதனால், அதிகபட்ச வரிவிலக்கைப் பெற்றிருக்கிறார்கள். இந்தச் சிற்றேடு உங்கள் நாட்டில் இருந்தால் இதன் ஒரு பிரதியை சபை செயலரிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

[அடிக்குறிப்புகள்]

a இந்தியாவில், “Jehovah’s Witnesses of India” என்ற பெயரில் நன்கொடைகளை அனுப்ப வேண்டும்

b முடிவான தீர்மானத்தை எடுப்பதற்குமுன் உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

c ‘மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை கனம்பண்ணுங்கள்’ என்ற ஆவணம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

Jehovah’s Witnesses of India

Post Box 6440, Yelahanka

Bangalore 560 064

Karnataka, India

Telephone: 09845476425 09845348815

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்