மனதார கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
சொந்தமா யோசித்து தீர்மானம் எடுக்கிற திறமையோடுதான் யெகோவா நம்மை படைத்திருக்கிறார். இந்தத் திறமையை சரியாகப் பயன்படுத்தும்போது யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார். முக்கியமாக, (1) அவருடைய சேவையில் அதிகம் செய்யும்போது, (2) சாத்தான் கெட்டவன் என்பதை நம்முடைய செயல்கள் மூலமாக நிரூபிக்கும்போது, (3) யெகோவாவுடைய விருப்பத்தை நிறைவேற்ற நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது அவர் நம்மை ஆசீர்வதிப்பார். மற்றவர்களுடைய கட்டாயத்தினாலோ, அவர்கள்மேல் இருக்கிற பயத்தினாலோ நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியக் கூடாது. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால், நாம் முழு மனதோடு அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், நமக்காக அவர் செய்திருக்கிற எல்லா நல்ல விஷயங்களுக்காகவும் நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்.
இஸ்ரவேலர்கள் சீனாய் வனாந்தரத்தில் இருந்தபோது என்ன நடந்தது என்று கவனியுங்கள். தம்மை வணங்குவதற்காக ஒரு கூடாரத்தை கட்ட வேண்டும் என்று யெகோவா, இஸ்ரவேலர்களிடம் சொன்னார். மோசே அவர்களிடம், “உங்களுக்கு உண்டானதிலே [யெகோவாவுக்கு] ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்” என்று சொன்னார். (யாத். 35:5) இஸ்ரவேலில் இருந்த ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்ததை கொடுக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார். அவர்கள் எதை கொண்டுவந்தாலும் சரி அதை முழு மனதோடு கொண்டுவர வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். இஸ்ரவேலில் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?
யாரெல்லாம் யெகோவாவுக்கு காணிக்கை கொடுக்க விரும்பினார்களோ அவர்கள் எல்லாரும் “மனமுவந்து கொடுத்துக்கொண்டே” இருந்தார்கள். ஆடை அலங்கார ஊசிகள், தோடு, மோதிரம், தங்கம், வெள்ளி, செம்பு, நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை, வெள்ளாட்டு மயிர், சிவப்புச் சாயம்போட்ட செம்மறிக்கடாத் தோல், கடல்நாய்த் தோல், வேல மரத்துண்டுகள், பலவிதமான ரத்தின கற்கள், வாசனை தைலம், எண்ணெய் போன்ற எல்லாவற்றையும் யெகோவாவுடைய வேலைக்காக கொண்டுவந்தார்கள். அவர்கள் ‘கொண்டுவந்த பொருள்களே எல்லா வேலைக்கும் போதுமானதாகவும், தேவைக்கும் அதிகமானதாகவும்’ இருந்தது.—யாத். 35:21-24, 27-29; 36:7, NW.
இஸ்ரவேலர்கள் கொண்டுவந்த பொருள்களைவிட அவர்களுடைய நல்ல மனதை பார்த்துத்தான் யெகோவா சந்தோஷப்பட்டார். இஸ்ரவேலர்கள், அவர்களுடைய நேரத்தையும் சக்தியையும் யெகோவாவுக்காக கொடுத்தார்கள். உதாரணத்திற்கு, திறமையுள்ள பெண்கள் அவர்கள் கைகளாலேயே நூல் செய்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. எல்லாவித கைவேலைகளையும் பெசலெயேலும் அகோலியாபும் முழு மனதோடு செய்தார்கள். அவர்கள் செய்த எல்லா வேலையையும் யெகோவா ஆசீர்வதித்தார். அவர்களுக்குத் தேவையான “ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் திறமையையும் அறிவையும்” கொடுத்தார்.—யாத். 35:25, 26, 30-35, NW.
தம்மை முழு மனதோடு வணங்குகிறவர்கள் தாராளமாக நன்கொடை கொடுப்பார்கள் என்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அப்படி தாராளமாகக் கொடுத்தவர்களை யெகோவா ஆசீர்வதித்தார். அதோடு, அவருடைய வேலையை செய்து முடிக்க இஸ்ரவேல் மக்களுக்கு தேவையான எல்லா உதவியையும் செய்தார். (சங். 34:9) யெகோவாவுக்கு நீங்கள் மனதார செய்யும் எல்லாவற்றையும் அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தியாவில், “Jehovah’s Witnesses of India” என்ற பெயரில் நன்கொடைகளை அனுப்ப வேண்டும்.
b இந்திய அரசு வழங்கிய பாஸ்போர்ட் வெச்சிருக்கிறவங்க, jwindiagift.org வெப்சைட்டை பயன்படுத்தி நன்கொடை கொடுக்கலாம்.
c முடிவான தீர்மானத்தை எடுக்குறதுக்கு முன்னாடி உங்க நாட்டின் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்க.
d ‘மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை கனம்பண்ணுங்கள்’ என்ற ஆவணம் இந்தியாவில் ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.
Jehovah’s Witnesses of India
Post Box 6440, Yelahanka
Bangalore 560 064
Karnataka, India
Telephone: 09845476425
09845348815