உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w16 நவம்பர் பக். 19-20
  • மிகப் பிரமாண்டமான வேலை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மிகப் பிரமாண்டமான வேலை!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • இதே தகவல்
  • யெகோவாவுடைய தாராள குணத்துக்கு நன்றியோடு இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • மனதார கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • அவர்களுடைய மிகுதி பற்றாக்குறையை ஈடுகட்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • உதவிக்கரம் நீட்ட தயாரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
w16 நவம்பர் பக். 19-20
ஆலயத்தின் வரைபடத்தைத் தாவீது ராஜா ஒருவரிடம் காட்டுகிறார்; கட்டுமான திட்டங்களை ஒரு சகோதரர் பார்த்துக்கொண்டிருக்கிறார்

மிகப் பிரமாண்டமான வேலை!

எருசலேமில் நடக்கப்போகும் மிக முக்கியமான கூட்டத்துக்கான நேரம் அது. தன்னுடைய தலைவர்களையும், அரண்மனை அதிகாரிகளையும், பலசாலிகளையும் தாவீது ராஜா அழைத்திருக்கிறார். ஒரு விசேஷ அறிவிப்பைக் கேட்பதில் அவர்கள் எல்லாருக்கும் பயங்கர சந்தோஷம்! உண்மைக் கடவுளை வணங்குவதற்காக ஒரு பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டும்படி தாவீதின் மகனான சாலொமோனை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த வயதான இஸ்ரவேல் ராஜாவுக்குக் கடவுளுடைய சக்தியால் ஆலயத்தின் வரைபடம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது; அவர் அதைச் சாலொமோனுக்குக் கொடுத்திருக்கிறார். “செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை” என்று தாவீது சொல்கிறார்.—1 நா. 28:1, 2, 6, 11, 12; 29:1.

அடுத்ததாக, தாவீது இந்தக் கேள்வியைக் கேட்கிறார்: “இப்போதும் உங்களில் இன்றைய தினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார்?” (1 நா. 29:5) நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள்? அந்தப் பிரமாண்டமான வேலையை ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டிருப்பீர்களா? இஸ்ரவேலர்கள் உடனடியாகச் செயல்பட்டார்கள். “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்.”—1 நா. 29:9.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அந்த ஆலயத்தைவிட மிகப் பிரமாண்டமான ஒன்றை யெகோவா ஏற்படுத்தினார். இயேசுவுடைய பலியின் அடிப்படையில் மக்கள் தன்னை வணங்குவதற்காக, ஓர் ஆன்மீக ஆலயத்தை அவர் ஏற்படுத்தினார். (எபி. 9:11, 12) மக்கள் தன்னோடு சமரசமாவதற்கு யெகோவா எப்படி உதவுகிறார்? சீடராக்கும் வேலையின் மூலம் இதைச் செய்கிறார். (மத். 28:19, 20) இதனால், ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கான சீடர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். நூற்றுக்கணக்கான புதிய சபைகள் உருவாகின்றன.

இந்த அமோக வளர்ச்சியின் காரணமாக, நிறைய பைபிள் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட வேண்டியிருக்கிறது. நிறைய ராஜ்ய மன்றங்களைக் கட்டவும் அதைப் பராமரிக்கவும் வேண்டியிருக்கிறது. அதோடு, மாநாட்டு மன்றங்களைக் கட்டுவதற்கான இடங்களையும் வாங்க வேண்டியிருக்கிறது. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் நம் வேலை பிரமாண்டமாக நடந்து வருகிறது என்பதையும், அந்த வேலை அமோக பலன்களைத் தருகிறது என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், இல்லையா?—மத். 24:14.

கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் இருக்கிற அன்பும், பிரசங்க வேலையின் அவசரத்தன்மையும், ‘கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளை மனப்பூர்வமாகச் செலுத்த’ கடவுளுடைய மக்களைத் தூண்டுகிறது. ‘[நம்முடைய] பொருளால் கர்த்தரைக் கனம்பண்ணுவது’ நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! இந்த வளங்களை உண்மையாகவும் ஞானமாகவும் பயன்படுத்தி, மனித சரித்திரத்திலேயே மிகப் பிரமாண்டமான விதத்தில் இந்த வேலை செய்யப்பட்டு வருகிறது. இதைப் பார்ப்பது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!—நீதி. 3:9.

உலகளாவிய வேலைக்கு சிலர் என்னென்ன வழிகளில் நன்கொடை கொடுக்கிறார்கள்?

இன்று, நிறைய பேர் தங்களுடைய வரவுசெலவைக் கணக்குப்போட்டு, பணத்தை ‘சேமித்து வைக்கிறார்கள்.’ சேமித்து வைத்த பணத்தை “உலகளாவிய வேலை” என்று எழுதப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டியில் போடுகிறார்கள். (1 கொ. 16:2) இந்த நன்கொடைகளை அந்தந்த நாட்டில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு சபைகள் ஒவ்வொரு மாதமும் அனுப்புகின்றன. உங்கள் நன்கொடைகளை உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்துக்கு நேரடியாகவும் அனுப்பி வைக்கலாம். யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி பதிவு செய்திருக்கும் பெயரில் அதை அனுப்புங்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) கீழே கொடுத்திருக்கிற வழிகளில் நீங்கள் நேரடியாக நன்கொடைகளை அனுப்பலாம்:

நிபந்தனை இல்லாத நன்கொடை

  • எலக்ட்ரானிக் பாங்கிங் மூலமாக நன்கொடை கொடுக்கலாம்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

  • பணம், நகை, அல்லது விலைமதிப்புள்ள மற்ற பொருள்களை நன்கொடையாகக் கொடுக்கலாம். எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கப்படுகிற நன்கொடை என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.

திட்டமிட்ட நன்கொடைc

நிபந்தனை இல்லாத பண நன்கொடைகளையும் மற்ற பொருள்களையும் தவிர, உலகளாவிய சேவைக்கு நன்கொடை கொடுக்க மற்ற வழிகளும் இருக்கின்றன. அவை கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. எந்த வழியில் அல்லது வழிகளில் நன்கொடை கொடுக்க விரும்பினாலும் உங்கள் நாட்டில் இருக்கிற கிளை அலுவலகத்திடம் முதலில் விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வரி விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். அதனால், வரியுடன் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களைத் தெரிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் கணக்கரையோ வக்கீலையோ கேளுங்கள்.

இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தில் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.

வங்கிக் கணக்குகள்: வங்கிக் கணக்குகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலமாகவோ அவரது மரணத்துக்குப் பிறகோ யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குக் கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.

பங்குகளும் பத்திரங்களும்: பங்குகளையும் பத்திரங்களையும் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு நிபந்தனை இல்லாத நன்கொடையாகக் கொடுக்கலாம், அல்லது சட்டப்பூர்வ உயிலில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.

நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு ஆகியவற்றை நிபந்தனை இல்லாத நன்கொடையாக யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குக் கொடுக்கலாம்; அல்லது தங்கும் இடமாக இருந்தால், அதைக் கொடுக்கிறவர் அவருடைய மரணம்வரை அதை அனுபவிக்க ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

உயில்களும் டிரஸ்ட்டுகளும்: சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலமாக சொத்து அல்லது பணம் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குச் சொந்தமாகும்படி எழுதி வைக்கலாம், அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம். இந்த ஏற்பாட்டில் சில வரிச் சலுகைகள் கிடைக்கலாம்.

“திட்டமிட்ட நன்கொடை” என்பது நன்கொடை கொடுப்பவர் அதற்காக முன்பே நன்றாகத் திட்டமிட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலையை ஆதரிக்க விரும்புகிறவர்களுக்கு ஆலோசனைகளைக் கொடுக்க உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை (Charitable Planning to Benefit Kingdom Service Worldwide) என்ற சிற்றேடு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.d (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பல வழிகளில் இப்போதோ அல்லது பிறகோ நன்கொடை கொடுப்பது சம்பந்தமான தகவல்களைக் கொடுப்பதற்காக இந்தச் சிற்றேடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் நாட்டின் வரி சட்டம் அல்லது வேறு சட்டங்கள் காரணமாக இந்தச் சிற்றேட்டில் உள்ள எல்லாத் தகவல்களும் உங்களுடைய சூழ்நிலைக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அதனால், இந்தச் சிற்றேட்டைப் படித்துவிட்டு, உங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்துபேசுங்கள். மேலே சொல்லப்பட்ட வழிகளில் நன்கொடை கொடுத்ததன் மூலமாக உலகம் முழுவதும் நடக்கிற நமது மத வேலைகளுக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் நிறையப் பேர் உதவி செய்திருக்கிறார்கள்; இதனால், அதிகபட்ச வரிவிலக்கு கிடைத்திருக்கிறது. இந்தச் சிற்றேடு உங்கள் நாட்டில் கிடைக்கும் என்றால், இதனுடைய ஒரு பிரதியை சபை செயலர் மூலமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளைக் கடிதம் மூலமாக அல்லது தொலைபேசி மூலமாகக் கீழே உள்ள முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்:

Jehovah’s Witnesses of India

Post Box 6440, Yelahanka

Bengaluru 560 064

Karnataka, India

Telephone: 080-2309426

a இந்தியாவில், “Jehovah’s Witnesses of India” என்ற பெயரில் நன்கொடைகளை அனுப்ப ­வேண்டும்.

b இந்திய அரசு வழங்கிய பாஸ்போர்ட் வைத்திருக்கிறவர்கள், www.jwindiagift.org வெப்சைட்டைப் பயன்படுத்தி நன்கொடை கொடுக்கலாம்.

c முடிவான தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

d ‘மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை கனம்பண்ணுங்கள்’ என்ற ஆவணம் இந்தியாவில் ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்