உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp17 எண் 4 பக். 3
  • மக்கள் என்ன நம்புகிறார்கள்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மக்கள் என்ன நம்புகிறார்கள்?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • இதே தகவல்
  • மரணத்திற்கு பின் வாழ்க்கை—ஜனங்கள் நம்புவதென்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ஆத்துமாவுக்கு ஒரு மேம்பட்ட நம்பிக்கை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • ஆத்துமா அழியாததா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • இறந்த பிறகு என்ன நடக்கிறது?—பைபிள் தரும் பதில்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
wp17 எண் 4 பக். 3
எரிகிற மெழுகுவர்த்திக்கு முன்பாக ஒரு பெண் ஜெபமாலையை கையில் வைத்துக்கொண்டு ஜெபம் செய்கிறாள்

ஆத்துமா அழியாது என்று நிறைய மதத்தைச் சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள்

அட்டைப்படக் கட்டுரை | இறந்த பிறகு வாழ்க்கை இருக்கிறதா? பைபிளின் கருத்து

மக்கள் என்ன நம்புகிறார்கள்?

மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உலகத்தில் பல வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. இறந்த பிறகு தங்களால் வேறு ரூபத்தில், வேறு இடத்தில் தொடர்ந்து வாழ முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். மறுபிறவி எடுக்க முடியும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் இன்னும் சிலர், மரணம்தான் வாழ்க்கைக்கு முடிவு என்று நினைக்கிறார்கள்.

இந்த விஷயத்தில், உங்களுக்கென்று ஒரு நம்பிக்கை இருக்கலாம். நீங்கள் வளர்ந்த விதமோ கலாச்சாரமோ அதற்கு காரணமாக இருக்கலாம். இறந்த பிறகு உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பது குழப்பமாகவே இருக்கிறது. அதற்கான சரியான பதிலை எங்கிருந்து தெரிந்துகொள்ள முடியும்?

பல நூற்றாண்டுகளாக, ஆத்துமா அழியாது என்ற கோட்பாட்டை மதத் தலைவர்கள் சொல்லிக்கொடுத்து வருகிறார்கள். கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து மதம், யூத மதம் மற்றும் வேறு பல மதங்கள் மரணத்துக்குப் பிறகு ஆத்துமா அழியாது... அது ஆவியுலகத்தில் தொடர்ந்து வாழ்கிறது... என்று நம்புகிறார்கள். புத்த மதத்தின் நம்பிக்கையைப் பாருங்கள். இறந்தவர்கள் பலமுறை மறுபிறவி எடுக்கிறார்கள்... கடைசியில், எந்தத் துன்பமும் இல்லாத ஒரு நிலையை அடைகிறார்கள். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிலைக்கு நிர்வாணா என்று பெயர்.

இறந்துபோன தங்களுடைய அன்பானவர்களுக்காக உணவைப் படைக்கிறார்கள்

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மரணத்துக்குப் பிறகு வேறொரு உலகத்தில் வாழ்க்கை இருக்கிறது என்று பலர் நம்புவதாக தெரிகிறது. வாழ்க்கை என்ற சுழற்சியில் மரணத்துக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். மனிதர்கள் சாக வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பங்களில் ஒன்று என்றும் அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், பைபிள் என்ன சொல்கிறது? பதிலைத் தெரிந்துகொள்ள அடுத்த கட்டுரையைப் படியுங்கள். அது நிச்சயம் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்