உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 8/1 பக். 3-4
  • ஆத்துமா அழியாததா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆத்துமா அழியாததா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அலைக்கழிக்கும் சில கேள்விகள்
  • மரணத்திற்கு பின் வாழ்க்கை—ஜனங்கள் நம்புவதென்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • உயிர்த்தெழுதலில் உங்கள் நம்பிக்கை எவ்வளவு உறுதியானது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • அழியாத ஆத்துமா உங்களுக்கு இருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • ஆத்துமாவுக்கு ஒரு மேம்பட்ட நம்பிக்கை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 8/1 பக். 3-4

ஆத்துமா அழியாததா?

திறந்திருக்கும் அந்தச் சவப்பெட்டியின் பக்கத்தில் கூடவே நண்பர்களும் குடும்பத்தினரும் அமைதியாக நடந்து செல்கிறார்கள். அந்த 17 வயது பையனின் சடலத்தை வெறித்துப் பார்க்கிறார்கள். பள்ளியிலிருந்து வந்த அவனது நண்பர்களால் அவனை அடையாளமே காணமுடியவில்லை. வேதியியல் மருந்து சிகிச்சை அவனது முடியை உதிர்த்துவிட்டிருந்தது; புற்றுநோய் அவனது உடல் எடையை அதிகமாக இளைக்க வைத்தது. இவன் உண்மையிலேயே அவர்களது நண்பன்தானா? இதோ, சில வாரங்களுக்கு முன்புகூட வாழ்க்கையைப்பற்றிய கருத்துக்களும், கேள்விகளும், ஆற்றலும் நிரம்பியவனாய் இருந்தானே! அந்தப் பையனின் தாய் கண்ணீரோடு மறுபடியும் மறுபடியுமாகச் சொல்கிறார்: “டாமி இப்போது அதிக சந்தோஷமாக இருக்கிறான். பரலோகத்தில் தம்மோடு டாமி இருக்கவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.”

இதயம் நொறுங்கிவிட்டிருக்கும் இந்தத் தாய் தனது மகன் எப்படியோ இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்ற எண்ணத்திலிருந்து ஓரளவுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அடைகிறார். ஆத்துமா அழியாதது என்றும் அது ஆளுமையின், சிந்தனைகளின், நினைவுகளின் இருப்பிடமாக அதாவது “தான்” (self) ஆக இருக்கிறது என்றும் சர்ச்சில் அவர் போதிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய மகனின் ஆத்துமா மரிக்கவேயில்லை என்பதாகவும், அது மரணத்தின்போது ஓர் உயிருள்ள ஆவியாக அவனது உடலைவிட்டு பரலோகத்திற்கு கடவுளுடனும் தேவதூதர்களுடனும் இருப்பதற்காகச் சென்றுவிட்டது என்பதாகவும் அவர் நம்புகிறார்.

பெரும் துயரமான நேரத்தில், எந்த ஒரு நம்பிக்கையின் சுடரையும் பரிதவிப்போடு மனித இருதயம் பற்றிக்கொள்கிறது; எனவே, இந்த நம்பிக்கை ஏன் இவ்வளவு கவரத்தக்கதாய் இருக்கிறது என்று காண்பது ஒன்றும் கடினமல்ல. உதாரணத்திற்கு, மறு உலகைப் பற்றிய சுவிசேஷம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் இறைமையியல் வல்லுநர் ஜே. பெட்டர்சன் ஸ்மித் தன் கருத்துக்களைச் சொல்வதை கவனியுங்கள்: “மரணத்திற்குப்பின்னர் வரக்கூடிய, அந்த மரணம் நமக்கு அறிமுகப்படுத்தவிருக்கும் அருமையான, அருமையான, அந்த அருமையான உலகுடன் ஒப்பிடுகையில் மரணம் என்பது ஒரு அற்ப காரியமே.”

உலகெங்கிலும், பல மதங்களிலும், கலாச்சாரங்களிலும், மனிதன் தன்னுள் ஓர் அழியாத ஆத்துமாவை, உடல் மரித்தப்பின்னும் தொடர்ந்து வாழும் ஓர் உணர்வுள்ள ஆவியைக் கொண்டிருக்கிறான் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை கிறிஸ்தவமண்டலத்தின் ஆயிரக்கணக்கான மதங்களிலும் மத உட்பிரிவுகளிலும் கிட்டத்தட்ட பரவலாக உள்ளது. இது யூத மதத்திலும் ஒரு முக்கிய கோட்பாடாக இருக்கிறது. ஆன்மா அல்லது ஆத்துமா முதலில் படைக்கப்பட்டதாகவும், பிறப்பின்போது உடலில் சிறைப்படுத்தப்படுவதாகவும், மறுபிறவி என்னும் தொடர் சுழற்சியில், மரணத்தின்போது மற்றொரு உடலுக்கு சென்றுவிடுதல் தொடர்வதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இஸ்லாமியர்கள், பிறப்பின்போது உடலோடு ஆத்துமா வருகிறது, உடல் மரித்தப்பின்பும் அது உயிரோடு இருந்துகொண்டிருக்கிறது என நம்புகிறார்கள். மற்ற மத நம்பிக்கையுள்ளவர்கள்—ஆப்பிரிக்காவைச்சேர்ந்த ஆன்மவாதி, ஷீண்டோ மதத்தவர், புத்தமதத்தவரும்கூட ஒருவிதத்தில்—இதே மூலப்பொருளை வேறுபாடுகளுடன் போதிக்கிறார்கள்.

அலைக்கழிக்கும் சில கேள்விகள்

அழியாத ஆத்துமாவைப்பற்றிய கோட்பாடு மறுக்க இயலாததாயும், கிட்டத்தட்ட உலகளாவிய விதத்தில் கவரத்தக்கதாயும் இருக்கிறபோதிலும், அது அமைதிகுலைக்கும் சில கேள்விகளை எழுப்புகிறது. உதாரணத்திற்கு, போற்றத்தக்க வாழ்க்கையை வாழாமல்போயிருந்தால் தங்களது அன்பானவரின் ஆத்துமா எங்கே போகிறது என மக்கள் வியக்கிறார்கள். ஏதோ ஒருவகை அஃறிணை உயிரியாய் அவர் மறுபிறவி எடுப்பாரா? அல்லது அவர் பரலோகத்திற்குப்போக தகுதியானவர் என்று தீர்க்கப்படும்வரை, உத்தரிக்கும் ஸ்தலத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கே நெருப்பினாலான செய்முறைபடிகள் சிலவற்றால் சுத்திகரிக்கப்படுவாரா? இன்னும் கொடியது, எரிநரகத்திலே அவர் என்றென்றுமாக வதைக்கப்படுவாரா? அல்லது சில ஆன்மவாத மதங்கள் போதிக்கிறதுபோல, சாந்திபடுத்த வேண்டிய ஓர் ஆவியாக அவர் இருக்கிறாரா?

அத்தகைய கோட்பாடுகள் உயிரோடிருப்பவர்களுக்குத் துயரமான எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன. நம்மை பழிவாங்குவார்கள் என்ற அச்சத்தினால் மரித்த நம் அன்பானவர்களின் ஆவிகளைச் சாந்திபடுத்த வேண்டுமா? ஏதோ பயங்கரமான உத்தரிக்கும் ஸ்தலத்திலிருந்து வெளியேற அவர்களுக்கு உதவிசெய்யும்படி நாம் எதிர்பார்க்கப்படுகிறோமா? அல்லது நரகத்தில் அவர்கள் அனுபவிக்கும் இன்னலை நினைத்து, உதவியற்ற பயத்தால் நாம் வெறுமனே நடுநடுங்க வேண்டுமா? அல்லது உயிரோடிருக்கும் சில விலங்குகள் மரித்த மனிதர்களின் ஆத்துமாக்களைக் கொண்டிருப்பதாக நாம் பாவிக்கவேண்டுமா?

கடவுள் பேரிலேயே எழும் கேள்விகளும் அதிக கலக்கத்தைத் தருகின்றன. உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்தத் தாயைப்போலவே பல பெற்றோர்கள், கடவுள் தங்கள் பிள்ளையின் அழியாத ஆத்துமாவைத் தம்மோடு இருக்கும்படி பரலோகத்திற்கு “எடுத்துக்கொண்டார்” என்ற எண்ணத்தினால் முதலில் ஆறுதல் அடைகிறார்கள். இருப்பினும், பலர் விரைவிலேயே இவ்வாறு சிந்திக்க துவங்குகிறார்கள், அப்பாவி பிள்ளையை ஏதோ கொடிய வியாதியால் வதைத்து, குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அந்த அருமையான பிள்ளையை இதயம் நொறுங்கியிருக்கும் பெற்றோர்களிடமிருந்து திடீரென்று பறித்து, பரலோகத்திற்குக் கொண்டுபோகும் கடவுள் எத்தகையவராக இருக்கக்கூடும். அத்தகைய கடவுளிடத்தில் நீதியும், அன்பும், இரக்கமும் எங்கே இருக்கிறது? அத்தகைய கடவுளின் ஞானத்தையும் சிலர் கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கேட்கிறார்கள், ஆத்துமாக்களெல்லாம் கடைசியில் எப்படியும் பரலோகத்திற்குதான் போகவேண்டுமென்றால், ஞானமுள்ள ஒரு கடவுள் ஏன் அவற்றை முதலில் பூமியில் வைக்கவேண்டும்? பூமியின் சிருஷ்டிப்பே ஒரு மாபெரும் வீண்முயற்சி என்று அது அர்த்தப்படுத்தவில்லையா?—ஒப்பிடுக: உபாகமம் 32:4; சங்கீதம் 103:8; ஏசாயா 45:18; 1 யோவான் 4:8.

அப்படியானால், தெளிவாகவே, எந்த வகையில் போதிக்கப்பட்டாலும் மனித ஆத்துமா அழியாமை என்னும் இந்தக் கோட்பாட்டு புரிந்துகொள்வதற்கு கடினமான கேள்விகளை எழுப்புகிறது, முரண்பாடுகளையும் கொண்டுவருகிறது. ஏன்? இந்தப் போதனையின் மூலங்களே அதிகமான குழப்பத்திற்குக் காரணம் ஆகும். நீங்கள் இந்த மூலங்களைச் சுருக்கமாக ஆய்வுசெய்வதை ஒருவேளை அறிவொளியூட்டுவதாக காண்பீர்கள்; பைபிளே ஆத்துமாவைப்பற்றி என்ன சொல்கிறது என்பதைக் கற்கும்போது ஒருவேளை ஆச்சரியமடைவீர்கள். மரணத்திற்குப்பின்னர் உள்ள வாழ்க்கையைப்பற்றி உலக மதங்கள் பொதுவாக போதிப்பதைக்காட்டிலும் மிகவும் மேம்பட்ட ஒரு நம்பிக்கையை அது அளிக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்