உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w17 நவம்பர் பக். 18-19
  • “தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • இதே தகவல்
  • மிகப் பிரமாண்டமான வேலை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • யெகோவாவுடைய தாராள குணத்துக்கு நன்றியோடு இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • அவர்களுடைய மிகுதி பற்றாக்குறையை ஈடுகட்டும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • மனதார கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
w17 நவம்பர் பக். 18-19
சிறுவனாகிய சாமுவேலை வழிபாட்டுக் கூடாரத்துக்கு அன்னாள் கூட்டிக்கொண்டு வருகிறாள்

“தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்”

பலிகள் செலுத்துவது, ரொம்பக் காலமாகவே உண்மை வணக்கத்தின் ஒரு முக்கியமான பாகமாக இருந்திருக்கிறது. இஸ்ரவேலர்கள் மிருக பலிகளைச் செலுத்தினார்கள். ஆனால், கிறிஸ்தவர்கள் எப்போதும் “புகழ்ச்சிப் பலியை” செலுத்திவருவது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும், கடவுளுக்குப் பிரியமான மற்ற பலிகளும் இருக்கின்றன. (எபி. 13:15, 16) இந்தப் பலிகளைச் செலுத்தும்போது சந்தோஷமும் ஆசீர்வாதங்களும் கிடைப்பதைப் பின்வரும் உதாரணங்கள் காட்டுகின்றன.

அன்று கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்த அன்னாள், தனக்கு ஒரு மகன் வேண்டுமென்று ஆசைப்பட்டாள். ஆனால், அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததால் அவள் யெகோவாவிடம், “ஒரு ஆண்குழந்தையைக் கொடுங்கள். யெகோவாவே, அவனை வாழ்நாள் முழுக்க உங்களுக்கே அர்ப்பணித்துவிடுகிறேன்” என்று நேர்ந்துகொண்டாள். (1 சா. 1:10, 11) பிற்பாடு, அன்னாள் கர்ப்பமாகி, சாமுவேல் என்ற மகனைப் பெற்றெடுத்தாள். சாமுவேல் தாய்ப்பால் மறந்தவுடனே, அன்னாள் தன்னுடைய நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காக அவனை வழிபாட்டுக் கூடாரத்துக்குக் கொண்டுபோய் விட்டாள். அன்னாள் செய்த அந்தத் தியாகத்துக்காக யெகோவா அவளை ஆசீர்வதித்தார். அவளுக்கு இன்னும் ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். சாமுவேல் ஒரு தீர்க்கதரிசியாகவும் பைபிள் எழுத்தாளர்களில் ஒருவராகவும் ஆனார்.—1 சா. 2:21.

அன்னாளையும் சாமுவேலையும் போல இன்று கிறிஸ்தவர்களுக்கும், தங்களுடைய வாழ்க்கையைக் கடவுளுடைய சேவைக்காக அர்ப்பணிக்கும் பாக்கியம் இருக்கிறது. யெகோவாவின் வணக்கத்துக்காக நாம் எப்படிப்பட்ட தியாகங்களைச் செய்தாலும் அதற்கான ஆசீர்வாதங்கள் ஏராளமாகக் கிடைக்கும் என்று இயேசு வாக்குக் கொடுத்தார்.—மாற். 10:28-30.

முதல் நூற்றாண்டில், தொற்காள் என்ற ஒரு கிறிஸ்தவப் பெண் “நிறைய நல்ல காரியங்களையும் தானதர்மங்களையும் செய்துவந்தாள்.” அதாவது, மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக நிறைய தியாகங்கள் செய்தாள். “ஒருநாள் அவள் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனாள்.” அப்போது, சபையில் இருந்தவர்கள் மிகவும் வேதனைப்பட்டார்கள். பேதுரு அந்தப் பகுதியில் இருந்ததை சீஷர்கள் கேள்விப்பட்டபோது, அவரைச் சீக்கிரமாக வரச் சொன்னார்கள். பேதுரு வந்து தொற்காளை உயிரோடு எழுப்பியபோது அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! ஒரு அப்போஸ்தலர் செய்த உயிர்த்தெழுதலைப் பற்றிய முதல் பதிவு இதுதான்! (அப். 9:36-41) தொற்காள் செய்திருந்த தியாகங்களைக் கடவுள் மறக்கவில்லை. (எபி. 6:10) அவள் காட்டிய தாராள குணத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அதைப் பற்றிக் கடவுளுடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மற்றவர்களுக்காகத் தாராளமாக நேரம் செலவிடுவதிலும், அவர்கள்மேல் அக்கறை காட்டுவதிலும் அப்போஸ்தலன் பவுல்கூட நமக்கு அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார். கொரிந்துவிலிருந்த தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எழுதியபோது, “என்னிடம் இருப்பவற்றை உங்களுக்காகச் சந்தோஷமாய்ச் செலவு செய்வேன், என்னையே முழுவதும் உங்களுக்காக அர்ப்பணிப்பேன்” என்று சொன்னார். (2 கொ. 12:15) மற்றவர்களுக்காகத் தங்களையே தியாகம் செய்பவர்களுக்கு, மனத்திருப்தி மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக யெகோவாவின் ஆசீர்வாதமும் அங்கீகாரமும் கிடைக்கிறது என்பதை பவுல் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்.—அப். 20:24, 35.

கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்தும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஊழிய வேலைக்கு ஆதரவு தருவதற்கு வேறு வழிகளும் இருக்கின்றன. அன்பான செயல்களைச் செய்வதோடு, மனப்பூர்வமாக நன்கொடைகள் கொடுப்பதன் மூலமும் நாம் கடவுளை மகிமைப்படுத்தலாம். உலகம் முழுவதும் நடக்கிற ஊழிய வேலையை ஆதரிக்க அந்த நன்கொடைகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு, மிஷனரிகளையும் மற்ற விசேஷ முழுநேர ஊழியர்களையும் ஆதரிப்பதற்கு அவை பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைத் தயாரிக்கவும் மொழிபெயர்க்கவும், நிவாரண வேலைகளைக் கவனித்துக்கொள்ளவும், புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டவும் அவை பயன்படுத்தப்படுகின்றன. “தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நம்முடைய மதிப்புமிக்க பொருள்களை யெகோவாவுக்குக் கொடுக்கும்போது நாம் அவரை மகிமைப்படுத்துகிறோம்.—நீதி. 3:9; 22:9.

உலகளாவிய வேலைக்கு சிலர் என்னென்ன வழிகளில் நன்கொடை கொடுக்கிறார்கள்?

இன்று, நிறையப் பேர் தங்களுடைய வரவுசெலவைக் கணக்குப்போட்டு, பணத்தை ‘சேமித்து வைக்கிறார்கள்.’ சேமித்து வைத்த பணத்தை “உலகளாவிய வேலை” என்று எழுதப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டியில் போடுகிறார்கள். (1 கொ. 16:2) இந்த நன்கொடைகளை அந்தந்த நாட்டில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு சபைகள் ஒவ்வொரு மாதமும் அனுப்புகின்றன. உங்கள் நன்கொடைகளை உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்துக்கு நேரடியாகவும் அனுப்பி வைக்கலாம். யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி பதிவு செய்திருக்கும் பெயரில் அதை அனுப்புங்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) கீழே கொடுத்திருக்கிற வழிகளில் நீங்கள் நேரடியாக நன்கொடைகளை அனுப்பலாம்:

நிபந்தனை இல்லாத நன்கொடை

  • எலக்ட்ரானிக் பாங்கிங், டெபிட் கார்டு, அல்லது கிரெடிட் கார்டு மூலமாக நன்கொடை கொடுக்கலாம். சில நாடுகளில், jw.org வெப்சைட்டையோ இதற்கென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கும் வேறு வெப்சைட்டையோ பயன்படுத்தியும் நன்கொடை கொடுக்கலாம்.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

  • பணம், நகை, அல்லது விலைமதிப்புள்ள மற்ற பொருள்களை நன்கொடையாகக் கொடுக்கலாம். எந்த நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கப்படுகிற நன்கொடை என்று ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுங்கள்.

திட்டமிட்ட நன்கொடைc

நிபந்தனை இல்லாத பண நன்கொடைகளையும் மற்ற பொருள்களையும் தவிர, உலகளாவிய வேலைக்கு நன்கொடை கொடுக்க மற்ற வழிகளும் இருக்கின்றன. அவை கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. எந்த வழியில் அல்லது வழிகளில் நன்கொடை கொடுக்க விரும்பினாலும் உங்கள் நாட்டில் இருக்கிற கிளை அலுவலகத்திடம் முதலில் விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வரி விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். அதனால், வரியுடன் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களைத் தெரிந்துகொள்ள தயவுசெய்து உங்கள் கணக்கரையோ வக்கீலையோ கேளுங்கள்.

இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்தில் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.

வங்கிக் கணக்குகள்: வங்கிக் கணக்குகளை, மரணத்துக்குப் பிறகு யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குக் கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.

பங்குகளும் பத்திரங்களும்: பங்குகளையும் பத்திரங்களையும் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு நிபந்தனை இல்லாத நன்கொடையாகக் கொடுக்கலாம், அல்லது சட்டப்பூர்வ உயிலில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம்.

நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு ஆகியவற்றை நிபந்தனை இல்லாத நன்கொடையாக யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குக் கொடுக்கலாம்; அல்லது தங்கும் இடமாக இருந்தால், அதைக் கொடுக்கிறவர் அவருடைய மரணம்வரை அதை அனுபவிக்க ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

உயில்களும் டிரஸ்ட்டுகளும்: சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலமாக சொத்து அல்லது பணம் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்குச் சொந்தமாகும்படி எழுதி வைக்கலாம், அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம். இந்த ஏற்பாட்டில் சில வரிச் சலுகைகள் கிடைக்கலாம்.

“திட்டமிட்ட நன்கொடை” என்பது நன்கொடை கொடுப்பவர் அதற்காக முன்பே நன்றாகத் திட்டமிட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலையை ஆதரிக்க விரும்புகிறவர்களுக்கு ஆலோசனைகளைக் கொடுக்க உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை (Charitable Planning to Benefit Kingdom Service Worldwide) என்ற சிற்றேடு, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.d (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பல வழிகளில் இப்போதோ அல்லது பிறகோ நன்கொடை கொடுப்பது சம்பந்தமான தகவல்களைக் கொடுப்பதற்காக இந்தச் சிற்றேடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் நாட்டின் வரி சட்டம் அல்லது வேறு சட்டங்கள் காரணமாக இந்தச் சிற்றேட்டில் உள்ள எல்லாத் தகவல்களும் உங்களுடைய சூழ்நிலைக்குப் பொருந்தாமல் இருக்கலாம். அதனால், இந்தச் சிற்றேட்டைப் படித்துவிட்டு, உங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்துபேசுங்கள். மேலே சொல்லப்பட்ட வழிகளில் நன்கொடை கொடுத்ததன் மூலமாக உலகம் முழுவதும் நடக்கிற நமது மத வேலைகளுக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் நிறையப் பேர் உதவி செய்திருக்கிறார்கள்; இதனால், அதிகபட்ச வரிவிலக்கு கிடைத்திருக்கிறது. இந்தச் சிற்றேடு உங்கள் நாட்டில் கிடைக்கும் என்றால், இதனுடைய ஒரு பிரதியை சபை செயலர் மூலமாக வாங்கிக்கொள்ளுங்கள்.

இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளைக் கடிதம் மூலமாக அல்லது தொலைபேசி மூலமாகக் கீழே உள்ள முகவரியில் தொடர்புகொள்ளுங்கள்:

Jehovah’s Witnesses of India

Post Box 6440, Yelahanka Bengaluru 560064 Karnataka, India Telephone: 080-23092426

a இந்தியாவில், “Jehovah’s Witnesses of India” என்ற பெயரில் நன்கொடைகளை அனுப்ப வேண்டும்.

b இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறவர்கள், www.jwindiagift.org வெப்சைட்டைப் பயன்படுத்தி நன்கொடை கொடுக்கலாம்.

c முடிவான தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

d ‘மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை கனம்பண்ணுங்கள்’ என்ற ஆவணம் இந்தியாவில் ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்