முன்னிருக்கும் கூடுதலான நடவடிக்கைக்காக இப்பொழுதே ஆயத்தம் செய்யுங்கள்
1 அறுவடையின்போது அதில் உட்பட்டிருப்பவர்கள் எப்பொழுதும் இருப்பதைவிட அதிக வேலையாக இருக்கிறார்கள். இந்த அவசர காலத்தின்போது, ஆட்கள் எப்பொழுதையும்விட அதிக சுறுசுறுப்பாக உழைக்கிறார்கள். நாமும் அறுவடையின் காலத்திலும், அவசர காலத்திலும் வாழ்கிறோம். செய்வதற்கு அதிகம் இருக்கிறது. தேவையான எல்லாவற்றையும் செய்து முடிக்க நீங்கள் ஆயத்தம் செய்து வருகிறீர்களா?—மத். 9:37, 38; 13:39; லூக்கா 13:24; 1 தீமோ. 4:10.
ஞாபகார்த்தம்
2 ஞாபகார்த்த காலம் யெகோவாவின் ஜனங்களுக்கு வருடத்தில் மிக முக்கியமான காலமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஞாபகார்த்தம் மார்ச் 22, புதன்கிழமை சாயங்காலம் கொண்டாடப்படும். நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் அன்று ஆஜராயிருக்க, அதாவது, உங்களை எதுவும் தடைசெய்யாதபடி, முன் ஆயத்தம் செய்கிறீர்களா? உங்கள் உறவினரும் சிநேகிதரும்கூட அங்கு ஆஜராயிருக்கும்படி அவர்களுக்கு அழைப்பு கொடுத்து வந்திருக்கிறீர்களா? உங்கள் பிராந்தியத்திலுள்ள அக்கறை காட்டுபவர்கள், உங்கள் பைபிள் படிப்பு மாணவர் மற்றும் முன்பு நம்முடன் பைபிள் படித்தவர்கள், ஆகிய இவர்களைப் பற்றி என்ன?—லூக்கா 22:19; வெளி. 22:17.
3 எல்லாம் ஆயத்தமாக இருப்பதற்காக, ஞாபகார்த்த தினத்திற்கு முன்பு, ராஜ்ய மன்றம் நன்றாக சுத்தம் செய்யப்பட மூப்பர்கள் ஏற்பாடு செய்வார்கள். ஞாபகார்த்த தின பேச்சாளர், சின்னங்கள், அவற்றை பராமரிப்பது யார், கூடுதலான ஆசனங்கள், இந்த விசேஷ சம்பவத்துக்கு தேவையான வரவேற்பவர்கள் ஆகிய இவை யாவற்றிற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டாயிற்றா?
வெளி ஊழியத்தில் அதிகப்படியான பங்கு
4 ஞாபகார்த்த காலம் இயேசு நமக்காக கொடுத்த பலியை நமக்கு நினைப்பூட்டுகிறது. ஆகையால், நாம் வெளி ஊழியத்தில் நம்முடைய பங்கை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று சிந்திப்பது இது விசேஷமாக பொருத்தமான ஒரு சமயமாக இருக்கிறது. தம்முடைய குமாரன் மூலமாக யெகோவா நம்மிடமாக காட்டியிருக்கும் தகுதியற்ற தயவிற்காக நாம் நம்முடைய போற்றுதலை வெளிகாட்டுவதற்கு இது ஒரு வழியாகும்.
5 ஏப்ரல், மே அல்லது இரண்டு மாதங்களுமே நீங்கள் ஒரு துணைப் பயனியராக சேவை செய்யக்கூடுமா? வெளிப்படுத்துதலின் சக்திவாய்ந்த செய்தியை விளம்பரப்படுத்த விசேஷத்த முயற்சியில் இந்த மாதங்களில் ஈடுபடுவோம். ராஜ்ய பிரஸ்தாபிகள் இந்தச் சேவையில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்த விரும்புவர். இம்மாதத்தின் நல்ல சீதோஷ்ண நிலையும் இதற்கு ஏதுவாக இருக்கும். ஏப்ரல் மாதம் ஐந்து சனி, ஞாயிறுகளை உடையதாக இருக்கிறது. மகா பாபிலோனைப் பற்றிய காவற்கோபுர பிரதிகளைக் கொண்டு, ஐந்து வாரமும் தொடர்ந்து சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்தில் ஈடுபட இது எத்தகைய மகத்தான வாய்ப்பு! ஏப்ரல் 15 ஆங்கில காவற்கோபுரம், “தெய்வீக நீதி” மாநாடுகளில் அளிக்கப்பட்ட “இழிவான பெயர்பெற்ற வேசி” என்ற பேச்சு மற்றும் அதைத் தொடர்ந்த தீர்மானம் ஆகியவற்றின் முழு உரையையும் கொண்டிருக்கும். இந்தச் சக்திவாய்ந்த செய்தியை நம்மால் கூடுமான அளவு விரிவான விளம்பரம் கொடுக்க இந்த ஐந்து சனி, ஞாயிறு தினங்களில், கூடுமானால் துணைப்பயனியராக, அதிக சுறுசுறுப்புடன் ஈடுபட நமக்கு வேறு என்ன தூண்டுதல் தேவை! இந்த உணர்ச்சிச் தூண்டும் செய்தியோடு கூட்டுவதற்கு, ஏப்ரல் 8 ஆங்கில விழித்தெழு! நாஸி காலத்தின் கொடுமையான துன்புறுத்துதல் பேரில் தெளிவூட்டும் கட்டுரைகளை உடையதாயிருக்கும்.
6 வெளி ஊழியத்தில் அதிகப்படியான பங்குகொள்ள கூடுதலான முயற்சி தேவை. பயனியர் சேவை செய்ய முடியாவிட்டாலும், ஏப்ரல், மே மாதங்களுக்கு தனிப்பட்ட இலக்குகளை வைத்திருப்பது பொருத்தமாயிருக்கும். சொந்த நடவடிக்கைகளையும் பொழுதுபோக்குகளையும் குறைப்பதன் மூலமாக வெளி ஊழியத்தில் அதிகமான நேரம் செலவு செய்ய நீங்கள் ஏற்பாடு செய்யக்கூடுமா? பிரயாசப்படுங்கள். யெகோவா உங்களைப் பலப்படுத்தும்படியும் ஆசீர்வதிக்கும்படியும் கேளுங்கள். சரீர குறைபாடுள்ளவர்களும் மற்றவர்களுடைய உதவியோடு, இந்த விசேஷ வேலையில் கூடுதலான பங்கை உடையவர்களாய் இருக்கக்கூடும்.
7 நம் எல்லாருக்குமே ஏப்ரல், மே மாதங்கள் யெகோவாவின் சேவையில் அதிக வேலை நிறைந்த மாதங்களாக இருக்க வேண்டும். மூப்பர்கள் எல்லா ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்த அதிக ஊக்கமுள்ளவர்களாய் இருப்பார்கள். சபைக்கு தேவையான பிரசுரங்கள் முன்தீர்மானிக்கப்பட்டு, அவற்றை ஆர்டர் செய்ய வேண்டும். கூடுதலான பத்திரிகைகள், விசேஷமாக ஏப்ரல் 15 ஆங்கில காவற்கோபுரம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யவும். பிராந்தியத்திற்காக ஏற்பாடு செய்து, அதை முற்றிலுமாக செய்துமுடிக்க திட்டமிடவும். சாயங்கால ஊழியம் உட்பட, வெளி ஊழியத்துக்காக பொருத்தமான ஏற்பாடுகள் செய்யவும். யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக நாம் ஊக்கமாக ஜெபம் செய்வதோடு, அவருடைய மகிமைக்காக நம்முடைய நேரத்தை ஞானமான முறையில் பயன்படுத்துவோமாக.