ஒரே மந்தையாக உறுதியாய் நின்றுகொண்டிருத்தல்
1 1990-ம் ஆண்டிற்குரிய விசேஷ அசெம்பிளி நாளின் பொருள்: “ஒரே மந்தையாக உறுதியாய் நின்றுகொண்டிருத்தல்,” என்பதாகும். இந்தப் பொருள் பிலிப்பியர் 1:27-ன் பேரில் சார்ந்தது. காலை நிகழ்ச்சியானது உறுதியாய் நிலைநிற்க வேண்டிய அவசியத்தைக் காட்டும் விஷயங்களையும் உறுதியாய் நிலைநிற்பதற்கு நமக்கு உதவக்கூடிய ஏற்பாடுகளையும் உறுதியாய் நிலைநிற்கும் முன்மாதிரிகளையும் மற்றும் பலவீனப்படுத்தும் செல்வாக்குகளுக்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றிய தகவல்களையும் கொண்டிருக்கும். காலை நிகழ்ச்சியின் முடிவிலே முழுக்காட்டுதலுக்கான ஏற்பாடுகள் இருக்கும். முழுக்காட்டுதல் எடுக்க திட்டமிடுகிறவர்கள் நடத்தும் கண்காணிக்கு அதைப் போதிய காலத்துக்கு முன்னதாகவே தெரிவித்துவிட வேண்டும். அப்பொழுது நம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தின் பேரிலுள்ள கேள்விகளைக் கலந்தாராய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
2 பிற்பகல் நிகழ்ச்சியில் காவற்கோபுரத்தின் சுருக்கம் இருக்கும். அதைப் பின்தொடர்ந்து ஊழியத்தில் நம்பிக்கையான மனநிலையோடு இருப்பதற்கான உற்சாகமூட்டுதல், ஊழியத்தில் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கான ஆலோசனைகள் ஒரே ஆவியிலே உறுதியாய் நிற்பதற்கு நமக்கு உதவக்கூடிய நடைமுறையான அறிவுரைகள் இருக்கும். எக்காலத்தையும்விட இப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக ஒரே மந்தையாக உறுதியாய் நிற்பது அவசியமாக இருக்கிறது. உண்மை வணக்கத்திற்கான நம்முடைய ஐக்கியமான நிலைநிற்கை சாத்தானின் உலகில் நிலவக்கூடிய பிளவுண்டாக்கும் சக்திகளுக்கெதிராக நம்மைப் பாதுகாக்கும். மேலும் உண்மை வணக்கத்தில் மற்றவர்களும் நம்மைச் சேர்ந்துகொள்ள உதவுவதற்குரிய பலமான ஸ்தானத்தில் அது நம்மை வைக்கும்.
3 நிகழ்ச்சிநிரலானது ஆவிக்குரிய கட்டியெழுப்புதலாக இருக்கும். அந்த முழுநாளும் ஆஜராக இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நாம் அனைவரும் விரும்ப வேண்டும். உங்களுடைய விசேஷ அசெம்பிளி நாள் நிகழ்ச்சி எப்பொழுது திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதை உங்களுடைய வட்டாரக் கண்காணி உங்களுக்குத் தெரியப்படுத்துவார்.