“நான் உறுதியாக நிற்கிறேன்! உறுதியாக நிற்கிறேன்! உறுதியாக நிற்கிறேன்!”
1 நாசி படுகொலையைத் தப்பிப்பிழைத்த ஓர் உண்மை கிறிஸ்தவரின் அவ்வார்த்தைகள், நாசி கொடுமைகளின் மத்தியிலும் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்த—உயிரோடிருக்கிற, இறந்துவிட்ட—ஆயிரக்கணக்கான சாட்சிகளின் தீர்மானத்தை எதிரொலிக்கின்றன. (எபே. 6:11, 13) அவர்களுடைய தைரியத்தையும், வெற்றியையும் பற்றிய சிலிர்க்க வைக்கும் சரிதைதான் நாசி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிற்கின்றனர் என்ற இதயத்தை தூண்டுவிக்கும் ஆங்கில வீடியோவில் விவரிக்கப்பட்டுள்ளது. சபையிலுள்ள அனைவரும் அதைப் பார்க்கவும், தங்கள் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
2 பின்வரும் இக்கேள்விகள் உங்கள் சிந்தனையை செதுக்கட்டும்: (1) எந்தக் காரணங்களை முன்னிட்டு நாசிக்களுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நின்றனர்? (2அ) “ஹேல் ஹிட்லர்” என்ற வாழ்த்துதலைக் குறித்ததில் என்ன தவறான கருத்துக்கள் நிலவின, ஏன்? (2ஆ) சாட்சிகளின் குடும்பங்களை இது எப்படி பாதித்தது? (3) எத்தனை சாட்சிகள் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், அங்கு அவர்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர், அவர்களை கெஸ்டப்போ எப்படி நடத்தினர்? (4) விடுதலை பெறுவதற்காக எதை தியாகம் செய்ய நம் சகோதரர்கள் தயாராக இல்லை? (5அ) ஹிட்லர் ஆட்சியின் அட்டூழியங்களைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் எப்படி, எப்போது வெளிப்படையாக பேசினர்? (5ஆ) ஹிட்லர் எப்படி நடந்துகொண்டார்? (6) யெகோவாவின் ஜனங்கள் ஐக்கியமாக இருந்தது, சரீரப் பிரகாரமாகவும் ஆவிக்குரிய விதமாகவும் தங்களையும் மற்றவர்களையும் காத்துக்கொள்ள எப்படி உதவியது? (7) சித்திரவதை முகாமில் எந்த ராஜ்ய பாடல் இயற்றப்பட்டது? (8) என்ன ஏற்பட்டாலும் யெகோவாவிடம் உத்தமத்தைக் காத்துக்கொள்ள, உண்மையுள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்களின் என்ன உதாரணங்கள் உங்களைத் தூண்டுகின்றன? (1999 இயர்புக்கில் பக்கங்கள் 144-7-ஐயும் காண்க.) (9) யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இவ்வுலகின் பாகமாக இராதிருப்பதைக் குறித்து இந்த வீடியோ எப்படி உங்களை உணரச் செய்கிறது?
3 யெகோவாவின் சாட்சிகளுடைய சிறந்த முன்மாதிரிகள் உறுதியாக நிற்கின்றனர் என்ற இந்த வீடியோவில் காட்டப்பட்டது; இது இளைஞர்களுக்கு, சாட்சிகளாக இல்லாத இளைஞர்களுக்கும்கூட, சகிப்பின்மை, சகாக்களின் அழுத்தம், மனசாட்சி சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்சினைகளை சமாளிக்க உதவலாம். நீங்கள் நடுநிலை அல்லது உயர்நிலை பள்ளியில் படிக்கும் இளைஞராக இருந்தால் இது பற்றி வகுப்பறையில் கலந்தாராய உங்கள் ஆசிரியர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் அல்லவா? முடிந்தால் இந்த வீடியோ கேஸட்டை அவர்களுக்குக் கொடுத்து, அதை, உலகம் அறியா சரித்திர சம்பவம் என்றோ நன்னெறி புகட்டும் டாக்குமென்டரி படம் என்றோ விவரிக்கலாம்.
4 சரியானதை செய்வதில் உறுதியாக நிலைத்திருப்பதன் மூலம் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு தேவைப்படும் ஆவிக்குரிய பலத்தை தெய்வீக கல்வி அளிக்கிறது என்பதை காட்ட உறுதியாக நிற்கின்றனர் வீடியோ ஒப்பற்ற உபகரணம். (1 கொ. 16:13) சத்தியத்தில் ஆர்வம் காட்டும் அனைவரும் அதைக் காண வழிசெய்யுங்கள்.