சிறை கைதிகளுடன் கடிதத் தொடர்புக்கொள்ளுதல்
1 பலதரப்பட்ட வாழ்க்கை பிண்ணனியிலுள்ள ஆட்களை ராஜ்ய சத்தியம் எட்டுகிறது. அப்படியானால் சிறைக் கைதிகளுக்கு சாட்சி கொடுப்பதைப் பற்றியதென்ன? சிறையிலுள்ளவர்கள் சிலர் சாதகமாக பிரதிபலித்திருப்பதைப் பற்றிய ஒரு சில நல்ல அறிக்கைகள் வந்திருக்கின்றன. மேல் நாடுகளில் அநேக நிறுவனங்களில் பைபிள் படிப்புகளும் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இது புதிய சீஷர்கள் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுவதில் விளைவடைந்திருக்கிறது.
2 அநேகருடைய காரியத்தில் கடிதங்கள் மூலமாக சிறை கைதிகளுக்குச் சாட்சி கொடுக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் ஓர் எச்சரிக்கை வார்த்தை கூறுவதை அத்தியாவசியமென நாங்கள் உணருகிறோம். மற்றவர்களோடு தொடர்புகொள்ள விரும்பும் ஒரு சில சிறைக் கைதிகள் ஐயத்துக்குரிய உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதாக காணப்பட்டிருக்கிறது. தேவைக்கேற்றவாறு வேதப்பூர்வமான தகவல்களையும் உற்சாகமூட்டுதல்களையும் பைபிள் இலக்கியங்களையும் கொடுத்து, சிறைக் கைதிகளுக்கு கடிதங்கள் எழுதுவது பொருத்தமாக இருந்தபோதிலும், பணமோ தனிப்பட்ட சில பரிசுகளோ அனுப்பப்படக்கூடாது. கடிதம் எழுதுபவர் இப்படி காரியங்களை கேட்டாலும்கூட அனுப்பக்கூடாது.
3 ஆண் சிறைக் கைதிகளோடுகூட தகுதிவாய்ந்த சகோதரர்கள் மட்டுமே கடித தொடர்புகொள்ள வேண்டும் என்று பலமாக சிபாரிசு செய்யப்படுகிறது. மேலும் பெண் கைதிகளோடு தகுதிவாய்ந்த சகோதரிகள் மட்டுமே கடித தொடர்புகொள்ள வேண்டும். சபையிலுள்ள தனிப்பட்டவர்கள் கண்மூடித்தனமாக சிறை கைதிகளை சந்திக்கக்கூடாது. மேலும் சிறையினுள் இருப்பர்களிடம் நெருங்கிய தோழமை கொள்ளக்கூடாது.
4 ஒரு சிறைக் கைதி ஆர்வம் காட்டுவாரானால் அந்தக் குறிப்பிட்ட நிறுவனம் எந்தப் பிராந்தியத்திலிருக்கிறதோ அங்குள்ள சபையிடம் பெயர்களையும் விலாசங்களையும் ஒப்படைக்க வேண்டும். அங்குள்ள தகுதிவாய்ந்த சகோதரர்கள் இந்தச் சிறைக் கைதிகளைச் சந்தித்து, சத்தியத்தின்பேரில் மனப்பூர்வமான ஆர்வம் இருக்குமானால் பைபிள் படிப்புக்கு ஏற்பாடு செய்வார்கள்.
5 என்றபோதிலும் சிறைக் கைதிகளோடு தொடர்பு கொள்ளுகையில் நாம் எச்சரிக்கையோடிருக்க வேண்டும் என்பதை நாங்கள் மீண்டுமாக கூறவிரும்புகிறோம்.