உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/90 பக். 6
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
  • இதே தகவல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2010
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2000
  • வணக்கத்துக்காக ஒன்றுகூடி வரும் இடங்கள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • பிள்ளைகள் கூட்டங்களிலிருந்து மேலும் அதிகநன்மையடைய உதவுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 1/90 பக். 6

கேள்விப் பெட்டி

● சபைக் கூட்டங்களில் வரவேற்பாளராக சேவிக்கக்கூடியவர்களின் கடமைகள் என்ன?

கூட்டங்களுக்கு வரக்கூடிய அனைவருக்கும் வரவேற்பாளராக சேவை செய்பவர்கள் அனலான வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும். கால தாமதமாக வருபவர்கள் உட்காருவதற்கு இடத்தைக் கொடுப்பது, வருகை தருவோரின் எண்ணிக்கைகளைப் பதிவுச் செய்வது, ஒழுங்கையும் பாதுகாப்பையும் பராமரிப்பது, ராஜ்ய மன்றத்தின் காற்றோட்டத்தைக் கவனிப்பது போன்றவை அவர்களுடைய கடமைகளில் அடங்கியிருக்கிறது. வரவேற்பாளர் சிநேகபான்மையுள்ள மற்றும் தங்கள் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதில் முந்திக்கொள்ளும் பொறுப்புணர்ச்சியுள்ள சகோதரர்களாகவும் இருக்க வேண்டும்.—நம் ஊழியம் பக். 63-4.

புதிய ஆட்களின் தேவைகளை குறித்து வரவேற்பாளர்கள் விழிப்புடனிருக்க வேண்டும். அவர்கள் வரவேற்கப்பட்டவர்களாக உணரும்படி செய்ய வேண்டும். அவர்கள் உட்காரும் இடத்தை காண்பதற்கு உதவவேண்டும். காலதாமதமாக வருபவர்களை இருக்கைகளிடமாக அழைத்துச் செல்லும்போது ஏற்கெனவே உட்கார்ந்திருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருக்க முயல வேண்டும். சில சமயங்களில் படித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையையும்கூட புதியவருக்கு கொடுக்கலாம்.

கூட்டங்களின்போது ஒழுங்கை காத்துக்கொள்வது அத்தியாவசியமானது. பெற்றோர் கூட்டங்களுக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்துவரவேண்டும் என்று நாம் உற்சாகப்படுத்துவதன் காரணமாக, சில சமயங்களில் சிறிது இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பிள்ளைகள் தொடர்ந்து தொல்லைக் கொடுத்து கொண்டும் அடங்காமலும் இருப்பார்களானால் வரவேற்பாளர்கள் தயவாக உதவிசெய்ய வேண்டும். ஒருவேளை சிறிது நேரத்துக்கு பிள்ளையை மன்றத்துக்கு வெளியே எடுத்துக்செல்லும்படி பெற்றோரிடம் யோசனைக் கூறலாம். சிறு பிள்ளைகளையுடைய பெற்றோர் தேவைப்படும்போது வெளியே எழுந்து செல்வதற்கு வசதியாக வாசல் அருகில் உட்கார்ந்தால் மற்றவர்களுக்கு அதிக தொந்தரவு இல்லாமல் பிள்ளைகளுடைய தேவைகளை கவனித்துக் கொள்ளலாம்.

பாதுகாப்பு பிரச்னையாக உள்ள இடங்களில், நாசவேலைகள் அல்லது எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து தற்காப்புக்காக வரவேற்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும். ராஜ்ய மன்றத்தினுள்ளே இருக்கக்கூடிய யாராகிலும் தொந்தரவு உண்டுபண்ண முயற்சி செய்தால் அவன் வெளியே போய்விடும்படி சொல்ல வேண்டும். அவன் மறுத்தால் மற்றும் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் மூப்பர்கள் அதிகாரிகளின் உதவியை நாடலாம். சில பகுதிகளில் கூட்டம் நடைபெறும் நேரத்தில் ராஜ்ய மன்ற வாகனம் நிறுத்தும் இடத்தை மேற்பார்வை செய்வதற்கு சகோதரர்கள் நியமிக்கப்படுவது அவசியமாக இருக்கலாம்.—நம் ராஜ்ய ஊழியம் 12/84, பக்.4.

வருகை தந்தவர்களின் எண்ணிக்கை எடுக்கப்படுகையில் எல்லா பெரியவர்களும், மற்றும் கூட்டங்களில் செவி கொடுக்கக்கூடிய மற்றும் நன்மையடையக்கூடிய இளம் பிள்ளைகளும் அவர்கள் சிறிதளவான நன்மையை பெற்றபோதிலும் எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்.—நம் ராஜ்ய ஊழியம் 8/79, பக்.4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்