உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/00 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2000
  • இதே தகவல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • பிள்ளைகள் கூட்டங்களிலிருந்து மேலும் அதிகநன்மையடைய உதவுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவித்தல்
    குடும்ப வாழ்க்கை
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2010
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2000
km 5/00 பக். 7

கேள்விப் பெட்டி

◼ கூட்டங்களில், பிள்ளைகள் சேட்டை பண்ணாமல் ஒழுங்காக உட்கார வைக்க முயலும் பெற்றோருக்கு அட்டென்டண்டுகள் எப்படி உதவலாம்?

பிள்ளைகள் இயல்பாகவே துருதுருவென்று இருப்பார்கள். மேலும், நீண்ட நேரம் ஒரு இடத்தில் உட்கார மாட்டார்கள். எனவே, கூட்டம் முழுவதும் கட்டிப்போட்டாற்போல் இருக்கும் பிள்ளைகள் கூட்டம் முடிந்தால் போதும், ராஜ்ய மன்றத்திலும் வாகனம் நிறுத்தும் இடங்களிலும் நடைபாதையிலும் ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள். என்றாலும், “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்” என்ற பழமொழி நூற்றுக்கு நூறு உண்மை.—நீதி. 29:15.

இப்படி பிள்ளைகள் ஓடி விளையாடி, வயதான சகோதர சகோதரிகள் சிலர்மேல் மோதி, அவர்கள் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். இது பெற்றோருக்கும் சபைக்கும் தேவையில்லாத கஷ்டங்களையும் அநாவசிய செலவையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிள்ளைகளுடைய நலனையும் மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருதி, ராஜ்ய மன்றத்தின் உள்ளேயோ வெளியேயோ பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது.

வணக்கத்திற்காக நாம் கூடும் இடங்களை மதிக்கும்படி பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கும் வேதப்பூர்வ பொறுப்பு பெற்றோருடையது. (பிர. 5:1அ) நம் கிறிஸ்தவ கூட்டங்களில், மாநாடுகளில், அசெம்பிளிகளில் அட்டென்டண்டுகள் நியமிக்கப்படுகின்றனர். “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்”யவும், “ஒழுங்கை” காக்கவும் வேண்டியது இவர்களது கடமை. (1 கொ. 14:40; கொலோ. 2:5) நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும், நிகழ்ச்சியின்போதும் மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் பணியைக் கவனமாக செய்ய வேண்டும். குழந்தை ஓர் இடத்தில் நிற்காமல் இங்குமங்குமாய் ஓடியாடி, அடங்காமல் ஒழுங்கின்றி நடந்துகொண்டால், அதை தடுத்து நிறுத்தி, இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று கனிவாக சொல்லலாம். குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பிள்ளையின் பெற்றோரிடம் சாதுரியமாக தெரிவிக்க வேண்டும். பிள்ளைகள் ஓடியாடி விளையாடாமல் பெற்றோரும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சில சமயங்களில், கைக்குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் கூட்டம் நடக்கும்போது அழலாம் அல்லது தொந்தரவு கொடுக்கலாம். இதற்காக, நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு இருபது நிமிடங்கள் முன்னதாகவே வரும் அட்டென்டண்டுகள், ஹாலின் கடைசி இரண்டு வரிசைகளை பிள்ளைகளையுடைய பெற்றோருக்காக ஒதுக்கலாம். நாமும் அந்த இருக்கைகளில் உட்காராமல் அவர்களுடன் ஒத்துழைக்கலாம்.

குழந்தை தொந்தரவு கொடுக்கிறதென்றால், பெற்றோர் உடனடியாக கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்காமல், அது மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தால், குழந்தையை ஹாலுக்கு வெளியே கொண்டு செல்லும்படி அட்டென்டண்டுகள் பெற்றோரிடம் தயவாக சொல்ல வேண்டும். சிறு குழந்தைகளை உடையவர்களை புதிதாக கூட்டங்களுக்கு வரும்படி நாம் அழைக்கும்போது, நாமும் அவர்களோடு சேர்ந்து உட்கார வேண்டும். குழந்தை அழுதாலோ அல்லது வேறே ஏதாவது தொந்தரவு கொடுத்தாலோ நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.

ராஜ்ய மன்றத்தில் எல்லா வயது பிள்ளைகளையும் பார்ப்பது நமக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. அதோடு, கடவுளுடைய வீட்டில் அவர்கள் நல்ல முறையில் நடந்துகொள்வதைப் பார்ப்பது இன்னும் அதிக மகிழ்ச்சியை தருகிறது. (1 தீ. 3:15) வணக்கத்திற்கான யெகோவாவினுடைய ஏற்பாடுகளுக்கு அவர்கள் மரியாதை காட்டுவதன்மூலம், அவருக்குப் புகழ் சேர்க்கின்றனர். அதுமட்டுமல்ல, சபையில் உள்ள எல்லாருடைய பாராட்டையும் பெறுகின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்