வெளி ஊழியத்திற்கான ஒரு விசேஷித்த மாதம்
1 வெளி ஊழியத்திற்கான விசேஷித்த மாதமாக டிசம்பர் உங்களுக்கு இருக்குமா? உங்களுடைய வழக்கமான வேலையில் சரிப்படுத்துதல்கள் சிலவற்றை செய்வது அவசியமாயிருக்கலாம், ஆனால் பலன்கள் அதை தகுதி வாய்ந்ததாகச் செய்கிறதல்லவா?
2 முழுக்காட்டப்பட்ட சில இளம் பிரஸ்தாபிகள் பள்ளியிலிருந்து கூடுதலான விடுமுறை நாட்களைக் கொண்டிருப்பர், மேலும் அந்த மாதத்தில் துணைப் பயனியர்களாக சேர்ந்துகொள்வதற்கு விரும்புவர். மூப்பர்கள், உதவி ஊழியர்கள், மேலும் மற்ற பிரஸ்தாபிகளில் சிலரைத் தங்களோடு ஊழியத்தில் வேலைசெய்யக் கொண்டிருப்பது அவர்களுக்கு எவ்வளவு உற்சாகமூட்டுவதாயிருக்கும்! தனிப்பட்ட சூழ்நிலைமைகள் அந்த மாதத்தில் நீங்கள் பயனியர் ஊழியம் செய்வதற்கு அனுமதிக்கவில்லையென்றால், பயனியர் சேவை செய்யப்போகிறவர்களோடு ஊழியத்தில் கொஞ்சம் கூடுதலான மணிநேரங்கள் செலவழிப்பது உங்களுக்குக் கூடியகாரியமா? இது நிச்சயமாகவே ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுவதாக இருக்கும்.
3 எல்லா பிரஸ்தாபிகளும் கூடுதலான முயற்சி செய்வார்களானால், விடுமுறை காலத்தின்போது ஒவ்வொரு நாளும் தொகுதியாக சாட்சிகொடுப்பதற்காக மூப்பர்கள் ஏற்பாடு செய்பவர்களாய் இருக்கலாம். இவ்விதமாக பயனியர் சேவை செய்யக்கூடியவர்கள் வெளி ஊழியத்தில் தங்களோடு எப்பொழுதும் சிலரைக் கொண்டிருப்பார்கள்.
4 தனிப்பட்ட விதமாகவும், குடும்பத் தொகுதிகளாகவும், சபையாகவும் உங்களுடைய சபையில் டிசம்பரை வெளி ஊழியத்திற்கான ஒரு விசேஷித்த மாதமாக்கத் திட்டமிடுவதற்கான சமயம் இப்பொழுதே.