சுத்தம் கடவுளைக் கனப்படுத்துகிறது
1 சுத்தத்தை உறுதிப்படுத்த மோசேயின் நியாயப்பிரமாணம் கண்டிப்பான கட்டளைகளைக் கொண்டிருந்தது. இவை, உடல்சம்பந்தமாகவும் ஆவிக்குரிய விதமாகவும் தங்களைச் சுத்தமாக வைக்கும்படி கட்டளையிடப்பட்டிருந்த இஸ்ரவேலரை ஒரு ஜனமாகத் தனியே பிரித்து வைத்தது. (லேவி. 11:35, 36; 15:1-11; ஏசா. 52:11) இந்தச் சுத்தமான நிலைமை கடவுளுக்குக் கனத்தைக் கொண்டுவந்தது மற்றும் அந்த ஜனத்தின் சுகாரோக்கியத்துக்கு உதவிசெய்தது.
2 இன்றும், சுத்தம் யெகோவாவின் ஜனங்களை அடையாளங்காட்டும் குறியாக உள்ளது. ஆனால் இது, யெகோவாவின் ஜனங்களை ஒரு தொகுதியாக அடையாளங்கண்டுகொள்ளச் செய்கையில், தனிப்பட்டவர்களாக நம் ஒவ்வொருவரையும் குறித்ததில் இது உண்மையாக இருக்கிறதா? ஒழுங்கையும் தனிப்பட்ட சுத்தத்தையும் பற்றி நாம் அக்கறையுடையோராக இருக்கும் அளவு, யெகோவாவின் கட்டளைகளை எவ்வளவாக மதிக்கிறோமென்பதைப் பிரதிபலித்துக் காட்டுகிறது.
3 நம்முடைய வீட்டின் தோற்றத்தைப் பற்றியதென்ன? நாம் கொண்டுசெல்லும் ராஜ்ய செய்தியை அது மதிப்புக்குறைவாகக் கருதும்படி செய்கிறதா? நம்முடைய சொந்த வீடு அலங்கோலமாக வைக்கப்பட்டும் வீட்டைச் சுற்றியுள்ள இடம் வெட்டி ஒழுங்குப்படுத்தப்படாத புல் அல்லது களைகள் நிரம்பியதாகவும் இருக்கையில், பூமி பரதீஸாக மாற்றப்படுவதைப்பற்றி நாம் பேசினால், உள்ளப்பூர்வமாக அவ்வாறு சொல்கிறோமாவென சிலர் சந்தேகிக்கக் கூடியதாக உள்ளதா? நம்முடைய வீடு ஒழுங்கற்றிருக்கும் தோற்றத்தைக் கொடுத்தால் அல்லது சுகாதாரமற்றப் பழக்கங்களினிமித்தம் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தால், “கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் புதிய உலகத்துக்குப் பொருத்தமாயிருக்கும் சுத்தத்துக்குரிய முறைகளை” நாம் வளர்த்திருக்கிறோமென சொல்லக்கூடுமா?—om பக். 130-1.
4 வெளி ஊழியத்துக்காக நாம் பயன்படுத்தும் ஏதாவது ஊர்தியைப் பற்றியதென்ன? நம்முடைய ஊழியம் பழித்துக்கூறப்படாதபடி அது போதியளவு சுத்தமாக உள்ளதா? நம்முடைய உடை, புத்தகப் பை, சொந்த நடையொழுங்கு ஆகியவற்றைப் பற்றியதென்ன? அவை வெறுப்புக்கு இடமளிக்காமல், ஒழுங்காகவும் உகந்த நல்தோற்றமுள்ளதாகவும் உள்ளனவா? தவறாமல் குளித்து, ஆடைகளைத் துவைத்து நாம் நம்மையும் நம் உடைகளையும் சுத்தமாக வைப்பது நியாயமானதாக உள்ளது.—wTL 91 4/1 பக். 14-17.
5 ஒரு சகோதரன் அக்கறையற்றவராகி, அதனால் அவருடைய உடல் சுத்த இயல்பு அல்லது சுற்றுப்புறங்கள் சபைக்கு நிந்தனையைக் கொண்டுவருவதற்குக் காரணமாகிறதென்றால் என்ன செய்வது? ஒருவேளை முதிர்வயது அல்லது இயலாமையின் காரணமாக அவருக்கு சிறிது அன்புள்ள உதவியே தேவைப்படலாம். அவ்வாறெனில், அவருக்கு உதவிசெய்வது தயவாயிருக்கும். ஒருவருக்கு இந்தப் பிரச்னை இருந்தும் அதைப்பற்றி உணராமலுங்கூட இருக்கலாம்; தயவான அறிவுரை அந்த நிலைமையைத் திருத்திக்கொள்ள அவருக்குத் தூண்டுதலளிக்கும். இந்தக் காரியத்தில் தொடர்ந்து கெட்ட முன்மாதிரியை வைத்துக்கொண்டிருக்கும் நபர்கள் சபையில் மேம்பட்ட சிலாக்கியங்களுக்குத் தகுதியுடையோராக இல்லை. மூப்பர்கள் தங்கள் சொந்த தனிப்பட்ட தராதரங்களை அல்லது விருப்பத்துக்குகந்தவற்றை வலியுறுத்துவதற்கு எதிராகத் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.
6 புதிதாக அக்கறை காட்டும் ஆட்கள் நம்முடைய ராஜ்ய மன்றத்தில் ஆவிக்குரிய விருந்துகளை அனுபவிக்கும்படி அழைக்கப்படுகின்றனர். மன்றம் கவர்ச்சிகரமாகவும் ஒழுங்காகவும் இருப்பதால் அவர்களை வரவழைப்பதற்கு நாம் ஆவலுடன் இருக்கிறோம். எனினும், அதை அவ்வாறு வைப்பது வேலையை உட்படுத்துகிறது. உங்கள் மன்றத்தைச் சுற்றிப் பார்வையிடுங்கள். நாற்காலிகளும், தரையும், சுவர்களும் சுத்தமாக உள்ளனவா? கழிவறைகள் தவறாமல் தேய்த்துக் கழுவப்படுகின்றனவா? அழுக்கடைந்த தரை அல்லது சுண்ணாம்பு உரிந்து விழுந்துகொண்டிருக்கும் சுவர்களை நாம் பார்த்துப் பழகிவிட்டிருந்தால், அதை ஏற்கத்தக்கதாக விரைவில் கருதிவிடுவோம். எனினும், முதல் தடவையாக வரும் அன்னியர்களுக்கு அது விரும்பத்தகாத எண்ணத்தை மனதில் பதிவிக்கலாம். அதைச் சுத்தப்படுத்துவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கான சமயம் வருகையில் நம்முடைய பங்கைச் செய்து, விரும்பத்தக்கக் கவர்ச்சிகரமான மன்றமாக அதை வைத்துவருவதற்கு நம்மாலான மிகச் சிறந்ததை நாம் செய்ய வேண்டும்.
7 ஒரு வார்த்தையும் பேசாமலே, நம்முடைய சொந்தத் தோற்றத்தாலும் நம் வீடுகள், ஊர்திகள், மற்றும் ராஜ்ய மன்றங்களின் ஒழுங்காலும் நாம் கடவுளை மகிமைப்படுத்தக்கூடும். நம்முடைய நல்ல முன்மாதிரி, இடறலடைவதற்கு எந்தக் காரணத்தையும் அளிக்காது, நம்முடைய வணக்கம் சுத்தமும் நேர்மையுமுள்ளதென்பதற்கு சாட்சி பகரும்.—1 கொ. 10:31, 33; யாக். 1:27.