உங்களுடைய ராஜ்ய சேவை பொக்கிஷத்தை அதிகரியுங்கள்
1 இயேசு ராஜ்ய நம்பிக்கையை விலைமதிக்க முடியா பொக்கிஷத்திற்கு ஒப்பிட்டார். (மத். 13:44-46) மிகவும் மதிப்புவாய்ந்த ஒன்றை பெறுவதற்காக தங்களுடைய உடைமைகளையெல்லாம் விற்றுப்போட்ட இயேசுவின் உவமைகளிலுள்ள மனிதர்களைப்போல நாம் இருக்கிறோமா? அப்படியானால், அசெளகரியத்தையும் சுய இன்பமறுப்பையும் உட்படுத்தியபோதிலும்கூட, கடவுளுடைய ராஜ்யத்திற்கு நாம் முதலிடம் கொடுப்போம்.—மத். 6:19-22.
2 நம்முடைய ராஜ்ய சேவை ஒரு பொக்கிஷமாக இருப்பதால், அதை அதிகரிப்பது நம்முடைய ஆசையாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் நம்முடைய தனிப்பட்ட நடத்தைப்போக்கு எதைக் காட்டுகிறது? நம்முடைய ராஜ்ய நடவடிக்கையை நாம் அதிகரித்துவருகிறோமா? வீட்டுக்கு வீடு ஊழியம், மறுசந்திப்புகள் செய்தல், பைபிள் படிப்புகள் நடத்துதல், சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல் ஆகியவை உட்பட, ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் பங்குகொள்வதன்மூலம் நாம் அவ்விதமாக செய்யமுடியும்.
3 ‘நான் எவ்வாறு என்னுடைய பங்கை அதிகரிக்க முடியும்?’ புதிய ஊழிய ஆண்டின் தொடக்கத்தில், வெளி ஊழியத்தில் செலவழித்த நேரத்தை அதிகரிப்பதற்கு தான் என்ன செய்யலாம் என்பதை காண ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட நடவடிக்கையை மறுபார்வை செய்து, இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘அவ்வப்போதோ தொடர்ச்சியான முறையிலோகூட ஒரு துணைப் பயனியராகச் சேர்ந்துகொள்வதற்காக என்னுடைய காரியங்களை நான் ஒழுங்குபடுத்தியமைக்க முடியுமா? சில சரிப்படுத்தல்களோடு, ஒழுங்கான பயனியர் சேவையில் நான் சேர்ந்துகொள்ள முடியுமா?’ செப்டம்பர் 1-க்குள்ளாக சேர்ந்துகொள்கிற புதிய பயனியர்கள் அடுத்த பயனியர் சேவை பள்ளியில் கலந்துகொள்ளும் தகுதிபெறலாம்.
4 பிரஸ்தாபிகள் சிலர் சந்தர்ப்ப சாட்சிகொடுத்தலை அதிகளவில் செய்வதற்கு தனிப்பட்ட இலக்கு வைத்திருக்கிறார்கள். இந்த ஊழியம் அடிக்கடி மிகச் சிறந்த பலன்களைக் கொண்டுவருகிறது. பலன்தரத்தக்க மறுசந்திப்புகள் செய்வதிலோ புதிய பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதிலோ முன்னேற்றம் செய்வதற்கான அவசியத்தை மற்றவர்கள் உணரலாம்.
5 ஏதோவொரு முறையில் நம்முடைய ஊழியம் மட்டுப்பட்டதாய் இருக்கிறது என்பதாக நாம் முடிவு செய்வோமானால், அதை அதிகரிப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? உயர்ந்தளவான இலக்குகளை வெற்றிகரமாக அடைந்திருப்பவர்கள், என்னவந்தாலும்சரி ராஜ்ய அக்கறைகளை முதலில் வைப்பதற்கு முதலாவதாக நாம் தீர்மானம் செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள். (மத். 6:33) விசுவாசமும் யெகோவாவில் முழுவதுமாக சார்ந்திருத்தலும் அவசியம். (2 கொ. 4:7) உண்மையான, விடாமுயற்சியோடு ஜெபத்தின்மூலம் அவருடைய உதவியை நாடுங்கள். (லூக். 11:8, 9) யெகோவாவுடைய சேவையில் நம்முடைய பங்கை அதிகரிப்பதற்கான நம்முடைய உண்மையான முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.—1 யோ. 5:14.
6 தங்களுடைய ஊழியத்தை வெற்றிகரமாக அதிகரித்திருக்கிற மற்ற சகோதர சகோதரிகளிடம் பேசுங்கள். உற்சாகமிழக்காமலேயே தடைகளை எவ்வாறு அவர்களால் மேற்கொள்ள முடிந்தது என்பதை அவர்களிடம் கேளுங்கள். அதிகரிக்கப்பட்ட ஊழியம் அடையப்பட முடியாததல்ல என்பதை நீங்கள் நம்புவதற்கு, அவர்களுடைய சொந்த அனுபவங்கள் சரியாகவே தேவைப்படுவதாக இருக்கலாம்.
7 வெளி ஊழியத்தைப்பற்றி கலந்தாலோசிக்கிற காவற்கோபுரம் அல்லது நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள கட்டுரைகளை நீங்கள் வாசிக்கும்போது, உங்களுடைய ஊழியத்திற்கு அந்த ஆலோசனைகளை எவ்வாறு பொருத்திப் பயன்படுத்தலாம் என்பதை ஜெபசிந்தையுடன் சிந்தித்துப் பாருங்கள். சபை கூட்டங்கள் அல்லது மாநாடுகளுக்கு ஆஜராகும்போதும் அதையே செய்யுங்கள். இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் கடந்த வருட வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரலின் பாகமாக இருந்த கலந்தாலோசிப்பின் அடிப்படையில் அமைந்தவையாகும். செயலில் முன்னேறவும் அந்த நிகழ்ச்சிநிரல் மூலம் அளிக்கப்பட்ட உற்சாகத்தை பொருத்திப் பயன்படுத்தவும், நமக்கு உதவிசெய்ய வடிவமைக்கப்பட்ட தொடர் கட்டுரைகளில் இதுவே முதலாவதாகும்.
8 இயேசு தம்முடைய ஊழியத்தை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொண்டு, அதை முக்கிய அக்கறைக்குரியதாக்கினார். அவர் சொன்னார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவா. 4:34) அதேவிதமாக நாம் உணருகிறோமா? நாம் அவ்வாறு உணருவோமானால், நம்முடைய நடவடிக்கையை அதிகரிப்பதற்கும் நம்முடைய பொக்கிஷ சாலையிலிருந்து வருகிற ‘நல்லவற்றை’ மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளவும் நாம் வழிமுறைகளைக் கண்டுபிடிப்போம்.—மத். 12:35; லூக். 6:45.