தனிப்பட்ட படிப்பு—அக்கறைக்குரிய ஒரு விஷயம்
1 என்ன விஷயங்கள் பொறுப்புணர்வோடுகூடிய அக்கறைக்கான காரணத்தை நமக்கு அளிக்கின்றன? யெகோவாவோடு நெருங்கிய உறவைக் கட்டியமைப்பதையும் காத்துக்கொள்வதையும் பற்றி நாம் ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதில் தனிப்பட்ட படிப்பு ஒரு பெரும்பாகத்தை வகிக்கிறது. தியானிப்பதிலும் தனிப்பட்ட படிப்பிலும் அதிக மணிநேரங்களைச் செலவழிக்க அனுமதிக்கிற சந்தர்ப்பங்களை நம்மில் சிலரே இன்று கொண்டிருக்கிறோம். இருப்பினும், கடவுளுடைய வார்த்தையை நாம் ஒழுங்காக வாசிக்கவில்லையென்றால், இந்த உலக மனப்பான்மையையும் அதன் மாம்ச இச்சைகளையும் எதிர்த்துநிற்க பலமில்லாதளவுக்குப் பலவீனர்களாக ஆகக்கூடும்.
2 வார்த்தைக்கான வாஞ்சையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்: நாம் முதலாவது கடவுளுடைய நோக்கங்களைக் கற்றுக்கொண்டபோது, அதிக அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான ஆவலுள்ளவர்களாக இருந்திருப்போம். என்றாலும், காலப்போக்கில், ஆவிக்குரிய போஷாக்கிற்கான நம்முடைய பசியார்வம் தணிந்துபோயிருக்கக்கூடும். ஆவிக்குரிய உணவிற்கு ‘வாஞ்சையை ஏற்படுத்திக்கொள்வதற்கான’ தேவை இருக்கலாம். (1 பே. 2:2, NW) இப்படிப்பட்ட வாஞ்சையை நாம் எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்?
3 இன்பமயமான நினைவுகளின் காரணமாக விருப்பமான உணவின் நறுமணம் நம் பசியார்வத்தைத் தூண்டும். சிறிதுநேர தனிப்பட்ட படிப்பு ஆவிக்குரிய விதமாக இதுபோன்று நம்மைப் பாதிக்கக்கூடும். சுவைமிக்க ஆவிக்குரிய துணுக்குகளைச் சிறிது அனுபவித்துக் களிப்பது ஆழமான சத்தியங்களுக்கான நம்முடைய பசியார்வத்தைக் கிளறிவிடக்கூடும். கற்றுக்கொள்வதால் வருகிற திருப்தி யெகோவாவின் வார்த்தையை ஆழமாகத் தோண்டுவதற்கு நம்மை ஊக்கப்படுத்தலாம்.
4 உங்களுடைய மிகச் சிறந்த நன்மைக்கேதுவாக செயல்படுகிற வேலைக்கிரமத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்: தனிப்பட்ட படிப்புக்காக சிலர் மாலைநேரம் முழுவதையும் ஒதுக்கி வைக்கின்றனர், மற்றவர்களோ குறைந்தளவான நேரமும் அதிக அடிக்கடியும் படிப்பதை விரும்புகின்றனர். அதிகாலை நேரங்களில் மிக நன்றாக கவனத்தை ஒருமுகப்படுத்த முடியும் என்று நீங்கள் காண்பீர்களானால், காலையுணவுக்கு முன்பு கொஞ்சம் படிக்க தீர்மானிக்கலாம். மாலைநேரத்தில் நீங்கள் அதிக விழிப்புள்ளவராக இருந்தால், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக படிப்பதைத் தெரிவுசெய்யலாம். சூழ்நிலைமை என்னவாக இருந்தாலும்சரி, முக்கியமான காரியம் என்னவென்றால், ஒழுங்காக செய்துவருவதும் உங்களுடைய தேவைகளுக்கு மிகப் பொருத்தமாயிருக்கிற வேலைக்கிரமத்தைக் கடைப்பிடித்து வருவதுமாகும்.
5 அதிக தனிப்பட்ட படிப்பைக் கொண்டிருக்கும்படி நாம் உற்சாகப்படுத்தப்படுகையில், நமக்கு ஏற்கெனவே அதிக வேலையிருக்கிறது என்று சட்டென்று சொல்லக்கூடும். இருந்தாலும், நம்முடைய நேரத்தை எவ்வாறு செலவழிக்கிறோம் என்பதைச் சீர்தூக்கிப்பார்ப்பதில் நாமனைவரும் நேர்மையுள்ளவர்களாக இருப்பது அவசியம். டெலிவிஷன் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் ஒவ்வொரு நாளும் அதிக மணிநேரங்கள் செலவழிக்கப்படுகின்றனவா? தனிப்பட்ட விருப்பங்கள் சிலவற்றைத் தியாகம்செய்ய நாம் மனவிருப்பமுள்ளவர்களாக இருக்கிறோமா? நம்முடைய நேரத்தை எவ்வாறு செலவழிக்கிறோம் என்பதை உண்மையாக பரிசோதித்துப் பார்ப்பதானது, ஒருவேளை தனிப்பட்ட படிப்பில் அதிக பலன்தரத்தக்க விதமாக பயன்படுத்தப்படக்கூடிய அனுதினம் கிடைக்கும் நேரங்களைக் காட்டும்.—எபே. 5:15, 16, NW.
6 கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது நம்முடைய முழு கவனத்திற்கும் தகுதிவாய்ந்ததாயிருக்கிறது. அதே சமயத்தில் வேறு ஏதாவது செய்வதற்கு முயற்சிப்பது நன்மைகளைக் குறைக்கிறது. சாப்பிடுகையில், ரேடியோவை கேட்டுக்கொண்டிருக்கையில் அல்லது டெலிவிஷனைப் பார்த்துக்கொண்டிருக்கையில் படிக்கும் மனச்சாய்வைக் கொண்டிருந்தால், நாம் எதைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோமோ அதைக் கிரகித்துக்கொள்பவர்களாக இருக்கமாட்டோம். (1 தீ. 4:15) ஆகவே கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதற்கான அவசியமிருக்கிறது.—பள்ளி துணைநூல் (ஆங்கிலம்), பக்கங்கள் 33-4-ஐப் பாருங்கள்.
7 அன்றாடகம் படிப்பதும் பைபிள் அறிவுரைகளைப் பொருத்திப் பிரயோகிப்பதும் முக்கியமானவை, ஏனென்றால் அந்த முறையில்தானே நாம் யெகோவாவிடமிருந்து வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்கிறோம். அச்சடிக்கப்பட்ட பக்கத்திலுள்ள சத்தியத்தை உங்களுடைய இருதயத்திற்குள் பதியச்செய்வதை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள். ஆவிக்குரிய காரியங்களின்பேரில் வாசிக்க, மறுபார்வைசெய்ய அல்லது தியானிக்க, எவ்வளவு குறுகிய சந்தர்ப்பம் கிடைத்தாலும்சரி, அவ்வளவு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.—உபா. 6:6-8; கொலோ. 1:9, 10.