1995 “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாடு
1 நாம் சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பதற்கு எத்தனை காரணங்கள் நமக்கு இருக்கின்றன? ஒருவேளை நம்மில் பெரும்பாலானோர் அவையனைத்தையும் பட்டியலிட முயற்சி செய்து பார்த்திருக்க மாட்டோம். குழப்பமும் அநிச்சயமுமான ஓர் உலகில் வாழ்ந்து வருகிறபோதிலும், சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பதற்கு ஏராளமான காரணங்கள் நமக்கு இருக்கின்றன. முன்பு அறிவிக்கப்பட்டுள்ளபடி, “சந்தோஷமாய் துதிப்போர்” என்பது 1995 மாவட்ட மாநாட்டிற்கான உற்சாகமூட்டும் கருப்பொருளாகும்.
2 நாம் யெகோவாவைத் துதிக்கிறோம், ஏனென்றால் அவர் நமக்கு சத்தியத்தைப் போதித்தார். (ஏசா. 54:13; யோவா. 8:32) முறையே நாம், பாதுகாப்புக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தேடிக்கொண்டிருக்கிற அனைவருடனும் சந்தோஷமாய் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். (எசே. 9:4; அப். 20:35) நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவமும் நமக்கு சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது. ஓர் அன்பான ஆவிக்குரிய குடும்பம் திருப்தியையும் மகிழ்வையும் கொண்டுவருகிறது. யெகோவாவைத் துதிப்பதற்கு நம்மை உந்துவிக்கிற நம்முடைய சந்தோஷத்திற்கான காரணங்களில் இவையெல்லாம் ஒரு சிலவையே. மாநாட்டு பேச்சுகளும் நடிப்புகளும், இந்த அல்லல் மிகுந்த கடைசி நாட்களில் சந்தோஷப்படுவதற்குக் கூடுதலான வேதப்பூர்வ காரணங்களுக்கு நம்முடைய கவனத்தை ஈர்க்கும்.
3 ஓர் மூன்றுநாள் மாநாடு: மாநாடு நடக்கும் மூன்று நாட்களும் ஆஜராயிருப்பதற்காக விடுப்பு எடுப்பதற்கு நீங்கள் உங்களுடைய முதலாளியுடன் ஏற்பாடுகள் செய்துவிட்டீர்களா? பள்ளி இருக்கும்போது மாநாடுகளில் ஒன்றிற்கு ஆஜராகும் பள்ளி செல்லும் வயதிலுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள், தங்களுடைய மத வழிபாட்டில் முக்கிய பாகமாயிருக்கிற மாநாட்டிற்கு செல்வதற்காக பிள்ளைகள் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் பள்ளிக்கு வரமாட்டார்கள் என்பதை ஆசிரியர்களுக்கு மரியாதையுடன் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு வெகு அருகில் மாநாடு எங்கு நடைபெறுகிறது? பிப்ரவரி 15, 1995, ஆங்கில காவற்கோபுரம், இந்தியாவில் நடைபெறும் 16 மாநாடுகள் அனைத்திற்குமான இடங்களைப் பட்டியலிட்டது. உங்களுடைய சபைக்கான விவரங்களைப் பற்றி இதற்குள்ளாக உங்களுடைய சபை காரியதரிசி உங்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தோடுகூட, கன்னடம், குஜராத்தி, கொங்கணி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மாநாடுகள் நடைபெறும்.
4 பெரும்பாலான இடங்களில், நிகழ்ச்சிநிரல் வெள்ளிக்கிழமை காலை 9:40 மணிக்கு ஆரம்பித்து, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 3:50 மணிக்கு முடிவடையும். சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும், நிகழ்ச்சிநிரல் காலை 9:30 மணிக்கு துவங்கும். சாட்சிகளும் பொதுமக்களும் காலை 8:00 மணியிலிருந்து வரவேற்கப்படுவர், ஆனால் பிரத்தியேகமான வேலை நியமிப்புகள் உள்ளவர்கள் முன்பாக உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
5 நீங்கள் ஆஜராகியிருப்பீர்களா?: மாநாடு நடைபெறும் மூன்று நாட்களும் ஆஜராகும்படி நாம் உந்துவிக்கப்படுகிறோம். அது ஏன்? நாம் அங்கு இருக்கும்படி யெகோவா விரும்புகிறார். இன்று நம்முடைய விசுவாசமும் ஆவிக்குரிய ஆரோக்கியமும் தீவிர தாக்குதலில் இருக்கின்றன. யூதேயாவிலுள்ள கிறிஸ்தவர்கள் பேரளவான அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு சமயத்தில், ‘சபை கூடிவருதலை விட்டுவிடாமல்’ இருப்பதைப்பற்றி பவுல் அறிவுரை கூறினார். (எபி. 3:12, 13; 10:25) “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே” பிலிப்பியர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். என்றபோதிலும் அவர்கள், “உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசி”த்துக் கொண்டிருந்தார்கள். (பிலி. 2:14, 15) இந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஏன் வித்தியாசமானவர்களாய் இருந்தார்கள்? ஏனென்றால் ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி’ ஒன்றாக கூடிவருவதற்கு அவர்களை வழிநடத்திய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல்களை அவர்கள் கீழ்ப்படிதலுடன் பின்பற்றினார்கள்.—எபி. 10:24.
6 இல்லையென்றால் இவ்வுலகம், நம்முடைய சகோதரர்களுடன்கூடி யெகோவாவைத் துதிப்பதற்கான நம்முடைய ஆசையை பலவீனப்படுத்தி நம்மை ஆட்டிப்படைக்கும். எனவே யெகோவாவின் ஆவிக்குக் கீழ்ப்படிந்து, மாநாடு நடக்கும் மூன்று நாட்களையும் அனுபவித்து மகிழும்படி நாம் வரவேற்கப்படுகிறோம். நம்முடைய முழுக் குடும்பத்தாருடன் ஆஜராகியிருக்க உறுதியுடன் இருக்கிறோமா? நம்முடைய அன்பையும் விசுவாசத்தையும் ஓர் ஒழுங்கான அடிப்படையில் நாம் பலப்படுத்தி வரவேண்டியது அவசியம். இதன் சம்பந்தமாக நமக்கு உதவிசெய்வதற்கு யெகோவா வருடாந்தர மாநாடுகளை ஏற்பாடு செய்திருக்கிறார்.
7 ஒரு பொக்கிஷத்தை வீட்டிற்கு கொண்டுசெல்லுங்கள்: மாநாட்டிலிருந்து அதிகளவான நன்மையை நீங்கள் எவ்வாறு பெறமுடியும்? சுருங்கச் சொன்னால், பதிலானது “கவனத்தை ஒருமுகப்படுத்துதல்.” அதிகமான கூருணர்வுடைய, வேகமாக செல்லும் இன்றைய சமுதாயத்தில், இது சாமானியமான காரியமல்ல. துருதுருவென்றிருக்கும் இளைஞர்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துவதைக் கடினமாக காணக்கூடும், ஆனால் மாவட்ட மாநாடு ஒன்றில் ஆஜராகையில் நாம் அனைவரும் எதிர்ப்படுகிற ஒரு சவாலாக இது இருக்கிறது. நாம் முன்னதாகவே திட்டமிடுவோமாகில், கவனத்தை ஒருமுகப்படுத்துவதை வெகு சுலபமாகக் காண்போம். உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மாநாட்டின் கருப்பொருள் என்ன?’ அதன்பேரில் தியானம் செய்யுங்கள்! ‘நான் ஏன் போகிறேன், அந்த மூன்று நாட்களில் நான் என்ன செய்து கொண்டிருப்பேன்? என்னுடைய மாலைநேரங்கள் பொழுதுபோக்கினால் நிறைந்திருக்குமா, அல்லது ஓய்வெடுப்பதற்கும் மாநாட்டின் முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்வதற்கும் போதுமான நேரத்தை நான் திட்டமிட்டிருக்கிறேனா?’
8 “நீங்கள் தியானிக்கிறீர்களா அல்லது வெறும் பகற்கனா காண்கிறீர்களா?” என்ற பிப்ரவரி 1, 1984 ஆங்கில காவற்கோபுர கட்டுரை, ஒரு கூட்டத்திலிருந்து எவ்வாறு அதிகளவான நன்மையைப் பெறுவது என்பதன்பேரில் அநேக ஆலோசனைகளைக் கொடுத்து, பின்பு இந்த முடிவுக்கு வந்தது: “மனக் கட்டுப்பாடே ஒருவேளை மிக முக்கியமான காரணியாக இருக்கலாம்.” ஒரு பேச்சாளர் ஆரம்பிக்கும்போது, நாம் பொதுவாகவே உன்னிப்பாக கேட்கிறவர்களாக இருக்கிறோம், ஆனால் அந்தப் பேச்சை சிறிது கேட்டபிறகு, நம்முடைய மனதை “திசைதிருப்ப” அனுமதிக்கிறோம். இது நடப்பதை நாம் எவ்வாறு தடுத்துநிறுத்த முடியும்?
9 கடந்த காலத்தில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் மறுபடியும் சிந்திப்பதற்கு பொருத்தமானவை, ஏனெனில் அவை பலன்தரத்தக்கவையாக இருக்கின்றன. கூடுமானால், ஒவ்வொரு நாளும் போதுமானளவு ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள். இது எப்பொழுதுமே எளிதானதல்ல, ஏனெனில் பிரயாணம் உட்பட்டிருக்கலாம், நீங்கள் ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பீர்களானால், விரைவில் படுக்கைக்குச் செல்லாமல் இருக்கலாம் அல்லது வீட்டில் இருக்கும்போதுகூட ஓய்வெடுக்காமல் இருக்கலாம். பொதுவாகவே, நன்கு திட்டமிடுவது தேவையான ஓய்வை எடுப்பதற்கு உங்களை அனுமதிக்கும்.
10 எளிய முறையில் குறிப்பெடுத்தலானது கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் ஓர் உதவியாக நிரூபித்திருக்கிறது. நீங்கள் நிறைய தகவலை எழுத முயற்சி செய்தால், முக்கியமான குறிப்புகள் சிலவற்றை முழுமையாகத் தவறவிடக்கூடும். ஓர் ஆலோசனையாக, பைபிள் மாணாக்கர் ஒருவருக்கு அல்லது வெளியில் வரமுடியாமல் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு நிகழ்ச்சிநிரலின் சுருக்கத்தை அளிக்கும் நோக்கோடு குறிப்பெடுங்கள். குறிப்பிட்ட எந்தவொரு தனிநபரையும் நீங்கள் மனதிற்கொள்ளவில்லை என்றாலும்கூட, குறிப்பெடுப்பதில் நீங்கள் ஒரு நோக்கமுள்ளவர்களாக இருப்பீர்கள். மாநாடு முடிந்த பிறகு, விசுவாசத்தில் இல்லாத குடும்ப அங்கத்தினர்களுக்கு சந்தர்ப்ப சாட்சிகொடுக்கையில் நிகழ்ச்சிநிரலின் முக்கிய குறிப்புகளைப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை நீங்கள் காணக்கூடும். குறிப்புகள் எடுப்பதன்மூலமும் கேள்விப்பட்டதைப் பகிர்ந்து கொள்வதன்மூலமும் நீங்கள் தகவலை சீக்கிரத்தில் மறந்துபோக மாட்டீர்கள். சொல்லுதல் மனதிற்பதிவதை அதிகரிக்கச் செய்கிறது.
11 மாநாட்டு மன்றத்திற்காக வாடகை செலுத்தவதில் கணிசமான செலவு உட்பட்டிருக்கிறது. அதில் ஒலிபெருக்கி சாதனங்கள், கூடுதலான இருக்கைகள், இன்னும் மற்றவற்றை வாடகைக்கு எடுப்பதற்கான செலவும் பெரும்பாலும் சேர்கிறது. இந்தச் செலவுகள் எவ்வாறு சரிக்கட்டப்படுகின்றன? பணமாகவோ அல்லது “Watch Tower Society” என்ற பெயரில் செலுத்தப்படக்கூடிய காசோலையாகவோ கொடுக்கப்படுகிற மனமுவந்தளிக்கப்படும் நன்கொடைகளின் மூலமாகவே. இது, சங்கீதம் 96:8 மற்றும் 2 நாளாகமம் 31:12-க்கு இசைவாக உள்ளது.
12 சந்தோஷமாய் துதிப்போர் தேவபக்திக்குரிய நடத்தையின் மூலம் யெகோவாவை கனப்படுத்துகிறார்கள்: நம்முடைய நடத்தையைப் பற்றி ஹோட்டல் பணியாளர்களிடமிருந்தும் மாநாட்டு மன்றத்தின் சிப்பந்திகளிடமிருந்தும் உற்சாகமளிக்கும் சாதகமான குறிப்புகள் கடந்த வருடத்தில் வந்தன. ஹோட்டல் மேனேஜர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சாட்சிகளுக்கு இடவசதியளிப்பது எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாய் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் பொறுமையானவர்களாவும் ஒத்துழைப்பவர்களாகவும் தங்களுடைய பிள்ளைகள்மீது கண்ணும் கருத்துமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.” சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் வேறெந்த தொகுதியினரையும்விட நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவர்களாகவும் இருப்பதாக தெரிகிறது என்று மற்றொரு ஹோட்டல் நடத்துனர் சொன்னார். அந்தப் பகுதியில் ஹோட்டல் வசதிகளைப் பயன்படுத்துகிற மற்ற மாநாடுகளைவிட நம்முடையது மிகப் பெரியதாக இருந்தபோதிலும்கூட, அவர் இவ்வாறு சொன்னார்: “மற்ற மிகச் சிறிய தொகுதிகளிடமிருந்து வருகிற புகார்களையும் பிரச்சினைகளையும்விட இவர்களிடமிருந்து வருபவை மிகக் குறைவு.”
13 சமீபத்தில், நம்முடைய மாநாட்டிற்கு முன்னதாக நடந்த மாநாடு அதிகமான சேதத்தில் விளைவடைந்தது, மாநாட்டு மன்றங்களை நன்றாக கண்காணித்தபோதிலும்கூட திருட்டும் இருந்தன என்பதாக மற்றொரு ஹோட்டல் சிப்பந்தி வெளிப்படுத்தினார். ஆனால் நம்முடைய மாநாட்டின் சம்பந்தமாக, அவர் தொடர்ந்து சொன்னார்: “சாட்சிகளைக் குறித்து நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. . . . அவர்கள் இங்கு இருக்கும்போது, எங்களிடமுள்ள ஓரிரண்டு பராமரிப்பு ஆட்களைத்தான் நியமிக்க வேண்டியிருக்கிறது, அதுவும் எதிர்பாராத விதமாக மெஷின்களில் ஏற்படுகிற பிரச்சினைகளை சரிசெய்யத்தான்.”
14 வருகிற எல்லா அறிக்கைகளும் இதுபோலவே இருக்கும்படி நாம் விரும்புகிறோம், ஆனால் வருந்தத்தக்க விதமாக, அது அவ்வாறு இருப்பதில்லை. ஒரு மாநாட்டின் அக்கிராசனர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்: “கூட்டங்கள் முடிந்த பிறகு, பருவ வயதிலுள்ள அநேகர் [ஹோட்டல்] ஓய்வறையில் இராத்திரி வெகுநேரம் சென்ற பிறகு பெருங்கூட்டமாக கூடி, சத்தம்போட்டு சிரித்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள். இது மற்ற விருந்தினர்களை . . . தொந்தரவுபடுத்துகிறது, அவர்கள் எரிச்சலூட்டப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள். இளைஞர் சிலர் தாழ்வாரங்களில் ஓடித்திரிகிறார்கள், ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்கையில் கதவுகளைத் தடாரென்று சாத்திக்கொண்டு போகிறார்கள், அறைகளில் மிகவும் சத்தமாக பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.”
15 ஆண்டுகளாக தொல்லைகொடுத்து வந்திருக்கிற மற்றொரு பிரச்சினை, கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மன்றத்தின் தாழ்வாரங்களிலும் வெளிப்புறத்திலும் அநேக சகோதரர்கள் அரட்டையடித்துக் கொண்டிருப்பதாகும். கடந்த வருடம் நடைபெற்ற ஒரு மாநாட்டில், பைபிள் மாணாக்கர் ஒருவரிடமிருந்து வந்த ஒரு குறிப்பு நன்கொடைப் பெட்டியில் இருந்தது. அது வாசிக்கிறது: “பேச்சுகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது . . . இரைச்சலையும், சந்தடியையும், பேசிக்கொண்டிருந்ததையும், சீர்கெட்ட விதமாக நடந்துகொண்டிருந்ததையும் பார்த்து நான் ஒருபோதும் இந்தளவு அதிர்ச்சியடைந்து திடுக்கிட்டதில்லை. நான் இன்னும் ஒரு சாட்சியாக இல்லை, தேவபயத்தையும் மரியாதையையும் படித்துக்கொண்டும் கற்றுக்கொண்டும் வருகிற ஒருவன்தான்.” யெகோவாவின் ஏற்பாடுகளுக்கான போற்றுதலில் குறைவுபடுகிறோம் என்ற முத்திரையை விட்டுச்செல்ல நாம் ஒருவருமே விரும்பமாட்டோம்.
16 எல்லா சமயங்களிலும் நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறேன், நான் ஏன் இந்த மாநாட்டிற்கு ஆஜராகியிருக்கிறேன்?’ நம்முடைய பேச்சு, நடத்தை, ஆவிக்குரிய ஏற்பாடுகளுக்கான போற்றுதல் ஆகியவற்றில் நம்முடைய ஆவிக்குரிய தன்மையும் தேவபக்தியும் பிரதிபலிக்கப்படுகின்றன. (யாக். 3:13; 1 பே. 2:2, 3, 12) கட்டுப்பாடுகளையும் தடையுத்தரவுகளையும் வருஷக்கணக்காக சகித்து வந்திருக்கிற சகோதரர்கள், மாநாடுகளில் தங்களுடைய இருக்கைகளைவிட்டு நகராமல், பேச்சுகளிலும் நடிப்புகளிலும் மூழ்கி மிகவும் கூர்ந்து கவனிப்பவர்களாகவும் மரியாதைக்குரியவர்களாகவும் இருப்பது அடிக்கடி கவனிக்கப்பட்டிருக்கிறது.
17 உங்களுடைய உடையும் சிகையலங்காரமும் உங்களைக்குறித்து செய்தி அனுப்புகின்றன: “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்பதாக 1 சாமுவேல் 16:7-ல் நினைப்பூட்டப்படுகிறோம். இவ்வாறாக, பெரும்பாலும் மக்கள் நம்முடைய தோற்றத்தை வைத்து நம்மை மதிப்பிடுகிறார்கள். நம்முடைய உடையும் சிகையலங்காரமும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது, விசேஷமாக கிறிஸ்தவ வாழ்க்கை முறையில் வணக்கம் மற்றும் போதனைக்கான ஒரு மாநாட்டிற்காக நாம் ஆஜராகையில் அவ்வாறு கவனிக்கப்படுகிறது. நீங்கள் பள்ளிக்குச் செல்கிற இளைஞராக இருந்தால், அல்லது உங்களுடைய உலகப்பிரகாரமான வேலை, உலக பாணிகளைப் பின்பற்றுகிற மக்களுடன் நெருங்கிய தொடர்புகொள்ளும்படி செய்தால், அடக்கமான உடைக்கான கிறிஸ்தவ தராதரங்களைப் பின்பற்றுவது ஒரு சவாலாக இருக்கக்கூடும்.
18 உடை மற்றும் சிகையலங்காரத்திற்கான தராதரங்கள் உலகமுழுவதிலும் மாறுபடுகின்றன. அடக்கமான, சீரான உடை அணியும்படி கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். யார் இதைத் தீர்மானிக்க வேண்டும்? பெற்றோர்கள், தங்களுடைய பருவ வயது பிள்ளைகள் பள்ளியிலுள்ள உலகப்பிரகாரமான இளைஞரைப் போல உடையணியவில்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். எச்சரிக்கை தேவைப்படுகிற இந்த விஷயத்தில் நல்ல தீர்மானங்களைச் செய்வதற்கு நமக்கு உதவும்படி ஆக்கப்பூர்வமான வழிகாட்டுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிப்ரவரி 8, 1988 விழித்தெழு! பத்திரிகையில், “ஆடைகள் உங்களுக்கு என்ன அர்த்தத்தை உடையதாக இருக்கின்றன?” என்ற கட்டுரையை மறுபார்வை செய்யும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். நம்முடைய கடந்த வருட மாநாடுகள் சிலவற்றில் என்ன கவனிக்கப்பட்டது?
19 “தேவ பயம்” மாவட்ட மாநாடுகளில் ஒன்று நடந்த பிறகு, நாங்கள் பின்வரும் இந்தக் குறிப்பைப் பெற்றோம்: “இந்த வருட மாநாட்டில் சகோதரர்களும் சகோதரிகளும் தங்களுடைய உடை, சிகையலங்காரம், மற்றும் நடத்தையில் கணிசமானளவு முன்னேறியிருக்கிறார்கள். . . . இருப்பினும், கூடுதலான முன்னேற்றம் தேவைப்படுகிற சில குறிப்பிட்ட சூழ்நிலைமைகளும் பழக்கவழக்கங்களும் இன்னும் இருக்கின்றன.” பின்பு மற்றொரு மாநாட்டில், அடக்கமற்ற உடையணிதல் நன்கு கவனிக்கப்படத்தக்கதாக இருந்தது என அறிக்கை செய்யப்பட்டது. ஒருசிலருடைய உடை மற்றவர்களுக்கு வெறுப்பூட்டுவதாக இருந்தது என்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. ஆஜராயிருந்த வெளியாட்கள் சிலர்கூட, அந்த அடக்கமற்ற உடையைக் குறித்து குறிப்பிட்டார்கள். சிலருடைய உடை அங்கங்களைக் காட்டுவதாகவும் அதிக இறுக்கமானதாகவும் இருந்தது.
20 பெரும்பாலான சகோதர சகோதரிகள் மாநாட்டு இடத்தில் இருக்கும்போது அடக்கமான, கண்ணியத்துக்குரிய உடையை அணிந்திருந்தார்கள். என்றபோதிலும், பிற்பாடு, ஹோட்டல்களில் அல்லது ரெஸ்டாரண்டுகளில் ஒருசில சகோதர சகோதரிகள், தங்களுடைய பேட்ஜ்களை அணிந்துகொண்டே, “T-ஷர்ட்கள், பழம்பாணி ஜீன்ஸ்கள், முழங்கால் அளவான, அல்லது அதற்கும் குறைவான காற்சட்டைகள், . . . நவீனபாணியான ஆடைகள் ஆகிய கடவுளுடைய மக்களுக்கானவையாக இல்லாத ஆடைகளை” அணிந்திருந்தார்கள். சாவதானமாக இருக்கும்போது இந்த விதமாக உடையணியும் மனச்சாய்வு சிலருக்கு இருப்பதை மூப்பர்கள் கவனிப்பார்களானால், இப்படிப்பட்ட உடை தகுந்ததல்ல, விசேஷமாக ஒரு கிறிஸ்தவ மாநாட்டிற்கு ஆஜராகிற பிரதிநிதிகளுக்குத் தகுந்ததல்ல என்பதை மாநாட்டிற்கு முன்பு அன்பாகவும் ஆனால் உறுதியாகவும் அறிவுரை கொடுப்பது பொருத்தமானதாய் இருக்கும். நடத்தை மற்றும் உடையின்பேரில் மேற்கூறப்பட்டுள்ள வழிகாட்டுக் குறிப்புகளை மாநாட்டிற்கு ஆஜராகிற உங்கள் பைபிள் மாணாக்கர்களுடன் தயவுசெய்து மறுபார்வை செய்யுங்கள்.
21 ஹோட்டல்கள்: ஒருவருக்கும் பணநெருக்கடியை ஏற்படுத்தாதபடிக்குக் குறைந்த வாடகையில் இடவசதிகளை அளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் கணிசமானளவு முயற்சி செய்யப்படுகிறது. ஹோட்டலில் வேலை செய்பவர்களுடன் தொடர்புகொள்கையில் பொறுமையாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை தயவுசெய்து நினைவிற்கொள்ளுங்கள். பயணத்தினால் களைப்படைந்திருக்கலாம், இடவசதிகளுக்காக காத்திருப்பவர்களுடைய வரிசை ஒருவேளை நீளமாக இருக்கலாம், ஆனால் உங்களுடைய பொறுமை கவனிக்கப்படாமல் போய்விடாது. தகுதியான முறையில் டிப்ஸ் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும்கூட நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.—ஜூன் 22, 1986, ஆங்கில விழித்தெழு!
22 கேமராக்களும் பதிவுசெய்யும் கருவிகளும்: கேமராக்கள் மற்றும் பதிவுசெய்யும் கருவிகள் சம்பந்தமாக நினைப்பூட்டுதல்களை அன்பாக கொடுப்பது பொருத்தமானதாகும். தயவுசெய்து இதை நினைவில் வையுங்கள்: கேமராக்கள், வீடியோ கேமராக்கள், அல்லது வேறெந்த விதமான பதிவுசெய்யும் கருவிகளையும் பயன்படுத்தத் திட்டமிடுவீர்களானால், உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்குக் கரிசனைகாட்டுங்கள். கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கும்போது இங்குமங்கும் நகர்ந்து செல்வது அல்லது உங்களுடைய இருக்கையிலிருந்தே பதிவுசெய்வது மற்றவர்களுக்குக் கவனத்தைச் சிதறடிப்பதாக இருக்கக்கூடும். மின்சார அல்லது ஒலிபெருக்கி சாதனங்களுடன் எந்தவொரு பதிவுக் கருவிகளும் இணைக்கப்படக்கூடாது, கருவிகள் நடைபாதைகளை அடைத்துக்கொள்ளவும் கூடாது. நீங்கள் படம்பிடிக்க தீர்மானிப்பீர்களா அல்லது அந்நிகழ்ச்சிநிரல் பாகங்களை வீடியோ கேமரா அல்லது ஆடியோகேசட் ரெக்கார்டரைக் கொண்டு பதிவுசெய்வீர்களா என்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். பின்பு ஒரு நாளில் பார்க்கையில் படங்களும் பதிவுகளும் அருமையான நினைவுகளை மனதிற்குக் கொண்டுவரலாம். இப்படிப்பட்ட கருவிகளனைத்தும் மற்றவர்கள் கவனத்தைச் சிதறடிக்காத முறையில் அல்லது அந்நிகழ்ச்சிநிரலிலிருந்து அதிகளவான நன்மையைப் பெற்றுக்கொள்வதிலிருந்து மற்றவர்களைத் தடைசெய்யாத முறையில் மிதமாக பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் வீட்டிற்குத் திரும்பி வந்த பிறகு, பதிவுகளை மறுபடியும் போட்டுப் பார்ப்பதற்கு நேரமிருக்குமா? குறிப்புகள் எடுப்பதை நீங்கள் போதுமானதாக காணக்கூடும்.
23 இருக்கை வசதி: 1994-ல் நடந்த “தேவ பயம்” மாவட்ட மாநாட்டில், இருக்கைகளைப் பிடித்து வைத்துக்கொள்ளும் விஷயத்தில் முன்னேற்றம் இருந்ததை நீங்கள் கவனித்தீர்களா? ஓரளவு முன்னேற்றம் செய்யப்பட்டிருக்கிறது, ஆனால் பின்வரும் இந்த நினைப்பூட்டுதலைக் குறித்து இன்னும் நாம் உணர்வுள்ளவர்களாய் இருப்பது அவசியம்: உங்களுடைய நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களுக்கும் உங்களுடைய தொகுதியில் பயணஞ்செய்கிறவர்களுக்கும் மட்டுமே இருக்கைகளைப் பிடித்துவைக்கலாம். மாநாட்டில் சங்கத்தின் விருந்தினராக நாம் இருக்கிறோம். அரங்கத்திற்கான வாடகை மனமுவந்தளிக்கப்படுகிற நன்கொடைகளினால் செலுத்தப்பட்டிருக்கிறது. இருக்கைக்கு ஆள் வருவார்கள் என்று நாம் நிச்சயமாயில்லாதபோது அதைப் பிடித்து வைப்பது அன்பானதாகவும் கரிசனையுள்ளதாகவும் இருக்குமா? அலர்ஜி போன்ற சூழலுக்குரிய பிரச்சினைகள் உள்ளவர்களுக்குத் தனிப்பட்ட பகுதிகள் அல்லது அறைகளுக்காக கேட்பவர்களுக்கு இடவசதி அளிப்பது எங்களுக்கு இயலாது என்பதற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.
24 பல மாநாடுகள் விசேஷ தேவைகள் உள்ளவர்களுக்காக, வயதானோர், உடல் ஊனமுற்றோர் போன்றவர்களுக்காக ஏற்பாடு செய்கின்றன. நீங்கள் தகுதியுள்ளவர்களாக இல்லையென்றால், இந்தப் பிரிவுகள் ஒன்றிலுள்ள இருக்கைகளைப் பிடித்துவைத்துக் கொள்ளாமலிருப்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். அதோடுகூட, விசேஷ தேவை உள்ளவர்களைக் கவனிப்பதற்குப் பொறுப்புள்ளவர்கள் எவரேனும் கூடவராமலிருந்தால், ஓர் இருக்கையைக் கண்டுபிடிக்க உதவுவதற்கு விழிப்புடனிருங்கள்.
25 உங்களுடைய மாநாட்டு உணவுத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளுதல்: நீங்கள் அறிந்திருக்கிறபடி, ஜூன் 1995 நம் ராஜ்ய ஊழியம் இவ்வாறு அறிவிப்பு செய்தது: “இதுமுதற்கொண்டு, மாவட்ட மாநாடுகள், வட்டார மாநாடுகள், விசேஷ மாநாட்டு தினங்கள் ஆகியவற்றில் எளிய சிற்றுண்டி மாத்திரமே கிடைக்கும். கேஃப்டீரியா பாணியில் சாப்பாடுகள் எதுவும் வழங்கப்படமாட்டா. விரும்பினால், ஆஜராகுபவர்கள் சிற்றுண்டிச் சாலைகளில் கிடைக்கக்கூடியதற்கு கூடுதலானதற்கு தங்களுடைய சொந்த உணவைக் கொண்டுவரலாம். பின்பு ஜூலை 1995 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கை, இந்த மாற்றம் ஏன் செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்கி, மாநாட்டின்போது ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த உணவு தேவைகளைக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதைக் குறித்து நல்ல ஆலோசனைகளைக் கொடுத்தது. தாங்கள்தாமே அந்த உட்சேர்க்கையை மறுபார்வை செய்வது மட்டுமல்லாமல், தங்களுடைய பைபிள் மாணாக்கர்கள் மாநாட்டில் ஆஜராவதற்காக தயார்செய்கையில் அவர்களுடன் அதைக் கலந்தாலோசிப்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். மாநாட்டுக்கு ஆஜராகிறவர்கள் சிற்றுண்டி இலாகாவினால் அளிக்கப்படுகிறவற்றிற்கும் மேலாக தேவைப்படுவதாக உணருவார்களாகில், அவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த உணவைக் கொண்டுவரலாம் என்பதை பைபிள் மாணாக்கர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது முக்கியமாகும்.
26 சில குறிப்புகளை வலியுறுத்துவதற்கு, உங்களுடைய மதிய உணவைக் கொண்டுவருவதற்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பொருள்களை நீங்கள் நினைவுகூர விரும்புவீர்கள்: உலகப்பிரகாரமான வேலைக்குச் செல்கையில் மக்கள் பெரும்பாலும் தங்களுடன் என்ன எடுத்துச் செல்வார்களோ அது போன்ற சாதாரண, எளிய, சத்துள்ள மதிய உணவுகளாகிய வேக வைத்த இறைச்சி, சாண்ட்விச்சுகள், வேகவைக்கப்பட்ட உலர்ந்த காய்கறிகளுடன் சப்பாத்திகள், பிஸ்கட்கள், வேக வைத்த பொருட்கள், புதிய பழங்கள் போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். மாநாடுகள் நடைபெறும் இடத்தில் கிடைக்கும் திரவப்பொருட்களில் காபி, குளிர் பானங்கள், பழச் சாறுகள் ஆகியவை. உங்களுக்கு சொந்தமான உடையாத சிறிய தண்ணீர் பாட்டில்களை நீங்கள் கொண்டுவர விரும்பினால், உங்களுடைய இருக்கையின்கீழ் வைக்கமுடிந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவையாகும். இருப்பினும், குடும்பத்திற்கு அளவான தண்ணீர் கொள்கலங்கள், மதுபானங்கள், அல்லது கண்ணாடிப் பாத்திரங்கள் ஆகியவற்றை மாநாட்டு வசதிக்குள் கொண்டுவரக் கூடாது. நிகழ்ச்சிநிரலின்போது சாப்பிடுவதையும் கொறிப்பதையும் தவிர்க்க வேண்டும். இது, அளிக்கப்படுகிற ஆவிக்குரிய உணவுக்கு அவமதிப்பைக் காண்பிக்கும்.
27 கூடுதலான ஓர் எச்சரிக்கை என்னவென்றால், ஹோட்டல் அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டிருந்தால், மேலும் அதற்காக அவர்கள் வசதிசெய்திருந்தால் தவிர ஹோட்டல் அறைகளில் சமையல் செய்யக்கூடாது. மதிய இடைவேளைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நேரம், எளிய சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, நம்முடைய சகோதர சகோதரிகளுடன் தேவராஜ்ய கூட்டுறவை அனுபவித்து மகிழ்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது என்ற உண்மையை ஆழ்ந்து சிந்திப்பது நல்லது. யெகோவாவின் மக்களாக, பொருள் சம்பந்தமான காரியங்களுடன் ஒப்பிடுகையில் மாநாட்டில் அளிக்கப்படுகிற ஆவிக்குரிய உணவே பிரதான முக்கியத்துவமுடையது, மேலும் அதற்கேற்றவாறு நாம் திட்டமிட வேண்டும் என்பதை கண்டுணருகிறோம்.
28 அக்டோபர் 20, 1995 அன்று, “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாடுகளின் முதலாவது மாநாடு இந்தியாவில் ஆரம்பமாகும். நீங்கள் உங்களுடைய தயாரிப்புகளை முடித்துவிட்டீர்களா, மகிழ்ச்சியான கூட்டுறவையும் ஆவிக்குரிய நற்காரியங்களையும் மூன்று நாட்கள் அனுபவித்து மகிழ நீங்கள் இப்பொழுது தயாராக இருக்கிறீர்களா? யெகோவாவை சந்தோஷமாய் துதிப்போராக இருப்பது எவ்வாறு என்பதன்பேரில் நாம் சிந்திக்கையில், உங்களுடைய சகோதர சகோதரிகளுடன் இந்தக் கோடைகால மாநாட்டிற்கு ஆஜராக யெகோவா உங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிப்பார் என்பது எங்களுடைய உள்ளப்பூர்வமான ஜெபமாகும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
முழுக்காட்டுதல்: முழுக்காட்டுதல் பெறுபவர்கள் சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பாக தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதியிலுள்ள இருக்கைகளில் உட்கார்ந்திருக்க வேண்டும். முழுக்காட்டப்பட திட்டமிடுகிற ஒவ்வொருவரும் அடக்கமான குளியல் உடையையும் ஒரு துண்டையும் கொண்டுவர வேண்டும். பேச்சாளருடைய முழுக்காட்டுதல் பேச்சுக்கும் ஜெபத்திற்கும் பிறகு, நிகழ்ச்சி அக்கிராசனர் முழுக்காட்டுதல் பெறுகிறவர்களுக்குச் சுருக்கமான அறிவுரைகள் கொடுத்து, பாடவிருக்கும் பாட்டைச் சொல்லுவார். கடைசி வரிக்குப் பிறகு, அட்டண்டன்டுகள் முழுக்காட்டுதல் பெறப்போகிறவர்களை முழுக்காட்டுவதற்கான இடத்திற்கு அழைத்துச்செல்வர். முழுக்காட்டுதல் ஒருவருடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாகத் தனிப்பட்ட நபருக்கும் யெகோவாவுக்குமிடையே செய்யப்படுகிற நெருங்கிய மற்றும் தனிப்பட்ட விஷயமாக இருப்பதால், இரண்டு அல்லது அதற்கு அதிகமான முழுக்காட்டுதல்பெறும் நபர்கள் முழுக்காட்டப்படுகையில் கட்டித்தழுவிக்கொண்டு அல்லது கைகளைப் பிடித்துக்கொண்டு, கூட்டாளி முழுக்காட்டுதல்கள் (partner baptisms) என்றழைக்கப்படுகிற முழுக்காட்டுதலுக்கு எந்தவித ஏற்பாடும் இல்லை.
பேட்ஜ் கார்டுகள்: மாநாட்டிலும் மாநாட்டு இடத்திற்கு போகையிலும் வருகையிலும் 1995 ஆண்டிற்கான பேட்ஜ் கார்டை தயவுசெய்து அணியுங்கள். பயணம்செய்கையில் ஒரு நல்ல சாட்சிகொடுப்பதை இது பெரும்பாலும் சாத்தியமாக்குகிறது. பேட்ஜ் கார்டுகளையும் உறைகளையும் உங்களுடைய சபையின்மூலமாக பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மாநாட்டில் அவை கிடைக்காது. உங்களுடைய தற்போதைய மருத்துவ கோரிக்கை/விடுவிப்பு அட்டையை (Medical Directive/Release Card) கொண்டுசெல்வதை நினைவிற்கொள்ளுங்கள். பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களும் பயனியர்களும் தங்களுடைய அடையாள அட்டைகளையும் வைத்திருக்கவேண்டும்.
அறைவசதி: ஒரு ஹோட்டலில் உங்களுக்குப் பிரச்சினை ஏற்படுமானால், தயவுசெய்து மாநாட்டிலுள்ள அறைவசதி இலாகா கண்காணியின் கவனத்திற்குக் கொண்டுவர தயங்காதேயுங்கள். இதனால் விஷயத்தை உடனடியாக தீர்ப்பதற்கு அவர் உங்களுக்கு உதவிசெய்ய முடியும். சபை காரியதரிசிகள், பொருத்தமான மாநாட்டு விலாசத்திற்கு அறைவசதி வேண்டுகோள் விண்ணப்பங்கள் உடனடியாக அனுப்பப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். பதிவுபண்ணப்பட்ட எந்தவொரு தங்குமிடத்திற்கான ஏற்பாட்டையும் ரத்து செய்யவேண்டுமானால், அறையை வேறு எவருக்கும் மீண்டும் நியமிப்பதற்காக ஹோட்டலுக்கும் மாநாட்டு அறைவசதி இலாகாவிற்கும் நீங்கள் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.
வாலண்டியர் சேவை: இலாகாக்கள் ஒன்றில் உதவிசெய்வதற்காக மாநாட்டில் சிறிதுநேரத்தை நீங்கள் ஒதுக்கி வைக்கமுடியுமா? ஒருசில மணிநேரங்கள் மாத்திரமாக இருந்தாலும், நம்முடைய சகோதரர்களுக்கு சேவைசெய்வது அதிக பயனுள்ளதாகவும் அதிக திருப்தியைக் கொண்டுவருவதாகவும் இருக்கக்கூடும். நீங்கள் உதவிசெய்யக்கூடுமானால், தயவுசெய்து மாநாட்டிலுள்ள வாலண்டியர் சேவை இலாகாவிற்கு தெரியப்படுத்துங்கள். பெற்றோர் அல்லது மற்ற உத்தரவாதமுள்ள வயதுவந்தோருடைய வழிநடத்துதலின்கீழ் வேலைசெய்வதன்மூலம் 16 வயதிற்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளும்கூட சிறந்த உதவியை செய்யமுடியும்.
எச்சரிக்கை: நடப்பதற்கு சாத்தியமான பிரச்சினைகளுக்கு விழிப்புடனிருப்பதன்மூலம், நாம் தேவையற்ற பிரச்சினையிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். தங்களுடைய வீட்டுச் சூழலிலிருந்து தொலைவில் இருக்கிற ஆட்களிடம் திருடர்களும் பழிபாவங்களுக்கு அஞ்சாத வேறுசில தனிப்பட்ட ஆட்களும் அடிக்கடி சூறையாடிச் சென்றுவிடுவர். திருடர்களும் ஜேப்படி செய்கிறவர்களும் பெரியளவில் கூடிவருகிற இடங்களில் மிகச் சிறந்த பொருட்களை அபகரிக்கிறார்கள். உங்களுடைய இருக்கையில் விலைமதிப்பு வாய்ந்த எந்தவொரு பொருட்களையும் விட்டுச்செல்வது ஞானமற்றதாய் இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஒரு கிறிஸ்தவர் என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாய் இருக்கமுடியாது. எந்தச் சோதனைக்கும் ஏன் இடமளிக்கவேண்டும்? பிள்ளைகளை ஆசைகாட்டி ஏமாற்றி கொண்டுசெல்லுவதற்கு சில வெளி ஆட்கள் செய்த முயற்சிகளைப் பற்றிய அறிக்கைகளும்கூட வந்திருக்கின்றன. எல்லா சமயங்களிலும் உங்களுடைய மேற்பார்வையில் பிள்ளைகளை வைத்துக்கொள்ளுங்கள்.
அநேக ஹோட்டல்களில் உள்ள கேபிள் டெலிவிஷன் சிலசமயங்களில் ஒழுக்கயீனமான, இழிபொருள் திரைப்படங்களைக் காண்பிக்கிறது. இந்தக் கண்ணியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், மேலும் அறையிலுள்ள டிவியை மேற்பார்வையில்லாமல் உபயோகிப்பதற்கு பிள்ளைகளை அனுமதியாதேயுங்கள்.
மாநாட்டு சம்பந்தமான எந்த விஷயங்களைப் பற்றிய தகவலையும் பெற்றுக்கொள்ள மாநாட்டு அரங்கத்தின் மேனேஜ்மென்டுக்குத் தயவுசெய்து ஃபோன் செய்யாதீர்கள். மூப்பர்களிடமிருந்து தகவல் கிடைக்கவில்லையென்றால், தயவுசெய்து மாநாட்டு விலாசத்திற்கு எழுதுங்கள்.
[பக்கம் 5-ன் பெட்டி]
1995-96 மாவட்ட மாநாடு பாட்டு எண்கள்
காலை பிற்பகல்
வெள்ளிக்கிழமை 57 3
33 183
72 148
சனிக்கிழமை 107 106
38 191
152 42
ஞாயிற்றுக்கிழமை 181 85
200 217
155 45
[பக்கம் 6-ன் பெட்டி]
1995-96 “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாடு
மன்ற விலாசங்கள்-இந்தியா
OCTOBER 20-22
MAPUCA, Goa. (Konkani & English) Shri Hanuman Natyagraha, Opposite Hotel Satya Heera.
OCTOBER 27-29
NEW DELHI, U.T. (Hindi & English) Talkatora Indoor Stadium, Talkatora Gardens, Near Dr. Ram Manohar Lohia Hospital.
NOVEMBER 10-12
SHIMOGA, Karnataka (Kannada) Daivajna Kalyana Mandira, Dr. Ambedkar Circle.
NOVEMBER 17-19
BOMBAY, Maharashtra. (Hindi) Mahakavi Kalidas Natyamandir, P.K.Road, Mulund (W).
NOVEMBER 24-26
BOMBAY, Maharashtra. (English) Assembly Hall, G-37 South Avenue, 15th Road, Santa Cruz (W).
BANGALORE, Karnataka. (Tamil & English) Guru Nanak Hall, Miller’s Road, Vasanth Nagar, Bangalore, Kar. 560052.
DECEMBER 1-3
PUNE, Maharashtra. (Marathi & English) Jawaharlal Nehru Memorial Hall, 4, Dr. Ambedkar Road.
VIJAYAWADA, Andhra Pradesh. (Telugu & English) Fr. Devaiah Auditorium, Andhra Layola College Campus.
DECEMBER 8-10
ANAND, Gujarat. (Gujarati) Please contact the publishers of this magazine for the hall address.
COIMBATORE, Tamil Nadu. (Tamil) Kumaaran Kalyana Mahal, Opposite Thiruvallur Bus Depot, Mettupalayam Road, Kavundampalayam.
DECEMBER 15-17
GUWAHATI, Assam. (Assamese & English) District Library Auditorium, G.N.B. Road, Dighalipukhuri.
DECEMBER 22-24
CALCUTTA, West Bengal (Bengali & English) Please contact the publishers of this magazine for the hall address.
PORT BLAIR, Andaman Islands (Hindi) Please contact the publishers of this magazine for the hall address.
DECEMBER 29-31
MADRAS, Tamil Nadu (Tamil & English) Kamaraj Arangam, 574-A, Anna Salai (Mount Road), Teynampet.
KOTTAYAM, Kerala (Malayalam) Municipal Grounds.
JANUARY 5-7
CALICUT, Kerala (Malayalam) Sait Maneklal Purshotham Memorial Hall (Gujarati School Auditorium), Beach Road.